Search This Blog

Sunday 19 March 2023

உலக வன நாள் போட்டிகள் அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்குபெறலாம் தென்காசி மாவட்டம், சிவகிரி வனச்சரக அலுவலர் அறிவிப்பு

 



அனைவருக்கும்  வணக்கம்,  மார்ச் 21

உலக வன நாளை முன்னிட்டு பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு  வனங்கள்பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் மாணவர்களின் போட்டி திறனை வளர்க்கும் பொருட்டும் மாவட்ட வன அலுவலர் அவர்கள் உத்தரவின்படி பல்வேறு விதமான கீழ்கண்ட போட்டிகளை 20.03.2023 அன்று  தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் 


தென்காசியில் உள்ள அனைத்து வகை பள்ளி, கல்லூரிகளுக்கும்  தற்போது தேர்வு நேரமாக இருப்பதால் அவரவர் பள்ளி, கல்லூரியில் நடத்தி , அதில் சிறந்த தலா மூன்று படைப்புகளை அன்று மாலை 6 மணிக்குள் தென்காசி மாவட்டம்  சிவகிரி வனச்சரக அலுவலகத்தில் நேரில் ஒப்படைக்கவோ அல்லது படைப்புகளை ஸ்கேன் செய்து மின்னஞ்சலில் அனுப்பியோ வைக்கலாம்.

வெற்றி பெற்றவர்களுக்கு  மட்டும் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றினை மாவட்ட ஆட்சியர் அவர்கள்  வாசுதேவநல்லூர் தங்கபழம் வேளாண்மை கல்லூரியில் வைத்து 21. 03 . 23. செவ்வாய் மாலை 3.30 மணியளவில் நடைபெறும் விழாவில் வழங்கி சிறப்பிக்க இருக்கிறார்கள்.

தற்போது ஆண்டு தேர்வுகள் நடந்து கொண்டிருப்பதனால் மாணவர்கள் நலன் கருதி அந்தந்த பள்ளி நிர்வாகம் போட்டிகளை நடத்தி தேர்வான நபர்களின் பள்ளியின்பெயர், இடம் மாணவர்பெயர், படிக்கும் வகுப்பு,  தொடர்பு எண் உள்ளிட்ட சரியான தகவல்களுடன் போட்டியாளர்களின் ஓவியம், கட்டுரை, கவிதை, Slogan, poster, கோலம் உள்ளிட்ட போட்டி சார்ந்த தகவல்களை (sheets) ஸ்கேன் செய்து மின்னஞ்சல் அல்லது நேரிலோ 20.3.2023 மாலை 6 மணிக்குள் சிவகிரி வனச்சரகத்திற்கு அனுப்பி வைக்க கேட்டுக் கொள்கிறேன் .


போட்டிகள் விவரம் 

1 முதல் 5 ஆம் வகுப்பு 

    அ . ஓவியப்போட்டி 

            தலைப்பு: மழை நீர் சேகரிப்பு 

    ஆ . கட்டுரைப்போட்டி 

            தலைப்பு: உனக்குப் பிடித்த வன விலங்கு 

2. 6 முதல் 9 ஆம் வகுப்பு 

        அ . ஓவியப்போட்டி 

                தலைப்பு: வனமும் விவசாயமும் 

        ஆ . கட்டுரைப்போட்டி 

                தலைப்பு: சுற்றுச் சூழல் அமைப்பு மற்றும் அதன் பங்களிப்பு 

        இ. கவிதைப்போட்டி 

                தலைப்பு: காட்டுத்தீ 

        ஈ. முழக்கம் (slogan)

                தலைப்பு: கடல் மற்றும் மாசுபாடு 

        உ . poster making 

                தலைப்பு: புதுப்பிக்கக் கூடிய ஆற்றல்கள் 

3. கல்லூரி 

        அ. ஓவியப்போட்டிகள் 

            தலைப்பு: HUMAN WILDLIFE COEXISTENCE

        ஆ. கட்டுரைப்போட்டி

            தலைப்பு: WETLAND AND BIRDS 

        இ. கவிதைப்போட்டி 

            தலைப்பு: FOREST FIRE 

        ஈ. முழக்கம்: 

             தலைப்பு: OCEAN AND POLLUTION 

        உ. POSTER MAKING 

            தலைப்பு: RENEWABLE ENERGY SOURCES 

        ஊ. கோலப்போட்டி 

            தலைப்பு: WATER CYCLE 


நன்றி .

செல்வி .மௌனிகா BSc

வனச்சரக அலுவலர்

சிவகிரி.

83442 96336


மின்னஞ்சல்

👇👇

sivagirirange@gmail.com

No comments:

Post a Comment