Search This Blog

Sunday 24 April 2022

ரூ.45ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கல்வி ஃபெலோஷிப் திட்டம்: இளைஞா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அழைப்பு


Fellowship கல்வி திட்டம் 

பள்ளிக் கல்வித் துறை 

அழைப்பு. 

இந்தத்திட்டத்தில் 

சேர ஏப்ரல் 22 முதல் 

ஜூன் 15-ஆம் தேதி 

வரை விண்ணப்பிக்கலாம் 

45 ஆயிரம் & 32 ஆயிரம் ஊதியம்




பள்ளிகளின் தரம் மேம்பட 

'தமிழ்நாடு கல்வி ஃபெலோஷிப்' 

என்ற புதிய திட்டத்தை 

தமிழக பள்ளி கல்வித்துறை 

தொடங்கியுள்ளது.




இத்திட்டத்தில் சேர 

இளைஞர்களுக்கு 

அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

பள்ளிக் கல்வித் துறையின் 

கீழ் செயல்படும் 

மாநில கல்வியியல் ஆராய்ச்சி 

மற்றும் பயிற்சி நிறுவனம் 

இந்ததிட்டத்தை 

செயல்படுத்த உள்ளது. 




பல்வேறு துறைகளில் 

சிறந்து விளங்கும் 

இளை ஞர்களின் 

ஆற்றலை பயன்படுத்தி 

அரசின் பல்வேறு திட்டங்களை 

செயல்படுத்த 

'தமிழ்நாடு முதல்வரின் 

fellowship என்கிற 

சிறப்பு திட்டம் 

அறிவிக்கப்பட்டுள்ளது. 

இத்திட்டத்தின் அடிப்படையில் 

'தமிழ்நாடு fellowship 

கல்வி திட்டம்' 

அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.




கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக

ஏற்கெனவே இல் லம் தேடி கல்வி, 

எண்ணும் எழுத்தும் திட்டம், 

நான் முதல்வன், 

நம் பள்ளி நம் பெருமை 

ஆகிய திட்டங்கள் 

உருவாக் கப்பட்டு 

செயல்படுத்தப்பட்டு 

வருகிறது. 




அந்த வகையில் 

ஆர்வமும் திறமையும் 

உள்ள இளைஞர்களை 

மாநில மற்றும் மாவட்ட அளவில் 

'தமிழ்நாடு கல்வி ஃபெலோஷிப்' 

திட்டத்தில் இணைந்து பணியாற்ற

அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.




மாவட்டத்திற்கு 

ஒரு senior fellow 

என்கிற பணியிடத்திற்கு 

ஐந்து ஆண்டுகள் 

பணி அனுபவத்துடன் 

தமிழ் மற்றும் ஆங்கிலம் 

சரளமாகப் பேச எழுத 

தெரிந்திருப்பவர்கள் 

விண்ணப்பிக்கலாம். 




விண்ணப்பிக்கும் நபர்கள் 

மாவட்டம் முழுவதும் 

தேவைக்கேற்ப 

பயணிக்க வேண்டும்.




மேற்கூறிய தகுதியின் 

அடிப்படையில் மாதம் 

ரூ.45ஆயிரம் 

ஊதியத்தில் 

38 மாவட்டங்களில் 

தலா ஒரு பணியிடம் 

என்கிற அடிப்படையில் 

38 பணியிடங்கள் உள்ளன.




அதேபோன்று 

fellows என்று 

புதிதாக உருவாக்கப் பட்டுள்ள 

பணியிடத்தில் 

114 நபர்கள் மேற்கூறிய 

அதே தகுதிகளுடன் 

2 ஆண்டு பணி அனுபவம் 

பெற்றிருப்பவர்கள் 

மாதம்தோறும் 

ரூ.32 ஆயிரம் ஊதியத்துடன் 

நியமிக்கப்படவுள்ளனர். 




இந்தத்திட்டத்தில் 

சேர ஏப்ரல் 22 முதல் 

ஜூன் 15-ஆம் தேதி 

வரை விண்ணப்பிக்கலாம். 

ஜூலை 2022 முதல் ஜூன் 2024 வரை 

பணிக்காலமாக 

நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 




பணிக்காலத்தில் 

பயிற்சிகள் வழங்கப்படுவதுடன் 

பணிக் காலம் முழுவதும் 

சிறப்பாக செயல்படுபவர்களுக்கு 

அரசு சார்பில் 

சான்றிதழும் 

வழங்கப்படும்.


மேலும் விபரம் அறிய 

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF




TODAY NEWS

👇👇

மாணவர்களை 

திருத்தும் பொறுப்பு 

ஆசிரியர்களுக்கு 

மட்டும்தானா? 

டாக்டர்.ப.அர்ஜுனன் MBBS, 

அய்யன் திருவள்ளுவர் 

தமிழோசை மன்றம் 

சேத்தூர், 

ராஜபாளையம் 

"ஆசிரியர்களுக்காக  

ஒலித்த முதல் குரல்"

👇👇

CLICK HERE TO VISIT



8 ஆம் வகுப்பு 

அறிவியல் 

ஆண்டுத்தேர்வு 

மாதிரி 

வினாத்தாள் pdf

👇👇

CLICK HERE TO VISIT




8 ஆம் வகுப்பு 

அறிவியல் 

குறைக்கப்பட்ட 

பாடப்பகுதி 

அடிப்படையில் 

வினாக்கள் தொகுப்பு 

pdf

👇👇

CLICK HERE TO VISIT




KGF CINEMA STORY 

உண்மையில் 

கோலார் தங்க வயலில் 

நடந்தது என்ன? 

கோலாரில் 

தமிழர்களின் ஆளுமை

👇👇

CLICK HERE TO VISIT

No comments:

Post a Comment