1. குறுந்தொகையைத் தொகுத்தவர்
“உப்பூரிகுடிகிழார் மகனார்” ( பூரிக்கோ)
2. குறுந்தொகையைத் தொகுப்பித்தவர்
“பெயர் தெரியவில்லை’
3. குறுந்தொகையை பாடிய புலவர்கள் எண்ணிக்கை
“205″
4. குறுந்தொகையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை
“400″
5. குறுந்தொகை அடிகள்
“4 முதல் 8 அடி”
6. குறுந்தொகை ஒரு
“அகப்பொருள் நூல்”
7.“முருகனைப்” பற்றிப் பாடும் கடவுள் வாழ்த்தாக அமைந்த நூல்
“குறுந்தொகை”
8. குறுந்தொகை என எவ்வாறு பெயர் பெற்றது
“குறைந்த அடிகளை உடைய பாட்டால் தொகுக்கப்பட்ட நூல் குறுந்தொகை”
9. குறுந்தொகைக்கு உரை எழுதியவர்கள்
“முதல் 380 பாடல்களுக்கு பேராசிரியரும்” அடுத்த”20″பாடல்களுக்கு நச்சினார்க்கினியரும் உரை எழுதினார்கள்.
10. குறுந்தொகை பிரித்து எழு
குறுமை + தொகை”
11. குறுந்தொகையில் இடம்பெறும் கடவுள் வாழ்த்துப் பாடலை பாடியவர்
“பாரதம் பாடிய பெருந்தேவனார்”
12. குறுந்தொகையின் வேறு பெயர்கள்
“நல்ல குறுந்தொகை”
குறுந்தொகை நானூறு”
13. குறுந்தொகையை முதலில் பதிப்பித்தவர்
“சௌரி பெருமாள் அரங்கனார்”
14. குறுந்தொகையின் பாடல் தொடர்களால் புகழ் பெற்ற புலவர்கள்
“அணிலாடு முன்றிலார்”
குப்பைக் கோழியார்”
“காக்கை பாடினியார்”
விட்ட குதிரையார்”
“மீனெரி தூண்டிலார்”
வெள்ளி வீதியார்”
“செம்புலப் பெயல் நீரார்”
No comments:
Post a Comment