Search This Blog

Wednesday, 1 June 2022

ஆசிரியர்கள் வருவாய் மாவட்டத்திற்குள் தங்கள் வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு சென்று நாளை முதல் விடைத்தாள் திருத்தும் பணியை மேற்கொள்ள வேண்டுகிறேன் கு.தியாகராஜன் மாநில தலைவர் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்


கடந்த ஆண்டுகளில் வருவாய் மாவட்டத்தில் எந்த கல்வி மாவட்டத்தில் பணிபுரிந்தாலும் அவர்கள் வசிப்பிடத்திற்கு அருகாமையிலுள்ள விடைத்தாள் திருத்தும் மையத்தில் விடைத்தாள்களை திருத்தி கொள்ளலாம் என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் பெற்றுத்தந்த சலுகையை ஒரு சில அதிகாரிகள் இவ்வாண்டு மறுப்பதாக எனக்கு தகவல் கிடைக்கப் பெற்றது.


காலை 10:30 மணிக்கு அலைபேசி வாயிலாக மதிப்புமிகு தேர்வுத்துறை இயக்குனர் திரு சேதுராமவர்மன் அவர்களையும் மதிப்புமிகு தேர்வுத்துறை இணை இயக்குனர் திரு செல்லக்குமார் அவர்களையும் தொடர்பு கொண்டு வருவாய் மாவட்டத்திற்குள் எந்த கல்வி மாவட்டத்தில் பணிபுரிந்தாலும் வசிப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள விடைத்தாள் திருத்தும் மையங்களில் விடைத்தாள் திருத்துவதற்கு சில அதிகாரிகள் மறுப்பது குறித்தும் இதனால் இந்த அரசிற்கும், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு கலங்கம் ஏற்படுத்துவது போல் ஆசிரியர்கள் கருதுகின்றனர் என்றும் கடந்த காலங்களில் வழங்கிய சலுகையைத் தொடர்ந்து வழங்கிட வேண்டும் என்று கூறினேன். 


அதற்கு தேர்வுத்துறை இயக்குனர், இணை இயக்குநர் ஆகிய இருவரும் முதன்மை கல்வி அலுவலர்களிடம் ஏற்கனவே இதுகுறித்து தகவல் அளிக்கப்பட்டுள்ளது என்றும், மீண்டும் தகவல் தெரிவிப்பதாகவும் உறுதி அளித்துள்ளார்கள்.


ஆகையால் ஆசிரியர்கள் வருவாய் மாவட்டத்திற்குள் தங்கள் வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு சென்று நாளை முதல் விடைத்தாள் திருத்தும் பணியை மேற்கொள்ள வேண்டுகிறேன். இதில் ஏதேனும் இடர்பாடு ஏற்பட்டால் சார்ந்த மாவட்ட பொறுப்பாளர்களைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவும். 


மாவட்ட பொறுப்பாளர்கள் சார்ந்த  முகாம் அலுவலர்களிடம் பேசவும் அதில் ஏதேனும் இடர்பாடோ சங்கடமோ ஏற்பட்டால் என்னைத் தொடர்பு கொள்ளவும்.


முகாம் அலுவலர்கள் ஏதேனும் விளக்கம் கேட்டால் அதை எதிர் கொண்டு சரி செய்துத் தர நான் உள்ளேன் என்று நம்பிக்கையில் உங்கள் பணியைச் செய்யுங்கள்.


விடைத்தாள் திருத்தும் பணி நமது கடமை ஆகையால் தேர்வுப் பணி பாதிக்காத வகையில் வயது முதிர்ந்தவர்கள், இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், முதுகுத் தண்டு வலி போன்ற தொடர் நோய் உள்ளவர்கள், வசிப்பிடத்தில் இருந்து வெகு தொலைவில் முகாம் உள்ளவர்கள் அருகில் உள்ள விடைத்தாள் திருத்தும் முகாமிற்கு சென்று விடைத்தாள் திருத்தும் பணியை மேற்கொள்ள வேண்டுகிறேன்.



கு.தியாகராஜன் 

மாநில தலைவர் 

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்

No comments:

Post a Comment