Search This Blog

Saturday 25 March 2023

EMIS வலைத்தளத்தில் இருந்து 2 லட்சம் மாணவர்களின் விவரங்கள் விற்பனையா? NEWS 18 தொலைகாட்சி செய்தி வெளியீடு


கடந்த பல ஆண்டுகளாக பள்ளிக்கல்வித்துறையால் EMIS என்ற வலைதளம் மாணவர்களுக்காக நிர்வகிக்கப்பட்டுவருகிறது 

தமிழகத்தில் உள்ள LKG முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் அனைத்து விவரங்களும் பள்ளி ஆசிரியர்களால் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது 

மாணவர்களின் பெயர், பெற்றோர்கள் பெயர், பெற்றோர்கள் தொழில், மாணவர்களின் விலாசம் போன்ற பல விவரங்கள் அதில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன 

பல கல்லூரிகள் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் விவரங்களை 3000 ரூபாய் முதல் 20000 ரூபாய் வரை விலை கொடுத்து வாங்க முயல்கின்றனர் 

EMIS வலைத்தளத்தை நிர்வகிக்கும் நபருடன் நியூஸ் 18 நிருபர் தொலைபேசியில் கல்லூரியில் இருந்து பேசுவதாகவும் தனக்கு 12 ஆம் வகுப்பு மாணவர்கள் விவரங்கள் வேண்டும் எனவும் கூறுகின்றார். அதற்க்கு எதிர்முனையில் பேசும் EMIS வலைத்தளம் பொறுப்பாளர் ஒருவர் பல மாவட்டங்களை சார்ந்த 2 லட்சம் மாணவர்கள் விவரம் இருப்பதாகவும் எனக்கு பணம் அனுப்புங்கள் நான் உங்களுக்கு EMAIL ல்  வைக்கிறேன் என கூறுகிறார் 

தற்போது NEWS 18 தொலைகாட்சி இந்த செய்தியை வீடியோவுடன் வெளியிட்டுள்ளது 

EMIS தளத்தில் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் விவரங்கள் ரகசியமானது. வெளி நபர்களிடம் வழங்குவதற்கானது அல்ல.

இதுபோல் விற்பனை எத்தனை ஆண்டுகள் நடந்தன என்பதை பள்ளிக்கல்வித்துறை கண்டுபிடிக்கவேண்டும் 

பல லட்சக்கணக்கான பெண்மாணவிகள், பெண் ஆசிரியர்கள் விவரங்கள்  தளத்தில் உள்ளது.

மாணவர்கள் விவரங்களைப்போலவே ஆசிரியர்களின் விவரங்களும் உள்ளது எனவே மாணவர்கள், ஆசிரியர்கள் பாதுகாப்பு கருதி பள்ளிக்கல்வித்துறை நியாமான விசாரணை செய்து இது சார்ந்த உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும் என மாணவர்கள், மற்றும் ஆசிரியர்கள் விரும்புகின்றனர் 


நியூஸ் 18 வெளியிட்டுள்ள வீடியோ 

👇👇



No comments:

Post a Comment