Search This Blog

Wednesday 22 December 2021

தேசிய கணித தினம் (National Mathematics Day)


இந்தியாவில், 

டிசம்பர் 22 ஆம் நாள் 

தேசிய கணித தினமாக 

றிவிக்கப்பட்டுள்ளது. 


தேசிய கணித தினம் 

26 பிப்ரவரி 2012 அன்று 

சென்னைப் 

பல்கலைக்கழக 

நூற்றாண்டு விழாக் 

கலையரங்கத்தில் 

நடைபெற்ற 

சீனிவாச ராமானுசனின் 

125 வது பிறந்த நாள் 

கொண்டாட்டத்தின் 

தொடக்க விழாவில் 

பிரதம மந்திரி 

டாக்டர் மன்மோகன் சிங் 

அவர்களால் பிரகடனம் 

செய்யப்பட்டது.


இந்தியக் 

கணித மேதை 

ஸ்ரீனிவாச ராமானுஜன் 

1887 ஆம் ஆண்டு 

டிசம்பர் மாதம் 

22 ஆம் தேதி பிறந்தார். 

1920 ஏப்ரல் 26 இல் இறந்தார். 


இந்திய 

தேசிய 

கணிதவியலாளரான 

கணித மேதை 

சீனிவாச இராமானுசன் 

அவர்கள் 

கணிதத்துறைக்குப் 

பங்காற்றியமைக்காக 

ஒவ்வொரு ஆண்டும் 

டிசம்பர் 22 ஆம் நாள் 

தேசிய கணித 

தினமாகக் 

கொண்டாடப்படுகிறது. 

2012 ஆம் ஆண்டு 

தேசிய கணித ஆண்டாக 

அறிவிக்கப்பட்டுள்ளது.


தேசிய கணித தினம் 

இந்திய அளவில் 

பள்ளிகள் 

மற்றும் 

பல்கலைக்கழகங்களில் 

பல்வேறு 

கல்வி நிகழ்வுகளுடன் 

கொண்டாடப்படுகிறது.


2017 ஆம் ஆண்டு 

ஆந்திரப் 

பிரதேச மாநிலம் 

சித்தூர் மாவட்டத்தில் 

உள்ள குப்பம் 

நகரில் இராமானுசன் 

கணிதப் பூங்கா 

என்ற 

அருங்காட்சியகம் 

திறக்கப்பட்ட்தை 

தொடர்ந்து 

தேசிய 

கணித தினத்தின் 

முக்கியத்துவம் 

அதிகரித்துள்ளது



வீடியோ பார்க்க கீழே அழுத்தவும் 

👇👇

கணித மேதையின் கதை

No comments:

Post a Comment