இளம் கவிஞர் விருது - கவிதைப் போட்டிகள் நடத்த பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு
Search This Blog
Wednesday, 13 November 2024
Tuesday, 12 November 2024
TNSED SCHOOLS APP UPDATE NEW VERSION 0.2.5
*TNSED SCHOOLS APP UPDATE NEW VERSION 0.2.5*
👉STUDENT VOCATIONAL VISIT Module Changes
👉Bug Fixes & Performance Improvements
Sunday, 10 November 2024
Saturday, 9 November 2024
NMMS நேரடிப் பயிற்சி வகுப்பில் தென்காசி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்
NMMS நேரடிப் பயிற்சி வகுப்பில் தென்காசி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்
தேசிய வருவாய் வழி மற்றும் திறனறிதேர்வு இலவச பயிற்சி வகுப்பு. தென்காசி ஐ சி ஐ அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் வைத்து ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் வட்டாரக் கல்வி அலுவலர் திரு.ரா மாரியப்பன் அவர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது
09.11.2024 இன்று நடைபெற்ற NMMS நேரடிப் பயிற்சி வகுப்பிற்கு தென்காசி மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் திருமதி. ரெஜினி அவர்கள் வருகை புரிந்து இன்றைய மாதிரித்தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசு வழங்கி பாராட்டி அறிவுரைகள் வழங்கினார்கள்
பயிற்சி வகுப்பில் நடைபெற்ற தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ மாணவிகள்
சங்கமித்ரா,
அரசு மேல்நிலைப் பள்ளி,
நெடுவயல்
பிரசாந்த்,
ரத்னா உயர் நிலைப் பள்ளி,
கடையநல்லூர்,
கனிஷ்கா,
அயன் குறும்பலாப்பேரி
ஆகியோருக்குப் பாராட்டும், பரிசும் வழங்கப்பட்டது.
கருத்தாளர்களாக
திரு நெல்சன்,
பட்டதாரி ஆசிரியர்,
ருக்குமணி உயர்நிலைப்பள்ளி,
மங்களாபுரம்,
தென்காசி மாவட்டம்
ஆசிரியர் திருமதி சுலேகா பேகம்,
பட்டதாரி ஆசிரியர்
செங்கோட்டை ஒன்றியம்
தமிழ்செல்வி,
பத்மா,
வைரக்கண்ணன்,
ஆகியோர் கலந்து கொண்டனர்.
பயிற்சி ஆனது ராமநாதாபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் பட்டதாரி ஆசிரியர் திரு மோகன் அவர்கள் ஒருங்கிணைப்பில் உருவாகி சென்னை வேளச்சேரி அரிமா சங்கத்தின் உதவியுடன் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் பொற்கரங்களால் வெளியிடப்பட்ட அறிவியல், சமூக அறிவியல் மற்றும் கணக்கு கையேடுகள் அடிப்படையில் நடைபெறுகிறது
மேலும் தேர்வுகள் ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் பட்டதாரி ஆசிரியர் திரு.மோகன் மற்றும் ஆசிரியர்கள் குழு தயாரித்து மாநிலம் முழுவதும் வழங்கி வரும் வினாத்தாள்கள் அடிப்படையில் நடைபெற்று வருகிறது
தென்காசி மாவட்டம் சார்ந்த எட்டாம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்கள் வகுப்பில் கலந்து கொண்டனர்.
இந்த அருமையான வாய்ப்பை ஏற்படுத்தி தந்த தென்காசி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி . ரெஜினா அவர்களையும், பயிற்சியின் ஒருங்கிணைப்பாளராக பங்காற்றிவரும் வாசுதேவநல்லூர் ஒன்றியம் வட்டாரக்கல்வி அலுவலர் திரு.மாரியப்பன் அவர்களையும், தொடர்ந்து அறிவுரையும் ஊக்கமும் அளித்து வரும் மாவட்டக்கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களையும் பெற்றோர்கள் பாராட்டினார்கள்
பயிற்சி தொடர்ந்து சிறப்பாக நடைபெற வேண்டிய உதவிகள் செய்து வரும் தென்காசி ICI மாதிரி மேல்நிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியர் திரு . முத்துக்குமார் அவர்களையும் பெற்றோர்கள் பாராட்டி சென்றனர்.
இந்த இலவச பயிற்சி மற்றும் மாதிரித் தேர்வுகள் தொடர்ந்து தேர்வு காலம் வரை நடைபெறும்
Tuesday, 29 October 2024
கலைத் திருவிழா மாவட்ட அளவில் நடைபெறும் தேதி குறித்து மாநில திட்ட இயக்குனர் அவர்கள் செயல்முறைகள்
கலைத் திருவிழா மாவட்ட அளவில் நடைபெறும் தேதி குறித்து மாநில திட்ட இயக்குனர் அவர்கள் செயல்முறைகள்
ஒவ்வொரு போட்டியிலும் வட்டார அளவில் முதலிடம் பெற்ற வெற்றியாளர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும்
மாவட்ட அளவிலான போட்டிகளை 11.11.2024 முதல் 20.11.2024 வரை திட்டமிட்டு நடத்திடல் வேண்டும்
மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெரும் மாணவர்களில் முதல் மூன்று இடங்களை பெரும் மாணவர்களை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்திடல் வேண்டும்
மாவட்ட அளவில் ஒவ்வொரு போட்டியிலும் முதல் இடம் பெரும் ஒரு மாணவர் மட்டும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள முடியும்
வட்டார அளவில் நடத்தப்பட்ட 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான போட்டிகளில் ஒவ்வொரு போட்டியிலும் முதல் இடம் பெற்ற மாணவர்கள் அல்லது மாணவர்கள் குழு மட்டும் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும்
மாவட்ட அளவிலான போட்டிகள் அரசு பள்ளிகளுக்கு தனியாகவும் , அரசு உதவி பெரும் பள்ளிகளுக்கு தனியாகவும் நடத்திட வேண்டும்
போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள் எவ்வித கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை
மாவட்ட அளவிலான போட்டிகளை திட்டமிட்டு நடத்துவது உதவித் திட்ட அலுவலரின் பொறுப்பாகும்
மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து வந்து மீண்டும் கொண்டு வந்து சேர்த்தல் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் பொறுப்பாகும்
மாவட்ட போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்களின் பெற்றோர்களிடம் கட்டாயம் ஒப்புதல் கடிதம் பெறவேண்டும்
பெற்றோர்களிடம் இருந்து பெறப்பட்ட ஒப்புதல் கடிதங்களை முறையாக தலைமை ஆசிரியர் பராமரித்திட வேண்டும்
மாணவர்களை மாவட்ட போட்டிகளுக்கு அழைத்து செல்லும் போது ஆண் ஆசிரியர் ஒருவர் மற்றும் பெண் ஆசிரியர் ஒருவர் உடன் செல்லவேண்டும்
நடுவர்களாக பங்கு பெரும் ஆசிரியர்களின் பள்ளி மாணவர்கள் அதே போட்டியில் கலந்து கொள்ளும் போது அவர் அந்த போட்டிக்கு நடுவராக நியமிக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்
மேலும் மாவட்ட அளவிலான போட்டிகள் குறித்த விவரங்கள் பெற கீழே உள்ள லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்யவும்
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை அரைநாள் விடுமுறை - தமிழ்நாடு அரசு.
*BREAKING:*
பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை அரைநாள் விடுமுறை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்வி நிலையங்களுக்கு நாளை அரைநாள் விடுமுறை அறிவிப்பு.
ஏற்கனவே தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை அரைநாள் விடுமுறை.
Sunday, 27 October 2024
TNSED SCHOOLS APP NEW UPDATE VERSION 0.2.3 UPDATED ON 25.10.2024
TNSED SCHOOLS APP
Version 0.2.3
What's New
Schemes Module Changes.
கீழே உள்ள லிங்க் மூலம் சென்று UPDATE செய்து கொள்ளவும்
👇👇
Saturday, 26 October 2024
NMMS SAT VIII SCIENCE ONLINE MODEL TEST 11
NMMS SAT
VIII - SCIENCE
ONLINE MODEL TEST 11
இந்த தேர்வுக்கான
பாடப்பகுதிகள்
8 ஆம் வகுப்பு அறிவியல்
👇👇
1. உயிரினங்களின் ஒருங்கமைவு
👉 122 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது
👉 மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம்
👉 ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும்
👉அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள்
👉 அனைத்து 122 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கு சரியான விடையும் பெறலாம்
👉 இந்த தேர்வு பற்றிய உங்கள் கருத்துக்களை 9952329008 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்புங்கள்
தேர்வு எழுத கீழ்கண்ட லிங்க் மூலம் செல்லவும்
👇👇
NMMS SAT VIII SCIENCE ONLINE MODEL TEST 11
PDF வினாத்தாள் நாளை வெளியிடப்படும்
அடுத்த தேர்வு
👇👇
NMMS SAT VIII SCIENCE ONLINE MODEL TEST - 12
👇👇
1. விலங்குகளின் இயக்கம்
ONLINE EXAM வாட்ஸஅப் குழு லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விரும்பினால் ஏதேனும் ஒரு குழுவில் இணைந்து கொண்டு NMMS தொடர்பான தொடர் செய்திகள், விளக்கங்களை பெறலாம்
NMMS EXAM வாட்ஸ் அப் குழு 2
👇👇
NMMS EXAM வாட்ஸ் அப் குழு 3
👇👇
CLICK HERE TO JOIN NMMS GROUP 3Friday, 25 October 2024
TNSED PARENTS APP NEW VERSION 0.0.38 UPDATE LINK
TNSED PARENTS APP
NEW VERSION 0.0.38
UPDATE LINK
கீழே உள்ள லிங்க் மூலம் சென்று Update செய்யவும்
👇
Click hereWhat's New ?
SMC First resolution meeting for the year 2024 - 2025 changes
Wednesday, 23 October 2024
வகுப்பு 4,5 அலகு எண் 3 எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு தமிழ் வழி
வகுப்பு 4, 5
அலகு எண் 3
எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு
(தமிழ் வழி)
வகுப்பு 4 - நன்னெறி
வகுப்பு 5 - திருக்குறள்
👇👇
வகுப்பு 4, 5 அலகு எண் 3 எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு (ஆங்கில வழி)
வகுப்பு 4, 5
அலகு எண் 3
எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு
(ஆங்கில வழி)
வகுப்பு 4 - நன்னெறி
வகுப்பு 5 - திருக்குறள்
👇👇
வகுப்பு 1, 2, 3 - அலகு 3 எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு
வகுப்பு 1, 2, 3
அலகு 3
எண்ணும் எழுத்தும்
பாடக்குறிப்பு (தமிழ் மற்றும் ஆங்கில வழி)
👇👇
Saturday, 19 October 2024
தென்காசி மாவட்டத்தில் வாசுதேவநல்லூர் வட்டாரக்கல்வி அலுவலர் திரு.இரா மாரியப்பன் அவர்கள் தலைமையில் தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு
தென்காசி மாவட்டத்தில் வாசுதேவநல்லூர் வட்டாரக்கல்வி அலுவலர் திரு.இரா மாரியப்பன் அவர்கள் தலைமையில் தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு
NMMS எனப்படும் தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வு ஆண்டுதோறும் 8 வகுப்பு பயின்று வரும் மாணவர்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது
இந்த தேர்வில் வெற்றி பெரும் மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் வீதம் நான்கு ஆண்டுகளுக்கு 48000 ரூபாய் மாணவர்களின் வங்கி கணக்கிலேயே வரவு வைக்கப்படும்
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் ஒன்றியத்தில் வட்டாரக்கல்வி அலுவலராக பணியாற்றிவரும் திரு . இரா . மாரியப்பன் அவர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேல் ஒவ்வொரு ஆண்டும் அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்களைக் கொண்டு ஒரு குழு அமைத்து மாணவர்களுக்கு NMMS தேர்வுக்கான பயிற்சியை இலவசமாக நடத்தி வருகிறார்.
மேலும் பயிற்சிக்கு வரும் அனைத்து மாணவர்களுக்கும் ஒவ்வொரு வாரமும் மாதிரித் தேர்வும் நடத்தி வருகிறார். தேர்வில் கலந்து கொள்ள இயலாத மாணவர்களுக்கு வாட்ஸ் அப் குழுவில் தேர்வுக்கான வினாத்தாள் மற்றும் விடைகள் அனுப்பி அவர்களை தேர்வு எழுத உதவி வருகிறார்
இந்த பயிற்சியானது தென்காசி அரசு ஆண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் வைத்து நடைபெறுகிறது. பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் தலைமையில் மாணவர்கள் அழைத்து வரப்பட்டு பாதுகாப்பான முறையில் பயிற்சி நடைபெற்று வருகிறது
தென்காசி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலர்கள் தொடர்ந்து பயிற்சிக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறார்கள்
தென்காசி மாவட்டத்தின் அனைத்து ஒன்றியங்களில் இருந்தும் மாணவர்கள் இங்கு வந்து பயிற்சி பெற்று செல்கின்றனர்
இன்று 19.10.24 தென்காசி ஐ சி ஐ அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் வைத்து வட்டாரக் கல்வி அலுவலர் திரு.ரா மாரியப்பன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பயிற்சி வகுப்பில் நடைபெற்ற NMMS மாதிரித் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ மாணவிகள் சங்கமித்ரா, பாலமித்ரன், மாலினி தானுஸ்ரீ ஆகியோருக்குப் பாராட்டும்,பரிசும் வழங்கப்பட்டது.
கருத்தாளர்களாக தென்காசி மாவட்டம் மங்கலாபுரம் ருக்குமணி அம்மாள் உயர்நிலைப்பள்ளி கணித பட்டதாரி ஆசிரியர் திரு. நெல்சன், தென்காசி மாவட்டம் , செங்கோட்டை ஒன்றியம் தெற்குமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கணித பட்டதாரி ஆசிரியர் திருமதி.சுலேகாள் பேகம் ஆகியோர் கலந்து கொண்டு கணிதம் மற்றும் MAT பாடப்பகுதியில் வகுப்புகள் நடத்தினர்.
தென்காசி மாவட்டம் சார்ந்த எட்டாம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்கள் 150 பேருக்கும் மேல் வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்
தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அளித்து மாண்புமிகு முதல்வர் உத்தரவு பிறப்பிப்பு
தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 1 ஆம் தேதி (தீபாவளிக்கு மறுதினம்) அரசு விடுமுறை அளித்து மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்
அனைத்து அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், அனைத்து வகையான பள்ளிகள், கல்லூரிகள், போன்றவற்றுக்கு இந்த விடுமுறை விடப்பட்டுள்ளது
தீபாவளி வியாழன் வருவதால் அதற்கு மறுதினம் விடுமுறை அளிக்கப்பட்டால் தொடர்ந்து நான்கு தினங்கள் விடுமுறை கிடைக்கும் . வெளி மாவட்டங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு விடுமுறையில் தங்கள் ஊர்களுக்கு வந்த செல்ல வசதியாக இருக்கும் என பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சங்கங்கள் அரசிடம் கோரிக்கை வைத்தன
அதனை ஏற்ற தமிழ்நாடு முதலமைச்சர் தீபாவளிக்கு மறுதினம் அரசு விடுமுறையாக இன்று அறிவித்து உள்ளார்கள்
மேலும் விடுமுறை விடப்பட்ட நாளுக்கு ஈடு செய்ய 09.11.2024 அன்று பணி நாளாக அறிவித்து முதலமைச்சர் உத்தரவு
இந்த அறிவிப்பு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது
"கனவு ஆசிரியர்" விருது பெற்றவர்கள் 54 ஆசிரியர்கள் பிரான்ஸ் நாட்டிற்கு பன்னாட்டுக் கல்வி சுற்றுலா பயணம்
"கனவு ஆசிரியர்" விருது பெற்றவர்கள் 54 ஆசிரியர்கள் பிரான்ஸ் நாட்டிற்கு பன்னாட்டுக் கல்வி சுற்றுலா பயணம்
Friday, 18 October 2024
எண்ணும் எழுத்தும் ஆசிரியர்களுக்கு நேரடி பயிற்சி தேதிகள் அறிவிப்பு
1 முதல் 5 ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு இரண்டாம் பருவ எண்ணும் எழுத்தும் நேரடி பயிற்சி ஒன்றிய அளவில் நடத்துவதற்கு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மாற்று பயிற்சி இயக்குனர் அறிவுரை வழங்கியுள்ளார்
1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கான எண்ணும் எழுத்தும் இணையவழி பயிற்சி 14.10.2024 முதல் 25.10.2024 வரை TNTP இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது
எண்ணும் எழுத்தும் இரண்டாம் பருவத்திற்கான பயிற்சியினை நேரடி பயிற்சியாக வழங்கிட பள்ளிக் கல்வி செயலர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது
இணையவழி பயிற்சியினை 1-5 வகுப்புகளுக்கு கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களும் 25.10.2024-க்குள் எடுத்துக்கொள்ளவேண்டும்
நேரடி பயிற்சி 1 முதல் 3 ஆம் வகுப்புகளுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் 28.10.2024 மற்றும் 29.10.2024 தேதிகளில் நடைபெறும்
நேரடி பயிற்சி 4 மற்றும் 5 ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு 04.11.2024 மற்றும் 05.11.2024 தேதிகளில் நடைபெறும்
ஒன்றிய அளவில் பயிற்சி சார்ந்த சந்தேகங்களை மட்டும் நேரடியாக உரிய மாவட்ட கருத்தாளர்களிடம் கேட்டு தெளிவு பெரும் வகையில் நேரடி பயிற்சி வழங்கப்படுகிறது
மாவட்டக் கருத்தாளர்களுக்கான பயிற்சி தேதிகள் 24.10.2024 (1-3) மற்றும் 25.10.2024 (4-5)
மேலும் விவரங்களுக்கு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மாற்று பயிற்சி இயக்குனர் அவர்களின் செயல்முறை பெற கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
👇👇
NMMS SAT VIII SCIENCE ONLINE MODEL TEST 10
NMMS SAT
VIII - SCIENCE
ONLINE MODEL TEST 10
இந்த தேர்வுக்கான
பாடப்பகுதிகள்
8 ஆம் வகுப்பு அறிவியல்
👇👇
1. தாவர உலகம் PART - 1I
(பிரையோஃபைட்டுகள் முதல் பாடம் இறுதி வரை)
👉 இந்த பாடம் அதிகமான வினாக்களை கொண்டு இருப்பதால் இரண்டு தேர்வுகளாக பிரிக்கப்பட்டுள்ளது
👉 இந்த PART II தேர்வு தாவர உலகம் பாடத்தில் பிரையோஃபைட்டுகள் முதல் பாடம் இறுதி வரை உள்ள பாடப்பகுதியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது
👉 110 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது
👉 மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம்
👉 ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும்
👉அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள்
👉 அனைத்து 110 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கு சரியான விடையும் பெறலாம்
👉 இந்த தேர்வு பற்றிய உங்கள் கருத்துக்களை 9952329008 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்புங்கள்
தேர்வு எழுத கீழ்கண்ட லிங்க் மூலம் செல்லவும்
👇👇
NMMS SAT VIII SCIENCE ONLINE MODEL TEST 10
PDF வினாத்தாள் பெற கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும்
👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
அடுத்த தேர்வு
👇👇
NMMS SAT VIII SCIENCE ONLINE MODEL TEST - 11
👇👇
1. உயிரினங்களின் ஒருங்கமைவு
ONLINE EXAM வாட்ஸஅப் குழு லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விரும்பினால் ஏதேனும் ஒரு குழுவில் இணைந்து கொண்டு NMMS தொடர்பான தொடர் செய்திகள், விளக்கங்களை பெறலாம்
NMMS EXAM வாட்ஸ் அப் குழு 2
👇👇
NMMS EXAM வாட்ஸ் அப் குழு 3
👇👇
CLICK HERE TO JOIN NMMS GROUP 3Thursday, 17 October 2024
கண்காணிப்பாளர் பதவியில் இருந்து மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பதவி உயர்வுக்கான தேர்ந்தோர் பெயர் பட்டியல் மற்றும் பதவி உயர்வுக்கான தேர்ந்தோர் பெயர்ப்பட்டியலில் சேர்க்க தகுதியற்றவர்கள் பட்டியல்
தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குனர் (பணியாளர் தொகுதி) அவர்களின் செயல்முறைகள் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும்
👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பதவி உயர்வுக்கான தேர்ந்தோர் பெயர் பட்டியல் மற்றும் பதவி உயர்வுக்கான தேர்ந்தோர் பெயர்ப்பட்டியலில் சேர்க்க தகுதியற்றவர்கள் பட்டியல் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை அழுத்தவும் அழுத்தவும்
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
கலைத்திருவிழா குறுவள அளவிலான போட்டிகள் மற்றும் வட்டார அளவிலான போட்டிகள் நடத்திட புதிய தேதிகள் அறிவிப்பு
1 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு குறுவள அளவிலான போட்டிகளை 30.10.2024-க்குள் நடத்தி முடித்திட வேண்டும்
வெற்றி பெற்ற மாணவர்களின் விவரங்களை 30.10.2024-க்குள் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்
ஒவ்வொரு குறு வள மையம் அளவிலும் ஒவ்வொரு போட்டியிலும் முதல் இடம் பெற்ற மாணவர்களுக்கு (1முதல் 5 ஆம் வகுப்பு) வட்டார அளவிலான போட்டிகளை 07.11.2024க்குள் நடத்தி முடித்திட வேண்டும்
வட்டார அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்ற 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களின் விவரங்களை EMIS இணையதளத்தில் 08.11.2024 க்குள் பதிவேற்றம் செய்து முடித்திட வேண்டும்
6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான வட்டார அளவிலான போட்டிகளை 07.11.2024 க்குள் நடத்தி முடித்திட வேண்டும்
6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் விவரங்களை 08.11.2024 க்குள் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டும்
1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்கள் குறுவள மையம் அளவிலான போட்டிகளுக்கான தேதிகள்
30.10.2024 க்குள்
1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களில் குறுவள மையம் அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் விவரம் பதிவேற்றம் செய்ய வேண்டிய தேதிகள்
30.10.2024 க்குள்
6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான வட்டார அளவிலான போட்டிகள் தேதிகள்
07.11.2024 க்குள்
6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களில் வெற்றி பெற்ற மாணவர்கள் விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டிய தேதிகள்
08.11.2024
Wednesday, 16 October 2024
மீண்டும் ஆசிரியர்களுக்கு விரல் ரேகை வருகைப்பதிவு முறையா?
நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அனைத்து வகைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் (இடைநிலை/தொடக்கக்கல்வி/தனியார் பள்ளிகள்) ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்
அந்த சுற்றறிக்கையில் நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து வகை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பற்றிய விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது
BIO METRIC முறையில் வருகை பதிவேடு மேற்கொள்ள வகையில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் பற்றிய விவரம் கேட்கப்பட்டுள்ளது
மேலும் இந்த தகவல் பள்ளிக்கல்வி இயக்ககத்தில் இருந்து 16.10.2024 வாட்ஸ் அப் தகவல் மூலம் கேட்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது
இதன் மூலம் இன்னும் சில தினங்களில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் வருகைப்பதிவு மீண்டும் BIO METRIC முறையில் இருக்கலாம் என தெரிய வருகிறது
Tuesday, 15 October 2024
அதி கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து 4 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவு
16 ஆம் தேதி தமிழ்நாட்டின் 4 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை (16.10.2024) அதி கனமழை பெய்யும் என எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது
இதன் காரணமாக தமிழ் நாடு அரசு "பொது விடுமுறை" அறிவிப்பு வெளியிட்டுள்ளது
அனைத்து அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
அத்தியாவசிய பணிகள் ஆன காவல்துறை , தீயணைப்புத்துறை, பால் மற்றும் தண்ணீர் வழங்கல் , மருத்துவமனை , மெடிக்கல் கடைகள் , போக்குவரத்து , ரெயில்வே, விமானசேவை , துறைமுகம் , ஏற்றுமதி இறக்குமதி நிறுவனங்கள் , எரிபொருள் சேவைகள் , ஹோட்டல் , உணவு விடுதிகள் , போன்றவை வழக்கம் போல் செயல்படும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது
அனைத்து கடைகளும் வழக்கம் போல் செயல்படும்
மேலும் விவரம் அறிய கீழே உள்ள லிங்க் மூலம் அரசு ஆணை பதிவிறக்கம் செய்யவும்
👇👇
Monday, 14 October 2024
தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு, அக்டோபர் 2024 - தேர்வுமைய பெயர்ப்பட்டியலுடன் கூடிய வருகைத்தாள் மற்றும் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகள் பதிவிறக்கம் செய்தல் - தொடர்பாக.
தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு, அக்டோபர் 2024 - தேர்வுமைய பெயர்ப்பட்டியலுடன் கூடிய வருகைத்தாள் மற்றும் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகள் பதிவிறக்கம் செய்தல் - தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் இணை இயக்குனர் (மேல்நிலை)
தேர்வு நாள் 19.10.2024
நுழைவுச் சீட்டுகள் பதிவிறக்கம் செய்யவேண்டிய நாள்
14.10.2024 பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யலாம்
நுழைவு சீட்டு பதிவிறக்கம் செய்ய உதவும் லிங்க்
👇👇
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க் மூலம் சென்று PDF பதிவிறக்கம் செய்யவும்
👇
14:10:24 சென்னையில் வெள்ள தடுப்பு பணிகளை கண்காணிக்க மண்டல வாரியாக IAS அதிகாரிகள் நியமனம்
14:10:24 சென்னையில் வெள்ள தடுப்பு பணிகளை கண்காணிக்க மண்டல வாரியாக IAS அதிகாரிகள் நியமனம்
15 மண்டலங்களுக்கான IAS அதிகாரிகள் கண்காணிப்பு அதிகாரிகள் செயல் பொறியாளர்கள் மக்கள் தொடர்பு துறை அதிகாரிகளின் விவரங்கள் கீழ் வருமாறு வெளியீடு
திருவொற்றியூர்
சமீரான் IAS
மணலி
குமரவேல் IAS
மாதாவரம்
பாண்டியன் IAS
தண்டையார்பேட்டை
மேகநாதரெட்டி IAS
ராயபுரம்
கண்ணன் IAS
திருவிக நகர்
ஜானி டேம் வர்கீஸ் IAS
அம்பத்தூர்
கணேசன் IAS
அண்ணா நகர்
ராமன் IAS
தேனாம்பேட்டை
ஸ்ரேயா பி.சிங் IAS
கோடம்பாக்கம்
பிரதாப் IAS
வளசரவாக்கம்
விசாகன் IAS
ஆலந்தூர்
சிவஞானம் IAS
அடையாறு
பிரபாகர் IAS
பெருங்குடி
செந்தில் IAS
மகேஸ்வரி ரவிக்குமார் IAS
சோளிங்கநல்லூர்
உமா மகேஸ்வரி IAS
2024 - 2025 உயர் கல்விக்கு செல்ல ஏதுவாக மாணவர்களை போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்துதல் விருப்பம் தெரிவித்த 409 ஆசிரியர்கள் மற்றும் 131 உயர் தொழில் நுட்ப ஆய்வக நிர்வாகிகளுக்கு ஒரு நாள் புத்தாக்க பயிற்சி
TGTA செய்திகள்
பள்ளிக் கல்வி 2024 - 2025 ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் உயர் கல்விக்கு செல்ல ஏதுவாக மாணவர்களை போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்துதல்
விருப்பம் தெரிவித்த 409 ஆசிரியர்கள் மற்றும் 131 உயர் தொழில் நுட்ப ஆய்வக நிர்வாகிகளுக்கு அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாதிரிப் பள்ளிகளில் ஒரு நாள் புத்தாக்க பயிற்சி 15.10.2024 அன்று நடைபெறுகிறது
தகவல் நன்றி
TGTA மாநில மையம்.
Saturday, 12 October 2024
அரசு ஊழியர்கள் அனைவரும் பணியின் போது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை கட்டாயம் அணிய வேண்டும் - மனித வள மேலாண்மைத் துறையின் கடிதம்
அரசு ஊழியர்கள் அனைவரும் பணியின் போது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை கட்டாயம் அணிய வேண்டும் - மனித வள மேலாண்மைத் துறையின் கடிதம்
மேலும் விவரம் அறிய கீழே உள்ள லிங்கில் செல்லவும்
👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
Friday, 11 October 2024
TNSED ADMINISTRATORS MOBILE APP NEW UPDATE VERSION 0.3.2 UPDATED ON 10/10/2024
TNSED ADMINISTRATORS MOBILE APP NEW UPDATE VERSION 0.3.2 UPDATED ON 10/10/2024
What's New?*
ITK CENTRE OBSERVATION MODULE ADDED
UPDATE செய்ய கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
👇
🔮💥🔮💥🔮💥🔮💥🔮💥
Thursday, 10 October 2024
"திருத்தப்பட்ட பட்டியல்" பள்ளிக் கல்வித் துறையின் நலத் திட்டங்களை கண்காணிப்பதற்கு மாவட்ட வாரியாக உயர் அலுவலர்களை நியமனம் செய்து பள்ளிக் கல்வித் துறை செயலாளர் உத்தரவு
பள்ளிக் கல்வித் துறையின் நலத் திட்டங்களை கண்காணிப்பதற்கு மாவட்ட வாரியாக உயர் அலுவலர்களை நியமனம் செய்து பள்ளிக் கல்வித் துறை செயலாளர் முன்பு உத்தரவு பிறப்பித்து இருந்தார்
தற்போது புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது
Wednesday, 9 October 2024
18 மாவட்டக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம்
தமிழ்நாடு பள்ளிக்கல்விப்பணியில் பணியாற்றிவரும் மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு நிருவாக நலன் கருதி கார்ல் வழங்கப்பட்டுள்ளது
மாவட்டக்கல்வி அலுவலர்கள் தற்போது பணிபுரிந்து வரும் அலுவலகம் மற்றும் மாறுதல் வழங்கப்பட்டுள்ள அலுவலகம் கீழே வழங்கப்பட்டுள்ளது
Wednesday, 2 October 2024
தமிழ்நாடு அரசுத் துறை செயலாளர்கள் அதிரடி பணியிட மாற்றம்
தமிழ்நாடு அரசில் பல்வேறு துறைகளில் பணியாற்றிவரும் துறைச் செயலாளர்கள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்
அவர்கள் பணியாற்றிவந்த பணியிடம் மற்றும் துறையும் தற்போது மாறுதல் பெற்றுள்ள பணியிடம் மற்றும் துறை இன்று வெளியிடப்பட்டுள்ளது
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம்.
உயர்கல்வித்துறை செயலாளராக கே.கோபால் பணியிட மாற்றம்.
மின்வாரியத் தலைவர் ராஜேஷ் லக்கானி, வருவாய் நிர்வாகத்துறை ஆணையராக பணியிட மாற்றம்.
மேலும் அரசு ஆணை பெற கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும்
👇
Monday, 30 September 2024
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன உந்தும வளாகம், மகேந்திரகிரி சார்பாக நடத்தப்படும் "உலக விண்வெளி வார விழா - 2024" போட்டிகள் தேதி அறிவிப்பு
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன உந்தும வளாகம், மகேந்திரகிரி சார்பாக நடத்தப்படும் "உலக விண்வெளி வார விழா - 2024" போட்டிகளுக்கான புதிய தேதி அறிவிப்பு
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன உந்தும வளாகம், மகேந்திரகிரி சார்பாக நடத்தப்படும் "உலக விண்வெளி வார விழா - 2024" போட்டிகள் தேதி அறிவிக்கப்பட்டு இருந்தது தற்போது காலாண்டு விடுமுறை என்பதால் போட்டிகளின் தேதி மாற்றப்பட்டுள்ளது
இந்த போட்டியானது Kamaraj College of Engineering and Technology, S.P.G.C Nagar, K.Vellakulam (Near Virudhunagar) என்ற கல்லூரியில் நடைபெறுகிறது
இந்த போட்டியானது பேச்சுப்போட்டி ஓவியப்போட்டி மற்றும் வினாடி வினா என்ற மூன்று பிரிவுகளாக நடத்தப்படுகிறது
போட்டியில் 6 முதல் 12 வரை பயிலும் மாணவர்கள் கலந்து கொள்ள இயலும்
போட்டியில் மதுரை விருதுநகர் சிவகங்கை திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களை சேர்ந்த மாணவ மாணவியர்கள் பங்கேற்கலாம்
போட்டிகள் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரு மொழிகளிலும் நடத்தப்படுகிறது
பேச்சுப் போட்டியானது 3 நிமிடங்கள் நடைபெறும் ஒவ்வொரு பிரிவிலும் ஒரு பள்ளியில் இருந்து இரு மாணவர்கள் கலந்துகொள்ளலாம்
ஓவியப்போட்டியிலும் ஒரு பிரிவில் ஒரு பள்ளியில் இருந்து இரு மாணவர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம்
வினாடி வினா போட்டியில் ஒரு பள்ளி சார்பாக ஒரு குழு மட்டும் கலந்து கொள்ளலாம் . ஒரு குழுவில் மூன்று மாணவர்கள் இருக்கலாம்
பங்கேற்கும் மாணவர்கள் படிக்கும் பள்ளியின் மூலமாக 05.10.2024க்குள் கீழ்கண்ட முகவரிக்கு தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்
போட்டிகள் 08.10.2024 மற்றும் 09.10.2024 ஆகிய தேதிகளில் நடைபெறும்
The Administrative Officer (RMT),
IPRC, Mahendragiri P.O.,
Tirunelveli District,
Pin – 627 133
TamilNadu
தொலைபேசி எண்
04637 281940
04637 281825
அலைபேசி எண்
9486041737
9994239306
மின்னஞ்சல் முகவரி
👇
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க் மூலம் அறிவிப்பு தொடர்பான pdf பதிவிறக்கம் செய்யவும்
👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
கலைத் திருவிழா குறுவளமைய மற்றும் வட்டார அளவிலான போட்டிகள் - மாநிலத் திட்ட இயக்குநரின் விரிவான வழிகாட்டு நெறிமுறைகள்
கலைத் திருவிழா குறுவளமைய மற்றும் வட்டார அளவிலான போட்டிகள் - மாநிலத் திட்ட இயக்குநரின் விரிவான வழிகாட்டு நெறிமுறைகள்
Sunday, 29 September 2024
NMMS SAT VIII SCIENCE ONLINE MODEL TEST 9
NMMS SAT
VIII - SCIENCE
ONLINE MODEL TEST 9
இந்த தேர்வுக்கான
பாடப்பகுதிகள்
8 ஆம் வகுப்பு அறிவியல்
👇👇
1. தாவர உலகம் PART - 1
(பாசிகள் மற்றும் பூஞ்சைகள் மட்டும்)
👉 இந்த பாடம் அதிகமான வினாக்களை கொண்டு இருப்பதால் இரண்டு தேர்வுகளாக பிரிக்கப்பட்டுள்ளது
👉 இந்த PART 1 தேர்வு தாவர உலகம் பாடத்தில் பூஞ்சைகள், பாசிகள், பாடப்பகுதியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது
👉 70 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது
👉 மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம்
👉 ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும்
👉அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள்
👉 அனைத்து 70 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கு சரியான விடையும் பெறலாம்
👉 இந்த தேர்வு பற்றிய உங்கள் கருத்துக்களை 9952329008 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்புங்கள்
தேர்வு எழுத கீழ்கண்ட லிங்க் மூலம் செல்லவும்
👇👇
NMMS SAT VIII SCIENCE ONLINE MODEL TEST 9
PDF வினாத்தாள் பெற கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும்
👇
அடுத்த தேர்வு
நாள்: 02.10.2024
நேரம்: 7 PM
👇👇
NMMS SAT VIII SCIENCE ONLINE MODEL TEST - 10
👇👇
பாடப்பகுதிகள்
1. தாவர உலகம் (பாசிகள் மற்றும் பூஞ்சைகள் தவிர மீதி பாடப்பகுதிகள் )
ONLINE EXAM வாட்ஸஅப் குழு லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விரும்பினால் ஏதேனும் ஒரு குழுவில் இணைந்து கொண்டு NMMS தொடர்பான தொடர் செய்திகள், விளக்கங்களை பெறலாம்
NMMS EXAM வாட்ஸ் அப் குழு 2
👇👇
NMMS EXAM வாட்ஸ் அப் குழு 3
👇👇
CLICK HERE TO JOIN NMMS GROUP 3