Search This Blog

Tuesday 18 April 2023

அறிவியல் தேர்வு நாள் மாற்றம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவிப்பு


6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வு 12.04.2023 முதல் 24.04.2023 வரை தேர்வு நடத்த ஏற்கனவே கால அட்டவணை அனுப்பப்பட்டுள்ளது. தற்போது நிர்வாக காரணமாக 21.04.2023 அன்று வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த அறிவியல் தேர்வு 25.04.2023 அன்று நடைபெறும் என திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார் 





Monday 17 April 2023

NMMS தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் வட்டாரக்கல்வி அலுவலர்கள் சார்பில் பாராட்டுவிழா

 

8 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவர்களுக்கு NMMS (தேசிய திறனாய்வு தேர்வு) ஒவ்வொரு வருடமும் நடத்தப்படுகிறது 


இந்த தேர்வில் வெற்றி பெரும் மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் வீதம் 4 ஆண்டுகளுக்கு 48000 ரூபாய் உதவித்தொகை கிடைக்கும் 


7 ஆம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்பு பாடப்பகுதியில் இருந்து வினாக்கள் கேட்கப்படும் மேலும் மாணவர்களின் புத்திக்கூர்மையை சோதிக்கும் மனத்திறன் தேர்வும் நடத்தப்படும் 


வினாக்கள் பாடப்பகுதியில் இருந்து 90 மதிப்பெண்களுக்கும், மனத்திறன் பகுதியில் இருந்து 90 மதிப்பெண்களுக்கும் கேட்கப்படும் 


தமிழகம் முழுவதும் மாணவர்களுக்கு இந்த தேர்வுக்கான பயிற்சி ஆசிரியர்களால் வழங்கப்பட்டு மாணவர்கள் தேர்வுக்கு தயார் செய்யப்பட்டனர் 


தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் ஒன்றியத்தில் இந்த தேர்வுக்கான பயிற்சி வட்டாரக்கல்வி அலுவலர் திரு.இரா.மாரியப்பன், மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர் திரு.வே.ராமச்சந்திரன் அவர்களால் ஆசிரியர்களை கொண்டு குழு அமைக்கப்பட்டு ஒவ்வொரு வாரமும் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது 


மாநில அளவில் NMMS மோகன் அவர்களால் தயாரிக்கப்பட்ட பாடவாரியான வினாத்தாள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு தொடர்ந்து தேர்வுகள் வாசுதேவநல்லூர் ஒன்றியத்தில் நடத்தப்பட்டன. இந்த பயிற்சியில் தொடர்ந்து 300க்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.


வாசுதேவநல்லூர் ஒன்றிய வட்டாரக்கல்வி அலுவலர்கள் மேற்பார்வையில் ஆசிரியர்கள் குழு சிறப்பான பயிற்சி அளித்தனர் 


தற்போது இந்த தேர்வில் வாசுதேவநல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் அரசு உதவி பெரும் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 33 பேர் தேர்ச்சி பெற்று மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை பெற தகுதி பெற்றுள்ளனர் 


வாசுதேவநல்லூர்  ஒன்றியத்தில் உள்ள நடுநிலைப் பள்ளிகளில் பள்ளி வாரியாக NMMS தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை விவரம்.


PUJMS Nagaram.   - 3

Paramananda MS.   -3

TDTA MS Plg.        -3

RCMS Chainthamani -8

Packiathai MS.        -4

RCMS Draisamypm. -3

Raja Singh MS.         -2

Senaitha.. MS Vasu.  -4

SRP MS. Sivagiri      -1

Ramaswamy Ni..Vasu. -2

TOTAL.    = 33    


இந்த வெற்றிக்காக அயராது படித்த மாணவர்கள், பயிற்சி அளித்த ஆசிரியர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆகியோர்களை பாராட்டும் விதமாக இன்று வட்டாரக்கல்வி அலுவலர்கள் சார்பாக விழா நடந்தது 


விழாவை  வாசுதேவநல்லூர் ஒன்றிய வட்டாரக்கல்வி அலுவலர் 

திரு. வே.ராமச்சந்திரன் 

அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார் 



வாசுதேவநல்லூர் ஒன்றிய வட்டாரக்கல்வி அலுவலர் 

திரு. இரா.மாரியப்பன் 

அவர்கள் வரவேற்புரை ஆற்றினார் 



ஆசிரியர்கள் 

திரு.இப்ராஹிம் மூஸா 

திரு.மாரிமுத்து 

திரு.ராமர் 

திரு.மாடசாமி 

திரு. மருது பாண்டியன் 

ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தி பேசினார்கள் 



புளியங்குடி ரோட்டரி சங்கம் நிர்வாகிகள், புளியங்குடி லயன்ஸ் கிளப் திரு முரளிதரன், தென்காசி TAF ஆகாஷ் IAS அகடமி சார்பில் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது 


விழாவில் பயிற்சி வழங்கிய ஆசிரியர்கள், வழிகாட்டிய தலைமை ஆசிரியர்கள் ஆகியோர்களுக்கு பாராட்டும் நினைவு பரிசும் வழங்கப்பட்டது 


மாதிரி தேர்வுகள் நடத்தி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் உறுதுணையாக நின்ற புளியங்குடி நகராட்சி நடுநிலைப்பள்ளி கணித பட்டதாரி ஆசிரியர் திரு. செல்வ சிதம்பரகுமார் அவர்களுக்கு பாராட்டுகளும் நன்றியும் தெரிவிக்கப்பட்டது 


மாணவர்களுக்கான STUDY MATERIALS வழங்கிய புளியங்குடி ரோட்டரி கிளப், சிந்தாமணி ஸ்ரீ திருப்பதி வெங்கடாசலபதி சிட்பண்ட்ஸ், வாசுதேவநல்லூர் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆகியோர்களுக்கு தொடக்கக்கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது 


ஆசிரியர் திரு.மாரியப்பன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார் 

விழா ஏற்பாடுகளை ஆசிரியர்கள் 

திரு. நவீன் 

திரு.ரவி 

திரு.முனீஸ்வரன் 

ஆகியோர் செய்திருந்தனர் 




















ஏப்ரல் 18 மற்றும் 19 உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு



18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது 


சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் சித்திரைதேர்த்திருவிழாவை முன்னிட்டு 18.04.2023 அன்று திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப் குமார் இ.ஆ.ப  உத்தரவிட்டுள்ளார் 

இதற்க்கு ஈடு செய்யும் பொருட்டு 29.04.2023 அன்று பணிநாளாக செயல்படும் 


ஸ்ரீ ரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவில் சித்திரை தேர்த்திருவிழா 19.04.2023 அன்று நடைபெறுவதையொட்டி திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப் குமார் இ.ஆ.ப  உத்தரவிட்டுள்ளார் 


இதற்குப்பதிலாக 13.05.2023 அன்று வேலை நாளாகும் 


சமயபுரம் 

அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் 

சித்திரைதேர்த்திருவிழா விடுமுறை ஆணை 

👇👇

click here to download pdf



ஸ்ரீ ரங்கம் 

அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவில் 

சித்திரை தேர்த்திருவிழா விடுமுறை ஆணை 

👇👇

click here to download pdf

Friday 7 April 2023

1-9 வகுப்புகளுக்கான தேர்வு தேதி அறிவிப்பு தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனரின் இணை செயல்முறைகள்

 


2022-2023 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான தேர்வு தேதிகள் 


எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவத்தேர்வுகள் 1-3 வகுப்புகளுக்கு 

17.04.2023 முதல் 21.04.2023 வரை தேர்வு நடத்தி முடிக்கப்படவேண்டும் 


4 மற்றும் 5 ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் அந்தந்த மாவட்டங்கள் தங்கள் உள்ளூர் நிலைக்கு ஏற்ப 10.04.2023 முதல் 28.04.2023 வரை நடத்தி முடிக்கப்பட வேண்டும் 


6 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் அந்தந்த மாவட்டங்கள் தங்கள் உள்ளூர் நிலைக்கு ஏற்ப 10.04.2023 முதல் 28.04.2023 வரை நடத்தி முடிக்கப்பட வேண்டும் 


பள்ளி கடைசி வேலை நாள் 28.04.2023


மேலும் விவரங்களுக்கு 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

TNSED SCHOOLS NEW VERSION UPDATE Version 0.0.63 updated on 06.04.2023

 


TNSED

SCHOOLS APP

NEW VERSION

0.0.63

UPDATE LINK

👇

CLICK HERE TO UPDATE

Tuesday 28 March 2023

அரசுப் பள்ளிகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பிற வசதிகளை EMIS வலைதளத்தில் 30.04.2023க்குள் உள்ளீடு செய்ய உத்தரவு



மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களால் நம்ம School - நம்ம ஊரு பள்ளி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது 

பள்ளிக்கல்வித்துறையில் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டிற்காக பொதுமக்கள் முன்னாள் மாணவர்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் போன்றவற்றின் மூலம்  நிதி பெறப்பட்டு அதன் மூலம் தமிழகத்தில் உள்ள 37558 அரசுப் பள்ளிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இத்திட்டம் வழிவகை செய்கிறது 

மாண்புமிகு முதல்வர் அவர்களால் இத்திட்டம் தனி இணையதளம் தொடங்கி வைக்கப்பட்டது 

👇👇

https://nammaschool.tnschools.gov.in


பள்ளிகளின் தேவைகளை 30.04.2023க்குள் உள்ளீடு செய்து முடிக்க வேண்டும் 


பள்ளியின் உட்கட்டமைப்பு தேவைகள் 

1. பள்ளியின் தாழ்வான பகுதிகளை நிரப்புதல் 

2. நீர் தேங்குவதை தடுக்க வடிகால் அமைப்பு 

3. நீர் தேங்கும் பகுதிகளை நிரப்புதல் 

4. திறந்த கிணறு குழிகளை மூடுதல் 

5. செப்டிக் டேங் பழுது பார்த்தல் 

6. புதிய சுற்று சுவர் - கிரில் கேட் 

7. சுற்று சுவர் வெள்ளை அடித்தல் 

8. அதிகரிக்கப்படவேண்டிய சுற்றுச்சுவர் உயரம் 

9. சுற்று சுவர் கலவை பூச்சு 

10. சுற்றுச்சுவர் செங்கல் கட்டு வேலை 

11. பள்ளிக்கட்டிட கட்டமைப்பு பழுது பார்த்தல் 

12. கைப்பிடியுடன் சாய்வு தளங்கள் பழுது பார்த்தல் 

13. தரை பழுதுபார்த்தல் 

14. வகுப்பறை/கழிப்பறை/பிற அறைகளை பழுது பார்த்தல் 

15. பம்ப் பழுது பார்த்தல் 

16. ஆழ்துளை கிணறு தூர் வாருதல் 


இது போன்ற பணிகளை தலைமை ஆசிரியர்கள் வலைத்தளத்தில் உள்ளீடு செய்ய வேண்டும் 

மேற்கண்ட தேவைகளில் எவ்வித மாற்றமும் தலைமை ஆசிரியர்களால் மேற்கொள்ள இயலாது 



மேலும் விவரம் அறிய கீழே உள்ள லிங்க் மூலம் 

pdf பதிவிறக்கம் செய்யவும் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




Saturday 25 March 2023

EMIS வலைத்தளத்தில் இருந்து 2 லட்சம் மாணவர்களின் விவரங்கள் விற்பனையா? NEWS 18 தொலைகாட்சி செய்தி வெளியீடு


கடந்த பல ஆண்டுகளாக பள்ளிக்கல்வித்துறையால் EMIS என்ற வலைதளம் மாணவர்களுக்காக நிர்வகிக்கப்பட்டுவருகிறது 

தமிழகத்தில் உள்ள LKG முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் அனைத்து விவரங்களும் பள்ளி ஆசிரியர்களால் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது 

மாணவர்களின் பெயர், பெற்றோர்கள் பெயர், பெற்றோர்கள் தொழில், மாணவர்களின் விலாசம் போன்ற பல விவரங்கள் அதில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன 

பல கல்லூரிகள் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் விவரங்களை 3000 ரூபாய் முதல் 20000 ரூபாய் வரை விலை கொடுத்து வாங்க முயல்கின்றனர் 

EMIS வலைத்தளத்தை நிர்வகிக்கும் நபருடன் நியூஸ் 18 நிருபர் தொலைபேசியில் கல்லூரியில் இருந்து பேசுவதாகவும் தனக்கு 12 ஆம் வகுப்பு மாணவர்கள் விவரங்கள் வேண்டும் எனவும் கூறுகின்றார். அதற்க்கு எதிர்முனையில் பேசும் EMIS வலைத்தளம் பொறுப்பாளர் ஒருவர் பல மாவட்டங்களை சார்ந்த 2 லட்சம் மாணவர்கள் விவரம் இருப்பதாகவும் எனக்கு பணம் அனுப்புங்கள் நான் உங்களுக்கு EMAIL ல்  வைக்கிறேன் என கூறுகிறார் 

தற்போது NEWS 18 தொலைகாட்சி இந்த செய்தியை வீடியோவுடன் வெளியிட்டுள்ளது 

EMIS தளத்தில் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் விவரங்கள் ரகசியமானது. வெளி நபர்களிடம் வழங்குவதற்கானது அல்ல.

இதுபோல் விற்பனை எத்தனை ஆண்டுகள் நடந்தன என்பதை பள்ளிக்கல்வித்துறை கண்டுபிடிக்கவேண்டும் 

பல லட்சக்கணக்கான பெண்மாணவிகள், பெண் ஆசிரியர்கள் விவரங்கள்  தளத்தில் உள்ளது.

மாணவர்கள் விவரங்களைப்போலவே ஆசிரியர்களின் விவரங்களும் உள்ளது எனவே மாணவர்கள், ஆசிரியர்கள் பாதுகாப்பு கருதி பள்ளிக்கல்வித்துறை நியாமான விசாரணை செய்து இது சார்ந்த உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும் என மாணவர்கள், மற்றும் ஆசிரியர்கள் விரும்புகின்றனர் 


நியூஸ் 18 வெளியிட்டுள்ள வீடியோ 

👇👇



VI AND VII SCIENCE THIRD TERM MODEL EXAM QUESTION PAPER PDF (3 MODEL) அப்படியே பிரிண்ட் எடுத்து மாதிரி தேர்வு நடத்தலாம்


VI SCIENCE

III TERM

MODEL QUESTION PAPER

ENGLISH MEDIUM

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF




VII SCIENCE

III TERM

MODEL QUESTION PAPER

ENGLISH MEDIUM

MODEL 1

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF





VII SCIENCE

III TERM

MODEL QUESTION PAPER

ENGLISH MEDIUM

MODEL 2

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF