Search This Blog

Friday, 21 October 2022

9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 'ஊரகத் திறனாய்வு தேர்வு' (trust) அறிவிப்பு வெளியானது


👉 2022-2023 கல்வி ஆண்டில் கிராமப்புற பஞ்சாயத்து மற்றும் டவுன்ஷிப் பகுதியில்  9 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இத்தேர்வு எழுதலாம் 


👉 நகராட்சி/மாநகராட்சி பகுதியில் படிக்கும் மாணவர்கள் இத்தேர்வு எழுத முடியாது 


👉 பெற்றோர் ஆண்டு வருமானம் 100000 -க்கு மிகாமல் இருக்க வேண்டும் 


👉 தேர்வு நாள்: 10.12.2022


👉 வெற்று விண்ணப்பம் பதிவு செய்யும் நாள் 26.10.2022 முதல் 05.11.2022 வரை 


👉 பூர்த்தி செய்த விண்ணப்பம் தலைமை ஆசிரியரால் பெறப்படவேண்டிய நாள்  05.11.2022


👉 தேர்வுக்கட்டணம் 10 ரூபாய் 


👉 விண்ணப்பங்கள் online மூலம் பதிவேற்றவேண்டிய நாள் 28.10.2022 முதல் 08.11.2022 வரை 


வெற்று விண்ணப்பம் பதிவிறக்கம் 

செய்ய கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

(26.10.2022 முதல் 05.11.2022 வரை) 

👇👇

CLICK HERE TO DOWNLOAD APPLICATION



மேலும் விவரம் அறிய 

கீழே உள்ள லிங்க் மூலம் 

அறிவிப்பை PDF ஆக 

பதிவிறக்கம் செய்யவும் 

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF











01.01.2022 இடைநிலை மற்றும் சிறப்பு ஆசிரியர்கள் பதவியில் இருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கான முன்னுரிமை பட்டியல் வெளியீடு


பள்ளிக்கல்வி 

இணை இயக்குனரின் 

செயல்முறைகள் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




பட்டதாரி ஆசிரியர் 

பதவி உயர்வுக்கான 

முன்னுரிமை 

பட்டியல் (TAMIL)

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



பட்டதாரி ஆசிரியர் 

பதவி உயர்வுக்கான 

முன்னுரிமை 

பட்டியல் (SCIENCE)

👇👇

CLICK HERE TO DOWNLOAD



பட்டதாரி ஆசிரியர் 

பதவி உயர்வுக்கான 

முன்னுரிமை 

பட்டியல் (SOCIAL SCIENCE)

👇👇

CLICK HERE TO DOWNLOAD



பட்டதாரி ஆசிரியர் 

பதவி உயர்வுக்கான 

முன்னுரிமை 

பட்டியல் (MATHS)

👇👇

CLICK HERE TO DOWNLOAD



பட்டதாரி ஆசிரியர் 

பதவி உயர்வுக்கான 

முன்னுரிமை 

பட்டியல் (ENGLISH)

👇👇

CLICK HERE TO DOWNLOAD




விரைவான கல்வி செய்தி 

மற்றும் மாணவர்களுக்கு 

தேவையான 

செய்திகளுக்கு

"TAMILNADU TEACHERS"

(ONLY EDUCATION NEWS)


JOIN 

👇👇

CLICK HERE TO JOIN OUR TELEGRAM GROUP

1 முதல் 12 ஆசிரியர்கள் PINDICS படிவத்தை EMIS இணையத்தில் இன்று முதல் பதிவேற்ற உத்தரவு SPD செயல்முறைகள்,Teachers Self Evaluation Formate மற்றும் வீடியோ விளக்கம்


மாநில திட்ட இயக்குனர் ஆணை













TEACHER SELF EVALUATION FORMAT













வீடியோ விளக்கம்

👇👇







 






 

Monday, 17 October 2022

பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.15,000 உதவித்தொகை – SBIயின் ஆஷா திட்டம் முழு விவரம்


இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான எஸ்பிஐ வங்கியில் ஏழை குழந்தைகளின் கல்விக்காக எஸ்.பி.ஐ ஆஷா ஸ்காலர்ஷிப் திட்டம் 2022 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த திட்டம் குறித்த விவரங்களும், தகுதி மற்றும் எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்


எஸ்.பி.ஐ ஆஷா ஸ்காலர்ஷிப் திட்டம் 2022


அரசு சார்பில் ஏழை குழந்தைகளை கல்வியில் முன்னேற்றம் வேண்டும் என்பதற்காக ஏகப்பட்ட சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. 


குழந்தைகளுக்கு கல்வி என்பது அடிப்படையான ஒன்றாக இருக்க வேண்டும் என்பதில் அரசு குறிக்கோளுடன் இருக்கிறது. இந்நிலையில் அரசு மட்டுமில்லாமல் இந்தியாவின் பொதுத்துறை வங்கியான பாரத் ஸ்டேட் வங்கி இருக்கிறது. 


அந்த வகையில் எஸ்.பி.ஐ ஆஷா ஸ்காலர்ஷிப் திட்டம் 2022 என ஏழை குழந்தைகளின் கல்விக்காக புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.


அதன் படி எஸ்.பி.ஐ அறக்கட்டளையின் கல்வி சார்ந்த ஒருங்கிணைந்த கற்றல் இயக்கத்தின் கீழ் இந்தியா முழுவதும் உள்ள குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த திறமையான மாணவர்களுக்கு அவர்களின் கல்வியை தொடர நிதி உதவி வழங்கப்படுகிறது. 


இந்த திட்டத்தின் கீழ் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 15000 நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த ஸ்காலர்ஷிப் திட்டத்தை Buddy4Study நிறுவனம் பங்குதாரராக இருந்து செயல்படுத்துகிறது.



தகுதிகள்


👉இந்த திட்டத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பலன் பெறுவார்கள்.

👉விண்ணப்பதாரர்கள் முந்தைய கல்வியாண்டில் குறைந்தபட்சம் 75%

மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

👉விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3,00,000க்கு மிகாமல்

இருக்க வேண்டும்.

👉இந்தியா முழுவதும் உள்ள மாணவர்கள் இந்த உதவித் தொகைக்கு

விண்ணப்பிக்கலாம்.


தேவையான ஆவணங்கள்


   ▪️ மாணவர்களின் முந்தைய கல்வியாண்டின் மதிப்பெண் பட்டியல்

    ▪️மாணவரின் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அடையாளச் சான்று (ஆதார் அட்டை/வாக்காளர் அடையாள அட்டை/ஓட்டுநர் உரிமம்/பான் அட்டை)

   ▪️ நடப்பு ஆண்டு சேர்க்கை சான்று (கட்டண ரசீது / சேர்க்கை கடிதம் / நிறுவன அடையாள அட்டை / நம்பகத்தன்மை சான்றிதழ்)

    ▪️விண்ணப்பதாரரின் (அல்லது பெற்றோர்) வங்கி கணக்கு விவரங்கள்

    ▪️வருமானச் சான்று (படிவம் 16A/அரசு அதிகாரத்தின் வருமானச் சான்றிதழ்/சம்பளச் சீட்டுகள் போன்றவை)

    ▪️விண்ணப்பதாரரின் புகைப்படம்


விண்ணப்பிக்கும் முறை


கீழே உள்ள லிங்க் மூலம்  இணையதளப் பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.

👇👇

https://www.buddy4study.com/page/sbi-asha-scholarship-program?ref=HomePageBanner 

   

 ▪️ஏற்கனவே பதிவு செய்தவர் என்றால், உங்கள் பதிவு செய்யப்பட்ட ஐடியுடன் Buddy4Study இல் உள்நுழைந்து, ‘விண்ணப்பப் படிவம் பக்கத்தை' பார்க்கலாம்.

    ▪️ஏற்கனவே பதிவு செய்யவில்லை என்றால் – Buddy4Study இல் உங்கள் மின்னஞ்சல்/மொபைல்/ஜிமெயில் கணக்குடன் பதிவு செய்துக் கொள்ள வேண்டும்.

   ▪️ நீங்கள் இப்போது ‘SBI ஆஷா ஸ்காலர்ஷிப் திட்டம் 2022’ விண்ணப்பப் படிவப் பக்கத்திற்குத் திருப்பி விடப்படுவீர்கள்.

    ▪️விண்ணப்ப செயல்முறையைத் தொடங்க, ‘விண்ணப்பத்தைத் தொடங்கு’ பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும்.

    ▪️ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் தேவையான விவரங்களை நிரப்ப வேண்டும். அதன் பின் தொடர்புடைய ஆவணங்களைப் பதிவேற்ற வேண்டும்.

    ▪️அதன் பின் ‘விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை’ ஏற்று, ‘ப்ரிவியூ’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

    ▪️விண்ணப்பதாரர் பூர்த்தி செய்த அனைத்து விவரங்களும் முன்னோட்டத் திரையில் சரியாகக் காட்டப்பட்டால், விண்ணப்ப செயல்முறையை முடிக்க ‘சமர்ப்பி’ பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும்.

   ▪️ எஸ்.பி.ஐ ஆஷா உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க கடைசி அக்டோபர் 15, 2022 ஆகும்


தொடர்புக்கு

இ.முகிலரசன்

SBI life & மிதில் பொதுசேவைமையம், 

தென்காசி 9443177951

அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சியளித்தல் சார்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்


👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

TRB மூலம் நேரடி நியமனம் பெற்ற வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு 6 நாட்கள் உண்டு உறைவிட பயிற்சி வழங்குதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

 


👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

வட்டாரக் கல்வி அலுவலர் அலுவலகங்களுக்கு பதிவறை எழுத்தர் பணியிடம் (RC Post) ஒதுக்கீடு செய்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு

 


👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

ஆசிரியர்களுக்கான GeoGebra பயிற்சி 11 videos எளிய விளக்கத்துடன் ஆசிரியர்கள் பார்த்து கணினியில் பயிற்சி செய்யவும்



GeoGebra Basic Tutorial 11 videos

மிக மிக 

எளிமையான வழியில், 

நிதானமாக 

சொல்லி கொடுக்கப்பட்டுள்ள, 

இந்த வீடியோக்களைப் பார்த்து, 

உங்கள் கணினியில் 

செய்து பார்க்கவும்.


வீடியோ பார்க்க 

கீழே உள்ள லிங்க் 

 செல்லவும் 

👇👇

CLICK HERE TO WATCH GeoGebra video



GeoGebra App 

மூலம் ஆசிரியர்கள் 

முழு கணக்கு 

பாடங்களை 

நடத்தும் முறை 

மற்றும் 

இந்த app பற்றிய 

அனைத்து 

சந்தேகங்களுக்குமான 

அனைத்து வீடியோ 

அடங்கிய 

pdf கீழே உள்ளது 

ஆசிரியர்கள் 

அதனை பதிவிறக்கம் 

செய்து உங்களுக்கு 

தேவையான 

வீடியோக்களை 

நீங்களே பார்த்து 

தெளிவடையமுடியும் 

👇👇

Complete Tutorial Tn Geogebra

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்


இதை தயாரித்து உதவிய 

U. SHANMUGA SUNDARAM,

Tenkasi


திரு.கணேஷ் அன்பு 

அவர்களுக்கு நன்றி 




Sunday, 16 October 2022

வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன்-2022 இணைய வழியில் "அறிவியல் விழிப்புணர்வு திறனறித் தேர்வு-2022" வெற்றி பெறுபவர்களுக்கு ஒரு வருடம் உதவித்தொகை


 இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரச்சார் நிறுவனம், விபா நிறுவனம், என்.சி,இ,ஆர்,டி ( NCERT, GOVT.OF INDIA) இணைந்து தேசிய அளவிலான அறிவியல் விழிப்புணர்வுத் தேர்வை ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகிறது. 


அறிவியல் மனப்பான்மையை, மாணாக்கர்களிடம் வளர்ப்பதோடு அறிவியல் மற்றும் ஆராய்ச்சித் துறையில் ஈடுபாட்டை அதிகரிக்கவும் இத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.  


மாணவர்கள் தாம் பயின்று வரும் பள்ளியில் இருந்தே இத்தேர்வை எழுதலாம், அல்லது வீட்டில் இருந்தவாறே  இத்தேர்வை இணைய வழியில் மாணவர்கள் எழுதலாம். 


இந்தியா முழுவதும் இத்தேர்வை மாணவர்கள் எழுத திட்டமிடப்பட்டுள்ளது.     

27-11-2022 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும்  

30-11-2022 (புதன்கிழமை) 

ஆகிய இரு நாட்கள்   இணையவழியில் நடைபெற உள்ளது. 


ஸ்மார்ட் போன், டேப்லெட், மடிக்கணினி , கணினி மூலம் தேர்வு நடைபெற உள்ளது.


இந்த  திறந்த புத்தகத்தேர்வினை ஆங்கிலம் தவிர தமிழ்,  மராத்தி மற்றும் தெலுங்கு ஆகிய பிராந்திய மொழிகளிலும் மாணவர்கள் தேர்வு எழுத இயலும். முக்கியமாக தமிழ் வழியில் தேர்வு எழுதும் மாணாக்கர்களுக்கு தேசிய அளவிலான தேர்வு வரை அனைத்தும் தமிழிலேயே தேர்வு நடைபெறும்.


 தேர்வின் முக்கியமான நோக்கங்கள்: 

  * அறிவியல் மற்றும் ஆராய்ச்சித்துறையில் பள்ளி மாணாக்கர்களின் பங்கேற்பை அதிகரித்தல்.

  *மிகப்பெரிய அறிவியல் ஆய்வில் பங்கேற்கலாம். இதில் ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் நம் உணவுப் பழக்கம் ஏற்படுத்திய சுற்றுச்சூழல் தாக்கம் போன்றவற்றை அறியலாம்.


தேர்வுக் கட்டணம்

200 ரூபாய்

விண்ணப்பிக்க கடைசி தேதி 

20-10-2022

தேர்வு நடைபெறும் நாள்

27-11-2022(ஞாயிற்றுக்கிழமை) 

30-11-2022 (புதன்கிழமை) 

தேர்வு நேரம் 

90 நிமிடங்கள்

(1.30 மணி நேரம்)

நேரம்

காலை 10. 00 மணி முதல் மாலை 6.00 மணி வரை  

(எப்போது வேண்டுமானாலும் எழுதலாம்)

( ஒரு மாணவர் ஒரு முறை மட்டுமே எழுத முடியும்)


யாரெல்லாம் தேர்வு எழுதலாம்? 

6ம் வகுப்பு முதல் 11 ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் இத்தேர்வு  எழுதலாம்.

6 முதல் 8 வரை ஒரு பிரிவாகவும் 9 முதல் 11 வரை மற்றொரு பிரிவாகவும் தேர்வு நடைபெறும்.


தேர்விற்கான பாடத்திட்டம்: 

பள்ளி மாணவர்களின் அறிவியல் மற்றும் பாடப்புத்தகத்தில் இருந்து 50 சதவீத வினாக்களும், 

அறிவியல் வளர்ச்சியில் இந்தியர்களின் பங்கு சர்.சி.வி.ராமன் அவர்களின் வாழ்க்கை வரலாறு 

இந்தியாவின் சுதந்திர போராட்டம் மற்றும் அறிவியல் 

ஆகிய புத்தகங்களில் இருந்து 40 சதவீத கேள்விகளும், 

சிந்தித்து விடையளித்தல் என்ற தலைப்பில் 10 சதவீத கேள்விகளும் 

ஆக மொத்தம் 100 கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும். 


எவ்வாறு பதிவு செய்வது? 


www.vvm.org.in 

👆👆

மேற்கண்ட இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.


பள்ளி வழியாக, பள்ளி மூலமாக விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே 

பள்ளி அளவிலான சான்றிதழ் வழங்கப்படும்.


தனித்தேர்வர்கள் 

தனித்தேர்வர்களாக விண்ணப்பிக்க விரும்புவர்கள் இணையதளம் மூலம் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.


பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள்: 

பள்ளி அளவில்: 

பள்ளியில் ஒரு வகுப்புக்கு குறைந்தபட்சம் 10 மாணாக்கர்கள் பங்கேற்றால் வகுப்பிற்கு 3 மாணாக்கர்களுக்கு பள்ளி அளவிலான மின் சான்றிதழ்கள் வழங்கப்படும்.


மாவட்ட அளவில்: 

மாவட்ட அளவில் (6 முதல் 11 ம் வகுப்புவரை ) ஒவ்வொரு வகுப்பிற்கும் 3 பேர் வீதம் 18 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர்.

அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும்.

மாவட்ட மண்டல அளவில் அருகில் உள்ள ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு  அழைத்துச் செல்லப்படுவர்.


மாநில அளவில்: 

மாநில அளவில் ஒவ்வொரு வகுப்பிலும் 20 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு 120 பேர் இரண்டாம் கட்ட தேர்விற்கு அழைக்கப்படுவர். அத்தேர்வு செயல்முறை வடிவில் அமைந்து இருக்கும்.

இதில் தேர்வு செய்யப்படும் 120 மாணாக்கர்களுக்கும்   சான்றிதழ்கள், கேடயங்கள் வழங்கப்படும்.

120 மாணாக்கர்களில் வகுப்பிற்கு 3 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு  

ரொக்கப்பரிசாக முறையே ரூ.5000, ரூ.3000, ரூ,2000 வழங்கப்படும்.


தேசிய அளவில்: 

ஒவ்வொரு வகுப்பிலும் ( 6 முதல் 11 ம் வகுப்பு வரை) முதல் 2 இடங்களை பெறும் மாணாக்கர்கள் தேர்வு செய்யப்பட்டு தேசிய அளவிலான முகாமிற்கு அழைக்கப்படுவார்கள்.

தேசிய அளவில் கலந்து கொள்பவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கப்படும். 

கடந்த ஆண்டு முதல் தேசிய அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஒரு வருடத்திற்கு மாதந்தோறும் 2000 ரூபாய்   பாஸ்கரா உதவித்தொகை வழங்கப்படும்.


மேலும் ஸ்ரீஜன் என்ற பெயரில் தேசிய மற்றும் மண்டல அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையங்களில் ஒன்று முதல் 3 வாரங்களுக்கு பயிற்சி பெறும் வாய்ப்பை பெறுகிறார்கள்.


Ø  தேசிய அளவிலான முகாமில் நடைபெறும் பல்வேறு வகையான அறிவியல் சார் நிகழ்வுகளில் பங்கேற்பர். 

அதில் சிறப்பாக திறமைகளை வெளிப்படுத்திய மாணாக்கர்களில் ஒவ்வொரு வகுப்பில் இருந்தும் ( 6 முதல் 11 ம் வகுப்பு வரை ) 3 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ்கள், கேடயங்கள் மற்றும் முதல் , இரண்டாம், மூன்றாம் இடம் பெறும் மாணாக்கர்களுக்கு முறையே ரூ.25,000, ரூ.15,000, ரூ.10,000ரொக்கப்பரிசு வழங்கபடும்.


Ø  மண்டல அளவிலும் ஒவ்வொரு வகுப்பிலும் சிறப்பாக செய்த மாணாக்கர்களுக்கு ரூ.5000, ரூ.3000, ரூ,2000 என ரொக்கப்பரிசு வழங்கப்படும்.


Ø  அனைத்து மாணாக்கர்களும் ஒவ்வொரு விஞ்ஞானி அல்லது ஆராய்ச்சியாளருடன் இணைக்கப்பட்டு அவர்கள் படிக்க , கருத்துக்களை தெரிந்து கொள்ள வழிகாட்டப்படுவார்கள்.


இதுபோன்ற தேர்வுகளால் மாணவர்களின் திறமைகள் கண்டறியப்பட்டு அவர்கள் ஊக்குவிக்கப்படுவதோடு எதிர்காலத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்க வாய்ப்பாக அமையும்.


மேலும் விவரங்களுக்கு

மாநில ஒருங்கிணைப்பாளர்கள்,

1) கண்ணபிரான், 

வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன், 

cell:8778201926


Email:

vvmtamilnadu@gmail.com