Search This Blog

Monday 6 May 2024

+2 மாணவர்கள் மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் செய்தல் மற்றும் மறுகூட்டல் , விடைத்தாள் நகல் பெரும் வழிமுறைகள்


மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் செய்தல் 


👉 09.05.2024 முதல் மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி தலைமையாசிரியர்கள் வழியாக மதிப்பெண் பட்டியலை பெற்றுக்கொள்ளலாம் 






👉 தங்கள் பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து கீழே உள்ள இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் 






மாணவர்கள் நேரடியாக மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் செய்யும் லிங்க் 

👇👇

CLICK HERE






👉 தனித்தேர்வர்கள் தங்கள் பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து கீழே உள்ள லிங்க் மூலம் தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் 





தனித்தேர்வர்கள் மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் செய்யும் லிங்க் 

👇👇

CLICK HERE






விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டல்-1 விண்ணப்பிக்கும் முறை 



👉 பள்ளியில் பயின்ற மாணவர்கள் தங்கள் பள்ளிகள் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் 






👉 தனித்தேர்வர்கள் தங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் 






👉07.05.2024 காலை 11 மணி முதல் 11.05.2024 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் 






👉 விடைத்தாள் நகல், மறுகூட்டல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றிற்கு மட்டுமே மாணவர்கள் விண்ணப்பிக்க இயலும் 






👉 விடைத்தாள் நகல் வேண்டுமா? அல்லது மதிப்பெண் மறுகூட்டல்  என்பது குறித்து தெளிவான முடிவு செய்து கொண்டு மாணவர்கள் விண்ணப்பிக்கவும் 





👉 விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி பின்னர் விண்ணப்பிக்க இயலும் 






👉 மதிப்பெண் மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்கும் பாடத்திற்கு விடைத்தாள்களின் நகல் கோரி விண்ணப்பிக்க முடியாது 






👉விடைத்தாளின் நகல் பெற்ற பிறகு அவர்கள் மறுகூட்டல்/மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும் 






👉 மதிப்பெண் பட்டியல்கள் பதிவிறக்கம் செய்யும் நாட்கள் 09.05.2024 முதல் 







👉 விடைத்தாள் நகல்/மறுகூட்டல்-1ற்கு விண்ணப்பிக்கும் நாட்கள் 07.05.2024 முதல் 11.05.2024 வரை 






👉 விடைத்தாள் நகல் பெறுவதற்கான கட்டணம் ஒவ்வொரு பாடத்திற்கும் 275 ரூபாய் 






👉 மறுகூட்டல்-1 கட்டணம் உயிரியல் பாடத்திற்கு ரூபாய் 305 மற்றும் ஏனைய பாடங்களுக்கு ரூபாய் 205







👉 விடைத்தாள்கள் நகலிற்கான கட்டணத்தை விண்ணப்பிக்கவுள்ள பள்ளியிலேயே பணமாக செலுத்த வேண்டும் 







👉 விடைத்தாள் நகல் விண்ணப்பிக்கும் போது வழங்கப்படும் ஒப்புகை சீட்டினை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும்.







👉 ஒப்புகை சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே மாணவர்கள் தங்களது விடைத்தாளின் நகலினை இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய முடியும் 






👉 விடைத்தாளின் நாகலினை இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டிய நாள் மற்றும் இணையதள முகவரி பின்னர் வெளியிடப்படும் 

No comments:

Post a Comment