சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் காப்பியத் தலைவன் கோவலன்.
* சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் காப்பியத் தலைவி கண்ணகி.
* சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் கணிகை குலப்பெண் மாதவி.
* கோவலனின் தந்தை பெயர் மாசாத்துவான்.
* கண்ணகியின் தந்தை பெயர் மாநாய்கன்.
* கண்ணகியின் தோழியின் பெயர் சித்திராபதி.
* மாதவியின் தோழியின் பெயர் வயந்த மாலை.
* சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் பாண்டிய மன்னனின் பெயர் நெடுஞ்செழியன்.
* நெடுஞ்செழியனின் மனைவியின் பெயர் கோப்பெருந்தேவி.
* சிலப்பதிகாரத்தில் நடைபெறும் விழா பெயர் இந்திர விழா.
* இந்திர விழாவில் மாதவி பாடிய பாடல் பெயர் கானல் வரி.
சிலப்பதிகாரத்தில் வரும் சமணத் துறவியின் பெயர் கவுந்தி அடிகள்.
* சிலப்பதிகாரத்தை இயற்றியவர் இளங்கோவடிகள்.
* இளங்கோவடிகளின் தந்தையின் பெயர் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்.
* இளங்கோவடிகளின் தாயின் பெயர் நற்சோணை.
* இளங்கோவடிகளின் தமையன் பெயர் சேரன் செங்குட்டவன்.
* இளங்கோவடிகள் இளமையிலே துறவு பூண்டு தங்கிய இடம் குணவாயிற் கோட்டம்.
* சிலப்பதிகாரத்தில் திருமால் புகழ்பாடும் பகுதியின் பெயர் ஆய்ச்சியர் குரவை.
* சிலப்பதிகாரத்தில் முருகன் புகழ்பாடும் பகுதியின் பெயர் குன்றக் குரவை.
* சிலப்பதிகாரத்தில் கொற்றவை புகழ்பாடும் பகுதியின் பெயர் வேட்டுவவரி.
* சிலப்பதிகாரத்தின் பெரும்பகுதி (காண்டம்) எண்ணிக்கை 3.
* சிலப்பதிகாரத்தின் சிறு பிரிவு (காதை) எண்ணிக்கை 30.
* சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் இடங்களின் பெயர்கள் மற்றும் காதைகள்
1. புகார் காண்டம் – 10 காதைகள்.
2. மதுரை காண்டம் – 13 காதைகள்.
3. வஞ்சிக் காண்டம் – 7 காதைகள்.
* புகார் காண்டம் – 10
முதல் காதை (மங்கல வாழ்த்துப் பாடல்)
கடைசி காதை (நாடுகாண் காதை)
* மதுரை காண்டம் – 13
முதல் காதை (காடுகாண் காதை)
கடைசி காதை (கட்டுரை காதை)
* வஞ்சிக் காண்டம் – 7
முதல் காதை (குன்றக் குரவை)
கடைசி காதை (வரந்தரு காதை)
* புகார் காண்டம் எந்த நாட்டைப் பற்றிக் கூறுகிறது சோழர் நாட்டை.
* மதுரை காண்டம் எந்த நாட்டைப் பற்றிக் கூறுகிறது பாண்டியன் நாட்டை.
* வஞ்சி காண்டம் எந்த நாட்டைப் பற்றிக் கூறுகிறது சேர நாட்டை.
* சிலப்பதிகாரத்தில் உள்ள மொத்த வரிகளின் எண்ணிக்கை 5001.
* சிலப்பதிகார நூலின் சமயம் சமண சமயம்.
* சிலப்பதிகாரம் நூலின் காலம் கிபி இரண்டாம் நூற்றாண்டு.
* சிலப்பதிகாரம் பிரித்து எழுதுக
சிலம்பு + அதிகாரம்.
* சிலப்பதிகாரம் பெயர் அமையக் காரணம் சிலம்பின் ஆல் இணைந்த கதையை கூறுவதால் சிலப்பதிகாரம் எனப் பெயர் பெற்றது.
* சீத்தலைச் சாத்தனார் இளங்கோவடிகள் இடம் கூறிய வரிகள் அடிகள் நீரே அருளுக.
* சிலப்பதிகாரத்தின் மையக் கருத்துக்கள்
1. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்.
2. உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்.
3. ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்.
* சிலப்பதிகாரத்தை எழுதிய உரை ஆசிரியர்கள்
1. அரும்பத உரைகாரர்.
2. அடியார்க்கு நல்லார்.
3. நா. மு. வேங்கடசாமி நாட்டார்.
* சிலப்பதிகாரத்தில் தலைக்கோல் பட்டம் வென்றவர் யார் மாதவி.
* சிலப்பதிகாரத்தில் வரும் இலங்கை மன்னனின் பெயர் கடலாகு.
* மாதவி கோவலன் நெய் விட்டு பிரியும்போது கடிதம் யாரிடம் கொடுத்து அனுப்புவாள் வசந்தமாலை மாங்காட்டு மறையோன்.
* மாதவி கடிதம் கொடுத்ததை கடித இலக்கியத்தின் முன்னோடியாக திகழ்கிறது.
* சிலப்பதிகாரத்தின் வேறு பெயர்கள்
* நாடக காப்பியம்
* உரை இடப்பட்ட பாட்டுடைச் செய்யுள்
* முத்தமிழ் காப்பியம்
* குடிமக்கள் காப்பியம்
* முதற் காப்பியம்
* ஒற்றுமைக் காப்பியம்
* மூவேந்தர் காப்பியம்
* தமிழின் தேசிய காப்பியம்
* புரட்சிக் காப்பியம்.
* இளங்கோவடிகள் ஒரு அரசியல் வேறுபாடு கருதாதவர், சமய வேறுபாடற்ற துறவி.
* இளங்கோவடிகள் பற்றிய பாரதியார் எவ்வாறு புகழ்கிறார்
“யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவனைப் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை என்பது உண்மை. வெறும் புகழ்ச்சியில்லை”.
* சிலப்பதிகாரத்தைப் பற்றி பாரதியார் எவ்வாறு புகழ்கிறார்
” நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு”
* சிலப்பதிகாரமும் ,மணிமேகலையும் இரட்டை காப்பியங்கள் என அழைக்கப்படுகின்றன.
* இரட்டை காப்பியங்கள் என அழைக்கப்பட காரணம் காலத் தொடர்பு, கதை தொடர்பு, பாவகை தொடர்பு ஆகியவை இருப்பதால் இரட்டை காப்பியங்கள் என அழைக்கப்படுகின்றன.
* சிலப்பதிகாரத்தின் கதை உருவம் எவ்வகை இசை நாடகம் போல் ஆனது.
* சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் வேங்கை மரத்தின் கீழ் ஒரு பெண் தெய்வத்தை பார்த்தோம் என்று கூறியவர்கள் சேரன் செங்குட்டுவன், சீத்தலைச் சாத்தனார், இளங்கோவடிகள்.
* வேங்கை மரத்தின் கீழ் யாரைப் பார்த்தார்கள் கண்ணகியை பார்த்தார்கள்.
* தேனிலே ஊறிய செந்தமிழின் சுவை தீரும் சிலப்பதிகாரம் எனக் கூறியவர் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை
No comments:
Post a Comment