இல்லம் தேடி திட்டத்தில் இடைநிலை ஆசிரியர்கள்
மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள்
வட்டார மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களாக
பணியாற்றிவருகின்றனர்
இத்தகைய சூழலில்
அவர்கள் பணிபுரிந்த பள்ளிகளில்
பயிலும் மாணவர்களின் கற்றல் திறன்
பாதிக்காத வகையில் தற்காலிக ஆசிரியர்களை
பணிநியமனம் செய்ய அரசு முடிவெடுத்துள்ளது
இல்லம் தேடி கல்வி திட்டத்தில்
பணியாற்றும் ஆசிரியர்களின்
பள்ளிகளில் ஆசிரியர்கள் தேவையுள்ள
பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக்குழுக்களின்
மூலம் தற்காலிக ஆசிரியர்களை நியமித்துக்கொள்ள
அரசு உத்தவிட்டுள்ளது
ஜனவரி 2023 ஏப்ரல் 2023 வரைக்கும்
4 மாதங்களுக்கு இந்த தற்காலிக ஆசிரியர்களை
பணி அமர்த்தவேண்டும்
சம்பந்தப்பட்ட பள்ளியின் இல்லம் தேடிக்கல்வி
தன்னார்வலர் தகுதியுடையராயிருப்பின்
அவர்க்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்
இடைநிலை ஆசிரியர் பணியிடமாக
இருப்பின் மாதம் 7500 மற்றும் பட்டதாரி பணியிடமாக இருப்பின் மாதம் 10000 மதிப்பூதியமாக கொடுக்கப்படவேண்டும்
பட்டதாரி ஆசிரியராக இருப்பின் அதே பாடப்பிரிவில் உள்ளவர்
பணி அமர்த்தப்படவேண்டும்
மேலும் விவரங்களுக்கு
PDF பதிவிறக்கம்
செய்ய கீழ்கண்ட
லிங்க் மூலம்
செல்லவும்
👇👇
No comments:
Post a Comment