Search This Blog

Thursday 11 November 2021

பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கு நன்றி தெரிவித்தார் ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில் குமார்


தமிழக அரசு பள்ளிகளில் கடந்த 2012ஆம் ஆண்டு 16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் உடற்கல்வி, ஓவியம், கணினி அறிவியல், இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்க்கைக்கல்வி ஆகிய 8 பாடங்களை பகுதிநேரமாக மாணவர்களுக்கு கற்பித்து வருகின்றனர்.

இவர்களுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் என சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. பின்னர் படிப்படியாக உயர்த்தப்பட்டு 10 ஆண்டுகளில் மாத சம்பளம் 10 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டது. 

இந்நிலையில் பகுதிநேர ஆசிரியர்களில் 4 ஆயிரம் பேர் வெளியேறினர். தற்போது 12 ஆயிரம் பேர் மட்டும் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து கொண்டிருக்கின்றனர். 

இதுதொடர்பாக தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில் குமார் கூறுகையில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு வெறும் 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே சம்பளமாக வழங்கப்படுகிறது. 

இது வாழ்வாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பணி நிரந்தரம் ஆகாமலே பலரும் ஓய்வு பெற்றுவிட்டனர். இவர்களுக்கு அரசு ஊழியர்கள் பெறும் சலுகைகள் எதுவும் கிடைப்பதில்லை. 

திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது போல் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்று மகிழ்ச்சியூட்டும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

No comments:

Post a Comment