Search This Blog

Showing posts with label வானவில் மன்றம். Show all posts
Showing posts with label வானவில் மன்றம். Show all posts

Saturday, 26 November 2022

"வானவில் மன்றம்" 6-8 வகுப்பு மாணவர்களுக்கு தேவையான அறிவியல் மற்றும் கணக்கு பாடங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியீடு


அனைத்து பள்ளிகளிலும் 6 முதல் 8 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை "வானவில் மன்றம்" தொடங்க உத்தரவு பிறப்பித்துள்ளது 



தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவை தொடர்ந்து இந்த மன்றம் அனைத்து பள்ளிகளிலும் 28.11.2022 அன்று 2.00 மணி அளவில் தொடங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது 



அறிவியல் பாடங்கள் எப்போதுமே செய்முறையுடன் கற்றுக்கொள்வது மாணவர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய செயல் ஆகும் 



மாணவர்களே அறிவியல் கருத்துகளை செய்து பார்த்து கற்றுக்கொள்வது அவர்களின் திறனை மேலும் மெருகேற்றும் 



அறிவியல் மற்றும் கணக்கு பாடங்களுக்கான செய்முறை வீடியோக்கள் பள்ளிக்கல்வித்துறை மூலம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது 



அறிவியல் பாடத்தில் இயற்பியல், வேதியியல், உயிரியல் என தனித்தனியாக வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளது 



கணக்கு பாடத்திலும் தேவைப்படும் வீடியோக்கள் முதற்கட்டமாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது 



அனைத்து ஆசிரியர்களும் பாடங்களுக்கு ஏற்ப  தேவைப்படும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு காண்பிக்கலாம் 



மிக ரசனையாக தெளிவாக ஒவ்வொரு சோதனையும் விளக்கப்பட்டுள்ளது 



மாணவர்களைக்கொண்டும் பல சோதனைகள் செய்து விளக்கப்பட்டுள்ளது 




இயற்பியல் வீடியோக்கள்

👇👇

CLICK HERE TO VIEW VIDEO




வேதியியல் வீடியோக்கள்

👇👇

CLICK HERE TO VIEW




கணக்கு வீடியோக்கள்

👇👇

CLICK HERE TO VIEW VIDEO




உயிரியல்

👇👇

CLICK HERE TO VIEW VIDEO






Friday, 25 November 2022

அரசு பள்ளிகளில் "வானவில் மன்றம்" தொடங்குதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குனரின் செயல்முறைகள்


👉 அரசு பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்தும் முயற்சி 


👉 அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தொடங்கப்பட வேண்டும் 


👉 28.11.2022 பிற்பகல் 2  மணிக்கு "வானவில் மன்றம்" துவங்கப்பட வேண்டும் 


👉 வானவில் மன்றத்தின் தொடக்கமாக ஒருசில எளிய பரிசோதனை செய்து காட்டலாம் 


👉 துவக்கத்தின் அடையாளமாக வண்ண பலூன்கள் பறக்க விடலாம் 


👉 முதற்கட்டமாக ஒரு பள்ளிக்கு ரூபாய் 1200 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது 


👉 ஆசிரியர்கள் தானே சோதனை செய்து காட்டி மாணவர்கள் சோதனை செய்ய ஆர்வமூட்ட வேண்டும் 


இது பற்றிய விவரங்களுக்கு 

கீழே உள்ள link மூலம் பதிவிறக்கம் 

செய்யவும் 

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF




Follow this link to join 

ramanibabu.blogspot.com WhatsApp group

👇👇

Click here to join