தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு கடந்த ஐந்து நாட்களாக 'எண்ணும் எழுத்தும்' எனும் புதிய கற்பித்தல் முறைக்கான பயிற்சி நடைபெற்றது.
விடுமுறையில் பயிற்சி என்பது முதலில் ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது பல்வேறு தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்கள் போராட்டமும் அறிவித்தன.
அரசு சார்பில் புதிய கற்பித்தல் முறை இந்த ஆண்டே பள்ளி தொடங்கும் முதல் நாளிலேயே மாண்புமிகு முதலவர் தொடங்கி வைக்க இருப்பதால் பயிற்சியை தவிர்க்க முடியாது மேலும் இனி வருங்காலங்களில் இது போன்று விடுமுறையில் பயிற்சி இருக்காது என்றும் ஆசிரியர் சங்கங்களிடம் வாக்குறுதி அளிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக 'எண்ணும் எழுத்தும்' பயிற்சி தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு 5 நாட்களாக நடைபெற்றது.
விடுமுறையில் பயிற்சி என்றாலும் புதிய கற்பித்தல் முறை என்பதால் ஆசிரியர்கள் ஆர்வமுடன் பயிற்சி பெற்றனர்.
மாண்புமிகு முதல்வர் இந்த புதிய கற்பித்தல் முறையை எந்த பள்ளியில் தொடங்கிவைக்கப்போகிறார் என்ற ஆவல் அனைத்து ஆசிரியர்களிடமும் இருந்து வந்தது.
தற்போது மாண்புமிகு முதல்வர் இந்த புதிய கற்பித்தல் முறையை எந்த பள்ளியில் தொடங்கிவைக்கப்போகிறார் என்ற செய்தி வெளியாகி உள்ளது.
13.06.2022 திங்கள் கிழமை திருவள்ளூர் மாவட்டம், புழல், அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாண்புமிகு முதல்வர் இந்த புதிய கற்பித்தல் முறையை தொடங்கி வைக்கிறார்.
மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்,
மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர்,
பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர்,
பள்ளிக் கல்வித்துறை ஆணையர்,
திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர்,
மாதவரம் சட்டமன்ற உறுப்பினர்,
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்,
தொடக்கக் கல்வி இயக்குனர்
ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்
No comments:
Post a Comment