Search This Blog

Thursday, 15 April 2021

TNPSC TRB TET

பூஞ்சைகள் மற்றும் லைக்கன்கள் வினா விடை 
prepared by Ela.BABU VELAN, Tenkasi

  1.  பெனிசிலின் எந்த ஆண்டு கண்டு படிக்கப்பட்டது? 1928
  2. பெனிசிலின் மருந்தைக் கண்டுபிடித்தவர் யார்? அலெக்சாண்டர் பிளமிங் 
  3. அலெக்சாண்டர் பிளமிங் எந்த ஆண்டு நோபல் பரிசு பெற்றார்? 1945
  4. பூஞ்சைகள் பற்றிய வித்து வளர்ப்பு சோதனை செய்தவர் யார்? P.A. மைச்சிலி (1729)
  5. பூஞ்சைகள், தாவரங்களில் நோய்கள் ஏற்படுத்தும் என நிரூபித்தவர் யார்? பாண்டானா (1767)
  6. பூஞ்சைகள், மனிதர்களில் ஒவ்வாமையை ஏற்படுத்தும் என நிரூபித்தவர் யார்? C.H. ப்பிளாக்கிலி (1873)
  7. பூஞ்சைகளின் மாற்று உடலத்தன்மையை கண்டறிந்தவர் யார்?                     A.F. ப்ளாக்ஸ்லி (1904)
  8. பூஞ்சையில் பாலினை ஒத்தத்தன்மையை கண்டறிந்தவர் யாவர்? பாண்டி கொர்வோவ் மற்றும் ரோப்பர் 
  9. பூஞ்சை என்பதன் பொருள் என்ன? காளான் 
  10. பூஞ்சையியலை தோற்றுவித்தவர் யார்? P.A. மைச்சிலி
  11. பூஞ்சைகள் பற்றிய படிப்பின் பெயர் என்ன? மைகாலஜி 
  12. இந்திய பூஞ்சையியலின் தந்தை எனக்கருதப்படுபவர் யார்? E.J. பட்லர் 
  13. E.J. பட்லர் நிறுவிய வேளாண்மை நிறுவனத்தின் பெயர் என்ன? இம்பீரியல் வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம் (பீகார் - பூசா)
  14. இம்பீரியல் வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம் தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது?இந்திய வேளாண்மை ஆராய்ச்சி மையம் (IARI)
  15. பூஞ்சை மற்றும் தாவர நோய்கள் என்ற புத்தகத்தை எழுதியவர் யார்? E.J.பட்லர் 
  16. பூஞ்சைகளை உடலம் எவற்றால் ஆனது? ஹைபா 
  17. ஹைபாக்கள் இணைந்து உருவாவது எது? மைசீலியம் 
  18. பூஞ்சைகளின் செல் சுவர் இவற்றால் ஆனது? கைட்டின் (பாலி சாக்கரைட்) மற்றும் பூஞ்சை செல்லுலோஸ் 
  19. பல் உட்கரு மைசீலியம் கொண்ட பூஞ்சைக்கு (ஹைபாக்களுக்கு இடையே தடுப்பு சுவர் இல்லை) உதாரணம் எது? அல்புகோ 
  20. ஹைப்பாக்களின் செல்களுக்கு இடையே தடுப்புச்சுவர் காணப்படும் பூஞ்சைக்கு உதாரணம் எது? பியூசேரியம் 
  21. பூஞ்சையில்  உள்ள ஹைபாக்கள் இணைந்து உருவாகும் பூஞ்சை திசுக்களின் பெயர் என்ன? பிளக்டங்கைமா 
  22. பிளக்டங்கைமாவில் ஹைபாக்கள் நெருக்கமின்றி இணைப்போக்கான அமைப்பில் இருந்தால் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது? புரோசங்கைமா 
  23. பிளக்டங்கைமாவில் ஹைபாக்கள் நெருக்கமாக  அமைந்திருந்தால் இருந்தால் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது? போலியான பாரங்கைமா 
  24. பூஞ்சையின் பாலிலா இனப்பெருக்க நிலையானது எவ்வாறு அழைக்கப்படுகிறது? பாலிலி  நிலை (Anamorph)
  25. பூஞ்சையின் பாலின  இனப்பெருக்க நிலையானது எவ்வாறு அழைக்கப்படுகிறது? பால்  நிலை (Teleomorph)
  26. பூஞ்சையில் பாலிலா மற்றும் பாலின என இரு இனப்பெருக்க நிலையானது காணப்பட்டால் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது?        முழு உடலி  (Holomorph)
  27. பூஞ்சையின் பாலிலா இனப்பெருக்கத்தில் ஈடுபடும் கசையிழை உடைய அமைப்பு எது? இயங்கு வித்துக்கள் (Zoospores) 
  28. ஆய்டியவித்துக்களின் வேறுபெயர்கள் எவை? உடல வித்துக்கள், கணு வித்துக்கள் 
  29. பூஞ்சைகளின் பாலிலா இனப்பெருக்கத்தில் ஹைப்பாக்கள் பிளவுற்று தோன்றும் வித்துக்கள் எது? ஆய்டியவித்துக்கள் 
  30. பூஞ்சையின் பாலிலா இனப்பெருக்கத்தில் உடல செல்கள் பிளவுற்று இரண்டு சேய் செல்களை தரும் முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது? பிளவுறுதல் 
  31. பூஞ்சையின் பாலிலா இனப்பெருக்கத்தில் ஈடுபடும் ஓய்வுநிலை வித்துக்களின் பெயர் என்ன? கிளாமிடவித்துக்கள் 
  32. பூஞ்சைகளின் பாலினப்பெருக்கத்தில் இயக்க கேமீட்டுகளின் இணைவு வகைகள் யாவை?                                                                                                                   

    அ 

    ஒத்த கேமீட் இணைவு (Isogamy)

    ஆ 

    சமமற்ற கேமீட் இணைவு (Anisogamy)  

    இ 

    முட்டை கருவுறுதல் (Oogamy)


  33. ஒத்த கேமீட் இணைவு பாலினப்பெருக்கத்தில் ஈடுபடும் பூஞ்சை எது? சின்கைட்ரியம் 
  34. சமமற்ற கேமீட் இணைவு பாலினப்பெருக்கத்தில் ஈடுபடும் பூஞ்சை எது? அல்லோ மைசிஸ் 
  35. முட்டை கருவுறுதல் பாலினப்பெருக்கத்தில் ஈடுபடும் பூஞ்சை எது? மோனோ பிளாபாரிஸ் 
  36. கேமீட்டகத்தொடர்பு (Gametangial contact): (ஆந்தரிடியம் & ஊகோனியம்) மூலம் பாலினப்பெருக்கத்தில் ஈடுபடும் பூஞ்சை எது? அல்புகோ 
  37. கேமீட்டக இணைவு (Gametangial copulation) மூலம் பாலினப்பெருக்கத்தில் ஈடுபடும் பூஞ்சை எது?  மியூக்கர் மற்றும் ரைசோபஸ் 
  38. ஸ்பெர்மேஷிய இணைவு (Spermatisation) பாலினப்பெருக்கத்தில் ஈடுபடும் பூஞ்சை எது? பக்சினியா மற்றும் நியுரோஸ்போரா 
  39. பூஞ்சையின் பிக்னிய வித்து  அல்லது நுண்கோனிடியம், ஏற்பு ஹைபாக்களுக்கு எந்த பாலினப்பெருக்கத்தில் கடத்தப்படுகிறது? ஸ்பெர்மேஷிய இணைவு
  40. இரண்டு ஹைபாக்களின் உடல செல்களின் இணைவினால் (Somatogamy) பாலினப்பெருக்கம் எந்த பூஞ்சையில் நடைபெறுகிறது? அகாரிகஸ் 
  41. பூஞ்சைகளில் உறக்க கருமுட்டை (Zygospore) எந்த பாலினப்பெருக்கத்தில் உருவாகிறது? கேமீட்டக இணைவு
  42. மரபுசார் வகைப்பாட்டின் படி பூஞ்சைகளின் வகைப்பாடு யாது?  அ.பைக்கோ மைசீட்ஸ் ஆ. ஆஸ்கோ மைசீட்ஸ் இ.பெசிடியோ மைசீட்ஸ் ஈ.டியூட்டிரோமைசீட்ஸ்  
  43.  பூஞ்சைகளில் பின் தங்கியதாகவும் பாசியில் இருந்து தோன்றியதாகவும் அறியப்படுவது எது? பைக்கோ மைசீட்ஸ்
  44. “Introductory Mycology”என்ற நூலில் பூஞ்சைகளின் வகைப்பாட்டை  வெளியிட்டவர்கள் யாவர்? கான்ஸ் டாண்டின் J. அலெக்ஸோ பொலஸ் மற்றும் சார்லஸ் W. மிம்ஸ் 
  45. Introductory Mycology” என்ற  நூலின் படி பூஞ்சைகளின் பிரிவுகள் எவை? அ. ஜிம்னோமைக்கோட்டா ஆ. மாஸ்டிக்கோமைக்கோட்டா இ. ஏ மாஸ்டிக்கோமைக்கோட்டா
  46. "Introductory Mycology” என்ற  நூலின் படி பூஞ்சைகளின் துணைப் பிரிவுகள் எத்தனை? 8
  47. "Introductory Mycology” என்ற  நூலின் படி பூஞ்சைகளின்  வகுப்புகள் எத்தனை? 11
  48. "Introductory Mycology” என்ற  நூலின் படி பூஞ்சைகளின்  வடிவ வகுப்புகள் எத்தனை? 1
  49. "Introductory Mycology” என்ற  நூலின் படி பூஞ்சைகளின்  துணை வடிவ வகுப்புகள் எத்தனை? 3
  50. பூஞ்சைகளின் ஊமைசீட்ஸ் என்ற வகுப்பு எந்த பிரிவைச்சேர்ந்தது? மாஸ்டிக்கோமைக்கோட்டா
  51. பூஞ்சைகளின் ஏ மாஸ்டிக்கோமைக்கோட்டா பிரிவைச் சேர்ந்த வகுப்புகள் எவை? சைகோமைசீட்ஸ், ஆஸ்கோமைசீட்ஸ், பேசிடியோமைசீட்ஸ் 
  52. டியூட்ரோமைசீட்ஸ் என்ற வடிவ வகுப்பு பூஞ்சையின் எந்த பிரிவைச் சேர்ந்தது? ஏ மாஸ்டிக்கோமைக்கோட்டா
  53. எந்தப் வகுப்பைச்  சேர்ந்த பூஞ்சைகள் முழுமைப் பெறா பூஞ்சைகள் எனப்படுகிறது? டியூட்ரோமைசீட்ஸ்
  54. எந்த வகுப்பைச் சேர்ந்த பூஞ்சைகளில் பாலினப் பெருக்கம் நடைபெறுவது இல்லை? டியூட்ரோமைசீட்ஸ்
  55. டியூட்ரோமைசீட்ஸ் வகுப்பைச் சேர்ந்த பூஞ்சைகளில் பாலிலா இனப்பெருக்கம் எம்முறைகளில் நடைபெறுகிறது? அ. கோனிடியங்கள் ஆ. கிளாமிடவித்துக்கள்  இ. மொட்டுவிடுதல்  ஈ. ஆய்டியவித்துக்கள் 
  56.  ஊதல் காளான் (Puff ball) என அழைக்கப்படும் பூஞ்சை எந்த வகுப்பைச் சேர்ந்தது? பேசிடியோமைசீட்ஸ் 
  57. தவளை இருக்கைப் பூஞ்சை (Toad Stool) என்பது எந்த வகுப்பைச் சேர்ந்தது? பேசிடியோமைசீட்ஸ் 
  58. பறவைக்கு கூடு பூஞ்சை (Bird’s nest fungus) என அழைக்கப்படும் பூஞ்சை எந்த வகுப்பைச் சேர்ந்தது? பேசிடியோமைசீட்ஸ் 
  59. அடைப்புக்குறி பூஞ்சை (Bracket fungus) என்பது எந்த வகுப்பைச் சேர்ந்தப் பூஞ்சை? பேசிடியோமைசீட்ஸ் 
  60. துர்நாற்றக் கொம்புப் பூஞ்சை (Stink horns) எந்த வகுப்பைச் சேர்ந்த பூஞ்சை? பேசிடியோமைசீட்ஸ் 
  61. துரு (Rust) மற்றும் கருப்பூட்டை (Smut) பூஞ்சைகள் எந்த வகுப்பைச் சேர்ந்த பூஞ்சைகள்? பேசிடியோமைசீட்ஸ் 
  62. மத்தளத் துளைத் தடுப்பு சுவருடைய மைசீலியம் எந்த வகுப்பு பூஞ்சைகளில்க் காணப்படுகிறது? பேசிடியோமைசீட்ஸ் 
  63. பாலின உறுப்புகள் இல்லாமல் பாலினப்பெருக்கம் எந்த வகுப்பு பூஞ்சைகளில் நடைப்பெறுகிறது? பேசிடியோமைசீட்ஸ் 
  64. கிளப் பூஞ்சைகள் என எந்த வகுப்பைச் சேர்ந்த பூஞ்சைகள் அழைக்கப்படுகிறது? பேசிடியோமைசீட்ஸ் 
  65. பேசிடியோமைசீட்ஸ் பூஞ்சைகளில் காணப்படும் பேசிடியும் (spore-producing structure) எந்த வடிவம் கொண்டது? குண்டாந்தடி வடிவம் 
  66. பேசிடியோமைசீட்ஸ் பூஞ்சைகளில் காணப்படும் ஒவ்வொரு பேசிடியமும்  எத்தனை பேசிடியோவித்துக்களை கொண்டது? 4
  67. பேசிடியோமைசீட்ஸ் பூஞ்சைகள் எங்கு வளர்கின்றன? நிலத்தில் 
  68. ஆஸ்கோமைசீட்ஸ் வகுப்பு பூஞ்சைகள் எங்கு வாழ்கின்றன? நிலம் நன்னீர் மற்றும் கடல்நீர் 
  69. ஈஸ்டுகள் எந்த வகுப்பைச் சேர்ந்த பூஞ்சை? ஆஸ்கோமைசீட்ஸ்
  70. மாவொத்த பூசனங்கள் எந்த வகுப்பைச் சேர்ந்த பூஞ்சை? ஆஸ்கோமைசீட்ஸ்
  71. கிண்ணவொத்தப் பூஞ்சைகள் எந்த வகுப்பைச் சேர்ந்தவை?ஆஸ்கோமைசீட்ஸ்
  72. மொரல்கள் எனப்படும் பூஞ்சைகள் எந்த வகுப்பைச் சேர்ந்த பூஞ்சை? ஆஸ்கோமைசீட்ஸ்
  73. ஆஸ்கோமைசீட்ஸ் வகுப்பு பூஞ்சைகளில் காணப்படும் மைசீலியம் எத்தகையது? கிளைத்த எளிய தடுப்பு சுவர் கொண்டது 
  74. ஆஸ்கோமைசீட்ஸ் வகுப்பு பூஞ்சைகளில் பாலிலா இனப்பெருக்கம் எவ்வழிகளில் நடைப்பெறுகிறது? பிளவுறுதல், மொட்டுவிடுதல், ஆய்டியவித்துக்கள், கோணிடியங்கள், கிளாமிடவித்துக்கள் 
  75. ஆஸ்கோமைசீட்ஸ் வகுப்பு பூஞ்சைகளில் பாலினப்பெருக்கம் எவ்வழிகளில் நடைபெறுகிறது? இரண்டு ஒத்த உட்கரு இணைவதன் மூலம் 
  76. ஆஸ்கஸ் (ஆஸ்க்கோ வித்துக்களைக்கொண்ட பை அமைப்பு) உருவாக்க சிறப்பு ஹைப்பாக்களை கொண்ட பூஞ்சை வகுப்பு எது? ஆஸ்கோமைசீட்ஸ்
  77. ஆஸ்கோமைசீட்ஸ் வகுப்பு பூஞ்சைகளில் உள்ள ஆஸ்கஸ் எத்தனை ஆஸ்கோ வித்துக்களைக் கொண்டது? 8
  78. பைப் பூஞ்சைகள் என எந்த வகுப்பு பூஞ்சைகள் அழைக்கப்படுகிறது? ஆஸ்கோமைசீட்ஸ்
  79. ஆஸ்கோமைசீட்ஸ் வகுப்பு பூஞ்சைகளில் உருவாகும் கனியுறுப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?ஆஸ்கோ கனியுறுப்பு 
  80. ஆஸ்கோமைசீட்ஸ் வகுப்பு பூஞ்சைகளில் காணப்படும் முழுமையாக மூடிய ஆஸ்கோ கனியுறுப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? கிளிஸ்டோதீஸியம் 
  81. ஆஸ்கோமைசீட்ஸ் வகுப்பு பூஞ்சைகளில் காணப்படும் குடுவை வடிவம் உடைய ஆஸ்கோ கனியுறுப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? பெரிதீஷியம் 
  82. ஆஸ்கோமைசீட்ஸ் வகுப்பு பூஞ்சைகளில் காணப்படும் கோப்பை  வடிவம் உடைய ஆஸ்கோ கனியுறுப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? அப்போதீசியம் 
  83. ஆஸ்கோமைசீட்ஸ் வகுப்பு பூஞ்சைகளில் காணப்படும் பொய் கனி உடலம் கொண்ட  ஆஸ்கோ கனியுறுப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? சூடோதீஸியம் 
  84. வீட்டு ஈக்களின் மீது வாழும் சைகோமைசீட்ஸ் வகுப்பைச் சேர்ந்த பூஞ்சை எது? எண்டமப்தோரா 
  85. ரொட்டி  மீது வாழும் சைகோமைசீட்ஸ் வகுப்பைச் சேர்ந்த பூஞ்சை எது? மியூக்கர் மற்றும் ரைசோபஸ் 
  86. சாணத்தில் மீது வாழும் சைகோமைசீட்ஸ் வகுப்பைச் சேர்ந்த பூஞ்சை எது? பைலோபொலஸ் 
  87. சைகோமைசீட்ஸ் வகுப்பைச் சேர்ந்த பூஞ்சைகளின் பாலினப்பெருக்கத்தில் கேமீட்டகங்கள் இணைந்து எத்தகைய கருமுட்டையை தோற்றுவிக்கின்றன? உறக்க கருமுட்டை?
  88. ஊமைசீட்ஸ் வகுப்பு பூஞ்சைகளில் பாலினப்பெருக்கம் எம்முறையில் நடைபெறுகிறது? முட்டை கருவுறுதல் 
  89. அல்புகோ பூஞ்சை எந்த வகுப்பைச் சேர்ந்தது?  ஊமைசீட்ஸ்
  90. கசையிழை உடைய இயங்கு வித்துக்களை கொண்ட பூஞ்சைகள் எந்த வகுப்பை சேர்ந்தது? ஊமைசீட்ஸ்
  91. உணவாக பயன்படும் பூஞ்சைகள் எவை? லென்டினேஸ் எடோடஸ், அகாரிகஸ் பைஸ்போரஸ், வால்வேரியெல்லா வால்வேசியே 
  92. ஈஸ்ட்கள் எந்த வைட்டமினை தயாரிக்க உதவுகிறது? வைட்டமின் பி 
  93. எரிமோதீஸியம் ஆஷ் பியி என்ற பூஞ்சையில் இருந்து எந்த வைட்டமின் தயாரிக்கப்படுகிறது? வைட்டமின் பி 12
  94.    பெனிசிலின் என்ற உயிர் எதிர் பொருட்கள் தயாரிக்க உதவும் பூஞ்சை எது? பெனிசிலியம் நோட்டேட்டம் 
  95. செபலோஸ்போரின்கள் என்ற உயிர் எதிர் பொருட்கள் தயாரிக்க உதவும் பூஞ்சை எது? அக்ரிமோனியம் கிரைசோஜீனம்
  96. கிரைசியோபல்வின் என்ற உயிர் எதிர் பொருட்கள் தயாரிக்க உதவும் பூஞ்சை எது?  பெ னிசிலியம் கிரைசோபல்வம் 
  97. எர்காட் ஆல்கலாய்டு (ஏர்காட்டமைன்) எனப்படும் ரத்த குழாயினை சுருங்க வைக்கும் மருந்து தயாரிக்க உதவும் பூஞ்சை எது? கிளாவிசெப்ஸ்பர்ப்பூரியா   
  98. சிட்ரிக் அமிலம் மற்றும் குளுக்கோனிக் அமிலம் தயாரிக்க பயன்படும் பூஞ்சை எது? ஆஸ்பெர் ஜில்லஸ் நைஜர் 
  99. இட்டகோனிக் அமிலம் தயாரிக்க உதவும் பூஞ்சை எது? ஆஸ்பெர் ஜில்லஸ் டேரியஸ் 
  100. கோஜிக் அமிலம் தயாரிக்க உதவும் பூஞ்சை எது? ஆஸ்பெர் ஜில்லஸ் ஒரைசே 
  101. நொதித்தல் மூலம் சர்க்கரையை ஆல்கஹாலாக மற்ற உதவும் ஈஸ்ட் பெயர் என்ன?சக்காரோமைசிஸ் செரிவிசியே 
  102. அடுமனையில் பெறப்படும் ரொட்டி பன் தயாரிக்க உதவும் பூஞ்சையின் பெயர் என்ன? ஈஸ்ட் 
  103. பாலாடைக்கட்டிகள் தயாரிக்க உதவும் பூஞ்சைகள் எவை? பெனிசிலியம் ராக்குவிபோர்ட்டை மற்றும் பெனிசிலியம் கேமம்பர்ட்டை 
  104.  அமைலேஸ், புரொட்டியெஸ், லாக்டேஸ் போன்ற நொதிகள் தயாரிக்கப் பயன்படும் பூஞ்சைகள் எவை? ஆஸ்பெர் ஜில்லஸ் ஒரைசே மற்றும் ஆஸ்பெர்ஜில்லஸ் நைஜர் 
  105. வேளாண்மை பயிர்களை தாக்கும் பூச்சிகளை அழிக்க உதவும்  பூஞ்சைகள் எவை? பியுவேரியா பேசியானா, மெட்டாரைசியம் அனைசோபிளியா 
  106.  பூஞ்சை வேரிகளை (Mycorrhizae) உருவாக்கும் பூஞ்சைகள் எவை?  ரைசோக்டோனியா மற்றும் பாலஸ், ஸ்கிளிரோடெர்மா 
  107. ஜிப்ரெல்லின்  என்ற தாவர வளர்ச்சி சீராக்கிப் பொருள் தயாரிக்க உதவும் பூஞ்சை எது? ஜிப்பேரேல்லா புயுஜிகுரை 
  108. நச்சுத்தன்மையுள்ள பூஞ்சைகள் பொதுவாக எந்த பெயரில் அறியப்படுகிறது?  தவளை இருக்கை பூஞ்சைகள் 
  109. நச்சுத்தன்மையுள்ள பூஞ்சைகளுக்கு உதாரணம் தருக? அமானிட்டாபேலாய்ட்ஸ்,  அமானிட்டா வெர்னா, போலிட்டஸ் சடானஸ் 
  110. உணவுப் பொருள்கள் கெட்டுப்போக காரணமான பூஞ்சைகள் எவை? அஸ்பெர்ஜில்லஸ், ரைசோபஸ், மியூக்கர், பெனிசிலியம் 
  111. உலர்ந்த உணவுப் பொருட்களில் புற்று நோயை தூண்டும் "அப்ளாடாக்சின்" என்ற நச்சுப் பொருளை உண்டாக்கும் பூஞ்சை எது? அஸ்பெர்ஜில்லஸ் பிளாவஸ் 
  112. பூஞ்சைகள் உற்பத்தி செய்யும் நச்சுப் பொருட்களுக்கு உதாரணம் தருக? பாட்டிலின் மற்றும் ஆக்ராடாக்சின் A 
  113. தோலில் நோய் தோற்று ஏற்படுத்தும் பூஞ்சை எவ்வாறு அழைக்கப்படுகிறது? டெர்மோபைட்கள்
  114.  டெர்மோபைட்கள் பூஞ்சைகளுக்கு உதாரணம் தருக? ட்ரைகோபைட்டான், டினியா, மைக்ரோஸ்போரம், எபிடெர்மோ பைட்டான் 
  115. 1843-1845 ஆம் ஆண்டில் அயர்லாந்தில் ஏற்பட்ட பஞ்சத்தால்  மில்லியன் மக்கள் இறப்புக்கு காரணமான உருளைக்கிழங்கில் ஏற்பட்ட "தாமதித்த வெப்பு நோய்க்கு" (Late blight of potato)  காரணமான பூஞ்சை எது?  பைட்டோப்தோரா இன்பெஸ்டன்ஸ் 
  116. 1942-1943-இல் வங்காளத்தில் ஏற்பட்ட பஞ்சத்திற்கு காரணமான நெல்லில் தோன்றிய "வெப்பு நோய்க்கு" காரணமான பூஞ்சை எது? ஹெல்மிந்தொஸ்போரியம் ஓரைசே  
  117. நெல்லில் கருகல் நோய் ஏற்படுத்தும் பூஞ்சை எது? மாக்ன போர்தே கிரைசியே 
  118. கரும்பில் செவ்வழுகல் நோயை ஏற்படுத்தும் பூஞ்சை எது? கோலிட்டோடிரைக்கம் பால்கேட்டம் 
  119. பீன்ஸில் ஆந்த்ரக்னோஸ்  நோயை ஏற்படுத்தும் பூஞ்சை எது? கோலிட்டோடிரைக்கம் லிண்டி முத்தியானம் 
  120.  குருசிபெரே குடுபத் தாவரங்களில் வெண் துரு நோயை ஏற்படுத்தும் பூஞ்சை எது? அல்புகோ கேண்டிடா 
  121. பீச் இலைச்சுருள் நோயை ஏற்படுத்தும் பூஞ்சை எது? டாப்ரினா டிபார்மன்ஸ் 
  122.  கோதுமையில் துரு நோயை ஏற்படுத்தும் பூஞ்சை எது? பக்ஸீனியா கிராமினிஸ் டிரிட்டிசை 
  123. மனிதர்களில் சேற்றுப் புண்ணை ஏற்படுத்தும் பூஞ்சை எது? ஏபிடெர்மோபைட்டான் பிளாக்கோசம் 
  124. மனிதர்களில் கேன்டிடியாசிஸ் நோயை ஏற்படுத்தும் பூஞ்சை எது? கேன்டிடா அல்பிகன்ஸ் 
  125. மனிதர்களில் கோகிடியோய் டோமைக்கோசிஸ் என்ற நோயை ஏற்படுத்தும் பூஞ்சை எது? கோகிடியோய்டிஸ் இம்மிட்டிஸ் 
  126. மனிதர்களில் ஆஸ்பெர்ஜில்லோசிஸ் என்ற நோயை ஏற்படுத்தும் பூஞ்சை எது? ஆஸ்பெர்ஜில்லஸ் பியூமிகேட்டஸ் 
  127. பூஞ்சைகளின் மைசீலியங்கள் மற்றும் தாவர வேர்களுக்கிடையே ஏற்படும் ஒருங்குயிர் வாழ்க்கை அமைப்பிற்கு என்ன பெயர்? பூஞ்சைவேரிகள் 
  128. பாசிகள் மற்றும் பூஞ்சைகளுக்கு இடையே ஏற்படும் ஒருங்குயிரி அமைப்பின் பெயர் என்ன? லைக்கென்கள் 
  129. லைக்கென்கலில் உள்ள பூஞ்சைகளில் எதன் மூலம் பாலிலா இனப்பெருக்கம் நடைபெறுகிறது?தூண்டாதல், சொரீடியங்கள், ஐசிடியங்கள்  
  130. லைக்கென்கலில் உள்ள பாசிகளில் பாலிலா இனப்பெருக்கம் எதன் மூலம் நடைப்பெறுகிறது? உறக்க நகராவித்துக்கள், ஹார்மோகோனியங்கள்
  131. மரப்பட்டை மீது காணப்படும் லைக்கன்கள்  எவ்வாறு அழைக்கப்படுகிறது? கார்ட்டிகோலஸ் 
  132. புற பூஞ்சை வேரிகளில் பூஞ்சைகளின் மைசீலியம்,  வேரினை சூழ்ந்து உருவாக்கும் அடர்த்தியான உறை எவ்வாறு அழைக்கப்படுகிறது? மேலுறை (Mantle)
  133. ஹார்டிக் வலை (Hartig net) எந்த வகை பூஞ்சை வேரிகள் உருவாக்குகிறது? புற பூஞ்சை வேரிகள்
  134. புற பூஞ்சை வேரிகளுக்கு உதாரணம்? பைசோலித்தஸ்டிங்டோரியஸ் 
  135. அக பூஞ்சை வேரிகளின் வேறு பெயர் என்ன? வெசிக்குலார் ஆர்பஸ்குலார் மைக்கோரைசா பூஞ்சைகள் (VAM)
  136. குமிழ் பை (vesicle), ஹைபா பை  (arbuscules) போன்ற உறிஞ்சு உறுப்புகள் எவ்வகை பூஞ்சை வேரிகளில் உருவாகிறது?  அக பூஞ்சை வேரிகள் 
  137. ஆர்பஸ்குலார் பூஞ்சை வேரிகளுக்கு உதாரணம் தருக? ஜிகாஸ்போரா
  138. எரிக்காயிடு  பூஞ்சை வேரிகளுக்கு உதாரணம் தருக? ஆயிடியோ டெண்டிரான் 
  139. ஆர்கிட் பூஞ்சை வேரிகளுக்கு உதாரணம் தருக? ரைசோக்டானியா 
  140. கட்டை மீது காணப்படும் லைக்கன்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? லிக்னீகொலஸ் லைக்கன்
  141. பாறை மீது காணப்படும் லைக்கன்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? சாக்சிகோலஸ் லைக்கன்
  142. நிலத்தில் வாழும் லைக்கன்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?  டெரிக்கோலஸ் லைக்கன்
  143. வரையறுக்கப்பட்ட பூஞ்சை அடுக்கு காணப்படாத லைக்கன்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? லெப்ரோஸ் லைக்கன்
  144. ஓடு போன்ற அமைப்புடைய லைக்கன்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? கிரெஸ்டொஸ் லைக்கன்
  145. இலை ஒத்த வகை லைக்கன்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? போலியோஸ் லைக்கன்
  146. கிளைத்த புதர் போன்ற தொங்கும் அமைப்பு கொண்ட லைக்கன்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? புரூட்டிக்கோஸ் லைக்கன்
  147. பாசி செல்கள் லைக்கன் உடலத்தில் சீராக பரவியிருந்தால் அவ்வகை லைக்கன்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? ஹோமியோமிரஸ் 
  148. வரையறுக்கப்பட்ட பாசி, பூஞ்சை அடுக்கு என வேறுபாடுகள் காணப்படும்  லைக்கன்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? ஹெட்டிரோமிரஸ் 
  149. லைக்கென் உடலத்தில் உள்ள பூஞ்சை உயிரி ஆஸ்கொமைசீட்ஸ் வகுப்பைச் சேர்ந்ததாக இருந்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்? ஆஸ்க்கோ லைக்கென்
  150. லைக்கென் உடலத்தில் உள்ள பூஞ்சை உயிரி பேசிடியோமைசீட்ஸ் வகுப்பைச் சேர்ந்ததாக இருந்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்?  பேசிடியோ லைக்கேன் 
  151.   பாறைகள் மீது வாழும் லைக்கேன்கள் சுரக்கும் கரிம அமிலம் எது? ஆக்ஸாலிக் அமிலம் 
  152. உயிர் எதிர்பொருளாகப் பயன்படும் அஸ்னிக்அமிலம் எதில் இருந்துப் பெறப்படுகிறது? லைக்கன்கள் 
  153. லைக்கன்கள் எந்த மாசுக் காரணியை உணரக்கூடியது? கந்தக டை ஆக்ஸைடு 
  154. மாசுசுட்டிக்  காட்டிகளாக  கருதப்படுவது எது? லைக்கன்கள் 
  155. லைக்கன்களில்  இருந்து பெறப்படும் லிட்மஸ் காகிதத்திற்கு தேவையான சாயம் எது? ரோசெல்லா மாண்டாக்னே 
  156. துருவ பிரதேசத்தில் வாழும் விலங்குகளுக்கு உணவாக பயன்படும் லைக்கன்கள் எது? கிளாடோனியா ரான்சிப்பெரினா (ரெயின்டீர் மாஸ்)
  157. பூஞ்சைகளில் நடைபெறும் பாலிலா இனப் பெருக்கத்தின் வகைகள் யாவை? 

 வ.எ 

                    முறைகள் 

                       உதாரணம் 

அ 

இயங்கு வித்துக்கள் (Zoospores) 

கைட்ரிடுகள்  

ஆ 

கோனிடியங்கள் (Conidia) 

ஆஸ்பெர்ஜில்லஸ்   

இ 

ஆய்டிய வித்துக்கள் (oidia)

எரிசை ஃபி  

ஈ 

பிளவுறுதல் (Fission)  

சைசோசாக்கரோமைசிஸ் ஈஸ்ட் 

உ 

மொட்டுவிடுதல் (Budding)

சாக்கரோமைசிஸ் & ஈஸ்ட்  

ஊ 

கிளாமிடவித்துக்கள் (Chlamydospores)

ஃபியுசேரியம் 






















Tuesday, 13 April 2021

TNPSC SCIENCE QUESTION AND ANSWER

 "வகைப்பாட்டுமுறைகள் மற்றும் பாக்டீரியா"

Prepared By

ELA.BABU VELAN, 
BT ASST (SCIENCE), 
TENKASI.
CELL: 9952329008
Mail: raamanesh143@gmail.com

  1. தாவரவியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்? தியோ பிராஸ்டஸ் 
  2. தாவரங்களை புறப்பண்புகள் அடிப்படையில் (மரங்கள், புதர்ச்செடிகள் , சிறுசெடிகள்) பிரித்தவர் யார்? தியோ பிராஸ்டஸ் 
  3. ரத்த நிறங்களின் அடிப்படையில் உயிரினங்களை இரு பிரிவுகளாக பிரித்தவர் யார்? அரிஸ்டாட்டில் 
  4. உயிரின உலகத்தை புறப்பண்புகளின் அடிப்படையில் இருக்குழுக்களாக (தாவரங்கள், விலங்குகள்) பிரித்தவர் யார்? கார்ல் லின்னேயஸ் 
  5. உயிரின உலகத்தை மூன்றுக் குழுக்களாக (புரோடீஸ்டா, பிளாண்டே, அனிமேலியா) பிரித்தவர் யார்? எர்னஸ்ட் ஹெக்கேல் 
  6. உயிரின உலகத்தை நான்குக் குழுக்களாக (மோனிரா,  புரோடீஸ்டா, பிளாண்டே, அனிமேலியா) பிரித்தவர் யார்?  கோப்லேண்ட் 
  7. உயிரின உலகத்தை ஐந்துக் குழுக்களாக (மோனிரா, புரோடீஸ்டா, பூஞ்சைகள், பிளாண்டே, அனிமேலியா) பிரித்தவர் யார்? R.H. விட்டாக்கெர் 
  8. கீழ்க்கண்ட எந்த வகை உயிரினங்களின் செல்சுவர் பெப்டிடோ கிளைக்கான், மியூகோ பெப்டைட்களால் ஆனது? மொனிரா 
  9. கீழ்க்கண்டவற்றுள் எது மொனிரா வகை உயிரினம் அல்ல? அ.ஆக்டினோமை சீட்கள்  ஆ. மைக்கோபிளாஸ்மா  இ. யுபாக்டீரியா  ஈ . அமீபா 
  10. கீழ்க்கண்டவற்றுள் எது  புரோட்டிஸ்டா வகை உயிரினம் அல்ல?                    அ . பாரமீசியம்  ஆ . பிளாஸ்மோடியம்  இ . அமீபா  ஈ ஆர்க்கி பாக்டீரியா 
  11.  உயிரி உலகின் ஆறு பெரும் பிரிவு வகைப்பாட்டினை வெளியிட்டவர் யார்? தாமஸ் கேவாலியர் - ஸ்மித் 
  12. உயிரி உலகின் ஏழு  பெரும் பிரிவு வகைப்பாட்டினை வெளியிட்டவர் யார்? ருகிரோ 
  13. சிவப்பு அலை என அழைக்கப்படும் பாசித் பொலிவை உருவாக்கும் பாசிகள் யாவை? ஜிம்னோடியம் பிரேவி மற்றும் கோனியலாகஸ் டாமரின்சிஸ் 
  14. பால் தயிராக காரணமான பாக்டீரியா எது? லாக்டோபேசில்லஸ் 
  15. தயிரில் உள்ள அமிலம் எது? லாக்டிக் அமிலம் 
  16. டைபாய்டு காய்ச்சல் எந்த பாக்டீரியாவால் வருகிறது? சால்மோனெல்லா டைபி 
  17. காலரா, காசநோய் போன்ற நோய்களுக்கான நோய்க்காரணிகளைக் கண்டுபிடித்தவர் யார்? ராபர்ட் ஹின்ரிக் ஹெர்மன் (நோபல் பரிசு 1905)
  18.  பாக்டீரியம் என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் யார்? C.G. எஹ்ரன்பேர்க் 
  19. பாக்டீரியங்களை வேறுபடுத்தும் கிராம் சாயமேற்றும்  முறையை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் யார்? கிறிஷ்டியன் கிராம் 
  20. பாக்டீரியத்தின் மரபணு மாற்றத்தைக் கண்டுபிடித்தவர் யார்? பிரட்ரிக் கிரிபித்
  21. பிளாஸ்மிட்டை கண்டறிந்தவர் யார்? ஜோஸ்வா லேடெர்பர்க் 
  22.  பாக்டீரியங்களை முதன் முதலில் நுண்ணோக்கி மூலம் கண்டறிந்தவர் யார்? ஆண்டன் வான் லீவன் ஹூக் 
  23. ஆண்டன் வான் லீவன் ஹூக் முதலில் பாக்டீரியாதை எவ்வாறு அழைத்தார் ? அனிமல் கியூல்ஸ் 
  24. பாக்டீரியங்களின் செல் சுவர் எவற்றால் ஆனது? பாலிசாக்ரைட்கள் மற்றும் புரதம் 
  25. தற்சார்பு ஊட்ட முறை பாக்டீரியாவிற்கு உதாரணம் எது? குரோமேஷியம் 
  26. பாக்டீரியங்களில் காணப்படும் உடல் இனப்பெருக்க முறைகள் எவை? இருபிளவுறுதல் மற்றும் அகவித்துக்கள் உருவாதல் 
  27. பாக்டீரியங்களில் காணப்படும் பாலின  இனப்பெருக்க முறைகள் எவை? இணைவு, மரபணுமாற்றம் , மரபணு ஊடு கடத்தல் 
  28. பாக்டீரியங்களின் வெளியுறை எவ்வாறு அழைக்கப்படுகிறது ? கிளைக்கோ கேலிக்ஸ் 
  29. குடல் மற்றும் இரைப்பை புண் எந்த பாக்டீரியாவால் ஏற்படுகிறது? ஹெலிகோபாக்டர் பைலோரி 
  30. பேசில்லஸ் துரின்சியன்சிஸ் பாக்டீரியத்தில் இருந்து பெறப்படும் Bt நச்சின் பயன் யாது? பயிர்களில் பூச்சி எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்க 
  31. பாக்டீரியங்களின் செல் சுவர் எவற்றால் ஆனது? பெப்டிடோ கிளைக்கான், மியூகோ பெப்டைட்கள் 
  32. பாக்டீரியங்களின் பிளாஸ்மாச்சவ்வு  எவற்றால் ஆனது? லிப்போ புரதம் 
  33. பாக்டீரியங்களில் காணப்படும் ஈரிழை வட்ட வடிவ தானே பெருக்கமடையும் கொண்ட குரோமோசோம்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? பிளாஸ்மிட்கள் 
  34. புரத சேர்க்கை நடைபெறும் மையம் என அழைக்கப்படுவது எது? ரிபோசோம்கள் 
  35. பாக்டீரியாவில் காணப்படும் ரிபோசோம்கள் எந்த வகையைச் சார்ந்தது? 70s 
  36. mRNA மீது பல ரிபோசோம்கள் சேர்ந்து காணப்படும் அமைப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது? பாலிரிபோசோம்கள் அல்லது பாலிசோம்கள் 
  37. பாக்டீரியாவின் இடப்பயிற்சி உறுப்பு எது? கசையிழை  (பிளாஜெல்லம்)
  38. பாக்டீரியாவின் கசையிழை எந்த அளவு உடையது? 20-30μm விட்டம் 
  39. பாக்டீரியாவின் கசையிழையின் நீளம் என்ன? 15μm
  40. பாக்டீரியாவின் இணைவிற்கு உதவும் உறுப்பு எது? பிம்ரியே அல்லது பைலி (நுண் சிலும்புகள்)
  41. பாக்டீரியாவில் உள்ள   பிம்ரியே அல்லது பைலியின் நீளம் என்ன? 0.2-20μm
  42. பாக்டீரியாவில் உள்ள   பிம்ரியே அல்லது பைலியின் விட்டம் என்ன? 0.025 μm
  43. கிராம் சாயமேற்றும் முறையில் கிராம் நேர் பாக்டீரியங்கள் எந்த நிறத்தில் தோன்றுகின்றது? அடர் ஊதா நிறம் 
  44. கிராம் சாயமேற்றும் முறையில் படிக ஊதா சாயத்தை எந்த வகைப் பாக்டீரியங்கள் ஏற்பதில்லை? கிராம் எதிர் வகைப் பாக்டீரியங்கள் 
  45. சாப்ரான் சாயத்தை பயன்படுத்தும் பொது கிராம் எதிர் வகைப் பாக்டீரியங்களை நுண்ணோக்கியில் காணும்போது என்ன நிறத்தில் தோன்றும்? சிவப்பு நிறம் 
  46. கிராம் நேர் பாக்டீரியங்களின் செல் சுவற்றில் காணப்படும் அமிலங்கள் எவை? டெக்காயிக் அமிலம் மற்றும் டேக்யூரானிக் அமிலம் 
  47. மேக்னடோசோம்கள் வகைப் பாக்டீரியங்களுக்கு உதாரணம் தருக? அக்குவாஸ்பைரில்லம் மேக்னடோடேக்டிகம் 
  48. மேக்னடோசோம்கள் வகைப் பாக்டீரியங்களில் காணப்படும் துகள்கள் எவை? மேக்னடைட் (Fe3O4)
  49. சுவாச நிகழ்ச்சிக்கு கட்டாயம் ஆக்சிஜன் பயன்படுத்தும் பாக்டீரியங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? நிலை மாறா காற்று சுவாசிகள் 
  50. நிலை மாறா காற்று சுவாசிகள் வகைப் பாக்டீரியங்களுக்கு உதாரணம் எது? மைக்ரோகாக்கஸ் 
  51. காற்றுணா சுவாசித்தலில் ஈடுபடும் பாக்டீரியங்களுக்கு உதாரணம் எது? கிளாஸ்ட்ரிடியம் 
  52. எந்த வாயுவைப் பயன்படுத்தி வளரும் பாக்டீரியங்கள் கேப்னோபிலிக் பாக்டீரியங்கள் என அழைக்கப்படுகிறது? கார்பன் டை ஆக்ஸைடு 
  53. கேப்னோபிலிக் பாக்டீரியங்களுக்கு உதாரணம் தருக? கேம்பைலோபாக்டர் 
  54. பசும் கந்தக வகைப் பாக்டீரியங்களில் காணப்படும் நிறமியின் பெயர் என்ன? பாக்டீரிய விரிடின் 
  55. பசும் கந்தக வகைப் பாக்டீரியாவுக்கு உதாரணம் தருக ? குளோரோபியம் 
  56. இளம் சிவப்பு கந்தக பாக்டீரியங்களில் காணப்படும் நிறமியின் பெயர் என்ன? பாக்டீரிய குளோரோபில் 
  57. இளம் சிவப்பு கந்தக பாக்டீரியங்களுக்கு உதாரணம் எது? குரோமேஷீயம் 
  58. பசும் கந்தக வகைப் பாக்டீரியங்களில் ஹைடிரஜன் கொடுநர்களாக செயல்படும் வேதிப்பொருள் எது? ஹைடிரஜன் சல்பைடு
  59.  இளம் சிவப்பு கந்தக வகைப் பாக்டீரியங்களில் ஹைடிரஜன் கொடுநர்களாக செயல்படும் வேதிப்பொருள் எது? தாயோசல்பேட் 
  60. கரிம ஒளிச்சார்பு ஊட்ட பாக்டீரியங்களில் ஹைட்ரஜன் கொடுனர்களாக பயப்படுவது எது? கரிம அமிலம் அல்லது ஆல்கஹால் 
  61. இளம் சிவப்பு கந்தகம் சாரா பாக்டீரியங்களுக்கு உதாரணம் எது? ரோடோஸ்பைரில்லம் 
  62. கனிம வேதிச்சார்பு ஊட்ட பாக்டீரியங்களுக்கு உதாரணம் தருக? அ. தயோ பேசில்லஸ், தயோ  ஆக்சிடன்ஸ் (கந்தக பாக்டீரியங்கள்) ஆ. பெர்ரோ பேசில்லஸ், பெர்ரோ ஆக்சிடன்ஸ் (இரும்பு பாக்டீரியங்கள்) இ. ஹைட் ரோ ஜீனோ மோனாஸ் (ஹைட்ரஜன் பாக்டீரியங்கள்) ஈ. நைட்ராசோ மோனாஸ், நைட்ரோபாக்டர் (நைட்ரஜனாக்க பாக்டீரியங்கள்) 
  63. மீத்தேன் பாக்டீரியங்களுக்கு உதாரணம் தருக? மெத்தனோகாக்கஸ் 
  64. அசிட்டிக் அமிலப் பாக்டீரியங்களுக்கு உதாரணம் தருக? அசிட்டோபாக்டர் 
  65. லாக்ட்டிக் அமிலப் பாக்டீரியங்களுக்கு உதாரணம் தருக? லாக்டோ பாசில்லஸ் 
  66. ஒட்டுண்ணியாக வாழும் பாக்டீரியா எது? மைக்கோ பாக்டீரியம் 
  67. சாற்றுண்ணியாக வாழும் பாக்டீரியா எது? பேசில்லஸ் மைக்காய்டஸ் 
  68. ஒருங்குயிர்களாக வாழும் பாக்டீரியா எது? ரைசோபியம் 
  69. அகவித்துக்களை (Endospores) உருவாக்கும் பாக்டீரியாக்கள் எவை? பேசில்லஸ் மெகாதீரியம், பேசில்லஸ் ஸ்பெரிக்கஸ், கிளாஸ்ட் டிரிடியம் 
  70. பாக்டீரியங்களில் நடைபெறும் இணைவு  முறையின் செயல்பாட்டை முதலில் விளங்கியவர்கள் யார்? J. லேடர்பர்க் மற்றும் எட்வர்ட் L.டாட்டம் 
  71. ஒரு பாக்டீரியத்தில் இருந்து மற்றொறு  பாக்டீரியத்திற்கு dna இடமாற்றம் செய்யப்படுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது? மரபணு மாற்றம் 
  72.  பிரட்ரிக் கிரிஃ பித் என்பவர் எந்த பாக்ட்ரியாவைக் கொண்டு மரபணு மாற்றத்தை விளக்கினார்? டிப்ளோ காக்கஸ் நிமோனியே 
  73. மரபணு ஊடு கடத்தல் முறையை முதன் முதலில் கண்டறிந்தவர்கள் யார்? ஜிண்டர் மற்றும் லேடர் பர்க் 
  74. ஜிண்டர் மற்றும் லேடர் பர்க்  எந்த பாக்டீரியாவின் மரபணு ஊடு கடத்தல் முறையை கண்டறிந்தார்கள்? சால்மோனெல்லா டைபிமியுரம் 
  75. மரபணு ஊடு கடத்தல் முறையில் எதன் மூலமாக dna இடமாற்றம் செய்யப்படுகிறது? பாக்டீரியபேஜ் 
  76. உயிரினங்கள் இறந்த பின்பு அவற்றின் உடலில் உள்ள புரதங்களை அம்மோனியாவாக மாற்றும் பாக்டீரியங்கள் எவை? பேசில்லஸ் ரமோஸஸ் மற்றும் பேசில்லஸ் மைக் காய்டஸ் 
  77. அம்மோனியா உப்புக்களை நைட்ரைட் மற்றும் நைட்ரேட்டாக மாற்றும் பாக்டீரியாக்கள் எவை?  நைட்ரோபாக்டர் மற்றும் நைட்ராசோமோனாஸ் 
  78. வளி மண்டல நைட்ரஜனை கரிம நைட்ரஜனாக மற்றும் பாக்டீரியாக்கள் எவை? அசட்டோபாக்டர், கிளாஸ்ட்டிரிடியம், ரைசோபியம் 
  79. ஸ்ட்ரெப்டோமைசின் (எலும்புருக்கி, மூளைச்சவ்வு பாதிப்பு, நிமோனியா காய்ச்சல் போன்ற நோய்களை குணப்படுத்தும்) என்ற உயிர் எதிர்ப்பொருள் எந்த பாக்ட்ரியா மூலம் தயாரிக்கப்படுகிறது? ஸ்ட்ரெப்டோமைசிஸ் கிரைசியஸ் 
  80. ஆரியோ மைசின் (கக்குவான் இருமல் குணப்படுத்தும்) என்ற உயிர் எதிர்ப்பொருள் எந்த பாக்ட்ரியா மூலம் தயாரிக்கப்படுகிறது? ஸ்ட்ரெப்டோமைசிஸ் ஆரியோ பேசியன்ஸ் 
  81. குளோரோ மைசிட்டின் (டைபாய்டு காய்ச்சல் குணப்படுத்தும்) என்ற உயிர் எதிர்ப்பொருள் எந்த பாக்ட்ரியா மூலம் தயாரிக்கப்படுகிறது? ஸ்ட்ரெப்டோமைசிஸ் வெனிசுலே 
  82. பேசிட்ராசின் (மேகநோய் குணப்படுத்தும்) என்ற உயிர் எதிர்ப்பொருள் எந்த பாக்ட்ரியா மூலம் தயாரிக்கப்படுகிறது? பேசில்லஸ் லைக்கனி பார்மிஸ் 
  83. பாலிமிக்சின் என்ற உயிர் எதிர்ப்பொருள் எந்த பாக்ட்ரியா மூலம் தயாரிக்கப்படுகிறது? பேசில்லஸ் பாலிமிக்ஸா 
  84. பாலில் உள்ள லாக்டோஸ் சர்க்கரையை லாக்டிக் அமிலமாக மாற்றும் பாக்டீரியா எவை? லாக்டோ பேசிலஸ் லாக்டிஸ் மற்றும் லாக்டோ பேசில்லஸ் பல்கேரிக்கஸ் 
  85. பாலை,  வெண்ணையாக   மாற்றும் பாக்டீரியா எவை? லாக்டோ பேசிலஸ் லாக்டிஸ், லியூக்கோனாஸ்டாக் சிட்ரோவோரம் 
  86. பாலை,  பாலாடைக்கட்டியாக   மாற்றும் பாக்டீரியா எவை?  லாக்டோ பேசிலஸ் அசிட்டோபில்லஸ் மற்றும் லாக்டோ பேசிலஸ் லாக்டிஸ் 
  87. பாலை,  தயிராக   மாற்றும் பாக்டீரியா எவை?  லாக்டோ பேசிலஸ் லாக்டிஸ் 
  88. பாலை "யோகர்ட்" ஆக மாற்றும் பாக்டீரியா எது? லாக்டோபேசில்லஸ் பல்கெரிக்கஸ் 
  89. அசிட்டிக் அமிலம் (வினிகர்) தயாரிக்க உதவும் பாக்டீரியா எது? அசிட்டோ பாக்டர் அசிட்டை 
  90. ஆல்கஹால் (பியூட்டைல் மற்றும் மீத்தைல் ஆல்கஹால்) தயாரிக்க உதவும் பாக்டீரியா எது? கிளாஸ்ட்டிரிடியம் அசிட்டோ பியூட்டிலிக்கம் 
  91. அசிட்டோன் தயாரிக்க உதவும் பாக்டீரியா எது? கிளாஸ்ட்டிரிடியம் அசிட்டோ பியூட்டிலிக்கம் 
  92. நார்த் தாவரங்களில் இருந்து நார்களை பிரித்தெடுக்க உதவும் பாக்டீரியா எது? கிளாஸ்ட்டிரிடியம் டெர்ஷியம் 
  93. மனிதனின் குடற்ப் பகுதியில் வாழ்ந்து வைட்டமின் கே மற்றும் வைட்டமின் பி உற்பத்தி செய்யும் பாக்டீரியா எது? ஈஸ்டிரிச்சியா கோலை
  94.  சர்க்கரைப் பொருளில் இருந்து வைட்டமின் பி 2 தயாரிக்க உதவும் பாக்டீரியா எது? கிளாஸ்ட்டிரிடியம் அசிட்டோ பியூட்டிலிக்கம் 
  95. புகையிலை மற்றும் தேயிலையை பதப்படுத்த உதவும் பாக்டீரியா எது? மைக்ரோகோக்கஸ் கேண்டி கன்ஸ்  மற்றும் பேசில்லஸ் மேகாதீரியம் 
  96. நெல்லில் ஏற்படும் வெப்பு நோய்க்கு காரணமான பாக்டீரியா எது? சாந்தொமோனாஸ் ஒரைசே 
  97. ஆப்பிளில் ஏற்படும் தீ வெப்பு நோய்க்கு காரணமான பாக்டீரியா எது? எர்வினியா அமைலோவோரா 
  98. கேரட்டில் ஏற்படும் மென் அழுகல் நோய்க்கு காரணமான பாக்டீரியா எது? எர்வினியா கேரட்டோவோரா 
  99. எலுமிச்சையில் ஏற்படும் திட்டு நோய்க்கு (கேன்கர்) காரணமான பாக்டீரியா எது? சாந்தொமோனாஸ் சிட்ரி 
  100. பருத்தியில் ஏற்படும் கோண இலைப்புள்ளி நோய்க்கு காரணமான பாக்டீரியா எது? சாந்தோமோனாஸ் மால்வாசியேரம் 
  101. உருளைக்கிழங்கில் ஏற்படும் வளைய அழுகல் நோய்க்கு காரணமான பாக்டீரியா எது? செபிடோனிக்கஸ் 
  102. உருளைக்கிழங்கில் ஏற்படும் படைப்புண்  நோய்க்கு காரணமான பாக்டீரியா எது? ஸ்ட்ரெப்டோமைசிஸ் ஸ்கேபிஸ் 
  103. செம்மறியாடுகளில் ஆந்த்ராக்ஸ் நோயை உருவாக்கும் பாக்டீரியா எது? பேசில்லஸ் ஆந்த்ராசிஸ் 
  104. கால்நடைகளில் புரூசெல்லோசிஸ் என்ற நோயை உருவாக்கும் பாக்டீரியா எது? புரூசெல்லா அபோர்டஸ்
  105.  கால்நடைகளின் எலும்புருக்கி நோய்க்கு காரணமான பாக்டீரியா எது? மைக்கோ பாக்டீரியம் பொவைஸ் 
  106. கால்நடைகளில் ஏற்படும்  கருங்கால் நோய்க்கு காரணமான பாக்டீரியா எது?  கிளாஸ்ட்டிரிடியம் சான்வி 
  107. காலரா நோயை உருவாக்கும் பாக்டீரியாவின் என்ன? விப்ரியோ காலரே 
  108. டைபாய்டு காய்ச்சலை உருவாக்கும் பாக்டீரியாவின் பெயர் என்ன? சால்மோனெல்லா டைபி 
  109. எலும்புருக்கி நோயை உருவாக்கும் பாக்டீரியாவின் பெயர் என்ன? மைக்கோ பாக்டீரியம் டியூபர் குளோசிஸ் 
  110. தொழு நோயை உருவாக்கும் பாக்டீரியாவின் பெயர் என்ன? மைக்கோ பாக்டீரியம் லெப்ரே 
  111. நிமோனியா காய்ச்சலை உருவாக்கும் பாக்டீரியாவின் பெயர் என்ன? டிப்ளோகாக்கஸ் நிமோனியே 
  112. பிளேக் நோயை உருவாக்கும் பாக்டீரியாவின் பெயர் என்ன? ஏர்சினியா பெஸ்டிஸ் 
  113. டிப்தீரியா என்ற தொண்டை அடைப்பான் நோயை உருவாக்கும் பாக்டீரியாவின் பெயர் என்ன? கார்னி பாக்டீரியம் டேட்டானி 
  114. டெட்டனஸ் (இசிப்பு வலிப்பு நோய்) உருவாக்கும் பாக்டீரியாவின் பெயர் என்ன? கிளாஸ்ட்டிரிடியம் டேட்டானி 
  115. உணவு நஞ்சாதலுக்கு காரணமான பாக்டீரியா எது? கிளாஸ்ட்டிரிடியம் பொட்டுலினம் 
  116. மேக நோய்க்கு காரணமான பாக்டீரியா எது?   டிரிப்போனிமா பேலிடம்  
  117. புரோபயாட்டிக் தயிர் மற்றும் பற்பசை தயாரிக்க உதவும் எவை? லாக்டோபேசில்லஸ் மற்றும் பைபிடோ பாக்டீரியம் 
  118. ஆர்க்கி பாக்டீரியங்களுக்கு (பழமையான தொல்லுட்கரு உயிரி) உதாரணம் தருக? மெத்தனோ பாக்டீரியம், ஹாலோ பாக்டீரியம், தெர்மோ பிளாஸ்மா 
  119. நீலப்பசும்பாசிகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? சயனோ பாக்டீரியங்கள் அல்லது சயனோ பைசி 
  120. நீலபசும்பாசிகள் கால்சியம் கார்பனேட்டுடன் இணைந்து தோன்றும் கூட்டமைப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது? ஸ்ட்ரொமாட்டோலைட்கள் 
  121.  கடலில் வாழும் நீலபசும்பாசிகள் எவை? ட்ரைக்கோ டெஸ்மியம், டெர்மாகார்ப்பா, ட்ரைக்கோ டெஸ்மியம் எரித்ரேயம் 
  122. கடலின் சிவப்பு நிறத்திற்கு (செங்கடல்) காரணமான நீலப்பசும்பாசி எது? ட்ரைக்கோ டெஸ்மியம் எரித்ரேயம் 
  123. சைகஸின் பவள வேரில் வாழும்  நீலப்பசும்பாசிகள் எவை? நாஷ்டாக் மற்றும் அனபீனா 
  124. நீர்வாழ் பெரணி என அழைக்கப்படுவது எது? அசோலா 
  125. லைக்கன்களின் உடலத்தில் பாசி உறுப்பினர்களாக வாழும் நீலப்பசும்பாசிகள் எவை? கிளியோகாப்சா, நாஷ்டாக், சைட்டோனீமா 
  126. நைட்ரஜனை நிலைப்படுத்தும் நீலப்பசும்பாசிகள் எவை? நாஷ்டாக் மற்றும் அனபீனா 
  127. PHB (பாலி  ஹைடிராக்சி ப்யூட்டிரேட்) என்ற நுண்ணுயிரிசார் நெகிழி எந்த பாக்டீரியத்தின் உதவியால் பெறப்படுகிறது? ராஸ்டோனியா 
  128. ஹைட்ரோகார்பன்களை சிதையுறச்செய்யும் பாக்டீரியா எது? சூடோ மொனாஸ் பூடிடா (சூப்பர் பக்-superbug)
  129. புரூட்டின் என்பது என்ன?  ஒரு செல் புரதம்
  130. புரூட்டின் எந்த பாக்டீரியா மூலம் பெறப்படுகிறது? மெத்திலோ டிராபிஸ் மற்றும் மெத்திலோபில்லஸ் 
  131.  தாவரங்களில் நுனிக்கழலை நோய் எந்த பாக்டீரியாவால் ஏற்படுகிறது? அக்ரோ பாக்டீரியம் டுமி பேசியன்ஸ் 
  132. டாக் பாலிமெரேஸ் என்ற நொதி எந்த பாக்டீரியம் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது? தேர்மஸ் அக்குவாட்டிகஸ் 
  133.  டாக் பாலிமெரேஸ் என்ற நொதி எதில் பயன்படுகிறது? பலப்படியாக்க தொடர் வினை (PCR - Polymerase Chain Reaction)
  134. உயிரிவளி (biogas) உற்பத்தி செய்யப்பயன்படும் பாக்டீரியா எது? மெத்தனோபாக்டீரியம் 
  135. கடுமையான சூழ்நிலையில் அதிக உப்புத் தன்மையில் வாழும் பாக்டீரியா எது? ஹாலோ பாக்டீரியம் 
  136. β கரோட்டீன் உற்பத்தியில் பயன்படும் பாக்டீரியா எது? ஹாலோ பாக்டீரியம் 
  137. ஒரு செல் உடல் அமைப்பில் காணப்படும் சயனோ பாக்டீரியம் எது? குருக்காக்கஸ் 
  138. கூட்டமைப்பாக காணப்படும் சயனோ பாக்டீரியங்கள் எவை? கிளியோ காப்சா 
  139. இழை வடிவில் காணப்படும் சயனோ பாக்டீரியம் எது? நாஷ்டாக் 
  140. வழுக்கு நகர்வு இயக்கம் கொண்ட சயனோ பாக்டீரியம் எது? ஆஸில்லடோரியா 
  141. சயனோ பாக்டீரியதில் சேமிப்பு உணவாகக் காணப்படுவது எது? சயனோ பைசிய தரசம் 
  142. சயனோ பாக்டீரிய உடலத்தின் காணப்படும் நுனியில் நைட்ரஜனை நிலைப்படுத்த உதவும் பெரிய நிறமற்ற செல்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? ஹெட்டிரோசிஸ்ட்டுகள் 
  143. மிக்ஸோபைசி என அழைக்கப்படும் உயிரினங்கள் எந்தப் பிரிவைச் சார்ந்தவை? சயனோ பாக்டீரியம் 
  144. நீர் மலர்ச்சியினை ஏற்படுத்தும் சயனோபாக்டீரியங்கள்  எவை? மைக்ரோசிஸ்டிஸ் ஏறுஜினோசா மற்றும் அனபீனா பிளாஸ் அக்குவே 
  145. ஒற்றை செல் புரதமாக பயன்படுத்தப்படும் சயனோபாக்டீரியம் எது? ஸ்பைருலினா 
  146. துருவக் கரடியின் உரோமங்கலின் மீது வளரும் நீலப்பசும்பாசி எது? அபனோகேப்சா மாண்டானா 
  147. மொல்லிகியுட்கள் என அழைக்கப்படுவது எது? மைக்கோபிளாஸ்மா 
  148.  மைக்கோபிளாஸ்மா என்ற  கிராம் எதிர் பாக்டீரியாவின் அளவு யாது?  (0.1 – 0.5 μm)
  149. மைக்கோபிளாஸ்மா என்ற கிராம் எதிர் நுண்ணுயிரியை (பாக்டீரியாவை) முதன் முதலில் தனிமைப்படுத்தியவர் யார்? நக்கார்டு 
  150. வளர் ஊடகத்தில் மைக்கோபிளாஸ்மா எவ்வாறு காணப்படுகிறது? பொறித்த முட்டை 
  151. மைக்கோபிளாஸ்மா நுண்ணுயிரியால் கத்திரி தாவரத்தில் ஏற்படும் நோய் எது? சிறிய இலை நோய் 
  152. மைக்கோபிளாஸ்மா நுண்ணுயிரியால் லேகூம் வகைத்  தாவரத்தில் ஏற்படும் நோய் எது? துடைப்பம் நோய் 
  153. மைக்கோபிளாஸ்மா நுண்ணுயிரியால்  இலவங்கத் தாவரத்தில் ஏற்படும் நோய் எது? இலைக்கொத்து நோய் 
  154. மைக்கோபிளாஸ்மா நுண்ணுயிரியால் சந்தனம்  தாவரத்தில் ஏற்படும் நோய் எது? கூர் நுனி நோய் 
  155. புளுரோ நிமோனியா நோயை ஏற்படுத்துவது எது? மைக்கோபிளாஸ்மா மைக்காய்டஸ் 
  156. கதிர் பூஞ்சைகள் என அழைக்கப்படும் கிராம் நேர் பாக்டீரியா எது? ஆக்டினோமைசீட்ஸ் அல்லது ஆக்டினோபாக்டீரியங்கள் 
  157. அல்னஸ் மற்றும் கேசுரைனா தாவரங்களில் நைட்ரஜனை நிலைப்படுத்தும் ஆக்டினோபாக்டீரியம் எது? பிராங்கியா 
  158. கால்நடைகளில் கழலை தாடை நோயை (Lumpy Jaw) ஏற்படுத்தும் நுண்ணுயிரி எது? ஆக்டினோமைசீட்ஸ் போவிஸ் 
  159. மழைக்குப் பின் மண் வாசனை ஏற்படக்காரணமான ஆக்டினோபாக்டீரியம் எது? ஸ்ட்ரெப்டோமைசிஸ் 
  160. டெட்ராசைக்ளின் என்ற உயிர் எதிர்ப் பொருள் தயாரிக்கப்பயன்படும் ஆக்டினோபாக்டீரியம் எது? ஸ்ட்ரெப்டோமைசிஸ் 
  161. ஸ்ட்ரெப்டோமைசின் என்ற உயிர் எதிர்ப் பொருள் தயாரிக்கப்பயன்படும் ஆக்டினோபாக்டீரியம் எது? ஸ்ட்ரெப்டோமைசிஸ் கிரிஸியஸ் 
  162. குளோரம் பேனிகால் என்ற உயிர் எதிர்ப் பொருள் தயாரிக்கப்பயன்படும் ஆக்டினோபாக்டீரியம் எது? ஸ்ட்ரெப்டோமைசிஸ் வெனிசுலே (Streptomyces venezuelae)











Thursday, 1 April 2021

TNPSC SCIENCE QUESTIONS - வைரஸ்

  1. உயிரியியலின் புதிர் என அழைக்கப்படுவது எது ? வைரஸ் 
  2. புகையிலை சாற்றில் இருந்து வைரஸை படிகப்படுத்தியவர் யார் ? W.M. ஸ்டான்லி  
  3. பெரியம்மைக்கு தடுப்பூசி கண்டுபிடித்தவர் யார்? எட்வர்ட் ஜென்னர் 
  4. புகையிலையில் தேமல் நோய் வைரஸ் பற்றி விளக்கியவர் யார்? அடால்ப் மேயர் 
  5. வைரஸ்கள் பாக்டீரியாவை விட சிறியது என நிரூபித்தவர் யார்? டிமிட்ரி ஐவான்ஸ்க்கி 
  6. புகையிலையில் உள்ள தொற்றுதல் காரணியை "தொற்றுத் தன்மை வாய்ந்த உயிருள்ள திரவம் என அழைத்தவர் யார்? M.W. பெய்ஜி ரிங்க் 
  7. பாக்டீரியங்களில் வைரஸ் தொற்றைக் கண்டுபிடித்தவர் யார்? F.W. ட்வார்ட் 
  8. பாக்டீரியபாஜ் என்ற சொல்லை பயன்படுத்தியவர் யார்? டி ஹெரில்லி 
  9. HIV யை கண்டுபிடித்தவர்கள் யார்? லுக் மான்டக்னர் மற்றும் இராபர்ட் கேலோ 
  10. பொதுவாக வைரஸ்கள் எந்த அளவு விட்டம் உடையது? 20nm - 300nm
  11. பாக்டீரியபாஜ் வைரஸ்கள் எந்த அளவு விட்டம் உடையது? 10nm - 100nm
  12. TMV வைரஸ்கள் எந்த அளவு உடையது? 300 X 20nm
  13. வைரஸ் என்ற சொல்லின் பொருள் என்ன? நச்சு 
  14. வைரஸ் பெற்றுள்ள அமிலங்கள் எவை? DNA அல்லது RNA 
  15. கன சதுர வைரஸ்களுக்கு உதாரணம் ? அடினோ வைரஸ் மற்றும் ஹெர்ப்பஸ் வைரஸ் 
  16. சுருள் வடிவ வைரஸ்களுக்கு உதாரணம் தருக ? இன்புளுயென்சா வைரஸ் மற்றும் TMV
  17. சிக்கலான அல்லது இயல்பற்ற வடிவம் கொண்ட வைரஸ்களுக்கு உதாரணம் தருக ? பாக்டீரியபேஜ் மற்றும் வாக்சினியா வைரஸ் 
  18. dsDNA கொண்ட வைரஸ்களுக்கு உதாரணம் தருக? அடினோ  வைரஸ்கள்
  19. வெளிப்பாடடையும்  ssDNA வைரஸ்களுக்கு உதாரணம் தருக? பார்வோ வைரஸ்கள் 
  20. dsRNA கொண்ட வைரஸ்களுக்கு உதாரணம் தருக? ரியோ வைரஸ்கள் 
  21. வெளிப்பாடடையும் ssRNA  வைரஸ்களுக்கு உதாரணம் தருக? டோகோ வைரஸ்கள் 
  22. வெளிப்பாடடையாத ssRNA வைரஸ்களுக்கு உதாரணம் தருக? ராப்டோ வைரஸ்கள் 
  23. வெளிப்பாடடையும் ssRNA-RT: கொண்ட வைரஸ்கள் வாழ்க்கைச் சுழற்சியில் DNA உடன் இனப்பெருக்கம் அடையும் வைரஸ்களுக்கு உதாரணம் தருக?  ரெட்ரோ வைரஸ்கள் 
  24. dsDNA-RT: கொண்ட வைரஸ்கள் வாழ்க்கைச் சுழற்சியில்  RNA உடன் இனப்பெருக்கம் அடையும் வைரஸ்களுக்கு உதாரணம் தருக? ஹெபாட்னா வைரஸ்கள் 
  25.  உட்கரு அமிலம் சிறு சிறு துண்டுகளாக எந்த வைரஸ்களில் காணப்படுகிறது? காயக்கழலை வைரஸ் மற்றும் இன்புளுயென்சா வைரஸ் 
  26. DNA வை கொண்ட வைரஸ்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? டீ ஆக்சி வைரஸ்கள் 
  27.  RNA வை கொண்ட வைரஸ்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? ரிபோ  வைரஸ்கள் 
  28. விலங்கு மற்றும் பாக்டீரிய வைரஸ்கள் பொதுவாக எந்த உட்கரு அமிலங்களை கொண்டுள்ளது?  DNA வைரஸ்கள் 
  29.  தாவர வைரஸ்கள் பொதுவாக எந்த உட்கரு அமிலங்களை கொண்டுள்ளது? RNA வைரஸ்கள்
  30. HIV வைரஸ் (ரெட்ரா வைரஸ்) எந்த உட்கரு அமிலத்தை  கொண்டுள்ளது? RNA
  31. புகையிலை தேமல் வைரஸ் எந்த ஆண்டில் டிமிட்ரி ஐவனாஸ்கி என்பவரால் கண்டறியப்பட்டது? 1892
  32. புகையிலை தேமல் வைரஸின் மூலக்கூறு எடை என்ன?  39x106   டால்டன்கள் 
  33.  புகையிலை தேமல் வைரஸின் அளவு என்ன? 300 x 20nm

  34. புகையிலை தேமல் வைரஸின் ( TMV),  RNA எத்தனை நியூக்ளியோடைட்களைக் கொண்டுள்ளது ? 6,500
  35. ஒரு முழு TMV துகள் உருவாவதற்கான மரபியல் தகவல் எங்கு உள்ளது? RNA வில் 
  36. பாக்டீரியங்களை தாக்கி அழிக்கும் வைரஸ்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? பாக்டீரியபாஜ்கள் 
  37. பாக்டீரியபாஜ்கள் என்பதன் பொருள் என்ன?  பாக்டீரிய உண்ணிகள் 
  38. T4 பாஜ்கள் (பாக்டீரியபாஜ்கள்) எந்த வடிவம் கொண்டவை? தலைப்பிரட்டை வடிவம் 
  39. T4 பாஜ்களின் (பாக்டீரியபாஜ்கள்) தலைப்பகுதி எந்த வடிவம் கொண்டது? அறுங்கோண வடிவம் 
  40. T4 பாஜ்களின் (பாக்டீரியபாஜ்கள்) தலைப்பகுதி எத்தனை புரதத்துணை அலகுகளால் ஆனது? 2000
  41. நீலப்பசும் பாசிகளைத் தாக்கும் வைரஸ்களை முதன் முதலில் கண்டுபிடித்தவர்கள் யார்? சாபர்மேன் மற்றும் மோரிஸ் (1963)
  42. நீலப்பசும் பாசிகளைத் தாக்கும் வைரஸ்களின் பெயர் என்ன? சயனோபாஜிகள் 
  43. சயனோபாஜிகளுக்கு உதாரணம் தருக? LPPI-லிங்பயா, ப்ளக் டோனிமா , பார் மிடியம் 
  44. வளர்ப்புக் காளான்களில் நுனியடி இறப்பு நோய் உண்டாக்கக்கூடிய வைரஸ்களை முதன் முதலில் கண்டுபிடித்தவர் யார்? ஹோலிங்ஸ் (1962)
  45.  பூஞ்சைகளைத் தாக்கக்கூடிய வைரஸ்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? மைக்கோ வைரஸ்கள் அல்லது மைக்கோபாஜ்கள் 
  46. T4 பாஜ்கள் (பாக்டீரியபாஜ்கள்) வால் நார்கள் எவ்வகை சாக்கரைடுகளை கொண்டுள்ளன? லிப்போ பாலி சாக்கரைடுகள் 
  47. T4 பாஜ்கள் (பாக்டீரியபாஜ்கள்) பாக்டீரியாவுடன் (ஈ கோலை )ஏற்படுத்தும் ஒத்தேற்பு நிகழ்வுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ? பரப்பிரங்கல் (Landing)
  48. T4 பாஜ்கள் (பாக்டீரியபாஜ்கள்) வால் நார்கள்,  பாக்டீரியா (ஈ கோலை) செல்களின் மீது பொருத்தப்படுத்தல் எவ்வாறு அழைக்கப்படுகிறது? குத்துதல் (Pinning)
  49. பாக்டீரியத்தின் செல் சுவரை சிதைக்க வைரஸ் பயன்படுத்தும் நொதியின் பெயர் என்ன? லைசோசைம் 
  50.  பாக்டீரியாவினுள் வைரஸின் DNA துகள் தன்னிச்சையாக செலுத்தப்படுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது? ஊடுதொற்றல் 
  51. ஓம்புயிரி செல்லின் (ஈ கோலை) குரோமோசோமுடன் ஒருங்கிணைக்கப்பட்ட பாக்டீரியபாஜ் DNA வை எவ்வாறு அழைக்கிறோம்? பாஜ் முன்னோடிகள் 
  52. ஓம்புயிரி செல்லுக்கு வெளியே பெருக்கமடைய முடியாத ஒரு முழுமையான வைரஸ் எவ்வாறு அழைக்கப்படுகிறது? விரியான் (Virion)
  53. வைரஸில் உள்ள புரத உரை அற்ற தீங்களிக்கும் ஆர்.என் .ஏ  எவ்வாறு அழைக்கப்படுகிறது ? வீராய்டு 
  54. விராய்டுகளை முதன் முதலில் கண்டுபிடித்தவர் யார்? T.O. டெய்னர்  (1971)
  55. விராய்டுகள் (Viroids) சிட்ரஸ் பழங்களில் ஏற்படுத்தும் நோய் எது? சிட்ரஸ் எக்ஸோ கார்ட்டிஸ் 
  56. விராய்டுகள் (Viroids)உருளைக்கிழங்கில்  ஏற்படுத்தும் நோய் எது? கதிர் வடிவ கிழங்கு நோய் 
  57.  விருசாய்டுகள் (Virusoids) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது? J.W. ராண்டல்ஸ் (1981)
  58. விருசாய்டுகள் எந்த வடிவ RNA க்களை பெற்றுள்ளது ? சிறிய வட்ட வடிவ RNA
  59. பிரியான்களை (Prions) கண்டுபிடித்தவர் யார்?  B. புருச்னர் 
  60. பிரியான்கள் விலங்குகளில் (மனிதன் உட்பட) ஏற்படுத்தும் நோய் எது? க்ரூயிட்ஸ் பெல்ட் - ஜேக்கப் நோய் (CJD)
  61. க்ரூயிட்ஸ் பெல்ட் - ஜேக்கப் நோய் (CJD) விலங்குகளின் எந்த பகுதியை தாக்குகிறது? மைய நரம்பு மண்டலம் 
  62. பிரியான்கள் மாடுகளில் ஏற்படுத்தும் நோய் எது? பித்த நோய் (Mad cow disease) அல்லது போவைன் ஸ்பாஞ்சி பார்ம் என்செபலோபதி (BSE)
  63. பிரியான்கள் ஆடுகளில் ஏற்படுத்தும் நோய் எது? ஸ்கிராபி (Scrapie)
  64. வைரஸ்கள் புகையிலை, காலிப்ளவர், கரும்பு, வெள்ளரி, தக்காளி போன்ற தாவரங்களில் ஏற்படுத்தும் நோயின் பெயர் என்ன? தேமல் நோய் 
  65. வைரஸ்கள் உருளைக்கிழங்கு மற்றும் பப்பாளியில்  ஏற்படுத்தும் நோயின் பெயர் என்ன? இலைச்சுருள் நோய் 
  66. வைரஸ்கள் வாழையில் ஏற்படுத்தும் நோயின் பெயர் என்ன? உச்சிக்கொத்து நோய் 
  67. வைரஸ்கள் வெண்டையில் ஏற்படுத்தும் நோயின் பெயர் என்ன? நரம்பு வெளிர்தல் நோய் 
  68. வைரஸ்கள் நெல்லில் ஏற்படுத்தும் நோயின் பெயர் என்ன? துங்ரோ நோய்
  69. ஹெப்பட்டைட்டிஸ் B எந்த நுண்ணுயிரியால் ஏற்படுகிறது ? வைரஸ் 
  70. புற்றுநோய் எந்த நுண்ணுயிரியல் ஏற்படுகிறது? வைரஸ் 
  71. சார்ஸ் என்ற அதி தீவிர சுவாசக் குறைபாடு நோய் எந்த நுண்ணுயிரியல் ஏற்படுகிறது? வைரஸ் 
  72. எய்ட்ஸ் எந்த நுண்ணுயிரியல் ஏற்படுகிறது? வைரஸ் 
  73. வெறிநாய்க் கடி எந்த நுண்ணுயிரியல் ஏற்படுகிறது? வைரஸ் 
  74. பொன்னுக்குவீங்கி எந்த நுண்ணுயிரியல் ஏற்படுகிறது? வைரஸ் 
  75. இளம்பிள்ளைவாதம் எந்த நுண்ணுயிரியல் ஏற்படுகிறது? வைரஸ் 
  76. சிக்கின்குனியா எந்த நுண்ணுயிரியல் ஏற்படுகிறது? வைரஸ் 
  77. பெரியம்மை என்ற நோய் எந்த நுண்ணுயிரியல் ஏற்படுகிறது? வைரஸ் 
  78. சின்னம்மை என்ற நோய் எந்த நுண்ணுயிரியல் ஏற்படுகிறது ? வைரஸ் 
  79. தட்டம்மை என்ற நோய் எந்த நுண்ணுயிரியல் ஏற்படுகிறது? வைரஸ் 
  80. கால்நடைகளில் கோமாரி நோய்க்கு காரணமான நுண்ணுயிரி எது ? வைரஸ் 
  81. குதிரைகளில் மூளை தண்டுவட அழற்சி நோய்க்கு காரணமான நுண்ணுயிரி எது ? வைரஸ் 
  82. எந்த குழுமத்தைச் சார்ந்த வைரஸ்கள் பூச்சிக்கொல்லிகளாக பயன்படுகிறது ? பேக்குலோவிரிடே
  83.  பூச்சிக்கொல்லிகளாக பயன்படும் வைரஸ்களுக்கு உதாரணம் தருக? பாலிஹெட்ரோசிஸ் கிரானுலோ வைரஸ் மற்றும் எண்டமோ பாக்ஸ் வைரஸ்கள் 
  84. தாவரவியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்? தியோ பிராஸ்டஸ் 
  85. தாவரங்களை புற அமைப்புப் பண்புகள் (புதர்ச்செடி, சிறுச்செடி) அடிப்படையில் வகைப்படுத்தியவர் யார்? தியோ பிராஸ்டஸ் 
  86. விலங்கினங்களை இரத்த நிறத்தின் (Enaima, Anaima) அடிப்படையில் வகைப்படுத்தியவர் யார்? அரிஸ்டாட்டில் 
  87. உயிரின உலகத்தை தாவரங்கள், விலங்குகள் என (புறப்பண்புகளின் அடிப்படையில்) இரு குழுக்களாகப் பிரித்தவர் யார்? கார்ல் லின்னேயஸ் 
  88.  உயிரின உலகத்தை 3 பிரிவுகளாகப் (புரோட்டிஸ்டா, பிளாண்டே, அனிமேலியா) பிரித்தவர் யார்? எர்னெஸ்ட் ஹெக்கேல் 
  89.  உயிரின உலகத்தை 4 பிரிவுகளாகப் (மொனீரா, புரோட்டிஸ்டா, பிளாண்டே, அனிமேலியா) பிரித்தவர் யார்? கோப்லேண்ட்
  90.  உயிரின உலகத்தை 35பிரிவுகளாகப் (மொனீரா, புரோட்டிஸ்டா, பூஞ்சைகள்,  பிளாண்டே, அனிமேலியா) பிரித்தவர் யார்? R.H. விட்டாக்கெர் 
  91. R.H. விட்டாக்கெர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்? அமெரிக்கா 
  92. எந்தப்பிரிவைச் சார்ந்த உயிரிகள் தொல்லுட்கரு உயிரிகள் (Prokaryotic) என அழைக்கப்படுகிறது? மொனீரா 
  93.  மொனிரா பிரிவு உயிரினங்களின் செல் சுவர் எதனால் ஆனது? பெப்டிடோ கிளைக்கான், மியூகோபெப்டைட் 
  94. அடினோ வைரஸ்கள் எந்த அளவுக்கு கொண்டது ? 70-90 நானோ மீட்டர் விட்டம் 
  95. இன்புளுயன்சா வைரஸ் எந்த அளவுக்  கொண்டது? 80-200 நானோ மீட்டர்
  96. புகையிலை மொசைக் வைரஸ் எந்த அளவுக் கொண்டது? 18 x 250 நானோ மீட்டர் அல்லது 20 x 300 நானோ மீட்டர் 
  97. வெறி நாயக் கடி எந்த நுண்ணுயிரிகளால் ஏற்படுகிறது? வைரஸ் 
  98. கோமாரி நோய் எந்த உயிரினங்களுக்கு ஏற்படுகிறது? கால்நடைகள் 
  99. புகையிலை மொசைக் வைரஸ் எந்த வடிவம் கொண்டது? கோல் வடிவம் 
  100.  புகையிலை மொசைக் வைரஸ்களின் புரத உறை எந்த புரத துணை அலகுகளால் ஆனது? கேப்சோமியர்கள் 


















"பாலர்கள் மற்றும் ராஷ்டிரகூடர்கள்"

TNPSC TET TRB HISTORY NOTES 7

THANKS TO Mr. ELA.BABU VELAN, TENKASI

CLICK TO DOWNLOAD PDF FILE