Search This Blog

Friday 26 November 2021

இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா சார்பில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இணையவழி Essay and E-poster போட்டிகள்





இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், புவியியல் அமைச்சகம் சார்பில் ஏழாவது இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவானது வருகின்ற டிசம்பர் மாதம் 10 தேதி முதல் 13ஆம் தேதி வரை கோவாவில் நடைபெறுகிறது. 

ஆறாவது இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா கொரோனோ பேரிடர் காரணத்தினால் முழுவதும் இணைய வழியிலேயே நடைபெற்றது. 

இந்த வருடம் கோவாவில் 12 நிகழ்வுகள் நடைபெற உள்ளது. அதில் குறிப்பாக பொறியியல் மாணவர்களுக்கான நிகழ்வு, தன்னார்வ அமைப்புகளுக்கான நிகழ்வு, கோவாவிலுள்ள கிராமப்புற மாணவர்களுக்கான அறிவியல் கிராமம் நிகழ்வு, உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற உள்ளன. சர்வதேச அறிவியல் திருவிழாவில் இணைய வழியிலும் கலந்து கொள்ளலாம். 

சர்வதேச அறிவியல் திருவிழாவில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 

www.scienceindiafest.org 

என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். 

இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவையொட்டி சி.எஸ்.ஐ.ஆர் நிறுவனங்கள் சார்பில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது. 

அதனடிப்படையில் தமிழகத்திலுள்ள தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பாக பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை போட்டி மற்றும் போஸ்டர் தயாரிக்கும் போட்டியானது அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணாக்கர்கள் ஒரு பிரிவாகவும் கல்லூரி மாணவர்கள் மற்றொரு பிரிவாகவும் கலந்து கொள்ளலாம். 

கலந்துகொள்ளும் அனைவருக்கும் இணையவழி சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. தரமான கல்வி தூய குடிநீர் மற்றும் சுகாதாரம் தொழில் துறை மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் காலநிலை மாற்றம் ஆகிய தலைப்புகளில் தமிழ் அல்லது ஆங்கில வழியில் உங்களது படைப்புகளை அனுப்பி வைக்கலாம். 

உங்களது படைப்புகளை 

iisfclri@gmail.com 

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு டிசம்பர் 3 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம்.. 

மேலும் தகவல்களுக்கு 

கலிலியோ அறிவியல் கழகம் 8778201926

No comments:

Post a Comment