Search This Blog

Saturday, 2 September 2023

NMMS MATHS இலவச கையேடு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் வெளியீடு





NMMS MATHS இலவச கையேடு  வெளியீடு 


ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம், ஆதம்சேரி நடுநிலைப்பள்ளி ஆசிரியர் திரு.மோகன் தலைமையிலான 20 ஆசிரியர்கள் குழு 8 வகுப்பு மாணவர்களுக்கு தேவையான NMMS MATHS கையேடு  உருவாக்கினார்கள்.

இந்த புத்தகத்தினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கரங்களால் வெளியிட்டு மாணவர்களுக்கு இலவசமாக வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையினை தென்காசி மாவட்டம் கரிசல்குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் தனது நண்பர்களான சென்னை வேளச்சேரி அரிமா சங்கம் இன்னோவேடிவ் ப்ராஜெக்ட் தலைவர்கள் திரு.ஹரி கிருஷ்ணன், திரு.செல்வகுமார், ப்ராஜெக்ட் ADVISOR திரு.வெங்கட்ராமன் ஆகியோரிடம் வைத்தார்  

அந்த புத்தகம் சென்னை வேளச்சேரி அரிமா சங்கத்தின் திரு.வெங்கட்ராமன், திரு.ஹரிகிருஷ்ணன், திரு.செல்வக்குமார் சீரிய முயற்சியினால் 02.09.2023 அன்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் திருக்கரங்களால் வெளியிடப்பட்டது. முதல் புத்தகத்தை சென்னை அடையார் ஆனந்த பவன் முதன்மை இயக்குனர் திரு. K.T. சீனிவாஸ ராஜா பெற்றுக்கொண்டார்.

இந்த புத்தகத்தினை தயார் செய்யும் குழுவிற்கு ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டவரும், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக NMMS தேர்வினை மாணவர்களுக்கு இலவச பயிற்சி மூலம் மாநிலம் முழுவதும் கொண்டு சேர்ந்தவரும், NMMS தேர்வுக்கு தேவையான MAT புத்தகத்தை வெளியிட்டவருமான ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம், ஆதம்சேரி நடுநிலைப்பள்ளி ஆசிரியர் திரு.மோகன் அவர்களுக்கு அவரின் தொடர் சேவையை பாராட்டி "அர்ப்பணிப்பு ஆசிரியர்" விருது வழங்கப்பட்டது.

புத்தகம் வெளியீட்டில் உதவிய தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் ஒன்றியம் வட்டாரக்கல்வி அலுவலர் திரு.மாரியப்பன், தென்காசி ஒன்றியம் 13வது வார்டு நடுநிலைப்பள்ளி ஆங்கில ஆசிரியர் திரு.வின்சென்ட் அவர்களுக்கும் சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

NMMS MATHS GUIDE உருவாக்கிய அனைத்து ஆசிரியர்களுக்கும் சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது 

ஏற்கனவே NMMS தேர்வுக்கு தேவையான அறிவியல், சமூக அறிவியல் புத்தகம் திரு.மோகன் தலைமையிலான ஆசிரியர்கள் குழுவினரால் உருவாக்கப்பட்டு இதே வேளச்சேரி அரிமா சங்கம் மூலம்  அமைச்சர் கரங்களால் வெளியிடப்பட்டு தமிழகம் முழுவது இலவசமாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டில் உள்ளது

NMMS தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கணக்கு கையேடு இல்லாதது பெரிய குறையாக இருந்தது தற்போது அது சென்னை வேளச்சேரி அரிமா சங்கத்தின் மூலமும், நமது ஆசிரியர்கள் குழு மூலமும்  நிறைவேறியுள்ளது.

தற்போதும் மாநிலம் முழுவதும் இந்த புத்தகம் இலவசமாக வழங்கப்பட உள்ளது

மாணவர்களுக்கு தேவையான அறிவியல், சமூக அறிவியல்  கையேடு வழங்கப்பட்ட பிறகு NMMS தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் Cut off மதிப்பெண்கள் உயர்ந்துள்ளது கடந்த ஆண்டு தேர்வு முடிவு மூலம் தெரியவந்துள்ளது

இந்த கணக்கு கையேடு மூலம் மாணவர்களுக்கு தேவையான NMMS MATERIAL முழுமையாக கிடைக்கும்.

இந்த புத்தகத்தின் மின்பதிப்பு மாண்புமிகு அமைச்சர் முலம் அன்றே வெளியிடப்பட்டது  Pdf வடிவில் உடனடியாக பயன்பாட்டிற்கு வந்தது 

தொடர்ந்து  கல்விப்பணியில் மாணவர்கள் நலனுக்கு உதவி வரும் சென்னை வேளச்சேரி அரிமா சங்கம் 

Innovative chairman Mr.Harikrishnan, 

Co.Chairman Mr.Selvakumar,

 Ex.president Mr.Venkatraman 


ஆகியோருக்கு ஆசிரியர்கள் மாணவர்கள் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது 










































































Saturday, 26 August 2023

தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு பயிற்சி வகுப்பு 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு "புவியியல்" YOUTUBE CLASS


👉தமிழக முதல்வர் திறனறிவு தேர்வு..SEP..2023


👉ஆண்டுக்கு ரூபாய் 10,000கல்வி உதவித்தொகை.


👉கல்லூரி படிப்பு வரை


👉அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும்


👉11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள்


👉 இன்று  (26.08.2023) மாலை 5மணிக்கு புவியியல் வகுப்பு 


👉தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வுக்கு மாணவர்களை தயார் படுத்தும் விதமாக புவியியல் வகுப்பு நடைபெறுகிறது 


👉இந்த வகுப்புகள்  you tube live மூலம் நடைபெறுகிறது


👉நேரம் மாலை 5 மணி 



இந்த பயிற்சி வகுப்பில் இணைய கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

CLICK HERE TO JOIN GEOGRAPHY CLASS

Friday, 25 August 2023

எண்ணும் எழுத்தும் 1-5 வகுப்பு - ஆகஸ்ட் -5 வது வாரம் பாடக்குறிப்பு.

எண்ணும் எழுத்தும்  

1,2,3 வகுப்பு 

ஆகஸ்ட் 5 வது வாரம் 

பாடக்குறிப்பு

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF



எண்ணும் எழுத்தும்  

4,5 வகுப்பு 

ஆகஸ்ட் -5 வது வாரம் 

பாடக்குறிப்பு

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

நான் முதல்வன் திட்டம் - 2023-2024ஆம் கல்வியாண்டு - 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மாதவாரியான பாடத்திட்டம் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு



நான் முதல்வன் திட்டம் 

2023-2024ஆம் கல்வியாண்டு 

11 மற்றும் 12ஆம் வகுப்பு 

மாணவர்களுக்கான 

மாதவாரியான 

பாடத்திட்டம் மற்றும் 

வழிகாட்டு நெறிமுறைகள் 

👇

CLICK HERE TO DOWNLOAD PDF



முன்னாள் முதல்வர் டாக்டர்.கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாட்டப் போட்டிகள் நடத்துதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

 




அரசு ஊழியர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில்வதற்கான கல்வி முன்பணம் 2023-2024 முதல் உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு