பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் அனைத்து வகை அரசுப்பள்ளிகளிலும் நடத்தப்பட்டு வருகிறது
ஜூலை 2023 மாதம் நடைபெறவுள்ள பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தினை அனைத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் வரும் 14.07.2023 அன்று நடத்த அறிவுறுத்தப்படுகிறது
கூட்டப்பொருள்
1. முன்னாள் மாணவர்கள் பள்ளியுடன் இணைந்து செயல்பட "முன்னாள் மாணவர்கள் மன்றம்" அமைத்திட வேண்டும்
2. ஜூலை 20 ஆம் தேதிக்குள் 25 முன்னாள் மாணவர்களைக் கண்டறிந்து tnschools.gov.in இணையதள பக்கத்தில் பதிவு செய்ய வேண்டும்
3. மாற்றுத் திறனுடைய மாணவர்கள் தேர்ச்சி பெற்று அடுத்த வகுப்பிற்கு செல்வத்தையும் வகுப்பில் எவ்வித தடையும் இன்றி அமர்ந்து படிப்பதையும் பள்ளி மேலாண்மைக்குழு உறுதி செய்ய வேண்டும்
4. ஓன்று முதல் ஐந்து வகுப்பு வரை மாற்றியமைக்கப்பட்ட பயிற்சி புத்தகம் எத்தனை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை கூட்டத்தில் தலைமை ஆசிரியர் பகிர்ந்துகொள்ளவேண்டும்
5. மாற்றுத் திறனாளி மாணவர்கள் ஜூலை மாதம் முதல் நடைபெறவுள்ள விளையாட்டுப்போட்டிகளில் கலந்து கொள்ளும் வண்ணம் அவர்களை தயார் செய்ய வேண்டும்
6. இல்லம் தேடிக்கல்வியில் குழந்தைகள் தொடர்ந்து பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும்
7. எண்ணும் எழுத்தும் (4,5 வகுப்புகள்) நடத்தப்பட்ட மதிப்பீடு தகவலை கூட்டத்தில் தெரியப்படுத்த வேண்டும்
மேலும் விவரங்களுக்கு மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள் பதிவிறக்கம் செய்ய
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
No comments:
Post a Comment