Search This Blog

Thursday, 23 December 2021

மறக்க முடியாத மஞ்சப்பை


தமிழக முதலமைச்சரின் 

"மீண்டும் மஞ்சப்பை"

 முன்னெடுப்பு 

பாராட்டுக்குரியது. 


நிறைய மெமரீஸ் 

இருக்கு மஞ்சப்பையிக்கு


அன்றைய ஆரம்பப்பள்ளி 

ஸ்கூல் பேக் அதான்.



ஒரு சிலேட்டு, ஒரு புக்கு, 

ஒரு நோட்டு 

அந்தப்பையில். 

கிட்டத்தட்ட 

5 ஆம் வகுப்பு 

வரை Study material 

அவை மட்டுமே


பை வெளிறிப்போகும் வரை 

அதன் ஒரு பக்க காது 

அறுந்து போனாலும் 

"பின்" போட்டு 

மாட்டி எடுத்துச்செல்வோம்.


காது பெரிசா 

இருந்தால்  நம் 

கையை நுழைத்து  

தோள் வரை மாட்டிக்கொள்வோம்



சாலையில் நடந்து 

போகும் போது 

அந்த பையின் 

காதுக்குள் கையை 

நுழைத்து பையை

 சுற்றிக்கொண்டே 

செல்வதுண்டு 

அதனாலேயே 

பையின் காதுகள் 

அறுந்து போவதும்  உண்டு.



சில நேரங்களில் 

பிற மாணவர்களோடு

சண்டையிடும் போது 

ஆயுதமும் 

அந்த மஞ்சப்பைதான்


இன்று போல அன்று

கை வீசிவிட்டு 

யாருமே கடைக்கு 

போனதில்லை 

துணிப்பையை 

எப்போதுமே கையோடு 

எடுத்து செல்வார்கள்.



மிதிவண்டியின் 

பின் கேரியரில் 

எப்போதுமே அந்த 

மஞ்சப்பைக்கு 

ஒரு இடம் உண்டு.


ஒரு பையின் 

இரு காதுகளை 

இருவர் 

பிடித்துக்கொண்டு 

சாலையை மறித்து 

சென்ற காலமும் உண்டு


வெளியே 

சென்றுவிட்டு 

வீட்டினுள் வந்தவுடன் 

ஆணியில் 

பையை 

மாட்டி வைப்போம்.


அப்போது 

எல்லாம் 

குடும்பத்தலைவர்களின் 

"Lunch Bag" அதுதான்.


கல்யாணப்பத்திரிக்கை, 

காதுகுத்து பத்திரிக்கை 

நீராட்டுவிழா 

புதுமனை புகுவிழா 

என 

அனைத்து சுப 

காரியங்களின் 

முக்கிய அங்கமே 

அந்த மஞ்சள் பைதான் 


பணம் கொண்டுபோக 

எப்போதும் கூட 

சில இடங்களில் 

ராசியான பை 

அந்த மஞ்சள்ப்பைதான்.


நகைக்கடையில்

எவ்வளவு கிஃப்ட் 

தந்தாலும் 

மஞ்சள் பையில் 

நகை வைத்து தருவது 

ஒரு வழக்கம் 

இன்றும் பல கடைகளில் 

மஞ்சள்ப்பை தரும் வழக்கம் உண்டு.


சிறு வியாபாரிகளின் 

எளிய விளம்பர 

நடமாடும் 

ஊடகம் அது. 

தங்கள் தொழில் 

வியாபாரத்தின் 

விளம்பரம் அந்த 

பையில் அச்சிட்டு 

தருவார்கள்


அப்போது எல்லாருடைய  

வீட்டிலும் பத்து 

மஞ்சள்ப்பை கண்டிப்பாக 

இருக்கும். 


90-களில் அது 

பட்டிக்காட்டு 

அடையாளமானது. 

பார்ப்பவர்களின் 

கேலிப்பொருளானது 


பச்சை, மஞ்சள், நீலம், 

வெள்ளை சிவப்பு என 

மாறினாலும்

பொதுப்பெயர் 

மஞ்சப்பைதான். 


ஊரில்  இருந்து  வரும் 

பாட்டி,  தாத்தா 

வாங்கிவரும்  

தின்பண்டங்கள் 

தாங்கிய மஞ்சப்பைகள்

விசேஷமானது.


ரேஷன் கடை,

 மளிகைக்கடை,

மார்க்கெட்,

ஜவுளிக்கடை,

ஓரிரு நாள் வெளியூர் பயணம்

என எங்கே  போனாலும் 

நம் கூடவே வந்த மஞ்சப்பை

ஒருகால கட்டத்தில் 

நம்மிடம் இருந்து  

தொலைந்தே போனது


இப்போது மீண்டும் 

பிளாஸ்டிக் பைகளுக்கு 

பதில் துணிப்பை

 பயன்படுத்தச்சொல்லி 

அரசு அறிவுறுத்தியுள்ளது


காலத்துக்கேற்றவாறு

மஞ்சப்பையில்  

கொஞ்சம் மாற்றம் 

செஞ்தால்  போதும்.

மீண்டும் நம்மோடு 

அது பயணிக்கும்


"நம் மண்ணைக்காக்க 

மஞ்சள் பை சுமப்போம்"


"நெகிழியை அறவே ஒழிப்போம்"


"மஞ்சள் பை"

 அது ஒரு மாற்றத்தின் அறிகுறி"


"மஞ்சள் பை அது 

வெட்கம் அல்ல 

புரட்சி"


(மஞ்சள் பையுடனான உங்கள் நினைவுகளை கமெண்டில் அனுப்புங்கள்)

No comments:

Post a Comment