தென்காசி ஒன்றிய அளவிலான NMMS 3 வது மாதிரி தேர்வு மற்றும் பரிசளிப்பு விழா இன்று தென்காசி பொன்னம்பலம் நடுநிலைப்பள்ளியில் வைத்து நடைபெற்றது
விழாவிற்கு தென்காசி வட்டாரக்கல்வி அலுவலர் திரு.இளமுருகன் தலைமை வகித்து வெற்றி பெற்ற மாணவ மாணவியரை வாழ்த்தி பேசினார்
நிகழ்வில் தென்காசி வட்டார பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
தென்காசி நடுநிலைப்பள்ளியை சார்ந்த 90 மாணவர்கள் இன்று 3வது NMMS மாதிரி தேர்வை எழுதினார்கள்
ஏற்கனவே நடந்த 2 மாதிரி தேர்வுகளில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவ/மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன
NMMS முதல் மாதிரி தேர்வு (12.02.22)பரிசு பெற்றவர்கள்:
முதல் பரிசு:
M.ராஜேஸ்வரி
ஊ.ஒ.நடுநிலைப் பள்ளி
கரிசல் குடியிருப்பு
இரண்டாம் பரிசு:
க.சுப்ரியா
நகராட்சி நடுநிலைப் பள்ளி
13 வது வார்டு
தென்காசி
மூன்றாம் பரிசு:
J.L.ஜோபிளஸ்வின்
நகராட்சி நடுநிலைப் பள்ளி
7வது வார்டு
தென்காசி
NMMS இரண்டாம் மாதிரி (26.02.22) தேர்வு பரிசு பெற்றவர்கள்:
முதல்பரிசு:
S சந்தியா
விவேகானந்தா
நடுநிலைப் பள்ளி
மத்தளம்பாறை
இரண்டாம் பரிசு
புவனேஸ்வரன்
இந்து நடுநிலைப் பள்ளி,
காசிமேஜர்புரம்
மூன்றாம் பரிசு:
P.முத்துக்கவிதா
R.K.V.நடுநிலைப்பள்ளி,
பண்பொழி.
மாதிரி தேர்வு வெற்றி பெறக் காரணமாக இருந்து தினந்தோறும் வினாத்தாள் தயாரித்து வழங்கிய அனைத்து ஆசிரியப் பெரு மக்களுக்கும், தொடர்ந்து பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும் ஒத்துழைப்பு வழங்கி தொடர்ந்து ஊக்கப்படுத்திய தலைமை ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது
வினாத்தாள் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கிய தென்காசி ஒன்றியம் கரிசல் குடியிருப்பு ஊ.ஒ.நடுநிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியர் இள.பாபுவேலன், அவர்களுக்கும், இடவசதி வழங்கிய அருள்மிகு பொன்னம்பலம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கும், மாணவர்களை அனுப்பி வைத்த அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர் அவர்களுக்கும் விழாவில் நன்றி தெரிவிக்கப்பட்டது
விழா முடிவில் தென்காசி, 13வது வார்டு நடுநிலைப்பள்ளி ஆங்கில ஆசிரியர் திரு.வின்சென்ட் நன்றி உரை ஆற்றினார்
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அருள்மிகு பொன்னம்பலம் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் செய்து இருந்தனர்
No comments:
Post a Comment