Search This Blog

Friday 1 April 2022

சீவக சிந்தாமணி

* சிந்தாமணி என்பதன் பொருள் ஒலி குன்றாத மணி ஆகும்.


* சீவகசிந்தாமணியில் இடம்பெறும் தலைவனின் பெயர் சீவகன்.


* சீவகன் என பெயர் அமையக் காரணம் சீவகன் பிறந்த போது அவன் தாயை(விசயை) “சிந்தா மணியே”என அழைத்தார்.


* சீவகன் திரும்பியபோது என்ன ஒலி ஏற்பட்டது சீவகன் திரும்பியபோது சீவ என வாழ்த்தொலி ஏற்பட்டது. இதன் காரணமாக இவன் சீவகன் என அழைக்கப்பட்டான்.


* சீவகன் தாயின் பெயர் விசயை.


* சீவகனின் வரலாற்றை கூறுவதால்  காப்பியத்திற்கு சீவக சிந்தாமணி எனப் பெயர் பெற்றது.


* சீவக சிந்தாமணியை இயற்றியவர் திருத்தக்கதேவர்.


* சீவகசிந்தாமணியில் உள்ள செய்யுள்களின் எண்ணிக்கை 3145.


* சீவகசிந்தாமணியில் உள்ள பிரிவின் பெயர் இலம்பகம்.


* சீவகசிந்தாமணியில் உள்ள மொத்த  இலம்பகம் – 13.


* சீவக சிந்தாமணியில் இடம்பெறும் முதலில் இலம்பகத்தின் பெயர் நாமகள் இலம்பகம்.


* சீவகசிந்தாமணியில் இடம்பெறும் கடைசி இலம்பகத்தின் பெயர் முக்தி இலம்பகம்.


* சீவக சிந்தாமணி எந்த சமயத்தைச் சார்ந்தது சமண சமயம்.


* சீவக சிந்தாமணி நூலின் காலம் கிபி 9 ஆம் நூற்றாண்டு.


* சீவக சிந்தாமணி எவ்வகை பா வகையை சார்ந்தது விருத்தப்பா பாவகை.


* திருத்தக்கதேவர் சோழர் குடியில் பிறந்தார்.


* சோழர் குடியில் பிறந்த முத்து என அழைக்கப்படுபவர் திருத்தக்க தேவர்.


* வீரமாமுனிவர் திருத்தக்கதேவர் – ஐ எவ்வாறு புகழ்ந்துள்ளார் தமிழ்ப் புலவர்களில் தலைமை சான்றவர் தேவர்.


* சீவக சிந்தாமணியின் மற்றொரு பெயர் மணநூல்.


* சீவகசிந்தாமணி- ஐ மணநூல் என பெயர் அமையக் காரணம் சீவகன் எட்டு திருமணம் செய்ததால்மேலும் 13 இலம்பகம் உம் திருமணச் செய்தியை ஊடுருவி நிற்பதால் இதற்கு மணநூல் என பெயர் அமைந்தது.


* சீவக சிந்தாமணியின் வேறு பெயர்கள் மணநூல், முக்தி நூல், என்வரை மணந்த கதை, காம நூல்.


* சீவகசந்தாமணியை ஜி யு போப் எவ்வாறு பாராட்டியுள்ளார் தமிழ் இலக்கியத்தின் இலியட் ஒடிஸி.


* சீவகசிந்தாமணியில் இடம்பெறும் தலைவியின் பெயர்கள் காந்தருவதத்தை, குணமாலை, பதுமை, கேமசரி, கனகமாலை, விமலை, சுரமஞ்சரி, இலக்கணை(ஆகிய 8 பேர்கள் தான் சீவகன் திருமணம் செய்த மனைவிகள்).


* சீவகனின் தந்தையின் பெயர் சச்சந்தன்.


* சீவகனின் தாயின் பெயர் விசையை.


* சீவகனின் அமைச்சர் பெயர் கட்டியங்காரன்.


* சீவகனின் நண்பர்கள் பெயர் பதுமுகன், நந்தட்டன்.


* சீவகனை எடுத்து வளர்த்தவர் பெயர் கந்துக்கடன்.


* சீவக சிந்தாமணிக்கு உரை எழுதியவர் நச்சினார்க்கினியர்.


* சீவகனின் சிறப்பு பெயர்கள் திருத்தகு முனிவர், மகா முனிவர், தேவர்.


சீவக சிந்தாமணி நூல் உணர்த்தும் உண்மைகள்:


* அமைச்சரை ஆராய்ந்து தெளிதல் வேண்டும்.


* பெண்வழிச்சேறல் பெருந்துன்பம் விளைவிக்கும்.


* தன்ஆட்சியர் கட்டளைப்படி நடத்தல் வேண்டும்.


* பகையை வெல்ல காலமும், இடமும் வரும் வரை யாரிடமும்  தன் எண்ணத்தை வெளிப்படுத்த கூடாது.


* எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்த வேண்டும்.


* நன்றி மறவாத இருத்தல் வேண்டும்.

No comments:

Post a Comment