How to complete shalaa siddhi Format?
Shaala Siddhi பதிவேற்றம் தயார் செய்ய வேண்டிய தகவல்களை பற்றிய பதிவு.
1. Students Profiles
👉 இந்த பகுதியில் நாம் 2020-2021 கல்வியாண்டின் மாணவர்கள் விவரத்தை பதிய வேண்டும்.
👉 இனவாரியாக SC, ST, OBC, General, Minority, Total.
👉 இதில் Minority பகுதியில் BCM, BCC மாணவர்களை பதிய வேண்டும் .
👉 மற்றவர்களை OBC ல் பதிய வேண்டும் .
2. Classwise Annual attendance rate
👉 இந்த பகுதியில் 2020-2021 கல்வி ஆண்டின் மாணவர்களின் ஆண்டு சராசரி வருகை சதவீதத்தை பதிவிட வேண்டும் .
👉 வகுப்புவாரியாக ஆண் பெண் என தனித்தனியாகக் கணக்கிட வேண்டும் .
👉 உதாரணமாக ஒன்றாம் வகுப்பில் 5 ஆண் மாணவர்கள் எனில் அவர்களின் மொத்த வருகை நாட்கள் 206, 210, 207, 200, 198 எனில்,
மொத்த கூடுதல் 1021/1050 X 100=வருகை சதவீதம் .
👉 இது போன்று அனைத்து வகுப்புகளும் ஆண் பெண் என்று தனித்தனியாகக் கணக்கிட்டு தயார் செய்ய வேண்டும்.
3. Learning outcomes Annual report
👉 இங்கு 2020-2021 கல்வி ஆண்டின் விவரத்தை பதிவு செய்ய வேண்டும்.
👉 மாணவர்களின் 2020-2021 ஆண்டின் ஒட்டுமொத்த மதிப்பெண் சதவீதத்தை கணக்கிட்டு பதிவு செய்ய வேண்டும்.
👉 உதாரணமாக ஒன்றாம் மாணவன் முதல் பருவம் 350/400 இரண்டாம் பருவம் 370/400 மூன்றாம் பருவம் 360/400 எனில் 1080/1200X100= என்ற படி கணக்கிட்டு கொள்ள வேண்டும்.
👉 இவ்வாறு வகுப்புவாரியாக தயார் செய்து கொண்டு கீழ்கண்ட இடைவெளியில் <33, 33-40, 41-50, 51-60,61-70, 71-80, 81-90, 91-100 குறித்து கொண்டு பதிவேற்றம் செய்ய வேண்டும்.
4. Teachers Profiles
👉 இதில் 2021-2022 கல்வியாண்டின் பணிபுரியும் ஆசிரியர் விவரம் ஆண் பெண் வாரியாக பதிவிட வேண்டும்.
👉 இந்த பகுதியில் trained , untrained என பிரிக்கப்பட்டுள்ளது .
👉 நமது பள்ளியில் அனைவரும் trained teacher.
👉 நடுநிலைப் பள்ளியில் part-time teachers இருந்தால் அவர்களை untrained பகுதியில் காட்டக்கூடாது .
👉 Only subject teachers மட்டும். Untrained teacher's எனபது High, Higher secondary level PTA staff -ஐ குறிக்கும்.
5. Teachers Attendance
👉இந்த பகுதியில் 2020-2021 கல்வியாண்டில் ஆசிரியர்கள் விடுப்பு விவரம் பதிய வேண்டும்.
👉விடுப்பை கணக்கிடும் போது ஒரு மாதத்திற்கு மேல் விடுப்பு எடுத்தவர்கள், ஒரு வாரத்திற்குள்ளாக விடுப்பு எடுத்தவர்கள் என தனித்தனியாகக் கணக்கிட்டு குறித்து கொண்டு பதிவேற்றம் செய்ய வேண்டும்.
👉CL தவிர பிற விடுப்புகள்
No comments:
Post a Comment