Search This Blog

Friday, 17 July 2026

வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பாடத்திட்டம் சார்ந்த ஒரு நாள் பயிற்சி

வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பாடத்திட்டம் சார்ந்த ஒரு நாள் பயிற்சி

இது குறித்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், பள்ளிக்கல்வி இயக்ககம் மற்றும் தொடக்கக்கல்வி இயக்கக இயக்குநர்களின் இணை செயல்முறைகள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது 

பயிற்சி – 1 முதல் 3 ஆம் வகுப்புகள் வரை புதிய பாடத்திட்டம் மாற்றியமைத்து ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கபட்டது. எனவே பள்ளிகளின் வகுப்பறையினை உற்றுநோக்கல், பள்ளிப்பார்வை மற்றும் கண்காணிப்பு அலுவலராக உள்ள வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பாடத்திட்டம் சார்ந்த ஒரு நாள் பயிற்சியினை இணையவழியில் அளிக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளது 

இது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அலுவலர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சியானது மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள், மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.

இக்கல்வியாண்டில் 1 முதல் 3 முடிய உள்ள வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் மாற்றியமைத்து, மாணவர்கள் கல்வி கற்கும் வகையில் அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, 1 முதல் 3 முடிய உள்ள வகுப்புகளை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டத்திற்கு, முதல் பருவத்திற்கான பயிற்சியானது மாநில, மாவட்ட மற்றும் வட்டார அளவில் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது வட்டார அளவில் உள்ள பள்ளிகளின் வகுப்பறையினை உற்றுநோக்கல், பள்ளிப்பார்வை மற்றும் கண்காணிப்பு அலுவலராக உள்ள வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு புதிய பாடத்திட்டம் சார்ந்த (1 முதல் 3 ஆம் வகுப்பு வரை) முதல் பருவத்திற்கான ஒரு நாள் பயிற்சியினை இணையவழியில் வழங்கிட உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்து மாவட்டங்களில் உள்ள மாவட்டக்கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி), வட்டாரக்கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் அனைவரும் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது 

மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள், அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுடன் இணைந்து பயிற்சி மையத்தினை தெரிவு செய்து, 23.07.2026 அன்று ஒரு நாள் பயிற்சி நடைபெறும் வகையில் உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள் மற்றும் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது 

இப்பயிற்சியின் மைய எண்ணிக்கைக்கேற்ப அந்தந்த மாவட்டக்கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி), மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் முதல்வர்கள், முதுநிலை விரிவுரையாளர்கள் பொறுப்பேற்று நடத்திடுமாறும், பயிற்சி முடிவுற்ற பின்னர் அறிக்கை விவரத்தினை பின்னர் இந்நிறுவனத்திற்கு அனுப்பி வைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது 

மேலும் இது பற்றிய விவரம் அறிய கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 
👇

Thursday, 16 July 2026

PRASHAST 2.0 App பயன்படுத்தும் முறை மற்றும் பள்ளியில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவர்களை கண்டறிவது தொடர்பான வீடியோக்கள் எவ்வாறு பார்ப்பது

மத்திய அரசின் வழிகாட்டுதல் படி நமது பள்ளியில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களை கண்டறியும் ஒரு செயல்முறையே PRASHAST (Pre-Assessment Holistic Screening Tool) ஆகும். 

இந்த செயலி NCERT மற்றும் இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட ஒரு செயலி ஆகும். இதன் நோக்கம் மாற்றுத்திறனாளிக் குழந்தைகள் ஆரம்பக்கல்வியை பெறுவதில் எந்த விதமான தடையும் இருக்கக்கூடாது என்பதற்காகவும் அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காகவும் இந்த APP உருவாக்கப்பட்டுள்ளது 

2016 ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டத்தின் படி (RPwD Act 2016) அங்கீகரிக்கப்பட்டுள்ள 21 வகையான குறைபாடுகளை (பேச்சு குறைபாடு, கற்றல் குறைபாடு, தசை குறைபாடு, பார்வை குறைபாடு) இதன் மூலம் கண்டறியமுடியும் 

ஆசிரியர்கள் இந்த APP பயன்படுத்தி மாணவர்களை கண்டறிந்து அடுத்த கட்ட சோதனைக்கு பிறகு மாணவர்களுக்கு மாற்று திறனாளி சான்றிதழ் கிடைக்க வழி வகை செய்கிறது 

இது இரு வகையில் (APP மற்றும் வலைத்தளம்) வழங்கப்பட்டுள்ளது 

கீழ்கண்ட விளக்கத்தின் அடிப்படையில் செயல்பட்டு இதில் கொடுக்கப்பட்டுள்ள 10 வீடியோக்களை அனைத்து வகை ஆசிரியர்களும் பார்வையிட வேண்டும்.

இதன் மூலம் 21 வகையான மாணவர்களின் குறைபாடுகளை கண்டறிய முடியும் 

கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் PRASHAST  வலைதளத்தில் நுழைந்த உடன் video tutorials என ஒரு option இருக்கும் அதை கிளிக் செய்த உடன் login with OTP என்ற ஒரு கட்டம் தோன்றும் அதில் பள்ளியின் udise code மற்றும் உங்கள் மொபைல் எண்ணை பதிவிடவேண்டும் 

அல்லது 

கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் PLAY STORE சென்று அதில் PRASHAST என்று டைப் செய்து அந்த அப்பை பதிவிறக்கம் செய்யவேண்டும் அதனுள் நுழைந்த உடன் video tutorials என ஒரு option இருக்கும் அதை கிளிக் செய்த உடன் login with OTP என்ற ஒரு கட்டம் தோன்றும் அதில் பள்ளியின் UDISE CODE  மற்றும் உங்கள் மொபைல் எண்ணை பதிவிடவேண்டும் 

உங்கள் எண்ணுக்கு ஒரு OTP வரும் அதனை மறுபடி நீங்கள் உள்ளீடு செய்தால் வீடியோ பார்க்கும் option வரும் அதில் உள்ள 10 வீடியோக்களையும் பார்க்க வேண்டும் அதன் பிறகே மாற்றுத்திறனாளி மாணவர்களை கண்டறியும் SCREENING பெற முடியும் 

அனைத்து ஆசிரியர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு screening செய்வதற்கு முன் PRASHAST 2.O app ல் கொடுக்கப்பட்ட 10 வீடியோக்களை முழுமையாக பார்த்தல் மட்டுமே தங்களுடைய ஐடி ல் screening பண்ணக் கூடிய மாணவர்கள் பெயர்கள் வரும். எனவே அனைத்து ஆசிரியர்களும் மேற்கண்ட video பார்க்க அறிவுறுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறது

LAST DATE ஜூலை 31.7.26 

அனைத்து அரசு மற்றும் உதவி பெறும்  மேல் நிலைப் பள்ளி, உயர் நிலைப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, தொடக்கப் பள்ளி பள்ளிகளில் உள்ள தலைமைஆசிரியர்கள்,பள்ளி ஆசிரியர்கள்,கால முறை ஊதியத்தில் இருக்கும் இசை, ஓவியம், தையல், விளையாட்டு ஆசிரியர்கள் அனைவருக்கும் இது பொருந்தும் 

ஆசிரியர்கள் இணையதளம் மற்றும் app பதிவிறக்கம் செய்து வீடியோ பார்க்கலாம் 

👉முக்கிய இணையதள முகவரி (Official Link)

Website Link 

👇

CLICK HERE

APP DOWNLOAD LINK

👇

CLICK HERE

NMMS EXAM தேர்வுக்கு வழிகாட்டும் மாதிரி ஆன்லைன் தேர்வு 56 - VII ஆம் வகுப்பு அறிவியல் (MERGED LESSONS)

 NMMS EXAM தேர்வுக்கு வழிகாட்டும் மாதிரி ஆன்லைன் தேர்வு 56 - VII  ஆம் வகுப்பு அறிவியல் (MERGED LESSONS)

மதிப்புமிகு ஆசிரியர் பெருமக்களுக்கும் அன்பான மாணவ செல்வங்களுக்கும் எங்கள் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம் 

ஒவ்வொரு ஆண்டும் உதவித்தொகை பெறுவதற்காக 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு NMMS தேர்வு நடைபெற்று வருகிறது 

இந்த தேர்வில் வெற்றி பெரும் மானவர்கள் மாதம் ரூபாய் 1000 வீதம் 4 வருடங்களுக்கு ரூபாய் 48000 பெறுவார்கள் 

இந்த தேர்வுக்கான வினாக்கள் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் 

தாள் 1 MAT (MENTAL ABILITY TEST)

தாள் 2 SAT (SCHOLASTIC APTITUDE TEST)

தாள் 1 தேர்வானது மாணவர்களின் மனத்திறனை சோதிக்கும் வகையில் 90 வினாக்கள் கேட்கப்படும் 

தாள் 2 தேர்வானது 7 மற்றும் 8 வகுப்பு பாடங்களான கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் இருந்து 90 வினாக்கள் கேட்கப்படும் 

இரண்டு தேர்வும் சேர்ந்து மொத்தம் 180 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் 

இதில் தேர்வு பெரும் மாணவர்கள்  மதிப்பெண் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படும் 

இந்த தேர்வுகளுக்கான பயிற்சி மற்றும் ஆன்லைன் தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நமது    ramanibabu.blogspot.com   சார்பில் வழங்கப்பட்டு வருகிறது 

இந்த மாதிரி தேர்வானது தினமும் மாலை 7 மணி அளவில் நடைபெறும் 

மாணவர்கள் தேர்வு எழுதி முடித்த உடன் அதற்கான மதிப்பெண்களை உடனடியாக அறிந்து கொள்ள முடியும் 

ஒவ்வொரு நாளும் நடைபெறும் தேர்வுக்கான பாடப்பகுதி  முந்தைய நாளில் வழங்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் நடத்தப்படும் 

அந்த பாடப்பகுதிக்கு ஏற்றாற்போல்  மாணவர்கள் தங்களை தயார் செய்து கொண்டு இந்த தேர்வுகளை எழுதலாம் 

இந்த தேர்வுகளுக்காக எந்த ஒரு கட்டணமும் கிடையாது 

இது 100 சதவீதம் மாணவர்களின் நலன் சேர்ந்து நடத்தப்படுகிறது 

இதற்காக நாங்கள் உருவாக்கிய வாட்ஸ் அப் குழுவில் இணைந்த கொண்டு தினமும் தேர்வுக்கான லிங்கை பெறலாம்  பெரும்பாலான தேர்வுக்கு தொடர்பான விளக்கங்கள் ஆன்லைன் வகுப்புகள், மாதிரி தேர்வுகள் பாடக்குறிப்புகள் வாட்ஸ் அப் சானல் வழியாகவே அனுப்பப்படும் எனவே மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணைந்து கொள்ளவும் 

வாட்ஸ் அப் சானல் லிங்க் 

👇

CLICK HERE TO JOIN

இன்று தேர்வுக்கான பாடப்பகுதி மற்றும் தேர்வுக்கான லிங்க் 

7 ஆம் வகுப்பு அறிவியல் 

1. பலபடி வேதியியல் 

2. அன்றாட வாழ்வில் வேதியியல் 

தேர்வு எழுத கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

மாணவர்களின் கவனத்திற்கு 

மேற்கண்ட அனைத்து தேர்வுகளையும் நீங்கள் ஆங்கில வழியில் எழுதும் வழிமுறைகள் 

STEP 1

CLICK HERE TO WRITE ONLINE EXAM என்பதை CLICK செய்தவுடன் உங்களுக்கு தேர்வுக்கான GOOGLE FORM வினாத்தாள் OPEN ஆகும் 

STEP 2

வலது ஓரத்தில் மேலே தெரியும் மூன்று புள்ளிகளை CLICK செய்யவும் 

STEP 3

அதில் தோன்றும் மெனுவில் கீழே TRANSLATE என வரும் அதனை கிளிக் செய்யவும் 

STEP 4

இப்போது உங்களுக்கு வினாத்தாள் ஆங்கிலத்தில் தெரியும். அவ்வாறு தெரியவில்லை எனில் அதில் தெரியும் மொழியில் ENGLISH என்பதை தேர்வு செய்யவும் 

STEP 5

இப்போது உங்களுக்கு வினாத்தாள் ஆங்கிலத்தில் தெரியும் நீங்கள் தேர்வு எழுதலாம் 

நாளை  தேர்வுக்கான பாடப்பகுதிகள் 

VII ஆம் வகுப்பு அறிவியல் 

நாளை இரு தேர்வுகள் அனுப்பப்படும் 

தேர்வு 1

1. அன்றாட வாழ்வில் விலங்குகள் 

2. காட்சித் தொடர்பியல் 

தேர்வு 2

1. செல் உயிரியல் 

2. கணினி காட்சித்தொடர்பு 

3. நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள் 

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள இள.பாபு வேலன் 

பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்) 

9952329008

9361564416

த. நெல்சன் 

பட்டதாரி ஆசிரியர் (கணக்கு)

9500870040

உங்கள் மாணவர்கள் உங்கள் நண்பர்களுக்கும்  இதை அனுப்பி அவர்களையும் குழுவில் இணைந்து தேர்வு எழுதி வெற்றி பெற உதவி செய்யுங்கள் 

அன்புடன் 

இள.பாபு வேலன் 

பட்டதாரி ஆசிரியர் 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 

கரிசல்குடியிருப்பு 

தென்காசி ஒன்றியம் 

தென்காசி மாவட்டம் 

டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பதிவேற்றம் செய்தல் சார்ந்து தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள்

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை/மேல்நிலை/தனியார் பள்ளிகள்/ஆங்கிலோ இந்தியப்பள்ளிகள் சமூக பாதுகாப்புத்துறை/ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்த நாளினை ஆசிரியர் தின விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இவ்விழாவில் சிறந்த ஆசிரியர்களுக்கான மாநில அரசு விருதான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டு வருகிறது 

விருது பெரும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின விழாவில் ரூபாய் 10000/- ரொக்கப்பரிசும் வெள்ளிப்பதக்கமும் பாராட்டுச்சான்றிதழும் வழங்கப்படுகிறது 

விருதிற்கு தகுதியுள்ள ஆசிரியர்கள் உரிய படிவத்தில் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து தெரிவித்தல் வேண்டும் 

போதிய ஆசிரியர்கள் விண்ணப்பிக்கவில்லை வென்று தெரிவிக்காமல் ஆய்வு அலுவலர்கள் தங்கள் பள்ளிகள் பார்வையின் போது கண்டறிந்த சிறந்த ஆசிரியர்களை பள்ளித் தலைமையாசிரியரிடம் அறிவுறுத்தி இணையதளத்தில் பதிவு செய்திடல் வேண்டும் 

முதன்மை கல்வி அலுவலர் தலைமையிலான குழு விண்ணப்பித்த அனைத்து ஆசிரியர்கள் செயல்பாடுகளை இணையதளத்தில் மதிப்பீடு செய்ய வேண்டும் 

விண்ணப்பித்த ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் மற்றும் பிற சான்றுகள் மாவட்ட அளவில் உரிய அலுவலர்களால் சரிபார்க்கப்படவேண்டும் 

விண்ணப்பித்த ஆசிரியர்கள் மாவட்டத் தேர்வுக்குழுவின் முன் நேர்காணலுக்கு வரவழைக்கப்பட்டு மதிப்பீடு செய்தல் வேண்டும் 

மாவட்டத்தேர்வுக்குழுவினர் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களின் பட்டியல் கருத்துருக்களை இணையவழியாக மதிப்பீடுகளின் அடிப்படையில் மாநிலத் தேர்வுக்குழுவின் பரிசீலனைக்கு ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதிக்குள் பரிந்துரை செய்யப்பட வேண்டும் 

மாநிலத் தேர்வுக்குழு மாவட்டக்குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இறுதி மதிப்பீடு செய்து தகுதியானவர்களின் பட்டியலை தயாரிக்க வேண்டும் 

விருது வழிகாட்டு நெறிமுறைகள் பற்றிய விவரங்கள் தேவைப்படுவோர் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று பதிவிறக்கம் செய்யவும் 

👇

CLICK HERE

பள்ளிக் கல்வி - 2026-27 ஆம் கல்வியாண்டின் மன்றச் செயல்பாடுகள் - துவக்க நிகழ்ச்சி மற்றும் மாணவர்களிடையே மன்றச் செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது சார்ந்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இயக்குனரின் சுற்றறிக்கை

மாணவர்களின் கல்வி மற்றும் தனித்திறன் மேம்பாட்டில் மன்றச் செயல்பாடுகள் பெரும் பங்கு வகிக்கின்றன. மாணவர்களின் உள்ளார்ந்த திறமைகளை வெளிக்கொணரவும், அவர்களின் பன்முக வளர்ச்சியை உறுதி செய்யவும் இந்த மன்றச் செயல்பாடுகள் ஒரு அடிப்படை தளமாக விளங்குகின்றன

அதன்படி, மன்றச் செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை இதற்கென தனி பாடவேளை ஒதுக்கீடு செய்யப்பட்டு இச்செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

எனவே, இம்மன்றச் செயல்பாடுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பாடவேளைகளில் வேறு எந்தவித செயல்பாடுகளுக்கும் இடமளிக்காமல், இச்செயல்பாடுகள் அனைத்தும் மகிழ்முற்றம் மாணவர் குழுக்கள் வாயிலாக நடைபெறுவதை உறுதி செய்தல் வேண்டும்.

மேலும், இந்த 2026-27 ஆம் கல்வியாண்டில், மன்றச் செயல்பாடுகளின் துவக்க நிகழ்ச்சியினை 28.07.2026 அன்று அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலை வணக்கக் கூட்டத்தின் போது நடத்திடத் தெரிவிக்கப்படுகிறது.

அதனடிப்படையில், இலக்கிய மன்றம், வினாடி-வினா மன்றம், சிறார் திரைப்பட மன்றம், கலை மற்றும் பண்பாட்டு மன்றம் (கலைத்திருவிழா) மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் போன்று பள்ளியளவில் செயல்படும் மன்றச் செயல்பாடுகளுக்கும் தனித்தனியாக ஒரு பொறுப்பாசிரியரையும், ஒவ்வொரு மன்றச் செயல்பாட்டிலும் சிறந்து விளங்கும் ஒரு மாணவரை அந்தந்த மன்றச் செயல்பாட்டிற்கான மாணவர் தூதுவராக (Student Ambassador) நியமித்தல் வேண்டும்.

மேலும், பின்வரும் நிகழ்ச்சி நிரலைப் பின்பற்றி ஆசிரியர்கள் மாணவர்களுடன் இணைந்து மன்றச் செயல்பாடுகளின் துவக்க நிகழ்ச்சியினை 28.07.2026 அன்று திட்டமிட்டு மேற்கொள்ளுதல் வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

மன்றச் செயல்பாடுகள் துவக்க நிகழ்ச்சி நிரல் - 28.07.2026

இந்நிகழ்ச்சிக்கு 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களையும் அவரவர் மகிழ்முற்றம் குழுக்களின் அடிப்படையில் 5 குழுக்களாக வரிசைப்படுத்தவும்.

தலைமையாசிரியரின் வரவேற்புரை

2026-27 ஆம் ஆண்டில் பள்ளியளவில் செயல்படும் அனைத்து மன்றச் செயல்பாடுகளின் துவக்கத்தினை அறிவித்தல் மற்றும் அதன் குறிக்கோள்களை எடுத்துரைத்தல்

மன்றச் செயல்பாடுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பாடவேளையின் நாள் மற்றும் நேர விவரங்களை அறிவித்தல் மற்றும் அதன் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தல்

மாணவ கல்வி அமைச்சர்

மன்றச் செயல்பாடுகள் மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு (holistic development of students) உதவும் என்பதை எடுத்துரைத்தல்

குழுத் தலைவர்கள் (House Captains)

ஒவ்வொரு மன்றச் செயல்பாடுகளுக்கான பொறுப்பு ஆசிரியர்கள் மற்றும் மாணவ தூதுவர்களை அறிமுகப்படுத்துதல்

ஒவ்வொரு மன்றப் பொறுப்பாசிரியர்கள்

மன்றப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை அங்கீகரித்தல்.

ஒவ்வொரு மன்ற மாணவ தூதுவர்கள்

அந்தந்த மன்றச் செயல்பாடுகளில் அவர்கள் பெற்ற அனுபவங்களைப் பகிர்ந்து இனிவரும் காலங்களில் அனைத்து மாணவர்களின் பங்கேற்பினை ஊக்குவித்தல்.

மகிழ்முற்றம் ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்

மகிழ்முற்றம் ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள உறுதிமொழியை வாசிக்க, அனைவரும் உறுதிமொழி ஏற்றல்

வினாடி வினா மன்றப் பொறுப்பாசிரியர்

இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள வினாடி வினாவை மகிழ்முற்றம் குழுக்கள் வாரியாக நடத்துதல், மதிப்பெண் வழங்குதல் மற்றும் வெற்றி பெற்ற குழுவினை அறிவித்தல்.

இலக்கிய மன்றப் பொறுப்பாசிரியர்

இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள செயல்பாடுகளை மாணவர்கள் முன்கூட்டியே தயார் செய்வதை உறுதி செய்தல். அப்படைப்புகளுக்கு குழு வாரியாக மதிப்பெண்கள் வழங்குதல். அவற்றை நிகழ்ச்சி அன்று காட்சிப்படுத்துதல்.

சிறார் திரைப்பட மன்றப் பொறுப்பாசிரியர்

மாணவர்கள் இவ்வாண்டு காட்சிப்படுத்தப்பட்ட சிறார் திரைப்படத்தின் அடிப்படையில் அவர்களுக்கு பிடித்த கதாபாத்திரத்தினைப் பற்றி எழுதுதல், சுவரொட்டி தயாரித்தல், போன்று ஏதேனும் ஒரு செயல்பாட்டினை செய்து அவற்றை நிகழ்ச்சி அன்று காட்சிப்படுத்துதல்.

சுற்றுச்சூழல் மன்றப் பொறுப்பாசிரியர்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்து ஏதேனும் செயல்பாட்டினை மாணவர்களை ஈடுபடுத்தி மேற்கொள்ளுதல்

கலைப் பண்பாட்டு மன்றப் பொறுப்பாசிரியர்

சென்ற ஆண்டு பள்ளியளவில் கலைத்திருவிழா போட்டியில் சிறந்து விளங்கிய மாணவர்களைக் கொண்டு ஏதேனும் ஒரு கலைநிகழ்ச்சியினை திட்டமிட்டு நடத்துதல்.

இந்த துவக்க நிகழ்ச்சியினைத் தொடர்ந்து, அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் அனைத்து மன்றங்களும் முறையாக அமைக்கப்பட்டு வாரந்தோறும் இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பாடவேளைகளில் மன்றச் செயல்பாடுகள் முறையாகவும், தொடர்ச்சியாகவும் நடைபெறுவதை அந்தந்த பள்ளி தலைமையாசிரியரும் மன்றப் பொறுப்பாசிரியர்களும், மாணவர் அமைச்சர்களும், மகிழ்முற்றம் குழுத் தலைவர்களும் உறுதி செய்தல் வேண்டும்.

மேலும், இவ்வாறாக பள்ளிகளில் மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக முன்னெடுக்கப்படும் செயல்பாடுகள் அனைத்தும் மாணவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கவும், எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் திறனைப் பெறவும் உறுதுணையாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. 

இவ்வகையான அனைத்து செயல்பாடுகளிலும் ஒவ்வொரு மாணவரின் பங்கேற்பினை உறுதிசெய்யும் நோக்கில் அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்பளிக்கும் வகையில் திட்டமிட்டு இந்நிகழ்வுகளை மேற்கொள்ளுமாறு அனைத்து தலைமையாசிரியர்களும் மற்றும் ஆசிரியர்களும் இப்பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி, முழு கவனம் செலுத்தி, முனைப்புடன் செயல்படுத்தத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் இது பற்றிய விவரம் அறியவும் வினாடி வினா போட்டியில் கேட்கப்படும் வினாக்கள் குறித்தும் அறிய கீழே உள்ள லிங்க் மூலம் சென்று PDF பதிவிறக்கம் செய்யவும் 

👇

Tuesday, 14 July 2026

NMMS EXAM தேர்வுக்கு வழிகாட்டும் மாதிரி ஆன்லைன் தேர்வு 55 - VII ஆம் வகுப்பு சமூக அறிவியல் (MERGED LESSONS)

NMMS EXAM தேர்வுக்கு வழிகாட்டும் மாதிரி ஆன்லைன் தேர்வு 55 - VII  ஆம் வகுப்பு சமூக அறிவியல் (MERGED LESSONS)

இன்று இரு  தேர்வு 8 ஆம் வகுப்பு சமூக வழங்கப்படுகிறது. தேர்வுக்கான லிங்க் கீழே வழங்கப்பட்டுள்ளது  

மதிப்புமிகு ஆசிரியர் பெருமக்களுக்கும் அன்பான மாணவ செல்வங்களுக்கும் எங்கள் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம் 

ஒவ்வொரு ஆண்டும் உதவித்தொகை பெறுவதற்காக 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு NMMS தேர்வு நடைபெற்று வருகிறது 

இந்த தேர்வில் வெற்றி பெரும் மானவர்கள் மாதம் ரூபாய் 1000 வீதம் 4 வருடங்களுக்கு ரூபாய் 48000 பெறுவார்கள் 

இந்த தேர்வுக்கான வினாக்கள் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் 

தாள் 1 MAT (MENTAL ABILITY TEST)

தாள் 2 SAT (SCHOLASTIC APTITUDE TEST)

தாள் 1 தேர்வானது மாணவர்களின் மனத்திறனை சோதிக்கும் வகையில் 90 வினாக்கள் கேட்கப்படும் 

தாள் 2 தேர்வானது 7 மற்றும் 8 வகுப்பு பாடங்களான கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் இருந்து 90 வினாக்கள் கேட்கப்படும் 

இரண்டு தேர்வும் சேர்ந்து மொத்தம் 180 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் 

இதில் தேர்வு பெரும் மாணவர்கள்  மதிப்பெண் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படும் 

இந்த தேர்வுகளுக்கான பயிற்சி மற்றும் ஆன்லைன் தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நமது    ramanibabu.blogspot.com   சார்பில் வழங்கப்பட்டு வருகிறது 

இந்த மாதிரி தேர்வானது தினமும் மாலை 7 மணி அளவில் நடைபெறும் 

மாணவர்கள் தேர்வு எழுதி முடித்த உடன் அதற்கான மதிப்பெண்களை உடனடியாக அறிந்து கொள்ள முடியும் 

ஒவ்வொரு நாளும் நடைபெறும் தேர்வுக்கான பாடப்பகுதி  முந்தைய நாளில் வழங்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் நடத்தப்படும் 

அந்த பாடப்பகுதிக்கு ஏற்றாற்போல்  மாணவர்கள் தங்களை தயார் செய்து கொண்டு இந்த தேர்வுகளை எழுதலாம் 

இந்த தேர்வுகளுக்காக எந்த ஒரு கட்டணமும் கிடையாது 

இது 100 சதவீதம் மாணவர்களின் நலன் சேர்ந்து நடத்தப்படுகிறது 

இதற்காக நாங்கள் உருவாக்கிய வாட்ஸ் அப் குழுவில் இணைந்த கொண்டு தினமும் தேர்வுக்கான லிங்கை பெறலாம்  பெரும்பாலான தேர்வுக்கு தொடர்பான விளக்கங்கள் ஆன்லைன் வகுப்புகள், மாதிரி தேர்வுகள் பாடக்குறிப்புகள் வாட்ஸ் அப் சானல் வழியாகவே அனுப்பப்படும் எனவே மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணைந்து கொள்ளவும் 

வாட்ஸ் அப் சானல் லிங்க் 

👇

CLICK HERE TO JOIN

இன்று தேர்வுக்கான பாடப்பகுதி மற்றும் தேர்வுக்கான லிங்க் 

தேர்வுக்கான பாடப்பகுதிகள் 

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் (MERGED EXAM)

1. டெல்லி சுல்தானியம் 

2. விஜயநகரம் மற்றும் பாமினி பேரரசு 

3. மக்கள் தொகை மற்றும் குடியிருப்பு 

4. வளங்கள் 

5. உற்பத்தி 

6. சுற்றுலா 

தேர்வு எழுத கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

மாணவர்களின் கவனத்திற்கு 

மேற்கண்ட அனைத்து தேர்வுகளையும் நீங்கள் ஆங்கில வழியில் எழுதும் வழிமுறைகள் 

STEP 1

CLICK HERE TO WRITE ONLINE EXAM என்பதை CLICK செய்தவுடன் உங்களுக்கு தேர்வுக்கான GOOGLE FORM வினாத்தாள் OPEN ஆகும் 

STEP 2

வலது ஓரத்தில் மேலே தெரியும் மூன்று புள்ளிகளை CLICK செய்யவும் 

STEP 3

அதில் தோன்றும் மெனுவில் கீழே TRANSLATE என வரும் அதனை கிளிக் செய்யவும் 

STEP 4

இப்போது உங்களுக்கு வினாத்தாள் ஆங்கிலத்தில் தெரியும். அவ்வாறு தெரியவில்லை எனில் அதில் தெரியும் மொழியில் ENGLISH என்பதை தேர்வு செய்யவும் 

STEP 5

இப்போது உங்களுக்கு வினாத்தாள் ஆங்கிலத்தில் தெரியும் நீங்கள் தேர்வு எழுதலாம் 

நாளை  தேர்வுக்கான பாடப்பகுதிகள் 

7 ஆம் வகுப்பு அறிவியல் 

1. பலபடி வேதியியல் 

2. அன்றாட வாழ்வில் வேதியியல் 

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள இள.பாபு வேலன் 

பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்) 

9952329008

9361564416

த. நெல்சன் 

பட்டதாரி ஆசிரியர் (கணக்கு)

9500870040

உங்கள் மாணவர்கள் உங்கள் நண்பர்களுக்கும்  இதை அனுப்பி அவர்களையும் குழுவில் இணைந்து தேர்வு எழுதி வெற்றி பெற உதவி செய்யுங்கள் 

அன்புடன் 

இள.பாபு வேலன் 

பட்டதாரி ஆசிரியர் 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 

கரிசல்குடியிருப்பு 

தென்காசி ஒன்றியம் 

தென்காசி மாவட்டம் 

Monday, 13 July 2026

NMMS EXAM தேர்வுக்கு வழிகாட்டும் மாதிரி ஆன்லைன் தேர்வு 54 - VIII ஆம் வகுப்பு சமூக அறிவியல் (இரு தேர்வுகள்)

8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 

தேர்வு 1

1. ஐரோப்பியர்களின் வருகை 

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

2. வர்த்தகத்தில் இருந்து பேரரசு வரை (ஆங்கிலேயே - மைசூர் போர் வரை மட்டும்)

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

மாணவர்களின் கவனத்திற்கு 

மேற்கண்ட அனைத்து தேர்வுகளையும் நீங்கள் ஆங்கில வழியில் எழுதும் வழிமுறைகள் 

STEP 1

CLICK HERE TO WRITE ONLINE EXAM என்பதை CLICK செய்தவுடன் உங்களுக்கு தேர்வுக்கான GOOGLE FORM வினாத்தாள் OPEN ஆகும் 

STEP 2

வலது ஓரத்தில் மேலே தெரியும் மூன்று புள்ளிகளை CLICK செய்யவும் 

STEP 3

அதில் தோன்றும் மெனுவில் கீழே TRANSLATE என வரும் அதனை கிளிக் செய்யவும் 

STEP 4

இப்போது உங்களுக்கு வினாத்தாள் ஆங்கிலத்தில் தெரியும். அவ்வாறு தெரியவில்லை எனில் அதில் தெரியும் மொழியில் ENGLISH என்பதை தேர்வு செய்யவும் 

STEP 5

இப்போது உங்களுக்கு வினாத்தாள் ஆங்கிலத்தில் தெரியும் நீங்கள் தேர்வு எழுதலாம் 

நாளை  மாலை 7 மணி 

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் (MERGED EXAM)

1. டெல்லி சுல்தானியம் 

2. விஜயநகரம் மற்றும் பாமினி பேரரசு 

3. மக்கள் தொகை மற்றும் குடியிருப்பு 

4. வளங்கள் 

5. உற்பத்தி 

6. சுற்றுலா 

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள இள.பாபு வேலன் 

பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்) 

9952329008

9361564416

த. நெல்சன் 

பட்டதாரி ஆசிரியர் (கணக்கு)

9500870040

உங்கள் மாணவர்கள் உங்கள் நண்பர்களுக்கும்  இதை அனுப்பி அவர்களையும் குழுவில் இணைந்து தேர்வு எழுதி வெற்றி பெற உதவி செய்யுங்கள் 

அன்புடன் 

இள.பாபு வேலன் 

பட்டதாரி ஆசிரியர் 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 

கரிசல்குடியிருப்பு 

தென்காசி ஒன்றியம் 

தென்காசி மாவட்டம் 

Sunday, 12 July 2026

கேரளா மாநிலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு முழு பத்து நாட்கள் சிறப்பு விடுமுறை அல்லது 20 அரை நாட்கள் விடுமுறை

கேரளா மாநிலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு முழு பத்து நாட்கள் சிறப்பு விடுமுறை அல்லது 20 அரை நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது 

இது குறித்த கேரளா அரசு ஆணை கீழே உள்ள லிங்க் மூலம் சென்று பதிவிறக்கம் செய்யவும் 

👇

CLICK HERE TO DOWNLOAD PDF

மேற்கண்ட ஆணையின் தமிழாக்கம் 

நிர்வாகம் (பொது) துறை, 

கேரளா அரசு, 

அரசு ஆணை (நிலை) எண் 69/2026/GAD, நாள் 01-07-2026.

சுருக்கம்: 

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 - மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு சலுகைகள் மற்றும் வசதிகள் வழங்குதல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

ஆணை:

மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநரின் அறிக்கையைத் தொடர்ந்து, மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள பணியாளர்களுக்கு பின்வரும் சலுகைகளை வழங்க அரசு மகிழ்ச்சியுடன் ஆணையிடுகிறது.

  1. கிராமப்புற/உள்ளாட்சி அமைப்புகள்/வனத்துறை பணியாளர்கள்/ஆசிரியர்கள்/அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள்/எண்ணுபவர்கள்/உதவி எண்ணுபவர்களாக நியமிக்கப்பட்ட பிற பணியாளர்கள், இல்லப் பட்டியல் மற்றும் வீட்டு வசதி கணக்கெடுப்பின் (HLO) முதல் கட்டப் பணிக்காக சலுகைகளைப் பெறலாம்.

  2. இந்த பணியாளர்கள் 01.07.2026 முதல் 30.07.2026 வரையிலான காலப்பகுதியில், 20 வேலை நாட்களுக்கு அரை நாள் (முற்பகல் அல்லது பிற்பகல்) அல்லது 10 வேலை நாட்களுக்கு முழு நாள் பணியிலிருந்து விலக்கு பெற்று கணக்கெடுப்பு பணியில் ஈடுபடலாம்.

  3. பணியாளர்கள் தங்களுக்கு விருப்பமான ஒரு சலுகையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

(ஆளுநரின் ஆணைப்படி)

அரவிந்த் பி.எஸ் 

கூட்டுச் செயலாளர் மற்றும் மாநில நெறிமுறை அதிகாரி