தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பாக அனைத்து அரசு பள்ளிகளிலும் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் கலந்து கொள்ளும் வகையில் "கலைத்திருவிழா" போட்டிகள் நடைபெற உள்ளது
நடனம், நாடகம், கவிதை எழுதுதல், கதை எழுதுதல், பட்டிமன்றம், தமிழ் மற்றும் ஆங்கிலம் கையெழுத்து, போன்ற போட்டிகள் நடைபெற உள்ளது.
முதலில் பள்ளி அளவிலும், பின்பு வட்டார அளவிலும், மாவட்ட அளவிலும் நடைபெற உள்ளது.
மாவட்ட அளவில் போட்டிகளில் வெற்றிபெற்றவர்கள் மாநில அளவில் கலந்து கொள்வார்கள்
மாநில அளவில் வெற்றிபெறும் மாணவர்கள் பரிசுகள், சான்றிதழ், பட்டம் பெறுவார்கள். மாணவர்களை மேலும் உற்சாகப்படுத்தும் விதமாக வெளிநாடு இன்பச்சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.
போட்டிகளில் அதிக அளவில் மாணவர்களை கலந்துகொள்ள செய்து இதை பள்ளியில் நடைபெறும் திருவிழா போல் கொண்டாட மாவட்ட கல்வித்துறை சார்பில் முழு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது
தமிழகத்தில் முதன்முறையாக இந்த கலைத்திருவிழா பற்றிய விழிப்புணர்வு வீடியோ தென்காசி மாவட்டம் கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இது அனைத்து மாணவர்களுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது
Follow this link to join my WhatsApp group
👇👇