Search This Blog

Thursday 23 December 2021

மறக்க முடியாத மஞ்சப்பை


தமிழக முதலமைச்சரின் 

"மீண்டும் மஞ்சப்பை"

 முன்னெடுப்பு 

பாராட்டுக்குரியது. 


நிறைய மெமரீஸ் 

இருக்கு மஞ்சப்பையிக்கு


அன்றைய ஆரம்பப்பள்ளி 

ஸ்கூல் பேக் அதான்.



ஒரு சிலேட்டு, ஒரு புக்கு, 

ஒரு நோட்டு 

அந்தப்பையில். 

கிட்டத்தட்ட 

5 ஆம் வகுப்பு 

வரை Study material 

அவை மட்டுமே


பை வெளிறிப்போகும் வரை 

அதன் ஒரு பக்க காது 

அறுந்து போனாலும் 

"பின்" போட்டு 

மாட்டி எடுத்துச்செல்வோம்.


காது பெரிசா 

இருந்தால்  நம் 

கையை நுழைத்து  

தோள் வரை மாட்டிக்கொள்வோம்



சாலையில் நடந்து 

போகும் போது 

அந்த பையின் 

காதுக்குள் கையை 

நுழைத்து பையை

 சுற்றிக்கொண்டே 

செல்வதுண்டு 

அதனாலேயே 

பையின் காதுகள் 

அறுந்து போவதும்  உண்டு.



சில நேரங்களில் 

பிற மாணவர்களோடு

சண்டையிடும் போது 

ஆயுதமும் 

அந்த மஞ்சப்பைதான்


இன்று போல அன்று

கை வீசிவிட்டு 

யாருமே கடைக்கு 

போனதில்லை 

துணிப்பையை 

எப்போதுமே கையோடு 

எடுத்து செல்வார்கள்.



மிதிவண்டியின் 

பின் கேரியரில் 

எப்போதுமே அந்த 

மஞ்சப்பைக்கு 

ஒரு இடம் உண்டு.


ஒரு பையின் 

இரு காதுகளை 

இருவர் 

பிடித்துக்கொண்டு 

சாலையை மறித்து 

சென்ற காலமும் உண்டு


வெளியே 

சென்றுவிட்டு 

வீட்டினுள் வந்தவுடன் 

ஆணியில் 

பையை 

மாட்டி வைப்போம்.


அப்போது 

எல்லாம் 

குடும்பத்தலைவர்களின் 

"Lunch Bag" அதுதான்.


கல்யாணப்பத்திரிக்கை, 

காதுகுத்து பத்திரிக்கை 

நீராட்டுவிழா 

புதுமனை புகுவிழா 

என 

அனைத்து சுப 

காரியங்களின் 

முக்கிய அங்கமே 

அந்த மஞ்சள் பைதான் 


பணம் கொண்டுபோக 

எப்போதும் கூட 

சில இடங்களில் 

ராசியான பை 

அந்த மஞ்சள்ப்பைதான்.


நகைக்கடையில்

எவ்வளவு கிஃப்ட் 

தந்தாலும் 

மஞ்சள் பையில் 

நகை வைத்து தருவது 

ஒரு வழக்கம் 

இன்றும் பல கடைகளில் 

மஞ்சள்ப்பை தரும் வழக்கம் உண்டு.


சிறு வியாபாரிகளின் 

எளிய விளம்பர 

நடமாடும் 

ஊடகம் அது. 

தங்கள் தொழில் 

வியாபாரத்தின் 

விளம்பரம் அந்த 

பையில் அச்சிட்டு 

தருவார்கள்


அப்போது எல்லாருடைய  

வீட்டிலும் பத்து 

மஞ்சள்ப்பை கண்டிப்பாக 

இருக்கும். 


90-களில் அது 

பட்டிக்காட்டு 

அடையாளமானது. 

பார்ப்பவர்களின் 

கேலிப்பொருளானது 


பச்சை, மஞ்சள், நீலம், 

வெள்ளை சிவப்பு என 

மாறினாலும்

பொதுப்பெயர் 

மஞ்சப்பைதான். 


ஊரில்  இருந்து  வரும் 

பாட்டி,  தாத்தா 

வாங்கிவரும்  

தின்பண்டங்கள் 

தாங்கிய மஞ்சப்பைகள்

விசேஷமானது.


ரேஷன் கடை,

 மளிகைக்கடை,

மார்க்கெட்,

ஜவுளிக்கடை,

ஓரிரு நாள் வெளியூர் பயணம்

என எங்கே  போனாலும் 

நம் கூடவே வந்த மஞ்சப்பை

ஒருகால கட்டத்தில் 

நம்மிடம் இருந்து  

தொலைந்தே போனது


இப்போது மீண்டும் 

பிளாஸ்டிக் பைகளுக்கு 

பதில் துணிப்பை

 பயன்படுத்தச்சொல்லி 

அரசு அறிவுறுத்தியுள்ளது


காலத்துக்கேற்றவாறு

மஞ்சப்பையில்  

கொஞ்சம் மாற்றம் 

செஞ்தால்  போதும்.

மீண்டும் நம்மோடு 

அது பயணிக்கும்


"நம் மண்ணைக்காக்க 

மஞ்சள் பை சுமப்போம்"


"நெகிழியை அறவே ஒழிப்போம்"


"மஞ்சள் பை"

 அது ஒரு மாற்றத்தின் அறிகுறி"


"மஞ்சள் பை அது 

வெட்கம் அல்ல 

புரட்சி"


(மஞ்சள் பையுடனான உங்கள் நினைவுகளை கமெண்டில் அனுப்புங்கள்)

10 ஆம் வகுப்பு அறிவியல் திருப்புதல் தேர்வு வினாத்தாள் (TM) TYPE 2

 






X SCIENCE REVISION TEST QUESTION PAPER EM

 





PDF FILE

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF


WORD FILE YOU CAN EDIT

👇👇

CLICK HERE FOR WORD FILE


10 ஆம் வகுப்பு அறிவியல் திருப்புதல் தேர்வு வினாத்தாள் (TM)

 







👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

BIG BREAKING அரையாண்டு விடுமுறை அறிவிப்பு



*தமிழக பள்ளிகளுக்கு, 25ம் தேதி முதல், ஜனவரி, 2ம் தேதி வரை விடுமுறை- நெல்லையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு.*

பள்ளி வகுப்பறை, கழிவறைகளை மாணவர்கள் சுத்தம் செய்யவில்லை என்பதை உறுதி செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

கடந்த சில தினங்களுக்கு 

முன்பு தனியார் பள்ளி 

மாணவர் ஒருவரை 

வகுப்பறையை 

சுத்தம் செய்ய 

ஆசிரியர் கூறியதாகவும் 

அப்போது மேசை 

மாணவரின் காலில் 

விழுந்து மாணவருக்கு 

காயம் ஏற்பட்டதாகவும் 

தகவல் வெளியானது


மாணவரின் தந்தை 

இது குறித்து மாநில 

மனித உரிமை 

ஆணையத்தில் 

புகார் தெரிவித்திருந்தோர்


அது குறித்து 

விசாரித்த ஆணையம் 

தலைமை ஆசிரியரையோ 

வகுப்பு ஆசிரியரையோ 

குற்றம் சுமத்த முடியாது.


போதுமான 

ஊழியர்களை 

சுத்தம் செய்ய 

நியமிக்காதது 

நிர்வாகத்தின் 

குற்றம் என்று கூறினர்.


மேலும் பாதிக்கப்பட்ட மாணவருக்கு 

ரூபாய் 1 லட்சம் 

இழப்பீடு வழங்க 

தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.


மேலும் பள்ளி 

வகுப்பறை, 

கழிப்பறைகளை 

மாணவர்கள் 

சுத்தம் செய்யும் 

பணியில் 

ஈடுபடுத்தப்படவில்லை 

என்பதை உறுதி 

செய்ய 

பள்ளிக்கல்வி 

இயக்குனருக்கு உத்தரவிட்டது


வீடியோ கீழே அழுத்தவும்

👇

மேலும் விபரங்களுக்கு வீடியோ பார்க்கவும்

IV STD ALL TLM

 👉முதலில் கீழே 

    உள்ள லிங்க் 

    மூலம் PDF 

    டவுன்லோடு 

    செய்யவும் 

👉அதில் உள்ள 

    QR CODE ஐ 

    SCAN செய்தால் 

    உங்களுக்கு 

    தேவையான 

    அனைத்து 

    TLM கிடைக்கும் 


👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

V STD ALL TLM

👉முதலில் கீழே 

    உள்ள லிங்க் 

    மூலம் PDF 

    டவுன்லோடு 

    செய்யவும் 

👉அதில் உள்ள 

    QR CODE ஐ 

    SCAN செய்தால் 

    உங்களுக்கு 

    தேவையான 

    அனைத்து 

    TLM கிடைக்கும் 


👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

Wednesday 22 December 2021

ஓமிக்ரான் பரவல் மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சுழற்சி முறை?


 

👉கொரானா லாக் 

    டவுன் முடிந்து கடந்த 

    மாதம் பள்ளி மற்றும் 

    கல்லூரிகள் திறக்கப்பட்டன 





👉ஜூன் மாதம் 

    முதலில் சுழற்சி 

    முறையில் 

    தொடங்கப்பட்ட 

    பள்ளி மற்றும் 

    கல்லூரிகள் 

    பின்பு 

    படிப்படியாக 

    முழு நேரத்திற்கு மாற்றப்பட்டது 





👉தற்போது 

    புதிய வகை 

    கொரானா 

    வேகமாக பரவி 

    வருவதால் 

    கட்டுப்பாடுகளை 

    கடுமை 

    ஆக்கப்படவேண்டும் 

    என மத்திய அரசு 

    எச்சரித்துள்ளது 





👉இதன் காரணமாக 

    பள்ளி கல்லூரிகளில் 

    ரத்து செய்யப்பட்ட 

    சுழற்சி முறை 

    மீண்டும் கொண்டு 

    வரவேண்டிய 

    சுழல் ஏற்பட்டுள்ளது 





👉இது குறித்து 

    ஆலோசனையில் 

    பள்ளிக்கல்வித்துறை 

    ஈடுபட்டுள்ளதாக 

    தகவல் 

    வெளியாகி உள்ளது 




மேலும் விபரம் அறிய 

தந்தி டிவி செய்தி 

👇👇

CLICK HERE TO WATCH


பொங்கல் விடுமுறை கால சிறப்பு ரெயில்கள் பட்டியல்

 







👇👇

CLICK HERE TO GET TRAIN LIST PDF

தேசிய கணித தினம் (National Mathematics Day)


இந்தியாவில், 

டிசம்பர் 22 ஆம் நாள் 

தேசிய கணித தினமாக 

றிவிக்கப்பட்டுள்ளது. 


தேசிய கணித தினம் 

26 பிப்ரவரி 2012 அன்று 

சென்னைப் 

பல்கலைக்கழக 

நூற்றாண்டு விழாக் 

கலையரங்கத்தில் 

நடைபெற்ற 

சீனிவாச ராமானுசனின் 

125 வது பிறந்த நாள் 

கொண்டாட்டத்தின் 

தொடக்க விழாவில் 

பிரதம மந்திரி 

டாக்டர் மன்மோகன் சிங் 

அவர்களால் பிரகடனம் 

செய்யப்பட்டது.


இந்தியக் 

கணித மேதை 

ஸ்ரீனிவாச ராமானுஜன் 

1887 ஆம் ஆண்டு 

டிசம்பர் மாதம் 

22 ஆம் தேதி பிறந்தார். 

1920 ஏப்ரல் 26 இல் இறந்தார். 


இந்திய 

தேசிய 

கணிதவியலாளரான 

கணித மேதை 

சீனிவாச இராமானுசன் 

அவர்கள் 

கணிதத்துறைக்குப் 

பங்காற்றியமைக்காக 

ஒவ்வொரு ஆண்டும் 

டிசம்பர் 22 ஆம் நாள் 

தேசிய கணித 

தினமாகக் 

கொண்டாடப்படுகிறது. 

2012 ஆம் ஆண்டு 

தேசிய கணித ஆண்டாக 

அறிவிக்கப்பட்டுள்ளது.


தேசிய கணித தினம் 

இந்திய அளவில் 

பள்ளிகள் 

மற்றும் 

பல்கலைக்கழகங்களில் 

பல்வேறு 

கல்வி நிகழ்வுகளுடன் 

கொண்டாடப்படுகிறது.


2017 ஆம் ஆண்டு 

ஆந்திரப் 

பிரதேச மாநிலம் 

சித்தூர் மாவட்டத்தில் 

உள்ள குப்பம் 

நகரில் இராமானுசன் 

கணிதப் பூங்கா 

என்ற 

அருங்காட்சியகம் 

திறக்கப்பட்ட்தை 

தொடர்ந்து 

தேசிய 

கணித தினத்தின் 

முக்கியத்துவம் 

அதிகரித்துள்ளது



வீடியோ பார்க்க கீழே அழுத்தவும் 

👇👇

கணித மேதையின் கதை