தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் சென்னை வேளச்சேரி அரிமா சங்கம் சார்பாக NMMS தேர்வுக்கான இலவச புத்தகங்கள் வழங்கும் விழா
சென்னை வேளச்சேரி அரிமா சங்கத்தின் சார்பில் NMMS தேர்வு எழுதும் தென்காசி மாவட்டத்தை சார்ந்த மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள் வழங்கும் விழா தென்காசி ICI ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது
விழாவிற்கு தென்காசி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி.ரெஜினி அவர்கள் தலைமை தாங்கி சிறப்புரை வழங்கினார்கள்
மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் திரு.ஜெயபிரகாஷ் அவர்கள் முன்னிலை வகித்து மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்
தென்காசி மாவட்ட NMMS பயிற்சி வகுப்பு ஒருங்கிணைப்பாளர் வாசுதேவநல்லூர் வட்டாரம் வட்டாரக் கல்வி அலுவலர் வரவேற்புரையாற்றினார்கள்
நிகழ்வில் சென்னை வேளச்சேரி அரிமா சங்கம் INNOVATIVE PROJECT CHAIRMAN திரு.ஹரிகிருஷ்ணன், VICE CHAIRMAN திரு.செல்வக்குமார், INNOVATIVE PROJECT CHIEF ADVISOR திரு.வெங்கட்ராமன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு NMMS SAT மற்றும் MAT தொடர்பான புத்தகங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்கள்
மேலும் தங்கள் வேளச்சேரி அரிமா சங்கம் மூலம் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான TAMILNADU CM TALENT EXAM எழுதும் மாணவர்களுக்கு தேவையான தமிழ், அறிவியல், சமூக அறிவியல், கணக்கு புத்தகம் விரைவில் வெளியிட உள்ளதாகவும், NEET தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேவையான இலவசக் கையேட்டை வழங்குவதாகவும் முதன்மைக் கல்வி அலுவலரிடம் உறுதியளித்துள்ளனர்
தென்காசி ICI பள்ளியின் தலைமை ஆசிரியர் வாழ்த்துரை வழங்கினார்கள்
தென்காசி மாவட்டத்தின் 50 பள்ளிகள் சார்பாக ஆசிரியர்கள், மாணவர்கள் இலவச NMMS கையேட்டை பெற்றுக் கொண்டனர்
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை NMMS பயிற்சி வகுப்பை சிறப்பாக நடத்திவரும் மங்களாபுரம் ருக்குமணி உயர்நிலைப்பள்ளி கணக்கு ஆசிரியர் நெல்சன், தென்காசி கரிசல்குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் பாபுவேலன், ரமேஷ், ICI மேல்நிலைப்பள்ளி முத்துக்குமார், கடையம் பள்ளி ஆசிரியர்கள் சுரேஷ்குமார், மணிவண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்
தென்காசி 13 வது வார்டு நடுநிலைப்பள்ளி ஆசிரியர் வின்சென்ட் நன்றியுரை ஆற்றினார்கள்