- பெனிசிலின் எந்த ஆண்டு கண்டு படிக்கப்பட்டது? 1928
- பெனிசிலின் மருந்தைக் கண்டுபிடித்தவர் யார்? அலெக்சாண்டர் பிளமிங்
- அலெக்சாண்டர் பிளமிங் எந்த ஆண்டு நோபல் பரிசு பெற்றார்? 1945
- பூஞ்சைகள் பற்றிய வித்து வளர்ப்பு சோதனை செய்தவர் யார்? P.A. மைச்சிலி (1729)
- பூஞ்சைகள், தாவரங்களில் நோய்கள் ஏற்படுத்தும் என நிரூபித்தவர் யார்? பாண்டானா (1767)
- பூஞ்சைகள், மனிதர்களில் ஒவ்வாமையை ஏற்படுத்தும் என நிரூபித்தவர் யார்? C.H. ப்பிளாக்கிலி (1873)
- பூஞ்சைகளின் மாற்று உடலத்தன்மையை கண்டறிந்தவர் யார்? A.F. ப்ளாக்ஸ்லி (1904)
- பூஞ்சையில் பாலினை ஒத்தத்தன்மையை கண்டறிந்தவர் யாவர்? பாண்டி கொர்வோவ் மற்றும் ரோப்பர்
- பூஞ்சை என்பதன் பொருள் என்ன? காளான்
- பூஞ்சையியலை தோற்றுவித்தவர் யார்? P.A. மைச்சிலி
- பூஞ்சைகள் பற்றிய படிப்பின் பெயர் என்ன? மைகாலஜி
- இந்திய பூஞ்சையியலின் தந்தை எனக்கருதப்படுபவர் யார்? E.J. பட்லர்
- E.J. பட்லர் நிறுவிய வேளாண்மை நிறுவனத்தின் பெயர் என்ன? இம்பீரியல் வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம் (பீகார் - பூசா)
- இம்பீரியல் வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம் தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது?இந்திய வேளாண்மை ஆராய்ச்சி மையம் (IARI)
- பூஞ்சை மற்றும் தாவர நோய்கள் என்ற புத்தகத்தை எழுதியவர் யார்? E.J.பட்லர்
- பூஞ்சைகளை உடலம் எவற்றால் ஆனது? ஹைபா
- ஹைபாக்கள் இணைந்து உருவாவது எது? மைசீலியம்
- பூஞ்சைகளின் செல் சுவர் இவற்றால் ஆனது? கைட்டின் (பாலி சாக்கரைட்) மற்றும் பூஞ்சை செல்லுலோஸ்
- பல் உட்கரு மைசீலியம் கொண்ட பூஞ்சைக்கு (ஹைபாக்களுக்கு இடையே தடுப்பு சுவர் இல்லை) உதாரணம் எது? அல்புகோ
- ஹைப்பாக்களின் செல்களுக்கு இடையே தடுப்புச்சுவர் காணப்படும் பூஞ்சைக்கு உதாரணம் எது? பியூசேரியம்
- பூஞ்சையில் உள்ள ஹைபாக்கள் இணைந்து உருவாகும் பூஞ்சை திசுக்களின் பெயர் என்ன? பிளக்டங்கைமா
- பிளக்டங்கைமாவில் ஹைபாக்கள் நெருக்கமின்றி இணைப்போக்கான அமைப்பில் இருந்தால் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது? புரோசங்கைமா
- பிளக்டங்கைமாவில் ஹைபாக்கள் நெருக்கமாக அமைந்திருந்தால் இருந்தால் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது? போலியான பாரங்கைமா
- பூஞ்சையின் பாலிலா இனப்பெருக்க நிலையானது எவ்வாறு அழைக்கப்படுகிறது? பாலிலி நிலை (Anamorph)
- பூஞ்சையின் பாலின இனப்பெருக்க நிலையானது எவ்வாறு அழைக்கப்படுகிறது? பால் நிலை (Teleomorph)
- பூஞ்சையில் பாலிலா மற்றும் பாலின என இரு இனப்பெருக்க நிலையானது காணப்பட்டால் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது? முழு உடலி (Holomorph)
- பூஞ்சையின் பாலிலா இனப்பெருக்கத்தில் ஈடுபடும் கசையிழை உடைய அமைப்பு எது? இயங்கு வித்துக்கள் (Zoospores)
- ஆய்டியவித்துக்களின் வேறுபெயர்கள் எவை? உடல வித்துக்கள், கணு வித்துக்கள்
- பூஞ்சைகளின் பாலிலா இனப்பெருக்கத்தில் ஹைப்பாக்கள் பிளவுற்று தோன்றும் வித்துக்கள் எது? ஆய்டியவித்துக்கள்
- பூஞ்சையின் பாலிலா இனப்பெருக்கத்தில் உடல செல்கள் பிளவுற்று இரண்டு சேய் செல்களை தரும் முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது? பிளவுறுதல்
- பூஞ்சையின் பாலிலா இனப்பெருக்கத்தில் ஈடுபடும் ஓய்வுநிலை வித்துக்களின் பெயர் என்ன? கிளாமிடவித்துக்கள்
- பூஞ்சைகளின் பாலினப்பெருக்கத்தில் இயக்க கேமீட்டுகளின் இணைவு வகைகள் யாவை?
அ
ஒத்த கேமீட் இணைவு (Isogamy)
ஆ
சமமற்ற கேமீட் இணைவு (Anisogamy)
இ
முட்டை கருவுறுதல் (Oogamy)
- ஒத்த கேமீட் இணைவு பாலினப்பெருக்கத்தில் ஈடுபடும் பூஞ்சை எது? சின்கைட்ரியம்
- சமமற்ற கேமீட் இணைவு பாலினப்பெருக்கத்தில் ஈடுபடும் பூஞ்சை எது? அல்லோ மைசிஸ்
- முட்டை கருவுறுதல் பாலினப்பெருக்கத்தில் ஈடுபடும் பூஞ்சை எது? மோனோ பிளாபாரிஸ்
- கேமீட்டகத்தொடர்பு (Gametangial contact): (ஆந்தரிடியம் & ஊகோனியம்) மூலம் பாலினப்பெருக்கத்தில் ஈடுபடும் பூஞ்சை எது? அல்புகோ
- கேமீட்டக இணைவு (Gametangial copulation) மூலம் பாலினப்பெருக்கத்தில் ஈடுபடும் பூஞ்சை எது? மியூக்கர் மற்றும் ரைசோபஸ்
- ஸ்பெர்மேஷிய இணைவு (Spermatisation) பாலினப்பெருக்கத்தில் ஈடுபடும் பூஞ்சை எது? பக்சினியா மற்றும் நியுரோஸ்போரா
- பூஞ்சையின் பிக்னிய வித்து அல்லது நுண்கோனிடியம், ஏற்பு ஹைபாக்களுக்கு எந்த பாலினப்பெருக்கத்தில் கடத்தப்படுகிறது? ஸ்பெர்மேஷிய இணைவு
- இரண்டு ஹைபாக்களின் உடல செல்களின் இணைவினால் (Somatogamy) பாலினப்பெருக்கம் எந்த பூஞ்சையில் நடைபெறுகிறது? அகாரிகஸ்
- பூஞ்சைகளில் உறக்க கருமுட்டை (Zygospore) எந்த பாலினப்பெருக்கத்தில் உருவாகிறது? கேமீட்டக இணைவு
- மரபுசார் வகைப்பாட்டின் படி பூஞ்சைகளின் வகைப்பாடு யாது? அ.பைக்கோ மைசீட்ஸ் ஆ. ஆஸ்கோ மைசீட்ஸ் இ.பெசிடியோ மைசீட்ஸ் ஈ.டியூட்டிரோமைசீட்ஸ்
- பூஞ்சைகளில் பின் தங்கியதாகவும் பாசியில் இருந்து தோன்றியதாகவும் அறியப்படுவது எது? பைக்கோ மைசீட்ஸ்
- “Introductory Mycology”என்ற நூலில் பூஞ்சைகளின் வகைப்பாட்டை வெளியிட்டவர்கள் யாவர்? கான்ஸ் டாண்டின் J. அலெக்ஸோ பொலஸ் மற்றும் சார்லஸ் W. மிம்ஸ்
- Introductory Mycology” என்ற நூலின் படி பூஞ்சைகளின் பிரிவுகள் எவை? அ. ஜிம்னோமைக்கோட்டா ஆ. மாஸ்டிக்கோமைக்கோட்டா இ. ஏ மாஸ்டிக்கோமைக்கோட்டா
- "Introductory Mycology” என்ற நூலின் படி பூஞ்சைகளின் துணைப் பிரிவுகள் எத்தனை? 8
- "Introductory Mycology” என்ற நூலின் படி பூஞ்சைகளின் வகுப்புகள் எத்தனை? 11
- "Introductory Mycology” என்ற நூலின் படி பூஞ்சைகளின் வடிவ வகுப்புகள் எத்தனை? 1
- "Introductory Mycology” என்ற நூலின் படி பூஞ்சைகளின் துணை வடிவ வகுப்புகள் எத்தனை? 3
- பூஞ்சைகளின் ஊமைசீட்ஸ் என்ற வகுப்பு எந்த பிரிவைச்சேர்ந்தது? மாஸ்டிக்கோமைக்கோட்டா
- பூஞ்சைகளின் ஏ மாஸ்டிக்கோமைக்கோட்டா பிரிவைச் சேர்ந்த வகுப்புகள் எவை? சைகோமைசீட்ஸ், ஆஸ்கோமைசீட்ஸ், பேசிடியோமைசீட்ஸ்
- டியூட்ரோமைசீட்ஸ் என்ற வடிவ வகுப்பு பூஞ்சையின் எந்த பிரிவைச் சேர்ந்தது? ஏ மாஸ்டிக்கோமைக்கோட்டா
- எந்தப் வகுப்பைச் சேர்ந்த பூஞ்சைகள் முழுமைப் பெறா பூஞ்சைகள் எனப்படுகிறது? டியூட்ரோமைசீட்ஸ்
- எந்த வகுப்பைச் சேர்ந்த பூஞ்சைகளில் பாலினப் பெருக்கம் நடைபெறுவது இல்லை? டியூட்ரோமைசீட்ஸ்
- டியூட்ரோமைசீட்ஸ் வகுப்பைச் சேர்ந்த பூஞ்சைகளில் பாலிலா இனப்பெருக்கம் எம்முறைகளில் நடைபெறுகிறது? அ. கோனிடியங்கள் ஆ. கிளாமிடவித்துக்கள் இ. மொட்டுவிடுதல் ஈ. ஆய்டியவித்துக்கள்
- ஊதல் காளான் (Puff ball) என அழைக்கப்படும் பூஞ்சை எந்த வகுப்பைச் சேர்ந்தது? பேசிடியோமைசீட்ஸ்
- தவளை இருக்கைப் பூஞ்சை (Toad Stool) என்பது எந்த வகுப்பைச் சேர்ந்தது? பேசிடியோமைசீட்ஸ்
- பறவைக்கு கூடு பூஞ்சை (Bird’s nest fungus) என அழைக்கப்படும் பூஞ்சை எந்த வகுப்பைச் சேர்ந்தது? பேசிடியோமைசீட்ஸ்
- அடைப்புக்குறி பூஞ்சை (Bracket fungus) என்பது எந்த வகுப்பைச் சேர்ந்தப் பூஞ்சை? பேசிடியோமைசீட்ஸ்
- துர்நாற்றக் கொம்புப் பூஞ்சை (Stink horns) எந்த வகுப்பைச் சேர்ந்த பூஞ்சை? பேசிடியோமைசீட்ஸ்
- துரு (Rust) மற்றும் கருப்பூட்டை (Smut) பூஞ்சைகள் எந்த வகுப்பைச் சேர்ந்த பூஞ்சைகள்? பேசிடியோமைசீட்ஸ்
- மத்தளத் துளைத் தடுப்பு சுவருடைய மைசீலியம் எந்த வகுப்பு பூஞ்சைகளில்க் காணப்படுகிறது? பேசிடியோமைசீட்ஸ்
- பாலின உறுப்புகள் இல்லாமல் பாலினப்பெருக்கம் எந்த வகுப்பு பூஞ்சைகளில் நடைப்பெறுகிறது? பேசிடியோமைசீட்ஸ்
- கிளப் பூஞ்சைகள் என எந்த வகுப்பைச் சேர்ந்த பூஞ்சைகள் அழைக்கப்படுகிறது? பேசிடியோமைசீட்ஸ்
- பேசிடியோமைசீட்ஸ் பூஞ்சைகளில் காணப்படும் பேசிடியும் (spore-producing structure) எந்த வடிவம் கொண்டது? குண்டாந்தடி வடிவம்
- பேசிடியோமைசீட்ஸ் பூஞ்சைகளில் காணப்படும் ஒவ்வொரு பேசிடியமும் எத்தனை பேசிடியோவித்துக்களை கொண்டது? 4
- பேசிடியோமைசீட்ஸ் பூஞ்சைகள் எங்கு வளர்கின்றன? நிலத்தில்
- ஆஸ்கோமைசீட்ஸ் வகுப்பு பூஞ்சைகள் எங்கு வாழ்கின்றன? நிலம் நன்னீர் மற்றும் கடல்நீர்
- ஈஸ்டுகள் எந்த வகுப்பைச் சேர்ந்த பூஞ்சை? ஆஸ்கோமைசீட்ஸ்
- மாவொத்த பூசனங்கள் எந்த வகுப்பைச் சேர்ந்த பூஞ்சை? ஆஸ்கோமைசீட்ஸ்
- கிண்ணவொத்தப் பூஞ்சைகள் எந்த வகுப்பைச் சேர்ந்தவை?ஆஸ்கோமைசீட்ஸ்
- மொரல்கள் எனப்படும் பூஞ்சைகள் எந்த வகுப்பைச் சேர்ந்த பூஞ்சை? ஆஸ்கோமைசீட்ஸ்
- ஆஸ்கோமைசீட்ஸ் வகுப்பு பூஞ்சைகளில் காணப்படும் மைசீலியம் எத்தகையது? கிளைத்த எளிய தடுப்பு சுவர் கொண்டது
- ஆஸ்கோமைசீட்ஸ் வகுப்பு பூஞ்சைகளில் பாலிலா இனப்பெருக்கம் எவ்வழிகளில் நடைப்பெறுகிறது? பிளவுறுதல், மொட்டுவிடுதல், ஆய்டியவித்துக்கள், கோணிடியங்கள், கிளாமிடவித்துக்கள்
- ஆஸ்கோமைசீட்ஸ் வகுப்பு பூஞ்சைகளில் பாலினப்பெருக்கம் எவ்வழிகளில் நடைபெறுகிறது? இரண்டு ஒத்த உட்கரு இணைவதன் மூலம்
- ஆஸ்கஸ் (ஆஸ்க்கோ வித்துக்களைக்கொண்ட பை அமைப்பு) உருவாக்க சிறப்பு ஹைப்பாக்களை கொண்ட பூஞ்சை வகுப்பு எது? ஆஸ்கோமைசீட்ஸ்
- ஆஸ்கோமைசீட்ஸ் வகுப்பு பூஞ்சைகளில் உள்ள ஆஸ்கஸ் எத்தனை ஆஸ்கோ வித்துக்களைக் கொண்டது? 8
- பைப் பூஞ்சைகள் என எந்த வகுப்பு பூஞ்சைகள் அழைக்கப்படுகிறது? ஆஸ்கோமைசீட்ஸ்
- ஆஸ்கோமைசீட்ஸ் வகுப்பு பூஞ்சைகளில் உருவாகும் கனியுறுப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?ஆஸ்கோ கனியுறுப்பு
- ஆஸ்கோமைசீட்ஸ் வகுப்பு பூஞ்சைகளில் காணப்படும் முழுமையாக மூடிய ஆஸ்கோ கனியுறுப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? கிளிஸ்டோதீஸியம்
- ஆஸ்கோமைசீட்ஸ் வகுப்பு பூஞ்சைகளில் காணப்படும் குடுவை வடிவம் உடைய ஆஸ்கோ கனியுறுப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? பெரிதீஷியம்
- ஆஸ்கோமைசீட்ஸ் வகுப்பு பூஞ்சைகளில் காணப்படும் கோப்பை வடிவம் உடைய ஆஸ்கோ கனியுறுப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? அப்போதீசியம்
- ஆஸ்கோமைசீட்ஸ் வகுப்பு பூஞ்சைகளில் காணப்படும் பொய் கனி உடலம் கொண்ட ஆஸ்கோ கனியுறுப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? சூடோதீஸியம்
- வீட்டு ஈக்களின் மீது வாழும் சைகோமைசீட்ஸ் வகுப்பைச் சேர்ந்த பூஞ்சை எது? எண்டமப்தோரா
- ரொட்டி மீது வாழும் சைகோமைசீட்ஸ் வகுப்பைச் சேர்ந்த பூஞ்சை எது? மியூக்கர் மற்றும் ரைசோபஸ்
- சாணத்தில் மீது வாழும் சைகோமைசீட்ஸ் வகுப்பைச் சேர்ந்த பூஞ்சை எது? பைலோபொலஸ்
- சைகோமைசீட்ஸ் வகுப்பைச் சேர்ந்த பூஞ்சைகளின் பாலினப்பெருக்கத்தில் கேமீட்டகங்கள் இணைந்து எத்தகைய கருமுட்டையை தோற்றுவிக்கின்றன? உறக்க கருமுட்டை?
- ஊமைசீட்ஸ் வகுப்பு பூஞ்சைகளில் பாலினப்பெருக்கம் எம்முறையில் நடைபெறுகிறது? முட்டை கருவுறுதல்
- அல்புகோ பூஞ்சை எந்த வகுப்பைச் சேர்ந்தது? ஊமைசீட்ஸ்
- கசையிழை உடைய இயங்கு வித்துக்களை கொண்ட பூஞ்சைகள் எந்த வகுப்பை சேர்ந்தது? ஊமைசீட்ஸ்
- உணவாக பயன்படும் பூஞ்சைகள் எவை? லென்டினேஸ் எடோடஸ், அகாரிகஸ் பைஸ்போரஸ், வால்வேரியெல்லா வால்வேசியே
- ஈஸ்ட்கள் எந்த வைட்டமினை தயாரிக்க உதவுகிறது? வைட்டமின் பி
- எரிமோதீஸியம் ஆஷ் பியி என்ற பூஞ்சையில் இருந்து எந்த வைட்டமின் தயாரிக்கப்படுகிறது? வைட்டமின் பி 12
- பெனிசிலின் என்ற உயிர் எதிர் பொருட்கள் தயாரிக்க உதவும் பூஞ்சை எது? பெனிசிலியம் நோட்டேட்டம்
- செபலோஸ்போரின்கள் என்ற உயிர் எதிர் பொருட்கள் தயாரிக்க உதவும் பூஞ்சை எது? அக்ரிமோனியம் கிரைசோஜீனம்
- கிரைசியோபல்வின் என்ற உயிர் எதிர் பொருட்கள் தயாரிக்க உதவும் பூஞ்சை எது? பெ னிசிலியம் கிரைசோபல்வம்
- எர்காட் ஆல்கலாய்டு (ஏர்காட்டமைன்) எனப்படும் ரத்த குழாயினை சுருங்க வைக்கும் மருந்து தயாரிக்க உதவும் பூஞ்சை எது? கிளாவிசெப்ஸ்பர்ப்பூரியா
- சிட்ரிக் அமிலம் மற்றும் குளுக்கோனிக் அமிலம் தயாரிக்க பயன்படும் பூஞ்சை எது? ஆஸ்பெர் ஜில்லஸ் நைஜர்
- இட்டகோனிக் அமிலம் தயாரிக்க உதவும் பூஞ்சை எது? ஆஸ்பெர் ஜில்லஸ் டேரியஸ்
- கோஜிக் அமிலம் தயாரிக்க உதவும் பூஞ்சை எது? ஆஸ்பெர் ஜில்லஸ் ஒரைசே
- நொதித்தல் மூலம் சர்க்கரையை ஆல்கஹாலாக மற்ற உதவும் ஈஸ்ட் பெயர் என்ன?சக்காரோமைசிஸ் செரிவிசியே
- அடுமனையில் பெறப்படும் ரொட்டி பன் தயாரிக்க உதவும் பூஞ்சையின் பெயர் என்ன? ஈஸ்ட்
- பாலாடைக்கட்டிகள் தயாரிக்க உதவும் பூஞ்சைகள் எவை? பெனிசிலியம் ராக்குவிபோர்ட்டை மற்றும் பெனிசிலியம் கேமம்பர்ட்டை
- அமைலேஸ், புரொட்டியெஸ், லாக்டேஸ் போன்ற நொதிகள் தயாரிக்கப் பயன்படும் பூஞ்சைகள் எவை? ஆஸ்பெர் ஜில்லஸ் ஒரைசே மற்றும் ஆஸ்பெர்ஜில்லஸ் நைஜர்
- வேளாண்மை பயிர்களை தாக்கும் பூச்சிகளை அழிக்க உதவும் பூஞ்சைகள் எவை? பியுவேரியா பேசியானா, மெட்டாரைசியம் அனைசோபிளியா
- பூஞ்சை வேரிகளை (Mycorrhizae) உருவாக்கும் பூஞ்சைகள் எவை? ரைசோக்டோனியா மற்றும் பாலஸ், ஸ்கிளிரோடெர்மா
- ஜிப்ரெல்லின் என்ற தாவர வளர்ச்சி சீராக்கிப் பொருள் தயாரிக்க உதவும் பூஞ்சை எது? ஜிப்பேரேல்லா புயுஜிகுரை
- நச்சுத்தன்மையுள்ள பூஞ்சைகள் பொதுவாக எந்த பெயரில் அறியப்படுகிறது? தவளை இருக்கை பூஞ்சைகள்
- நச்சுத்தன்மையுள்ள பூஞ்சைகளுக்கு உதாரணம் தருக? அமானிட்டாபேலாய்ட்ஸ், அமானிட்டா வெர்னா, போலிட்டஸ் சடானஸ்
- உணவுப் பொருள்கள் கெட்டுப்போக காரணமான பூஞ்சைகள் எவை? அஸ்பெர்ஜில்லஸ், ரைசோபஸ், மியூக்கர், பெனிசிலியம்
- உலர்ந்த உணவுப் பொருட்களில் புற்று நோயை தூண்டும் "அப்ளாடாக்சின்" என்ற நச்சுப் பொருளை உண்டாக்கும் பூஞ்சை எது? அஸ்பெர்ஜில்லஸ் பிளாவஸ்
- பூஞ்சைகள் உற்பத்தி செய்யும் நச்சுப் பொருட்களுக்கு உதாரணம் தருக? பாட்டிலின் மற்றும் ஆக்ராடாக்சின் A
- தோலில் நோய் தோற்று ஏற்படுத்தும் பூஞ்சை எவ்வாறு அழைக்கப்படுகிறது? டெர்மோபைட்கள்
- டெர்மோபைட்கள் பூஞ்சைகளுக்கு உதாரணம் தருக? ட்ரைகோபைட்டான், டினியா, மைக்ரோஸ்போரம், எபிடெர்மோ பைட்டான்
- 1843-1845 ஆம் ஆண்டில் அயர்லாந்தில் ஏற்பட்ட பஞ்சத்தால் மில்லியன் மக்கள் இறப்புக்கு காரணமான உருளைக்கிழங்கில் ஏற்பட்ட "தாமதித்த வெப்பு நோய்க்கு" (Late blight of potato) காரணமான பூஞ்சை எது? பைட்டோப்தோரா இன்பெஸ்டன்ஸ்
- 1942-1943-இல் வங்காளத்தில் ஏற்பட்ட பஞ்சத்திற்கு காரணமான நெல்லில் தோன்றிய "வெப்பு நோய்க்கு" காரணமான பூஞ்சை எது? ஹெல்மிந்தொஸ்போரியம் ஓரைசே
- நெல்லில் கருகல் நோய் ஏற்படுத்தும் பூஞ்சை எது? மாக்ன போர்தே கிரைசியே
- கரும்பில் செவ்வழுகல் நோயை ஏற்படுத்தும் பூஞ்சை எது? கோலிட்டோடிரைக்கம் பால்கேட்டம்
- பீன்ஸில் ஆந்த்ரக்னோஸ் நோயை ஏற்படுத்தும் பூஞ்சை எது? கோலிட்டோடிரைக்கம் லிண்டி முத்தியானம்
- குருசிபெரே குடுபத் தாவரங்களில் வெண் துரு நோயை ஏற்படுத்தும் பூஞ்சை எது? அல்புகோ கேண்டிடா
- பீச் இலைச்சுருள் நோயை ஏற்படுத்தும் பூஞ்சை எது? டாப்ரினா டிபார்மன்ஸ்
- கோதுமையில் துரு நோயை ஏற்படுத்தும் பூஞ்சை எது? பக்ஸீனியா கிராமினிஸ் டிரிட்டிசை
- மனிதர்களில் சேற்றுப் புண்ணை ஏற்படுத்தும் பூஞ்சை எது? ஏபிடெர்மோபைட்டான் பிளாக்கோசம்
- மனிதர்களில் கேன்டிடியாசிஸ் நோயை ஏற்படுத்தும் பூஞ்சை எது? கேன்டிடா அல்பிகன்ஸ்
- மனிதர்களில் கோகிடியோய் டோமைக்கோசிஸ் என்ற நோயை ஏற்படுத்தும் பூஞ்சை எது? கோகிடியோய்டிஸ் இம்மிட்டிஸ்
- மனிதர்களில் ஆஸ்பெர்ஜில்லோசிஸ் என்ற நோயை ஏற்படுத்தும் பூஞ்சை எது? ஆஸ்பெர்ஜில்லஸ் பியூமிகேட்டஸ்
- பூஞ்சைகளின் மைசீலியங்கள் மற்றும் தாவர வேர்களுக்கிடையே ஏற்படும் ஒருங்குயிர் வாழ்க்கை அமைப்பிற்கு என்ன பெயர்? பூஞ்சைவேரிகள்
- பாசிகள் மற்றும் பூஞ்சைகளுக்கு இடையே ஏற்படும் ஒருங்குயிரி அமைப்பின் பெயர் என்ன? லைக்கென்கள்
- லைக்கென்கலில் உள்ள பூஞ்சைகளில் எதன் மூலம் பாலிலா இனப்பெருக்கம் நடைபெறுகிறது?தூண்டாதல், சொரீடியங்கள், ஐசிடியங்கள்
- லைக்கென்கலில் உள்ள பாசிகளில் பாலிலா இனப்பெருக்கம் எதன் மூலம் நடைப்பெறுகிறது? உறக்க நகராவித்துக்கள், ஹார்மோகோனியங்கள்
- மரப்பட்டை மீது காணப்படும் லைக்கன்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? கார்ட்டிகோலஸ்
- புற பூஞ்சை வேரிகளில் பூஞ்சைகளின் மைசீலியம், வேரினை சூழ்ந்து உருவாக்கும் அடர்த்தியான உறை எவ்வாறு அழைக்கப்படுகிறது? மேலுறை (Mantle)
- ஹார்டிக் வலை (Hartig net) எந்த வகை பூஞ்சை வேரிகள் உருவாக்குகிறது? புற பூஞ்சை வேரிகள்
- புற பூஞ்சை வேரிகளுக்கு உதாரணம்? பைசோலித்தஸ்டிங்டோரியஸ்
- அக பூஞ்சை வேரிகளின் வேறு பெயர் என்ன? வெசிக்குலார் ஆர்பஸ்குலார் மைக்கோரைசா பூஞ்சைகள் (VAM)
- குமிழ் பை (vesicle), ஹைபா பை (arbuscules) போன்ற உறிஞ்சு உறுப்புகள் எவ்வகை பூஞ்சை வேரிகளில் உருவாகிறது? அக பூஞ்சை வேரிகள்
- ஆர்பஸ்குலார் பூஞ்சை வேரிகளுக்கு உதாரணம் தருக? ஜிகாஸ்போரா
- எரிக்காயிடு பூஞ்சை வேரிகளுக்கு உதாரணம் தருக? ஆயிடியோ டெண்டிரான்
- ஆர்கிட் பூஞ்சை வேரிகளுக்கு உதாரணம் தருக? ரைசோக்டானியா
- கட்டை மீது காணப்படும் லைக்கன்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? லிக்னீகொலஸ் லைக்கன்
- பாறை மீது காணப்படும் லைக்கன்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? சாக்சிகோலஸ் லைக்கன்
- நிலத்தில் வாழும் லைக்கன்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? டெரிக்கோலஸ் லைக்கன்
- வரையறுக்கப்பட்ட பூஞ்சை அடுக்கு காணப்படாத லைக்கன்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? லெப்ரோஸ் லைக்கன்
- ஓடு போன்ற அமைப்புடைய லைக்கன்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? கிரெஸ்டொஸ் லைக்கன்
- இலை ஒத்த வகை லைக்கன்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? போலியோஸ் லைக்கன்
- கிளைத்த புதர் போன்ற தொங்கும் அமைப்பு கொண்ட லைக்கன்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? புரூட்டிக்கோஸ் லைக்கன்
- பாசி செல்கள் லைக்கன் உடலத்தில் சீராக பரவியிருந்தால் அவ்வகை லைக்கன்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? ஹோமியோமிரஸ்
- வரையறுக்கப்பட்ட பாசி, பூஞ்சை அடுக்கு என வேறுபாடுகள் காணப்படும் லைக்கன்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? ஹெட்டிரோமிரஸ்
- லைக்கென் உடலத்தில் உள்ள பூஞ்சை உயிரி ஆஸ்கொமைசீட்ஸ் வகுப்பைச் சேர்ந்ததாக இருந்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்? ஆஸ்க்கோ லைக்கென்
- லைக்கென் உடலத்தில் உள்ள பூஞ்சை உயிரி பேசிடியோமைசீட்ஸ் வகுப்பைச் சேர்ந்ததாக இருந்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்? பேசிடியோ லைக்கேன்
- பாறைகள் மீது வாழும் லைக்கேன்கள் சுரக்கும் கரிம அமிலம் எது? ஆக்ஸாலிக் அமிலம்
- உயிர் எதிர்பொருளாகப் பயன்படும் அஸ்னிக்அமிலம் எதில் இருந்துப் பெறப்படுகிறது? லைக்கன்கள்
- லைக்கன்கள் எந்த மாசுக் காரணியை உணரக்கூடியது? கந்தக டை ஆக்ஸைடு
- மாசுசுட்டிக் காட்டிகளாக கருதப்படுவது எது? லைக்கன்கள்
- லைக்கன்களில் இருந்து பெறப்படும் லிட்மஸ் காகிதத்திற்கு தேவையான சாயம் எது? ரோசெல்லா மாண்டாக்னே
- துருவ பிரதேசத்தில் வாழும் விலங்குகளுக்கு உணவாக பயன்படும் லைக்கன்கள் எது? கிளாடோனியா ரான்சிப்பெரினா (ரெயின்டீர் மாஸ்)
- பூஞ்சைகளில் நடைபெறும் பாலிலா இனப் பெருக்கத்தின் வகைகள் யாவை?
|
|
|
|
இயங்கு வித்துக்கள் (Zoospores) |
கைட்ரிடுகள் |
|
கோனிடியங்கள் (Conidia) |
ஆஸ்பெர்ஜில்லஸ்
|
|
ஆய்டிய வித்துக்கள் (oidia) |
எரிசை ஃபி |
|
பிளவுறுதல் (Fission) |
சைசோசாக்கரோமைசிஸ் & ஈஸ்ட் |
|
மொட்டுவிடுதல் (Budding) |
சாக்கரோமைசிஸ்
& ஈஸ்ட் |
|
கிளாமிடவித்துக்கள் (Chlamydospores) |
ஃபியுசேரியம் |