Search This Blog

Friday 5 August 2022

அன்புடன் குற்றாலத்திற்கு அழைக்கிறோம் "தென்றல் தவழும் தென்காசி - பொதிகை பெருவிழா 2022"




தென் தமிழகத்தின் சிறப்பான சுற்றுலா தளம் குற்றாலம்.  ஆண்டு தோறும் ஜூலை மாதத்தில் தொடங்கும் சீசன் 3 முதல் 4 மாதங்கள் வரை இருக்கும் 


அந்த சமயத்தில் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, பழத்தோட்ட அருவி மற்றும் புலியருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும்.


அருவிகளில் குளித்து மகிழவும், உள்ளம் மகிழும் இயற்கை சூழ்ந்த தென்பொதிகை சாரலில் நனையவும் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா ஏன் வெளிநாட்டினர் கூட வருவதுண்டு 


இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை குற்றாலத்தில் குழந்தைகளுடன் தங்கி இருந்து குற்றால அருவிகளில் குளித்து மகிழ்வார்கள். மேலும் ஐந்தருவியின் மேல் அமைந்துள்ள இயற்கை கொஞ்சும் ECO PARK பார்த்து ரசிப்பார் 


அருவிகளில் அவ்வப்பொழுது ஆர்பரித்துக்கொட்டும் தண்ணீர் வெள்ளமாக மாறுவதும் உண்டு அத்தகைய சமயங்களில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்கருதி குற்றாலத்தில்  குளிப்பது மாவட்ட நிர்வாகத்தால் தடை செய்யப்படும். தடை விதிக்கப்பட்டாலும் சுற்றுலா பயணிகள் மழைச்சாரலில் நனைந்து மகிழ்வது உண்டு. நீர்வரத்து குறைந்த பின்பு பொதுமக்கள் பாதுகாப்பாக அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் 


ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில்  குளித்து மகிழ்ந்து அருகில் உள்ள செங்கோட்டை குண்டாறு நீர்த்தேக்கம், பண்பொழி அடவிநயனார் அணை அழகை ரசித்து  செல்கிறார்கள். 


செங்கோட்டை குண்டாறு நீர்த்தேக்கத்தில் குழந்தைகள் ரசிக்கும் வகையில் ஜீப் சவாரி மலையில் சென்று மலை மேலுள்ள அருவியில் குளித்து மகிழ்வார்கள் 


குற்றாலம் வந்த சுற்றுலாப்பயணிகள் ஆன்மிக தலங்களான  குற்றாலத்தை சுற்றியுள்ள  பண்பொழி திருமலைக்கோவில், இலஞ்சி குமாரஸ்வாமிக்கோவில், தென்காசி காசி விஸ்வநாதர் கோவில், இலத்தூர் சனீஸ்வரன் கோவில், புளியரை  தட்சணாமூர்த்தி ஆலயம் போன்ற புகழ் பெற்ற தலங்களை பார்வையிடுகிறார்கள்


குற்றாலத்திற்கு மிக அருகில் உள்ள  கேரளாவில் தென்மலை, ஆரியங்காவு போன்ற இடங்களில் பால் அருவி, ECO பார்க், மற்றும் மிகப்பெரிய நீர் தேக்கம் பார்வை இடுகிறார்கள் . 


புகழ் பெற்ற ஐயப்பன் ஆலயம் ஆரிங்காவில் உள்ளது. இதனை சுற்றுலா பயணிகள் விரும்பி பார்வை இடுகிறார்கள் 


குற்றாலத்தில் இருந்து மிக குறைந்த தொலைவில் பாபநாசம், மணிமுத்தாறு  போன்ற இடங்கள் உள்ளது இங்கு மிகப்பெரிய நீர்த்தேக்கம் மற்றும் அருவிகள் உள்ளது. குற்றாலம் வந்த சுற்றுலா பயணிகள்  இங்கும் படையெடுக்கிறார்கள்.


களக்காடு புலிகள் சரணாலயம், அம்பாசமுத்திரம் அருகில் உள்ள மாஞ்சோலை தேயிலைத்தோட்டம் போன்ற இடங்கள்  வனத்துறை அனுமதி பெற்று பார்வையிடச் செல்லலாம் 


குற்றாலம் அழகை இது போன்று சொல்லிக்கொண்டே போகலாம் இவ்வளவு சிறப்பான இயற்கை கொஞ்சும் இடங்களும், ஆன்மிக தலங்களும், பொழுதுபோக்கு இடங்களும்  அருகருகே அமைந்த இடங்கள் வேறு எங்காவது  இருக்குமா என்பது கேள்விக்குறியே 


ஒவ்வொரு ஆண்டும் குற்றாலம் சிறப்பிற்கு மணிமகுடம் வைத்தது போல் இங்கு நடக்கும் சாரல் விழா அமைந்துள்ளது 


ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் சாரல் திருவிழா நடைபெறும் அது சமயம் மலர் கண்காட்சி, பழக்கண்காட்சி, பாரம்பரிய உணவுத்திருவிழா, மாணவர்களுக்கான போட்டிகள், படகு போட்டி, கொழுகொழு குழந்தை போட்டி, நாய் கண்காட்சி மற்றும் தினமும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் 


இந்த ஆண்டு சாரல் திருவிழா "பொதிகை பெருவிழா" என்ற பெயரில் மாற்றப்பட்டு 


சாரல் திருவிழா 


உணவுத்திருவிழா 


புத்தகத்திருவிழா 


தோட்டாக்கலைத் திருவிழா 


என நான்கு வகையான திருவிழாவாக  நடைபெற இருக்கிறது. 05.08.2022 தொடங்கி 14.08.2022 வரை நடைபெற உள்ளது 


தோட்டாக்கலைத் திருவிழா  மலர்கண்காட்சி, பழங்கள் மற்றும் காய்கறிகள் கண்காட்சி, வாசனை திரவியப்பொருட்கள் கண்காட்சி ஆகியவற்றை உள்ளடக்கியது 


புத்தகத்திருவிழாவில் சாதனை எழுத்தாளர்கள் கலந்துகொண்டு பார்வையாளர்களுடன் உரையாடவுள்ளனர். அதிகமான அளவில் ஸ்டால்கள் உடன் பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் இடம்பெற உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி வாசிக்கும் புத்தகங்கள் இடம்பெற உள்ளது மாணவர்களுக்கான தெளிவான உச்சரிப்புடன் வாசிப்பு  போட்டிகள், நினைவுத்திறனை சோதிக்கும் போட்டிகள் நடைபெற உள்ளது 


ஒவ்வொரு திருவிழாவிலும் கண்காட்சிகள் முதல் கொண்டு பல்வேறு தரப்பான போட்டிகள் நடைபெற இருக்கிறது. மேலும் ஒவ்வொரு நாளும் பட்டிமன்றம், இன்னிசை கச்சேரி, நாடகம், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.


தமிழக அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டு விழாவினை தொடங்கிவைக்க உள்ளனர் 


திரைப்பட நடிகர் சூரி உட்பட ஆண்ட்ரியா, ரம்யா பாண்டியன், ரம்யா நம்பீசன் மற்றும் பலர் கலந்துகொள்கிறார்கள்  


பொதிகை பெருவிழா 2022 அழைப்பிதழ் 

👇👇

அழைப்பிதழ் பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



பொதிகை பெருவிழா 2022

தென்காசி மாவட்ட நிர்வாகம் 

சார்பில் வெளியிடப்பட்டுள்ள 

காணொளி அழைப்பு 

"MY TENKASI"





வண்ண வண்ண ஒளியில் 
ஐந்தருவி 





இயற்கை கொட்டிக்கிடக்கும் பூமி தென்காசி 

மலையை ரசிக்கவும் 

மழையில் நனையவும் 

அருவியில் குளிக்கவும் 

சாரலை அனுபவிக்கவும் 

ஒருமுறை 

வாருங்கள் என 

அன்புடன் அழைக்கிறோம் 



பொதிகை பெருவிழா 2022

LIVE LINK 

👇👇

CLICK HERE FOR SARAL LIVE



















No comments:

Post a Comment