Search This Blog

Tuesday 28 March 2023

அரசுப் பள்ளிகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பிற வசதிகளை EMIS வலைதளத்தில் 30.04.2023க்குள் உள்ளீடு செய்ய உத்தரவு



மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களால் நம்ம School - நம்ம ஊரு பள்ளி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது 

பள்ளிக்கல்வித்துறையில் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டிற்காக பொதுமக்கள் முன்னாள் மாணவர்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் போன்றவற்றின் மூலம்  நிதி பெறப்பட்டு அதன் மூலம் தமிழகத்தில் உள்ள 37558 அரசுப் பள்ளிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இத்திட்டம் வழிவகை செய்கிறது 

மாண்புமிகு முதல்வர் அவர்களால் இத்திட்டம் தனி இணையதளம் தொடங்கி வைக்கப்பட்டது 

👇👇

https://nammaschool.tnschools.gov.in


பள்ளிகளின் தேவைகளை 30.04.2023க்குள் உள்ளீடு செய்து முடிக்க வேண்டும் 


பள்ளியின் உட்கட்டமைப்பு தேவைகள் 

1. பள்ளியின் தாழ்வான பகுதிகளை நிரப்புதல் 

2. நீர் தேங்குவதை தடுக்க வடிகால் அமைப்பு 

3. நீர் தேங்கும் பகுதிகளை நிரப்புதல் 

4. திறந்த கிணறு குழிகளை மூடுதல் 

5. செப்டிக் டேங் பழுது பார்த்தல் 

6. புதிய சுற்று சுவர் - கிரில் கேட் 

7. சுற்று சுவர் வெள்ளை அடித்தல் 

8. அதிகரிக்கப்படவேண்டிய சுற்றுச்சுவர் உயரம் 

9. சுற்று சுவர் கலவை பூச்சு 

10. சுற்றுச்சுவர் செங்கல் கட்டு வேலை 

11. பள்ளிக்கட்டிட கட்டமைப்பு பழுது பார்த்தல் 

12. கைப்பிடியுடன் சாய்வு தளங்கள் பழுது பார்த்தல் 

13. தரை பழுதுபார்த்தல் 

14. வகுப்பறை/கழிப்பறை/பிற அறைகளை பழுது பார்த்தல் 

15. பம்ப் பழுது பார்த்தல் 

16. ஆழ்துளை கிணறு தூர் வாருதல் 


இது போன்ற பணிகளை தலைமை ஆசிரியர்கள் வலைத்தளத்தில் உள்ளீடு செய்ய வேண்டும் 

மேற்கண்ட தேவைகளில் எவ்வித மாற்றமும் தலைமை ஆசிரியர்களால் மேற்கொள்ள இயலாது 



மேலும் விவரம் அறிய கீழே உள்ள லிங்க் மூலம் 

pdf பதிவிறக்கம் செய்யவும் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




No comments:

Post a Comment