Search This Blog

Sunday, 7 August 2022

எண்ணும் எழுத்தும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு என்னென்ன பதிவேடுகள் பராமரிக்க வேண்டும்

 


பள்ளிப் பார்வை படிவம் என்ற தலைப்பில் என்னென்ன பதிவேடுகள் பராமரிக்க வேண்டும் என்பது சம்பந்தமான சுற்றறிக்கையானது 


வட்டார வளமைய  மேற்பார்வையாளர் அவர்களிடமிருந்தும் 

மாவட்ட அதிகாரிகள் இடமிருந்தும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 


அதில் குறிப்பிடப்பட்டுள்ள பதிவேடுகள் அனைத்தும் எண்ணும் எழுத்தும் வகுப்பறைகளுக்கு பொருந்தாது. 


எண்ணும் எழுத்தும் வகுப்பறைகளை பொருத்தவரை இரண்டு பதிவேடுகள் மட்டுமே உறுதியாக பராமரிக்க வேண்டும். வேறு எந்த பதிவேடுகளும் பராமரிக்க தேவையில்லை என எண்ணும் எழுத்தும் மாநில குழுவால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 


இரண்டு பதிவேடுகள் மட்டுமே பராமரித்தால் போதுமானது. ஒன்று பாட குறிப்பேடு படிவம் இரண்டாவது வாரம் வாரம் வெள்ளிக்கிழமை எமிஸ் ஆப் வழியே நடத்தப்படும் மதிப்பீட்டுத் தேர்வின்  abstract பிரதியை நகல் எடுத்து ஒரு காப்பி பிரிண்டட் ஆக வைத்துக்கொள்ள வேண்டும். 


எனவே எண்ணும் எழுத்தும் கற்பிக்கும் ஆசிரியர்கள் பாடக்குறிப்பு படிவம், வெள்ளிக்கிழமை மதிப்பீடு செய்த பின் வரும் அப்ஸ்ட்ராக்ட் படிவம். இது இரண்டு மட்டும் வைத்திருந்தால் போதுமானது. 


Work doneரெஜிஸ்டர், அச்சீவ்மென்ட் ரிஜிஸ்டர், எல்ஓ ரிஜிஸ்டர் மற்றும் வாசிப்புத் திறன் ரிஜிஸ்டர் குறைதீர்க்க கற்பித்தல் ரிஜிஸ்டர் எந்த பதிவேடுகளும் 1,2,3 கற்பிக்கும் எண்ணும் எழுத்தும் வகுப்பறைக்கு பொருந்தாது.  


திட்டவட்டமாக முதன்மை கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டத்தில் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment