Search This Blog

Thursday, 1 April 2021

TNPSC SCIENCE QUESTIONS - வைரஸ்

  1. உயிரியியலின் புதிர் என அழைக்கப்படுவது எது ? வைரஸ் 
  2. புகையிலை சாற்றில் இருந்து வைரஸை படிகப்படுத்தியவர் யார் ? W.M. ஸ்டான்லி  
  3. பெரியம்மைக்கு தடுப்பூசி கண்டுபிடித்தவர் யார்? எட்வர்ட் ஜென்னர் 
  4. புகையிலையில் தேமல் நோய் வைரஸ் பற்றி விளக்கியவர் யார்? அடால்ப் மேயர் 
  5. வைரஸ்கள் பாக்டீரியாவை விட சிறியது என நிரூபித்தவர் யார்? டிமிட்ரி ஐவான்ஸ்க்கி 
  6. புகையிலையில் உள்ள தொற்றுதல் காரணியை "தொற்றுத் தன்மை வாய்ந்த உயிருள்ள திரவம் என அழைத்தவர் யார்? M.W. பெய்ஜி ரிங்க் 
  7. பாக்டீரியங்களில் வைரஸ் தொற்றைக் கண்டுபிடித்தவர் யார்? F.W. ட்வார்ட் 
  8. பாக்டீரியபாஜ் என்ற சொல்லை பயன்படுத்தியவர் யார்? டி ஹெரில்லி 
  9. HIV யை கண்டுபிடித்தவர்கள் யார்? லுக் மான்டக்னர் மற்றும் இராபர்ட் கேலோ 
  10. பொதுவாக வைரஸ்கள் எந்த அளவு விட்டம் உடையது? 20nm - 300nm
  11. பாக்டீரியபாஜ் வைரஸ்கள் எந்த அளவு விட்டம் உடையது? 10nm - 100nm
  12. TMV வைரஸ்கள் எந்த அளவு உடையது? 300 X 20nm
  13. வைரஸ் என்ற சொல்லின் பொருள் என்ன? நச்சு 
  14. வைரஸ் பெற்றுள்ள அமிலங்கள் எவை? DNA அல்லது RNA 
  15. கன சதுர வைரஸ்களுக்கு உதாரணம் ? அடினோ வைரஸ் மற்றும் ஹெர்ப்பஸ் வைரஸ் 
  16. சுருள் வடிவ வைரஸ்களுக்கு உதாரணம் தருக ? இன்புளுயென்சா வைரஸ் மற்றும் TMV
  17. சிக்கலான அல்லது இயல்பற்ற வடிவம் கொண்ட வைரஸ்களுக்கு உதாரணம் தருக ? பாக்டீரியபேஜ் மற்றும் வாக்சினியா வைரஸ் 
  18. dsDNA கொண்ட வைரஸ்களுக்கு உதாரணம் தருக? அடினோ  வைரஸ்கள்
  19. வெளிப்பாடடையும்  ssDNA வைரஸ்களுக்கு உதாரணம் தருக? பார்வோ வைரஸ்கள் 
  20. dsRNA கொண்ட வைரஸ்களுக்கு உதாரணம் தருக? ரியோ வைரஸ்கள் 
  21. வெளிப்பாடடையும் ssRNA  வைரஸ்களுக்கு உதாரணம் தருக? டோகோ வைரஸ்கள் 
  22. வெளிப்பாடடையாத ssRNA வைரஸ்களுக்கு உதாரணம் தருக? ராப்டோ வைரஸ்கள் 
  23. வெளிப்பாடடையும் ssRNA-RT: கொண்ட வைரஸ்கள் வாழ்க்கைச் சுழற்சியில் DNA உடன் இனப்பெருக்கம் அடையும் வைரஸ்களுக்கு உதாரணம் தருக?  ரெட்ரோ வைரஸ்கள் 
  24. dsDNA-RT: கொண்ட வைரஸ்கள் வாழ்க்கைச் சுழற்சியில்  RNA உடன் இனப்பெருக்கம் அடையும் வைரஸ்களுக்கு உதாரணம் தருக? ஹெபாட்னா வைரஸ்கள் 
  25.  உட்கரு அமிலம் சிறு சிறு துண்டுகளாக எந்த வைரஸ்களில் காணப்படுகிறது? காயக்கழலை வைரஸ் மற்றும் இன்புளுயென்சா வைரஸ் 
  26. DNA வை கொண்ட வைரஸ்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? டீ ஆக்சி வைரஸ்கள் 
  27.  RNA வை கொண்ட வைரஸ்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? ரிபோ  வைரஸ்கள் 
  28. விலங்கு மற்றும் பாக்டீரிய வைரஸ்கள் பொதுவாக எந்த உட்கரு அமிலங்களை கொண்டுள்ளது?  DNA வைரஸ்கள் 
  29.  தாவர வைரஸ்கள் பொதுவாக எந்த உட்கரு அமிலங்களை கொண்டுள்ளது? RNA வைரஸ்கள்
  30. HIV வைரஸ் (ரெட்ரா வைரஸ்) எந்த உட்கரு அமிலத்தை  கொண்டுள்ளது? RNA
  31. புகையிலை தேமல் வைரஸ் எந்த ஆண்டில் டிமிட்ரி ஐவனாஸ்கி என்பவரால் கண்டறியப்பட்டது? 1892
  32. புகையிலை தேமல் வைரஸின் மூலக்கூறு எடை என்ன?  39x106   டால்டன்கள் 
  33.  புகையிலை தேமல் வைரஸின் அளவு என்ன? 300 x 20nm

  34. புகையிலை தேமல் வைரஸின் ( TMV),  RNA எத்தனை நியூக்ளியோடைட்களைக் கொண்டுள்ளது ? 6,500
  35. ஒரு முழு TMV துகள் உருவாவதற்கான மரபியல் தகவல் எங்கு உள்ளது? RNA வில் 
  36. பாக்டீரியங்களை தாக்கி அழிக்கும் வைரஸ்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? பாக்டீரியபாஜ்கள் 
  37. பாக்டீரியபாஜ்கள் என்பதன் பொருள் என்ன?  பாக்டீரிய உண்ணிகள் 
  38. T4 பாஜ்கள் (பாக்டீரியபாஜ்கள்) எந்த வடிவம் கொண்டவை? தலைப்பிரட்டை வடிவம் 
  39. T4 பாஜ்களின் (பாக்டீரியபாஜ்கள்) தலைப்பகுதி எந்த வடிவம் கொண்டது? அறுங்கோண வடிவம் 
  40. T4 பாஜ்களின் (பாக்டீரியபாஜ்கள்) தலைப்பகுதி எத்தனை புரதத்துணை அலகுகளால் ஆனது? 2000
  41. நீலப்பசும் பாசிகளைத் தாக்கும் வைரஸ்களை முதன் முதலில் கண்டுபிடித்தவர்கள் யார்? சாபர்மேன் மற்றும் மோரிஸ் (1963)
  42. நீலப்பசும் பாசிகளைத் தாக்கும் வைரஸ்களின் பெயர் என்ன? சயனோபாஜிகள் 
  43. சயனோபாஜிகளுக்கு உதாரணம் தருக? LPPI-லிங்பயா, ப்ளக் டோனிமா , பார் மிடியம் 
  44. வளர்ப்புக் காளான்களில் நுனியடி இறப்பு நோய் உண்டாக்கக்கூடிய வைரஸ்களை முதன் முதலில் கண்டுபிடித்தவர் யார்? ஹோலிங்ஸ் (1962)
  45.  பூஞ்சைகளைத் தாக்கக்கூடிய வைரஸ்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? மைக்கோ வைரஸ்கள் அல்லது மைக்கோபாஜ்கள் 
  46. T4 பாஜ்கள் (பாக்டீரியபாஜ்கள்) வால் நார்கள் எவ்வகை சாக்கரைடுகளை கொண்டுள்ளன? லிப்போ பாலி சாக்கரைடுகள் 
  47. T4 பாஜ்கள் (பாக்டீரியபாஜ்கள்) பாக்டீரியாவுடன் (ஈ கோலை )ஏற்படுத்தும் ஒத்தேற்பு நிகழ்வுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ? பரப்பிரங்கல் (Landing)
  48. T4 பாஜ்கள் (பாக்டீரியபாஜ்கள்) வால் நார்கள்,  பாக்டீரியா (ஈ கோலை) செல்களின் மீது பொருத்தப்படுத்தல் எவ்வாறு அழைக்கப்படுகிறது? குத்துதல் (Pinning)
  49. பாக்டீரியத்தின் செல் சுவரை சிதைக்க வைரஸ் பயன்படுத்தும் நொதியின் பெயர் என்ன? லைசோசைம் 
  50.  பாக்டீரியாவினுள் வைரஸின் DNA துகள் தன்னிச்சையாக செலுத்தப்படுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது? ஊடுதொற்றல் 
  51. ஓம்புயிரி செல்லின் (ஈ கோலை) குரோமோசோமுடன் ஒருங்கிணைக்கப்பட்ட பாக்டீரியபாஜ் DNA வை எவ்வாறு அழைக்கிறோம்? பாஜ் முன்னோடிகள் 
  52. ஓம்புயிரி செல்லுக்கு வெளியே பெருக்கமடைய முடியாத ஒரு முழுமையான வைரஸ் எவ்வாறு அழைக்கப்படுகிறது? விரியான் (Virion)
  53. வைரஸில் உள்ள புரத உரை அற்ற தீங்களிக்கும் ஆர்.என் .ஏ  எவ்வாறு அழைக்கப்படுகிறது ? வீராய்டு 
  54. விராய்டுகளை முதன் முதலில் கண்டுபிடித்தவர் யார்? T.O. டெய்னர்  (1971)
  55. விராய்டுகள் (Viroids) சிட்ரஸ் பழங்களில் ஏற்படுத்தும் நோய் எது? சிட்ரஸ் எக்ஸோ கார்ட்டிஸ் 
  56. விராய்டுகள் (Viroids)உருளைக்கிழங்கில்  ஏற்படுத்தும் நோய் எது? கதிர் வடிவ கிழங்கு நோய் 
  57.  விருசாய்டுகள் (Virusoids) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது? J.W. ராண்டல்ஸ் (1981)
  58. விருசாய்டுகள் எந்த வடிவ RNA க்களை பெற்றுள்ளது ? சிறிய வட்ட வடிவ RNA
  59. பிரியான்களை (Prions) கண்டுபிடித்தவர் யார்?  B. புருச்னர் 
  60. பிரியான்கள் விலங்குகளில் (மனிதன் உட்பட) ஏற்படுத்தும் நோய் எது? க்ரூயிட்ஸ் பெல்ட் - ஜேக்கப் நோய் (CJD)
  61. க்ரூயிட்ஸ் பெல்ட் - ஜேக்கப் நோய் (CJD) விலங்குகளின் எந்த பகுதியை தாக்குகிறது? மைய நரம்பு மண்டலம் 
  62. பிரியான்கள் மாடுகளில் ஏற்படுத்தும் நோய் எது? பித்த நோய் (Mad cow disease) அல்லது போவைன் ஸ்பாஞ்சி பார்ம் என்செபலோபதி (BSE)
  63. பிரியான்கள் ஆடுகளில் ஏற்படுத்தும் நோய் எது? ஸ்கிராபி (Scrapie)
  64. வைரஸ்கள் புகையிலை, காலிப்ளவர், கரும்பு, வெள்ளரி, தக்காளி போன்ற தாவரங்களில் ஏற்படுத்தும் நோயின் பெயர் என்ன? தேமல் நோய் 
  65. வைரஸ்கள் உருளைக்கிழங்கு மற்றும் பப்பாளியில்  ஏற்படுத்தும் நோயின் பெயர் என்ன? இலைச்சுருள் நோய் 
  66. வைரஸ்கள் வாழையில் ஏற்படுத்தும் நோயின் பெயர் என்ன? உச்சிக்கொத்து நோய் 
  67. வைரஸ்கள் வெண்டையில் ஏற்படுத்தும் நோயின் பெயர் என்ன? நரம்பு வெளிர்தல் நோய் 
  68. வைரஸ்கள் நெல்லில் ஏற்படுத்தும் நோயின் பெயர் என்ன? துங்ரோ நோய்
  69. ஹெப்பட்டைட்டிஸ் B எந்த நுண்ணுயிரியால் ஏற்படுகிறது ? வைரஸ் 
  70. புற்றுநோய் எந்த நுண்ணுயிரியல் ஏற்படுகிறது? வைரஸ் 
  71. சார்ஸ் என்ற அதி தீவிர சுவாசக் குறைபாடு நோய் எந்த நுண்ணுயிரியல் ஏற்படுகிறது? வைரஸ் 
  72. எய்ட்ஸ் எந்த நுண்ணுயிரியல் ஏற்படுகிறது? வைரஸ் 
  73. வெறிநாய்க் கடி எந்த நுண்ணுயிரியல் ஏற்படுகிறது? வைரஸ் 
  74. பொன்னுக்குவீங்கி எந்த நுண்ணுயிரியல் ஏற்படுகிறது? வைரஸ் 
  75. இளம்பிள்ளைவாதம் எந்த நுண்ணுயிரியல் ஏற்படுகிறது? வைரஸ் 
  76. சிக்கின்குனியா எந்த நுண்ணுயிரியல் ஏற்படுகிறது? வைரஸ் 
  77. பெரியம்மை என்ற நோய் எந்த நுண்ணுயிரியல் ஏற்படுகிறது? வைரஸ் 
  78. சின்னம்மை என்ற நோய் எந்த நுண்ணுயிரியல் ஏற்படுகிறது ? வைரஸ் 
  79. தட்டம்மை என்ற நோய் எந்த நுண்ணுயிரியல் ஏற்படுகிறது? வைரஸ் 
  80. கால்நடைகளில் கோமாரி நோய்க்கு காரணமான நுண்ணுயிரி எது ? வைரஸ் 
  81. குதிரைகளில் மூளை தண்டுவட அழற்சி நோய்க்கு காரணமான நுண்ணுயிரி எது ? வைரஸ் 
  82. எந்த குழுமத்தைச் சார்ந்த வைரஸ்கள் பூச்சிக்கொல்லிகளாக பயன்படுகிறது ? பேக்குலோவிரிடே
  83.  பூச்சிக்கொல்லிகளாக பயன்படும் வைரஸ்களுக்கு உதாரணம் தருக? பாலிஹெட்ரோசிஸ் கிரானுலோ வைரஸ் மற்றும் எண்டமோ பாக்ஸ் வைரஸ்கள் 
  84. தாவரவியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்? தியோ பிராஸ்டஸ் 
  85. தாவரங்களை புற அமைப்புப் பண்புகள் (புதர்ச்செடி, சிறுச்செடி) அடிப்படையில் வகைப்படுத்தியவர் யார்? தியோ பிராஸ்டஸ் 
  86. விலங்கினங்களை இரத்த நிறத்தின் (Enaima, Anaima) அடிப்படையில் வகைப்படுத்தியவர் யார்? அரிஸ்டாட்டில் 
  87. உயிரின உலகத்தை தாவரங்கள், விலங்குகள் என (புறப்பண்புகளின் அடிப்படையில்) இரு குழுக்களாகப் பிரித்தவர் யார்? கார்ல் லின்னேயஸ் 
  88.  உயிரின உலகத்தை 3 பிரிவுகளாகப் (புரோட்டிஸ்டா, பிளாண்டே, அனிமேலியா) பிரித்தவர் யார்? எர்னெஸ்ட் ஹெக்கேல் 
  89.  உயிரின உலகத்தை 4 பிரிவுகளாகப் (மொனீரா, புரோட்டிஸ்டா, பிளாண்டே, அனிமேலியா) பிரித்தவர் யார்? கோப்லேண்ட்
  90.  உயிரின உலகத்தை 35பிரிவுகளாகப் (மொனீரா, புரோட்டிஸ்டா, பூஞ்சைகள்,  பிளாண்டே, அனிமேலியா) பிரித்தவர் யார்? R.H. விட்டாக்கெர் 
  91. R.H. விட்டாக்கெர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்? அமெரிக்கா 
  92. எந்தப்பிரிவைச் சார்ந்த உயிரிகள் தொல்லுட்கரு உயிரிகள் (Prokaryotic) என அழைக்கப்படுகிறது? மொனீரா 
  93.  மொனிரா பிரிவு உயிரினங்களின் செல் சுவர் எதனால் ஆனது? பெப்டிடோ கிளைக்கான், மியூகோபெப்டைட் 
  94. அடினோ வைரஸ்கள் எந்த அளவுக்கு கொண்டது ? 70-90 நானோ மீட்டர் விட்டம் 
  95. இன்புளுயன்சா வைரஸ் எந்த அளவுக்  கொண்டது? 80-200 நானோ மீட்டர்
  96. புகையிலை மொசைக் வைரஸ் எந்த அளவுக் கொண்டது? 18 x 250 நானோ மீட்டர் அல்லது 20 x 300 நானோ மீட்டர் 
  97. வெறி நாயக் கடி எந்த நுண்ணுயிரிகளால் ஏற்படுகிறது? வைரஸ் 
  98. கோமாரி நோய் எந்த உயிரினங்களுக்கு ஏற்படுகிறது? கால்நடைகள் 
  99. புகையிலை மொசைக் வைரஸ் எந்த வடிவம் கொண்டது? கோல் வடிவம் 
  100.  புகையிலை மொசைக் வைரஸ்களின் புரத உறை எந்த புரத துணை அலகுகளால் ஆனது? கேப்சோமியர்கள் 


















"பாலர்கள் மற்றும் ராஷ்டிரகூடர்கள்"

TNPSC TET TRB HISTORY NOTES 7

THANKS TO Mr. ELA.BABU VELAN, TENKASI

CLICK TO DOWNLOAD PDF FILE 

Wednesday, 31 March 2021

TEST YOUR HISTORY KNOWLEDGE

TEST 2 

FOR "TNPSC"  "TRB"  "TET" 

PREPARED BY 

ELA.BABU VELAN,  TENKASI

அரசுப் பணிக்கான போட்டித் தேர்வு எழுதும் நண்பர்களுக்காக தயாரிக்கப்பட்டது. இந்த வினாத்தாள்  600-க்கும் அதிகமான வினாக்களைக் கொண்டது.  8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திட்டத்தில் இருந்து தயாரிக்கப்பட்டது.   இதற்கான விடை நாளை இதே வலைத்தளத்தில் வெளியிடப்படும். 

இந்த PDF ல் கீழே உள்ள ramanibabu.blogspot.com  என்பதை தொட்டாலே இந்த பிளாக்கில் உள்ளே நுழையலாம்.  மேலும் தங்களுக்கு தேவையான பாடக்குறிப்புகள்,  வினா விடை,  வீடியோக்கள் போன்றவற்றை பெறலாம் .

CLICK TO DOWNLOAD PDF FILE 

Tuesday, 30 March 2021

TEST YOUR HISTORY KNOWLEDGE

TEST 1 

FOR TNPSC TET AND TRB 

PREPARED BY 

ELA.BABU VELAN, TENKASI

அரசு பணிக்கான தேர்வு எழுதும் நண்பர்களுக்கு வரலாறு பாடப்பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட வினாக்கள் 80 வினாக்கள் அடங்கியது இதன் விடைப்பகுதி நாளை இதே வலைத்தளத்தில் வெளியிடப்படும் . தொடர்ந்து இது போல் அனைத்துப் பாடப்பகுதியில் இருந்தும் வினாக்கள் வெளியிடப்படும் தொடர்ந்து இந்த வலைதளத்துடன் இணைந்திருங்கள் 

CLICK TO DOWNLOAD Pdf 

Friday, 19 March 2021

அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்


ஹரிங்கா வம்சம் 

நந்த வம்சம் 

மௌரிய வம்சம் 

அலெக்சாண்டார் படையெடுப்பு 

TNPSC TET HISTORY NOTES - 4 PREPARED BY ELA.BABU VELAN, TENKASI

click to download pdf 

Saturday, 13 March 2021

பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை (வரலாற்று காலத்துக்கு முந்தைய இந்தியா)

அரசு தேர்வுக்கு தயாராகும் நண்பர்களுக்காக உருவாக்கப்பட்டது மிக எளிய முறையில் தேர்வுக்கு தேவையான குறிப்புகள் மட்டும் படிப்பதற்கு எளிதாக எடுக்கப்பட்டுள்ளது. நன்பர்கள் படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள் 

NOTES PREPARED BY ELA.BABU VELAN, TENKASI

CLICK TO DOWNLOAD PDF 

Friday, 12 March 2021

TNPSC, TET SOCIAL SCIENCE TEST 8 QUESTION AND ANSWER PREPARED BY ELA.BABU VELAN, TENKASI

இது  எட்டாம் வகுப்பு சமூக அறிவியலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது பாடப்புத்தகத்தை நன்கு படித்து விட்டு இந்த தேர்வு எழுதி பாருங்கள் தொடர்ந்து இது போல் அனைத்து வகுப்பு பாடங்களில் இருந்தும் வினா விடை தயாரித்து வெளியிடுவோம்.  தொடர்ந்து இந்த BLOG ஐ  FOLLOW செய்துகொள்ளுங்கள் அப்போதுதான் புதிதாக நாங்கள் வெளியிடும் தேர்வு குறிப்புகள் உடனுக்கு உடன் உங்களை வந்து அடையும் 

CLICK TO DOWNLOAD PDF 

ALSO FOLLOW ME 

https://twitter.com/ElaVelan


Sunday, 7 March 2021

TNPSC SOCIAL SCIENCE TEST 7 QUESTION AND ANSWER PDF PREPARED BY ELA.BABU VELAN, TENKASI

இது  எட்டாம் வகுப்பு சமூக அறிவியலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது பாடப்புத்தகத்தை நன்கு படித்து விட்டு இந்த தேர்வு எழுதி பாருங்கள் தொடர்ந்து இது போல் அனைத்து வகுப்பு பாடங்களில் இருந்தும் வினா விடை தயாரித்து வெளியிடுவோம்.  தொடர்ந்து இந்த BLOG ஐ  FOLLOW செய்துகொள்ளுங்கள் அப்போதுதான் புதிதாக நாங்கள் வெளியிடும் தேர்வு குறிப்புகள் உடனுக்கு உடன் உங்களை வந்து அடையும் 

CLICK TO DOWNLOAD PDF FILE 

ALSO FOLLOW ME 

https://twitter.com/ElaVelan

Friday, 5 March 2021

TNPSC SOCIAL SCIENCE TEST - 6 PREPARED BY ELA.BABU VELAN, TENKASI

FILE DOWNLOAD செய்தபின்பு PASSWORD கொடுத்து OPEN செய்யவேண்டும்  

PASSWORD:  ramanibabu.blogspot.com

click to download file 

FOLLOW ME

https://twitter.com/ElaVelan

Tuesday, 2 March 2021

TNPSC GEOGRAPHY TEST 5 QUESTION AND ANSWER PREPARED BY ELA.BABU VELAN, TENKASI

FILE DOWNLOAD செய்தபின்பு PASSWORD கொடுத்து OPEN செய்யவேண்டும் 

PASSWORD:  ramanibabu.blogspot.com 

click to download file 

FOLLOW ME

https://twitter.com/ElaVelan

TNPSC GEOGRAPHY TEST 4 QUESTION AND ANSWER PREPARED BY ELA.BABU VELAN, TENKASI

FILE DOWNLOAD செய்தபின்பு PASSWORD கொடுத்து OPEN செய்யவேண்டும் 

PASSWORD:  ramanibabu.blogspot.com 

click to download file 

FOLLOW ME

https://twitter.com/ElaVelan