"வகைப்பாட்டுமுறைகள் மற்றும் பாக்டீரியா"
Prepared By
ELA.BABU VELAN,
BT ASST (SCIENCE),
TENKASI.
CELL: 9952329008
Mail: raamanesh143@gmail.com
- தாவரவியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்? தியோ பிராஸ்டஸ்
- தாவரங்களை புறப்பண்புகள் அடிப்படையில் (மரங்கள், புதர்ச்செடிகள் , சிறுசெடிகள்) பிரித்தவர் யார்? தியோ பிராஸ்டஸ்
- ரத்த நிறங்களின் அடிப்படையில் உயிரினங்களை இரு பிரிவுகளாக பிரித்தவர் யார்? அரிஸ்டாட்டில்
- உயிரின உலகத்தை புறப்பண்புகளின் அடிப்படையில் இருக்குழுக்களாக (தாவரங்கள், விலங்குகள்) பிரித்தவர் யார்? கார்ல் லின்னேயஸ்
- உயிரின உலகத்தை மூன்றுக் குழுக்களாக (புரோடீஸ்டா, பிளாண்டே, அனிமேலியா) பிரித்தவர் யார்? எர்னஸ்ட் ஹெக்கேல்
- உயிரின உலகத்தை நான்குக் குழுக்களாக (மோனிரா, புரோடீஸ்டா, பிளாண்டே, அனிமேலியா) பிரித்தவர் யார்? கோப்லேண்ட்
- உயிரின உலகத்தை ஐந்துக் குழுக்களாக (மோனிரா, புரோடீஸ்டா, பூஞ்சைகள், பிளாண்டே, அனிமேலியா) பிரித்தவர் யார்? R.H. விட்டாக்கெர்
- கீழ்க்கண்ட எந்த வகை உயிரினங்களின் செல்சுவர் பெப்டிடோ கிளைக்கான், மியூகோ பெப்டைட்களால் ஆனது? மொனிரா
- கீழ்க்கண்டவற்றுள் எது மொனிரா வகை உயிரினம் அல்ல? அ.ஆக்டினோமை சீட்கள் ஆ. மைக்கோபிளாஸ்மா இ. யுபாக்டீரியா ஈ . அமீபா
- கீழ்க்கண்டவற்றுள் எது புரோட்டிஸ்டா வகை உயிரினம் அல்ல? அ . பாரமீசியம் ஆ . பிளாஸ்மோடியம் இ . அமீபா ஈ ஆர்க்கி பாக்டீரியா
- உயிரி உலகின் ஆறு பெரும் பிரிவு வகைப்பாட்டினை வெளியிட்டவர் யார்? தாமஸ் கேவாலியர் - ஸ்மித்
- உயிரி உலகின் ஏழு பெரும் பிரிவு வகைப்பாட்டினை வெளியிட்டவர் யார்? ருகிரோ
- சிவப்பு அலை என அழைக்கப்படும் பாசித் பொலிவை உருவாக்கும் பாசிகள் யாவை? ஜிம்னோடியம் பிரேவி மற்றும் கோனியலாகஸ் டாமரின்சிஸ்
- பால் தயிராக காரணமான பாக்டீரியா எது? லாக்டோபேசில்லஸ்
- தயிரில் உள்ள அமிலம் எது? லாக்டிக் அமிலம்
- டைபாய்டு காய்ச்சல் எந்த பாக்டீரியாவால் வருகிறது? சால்மோனெல்லா டைபி
- காலரா, காசநோய் போன்ற நோய்களுக்கான நோய்க்காரணிகளைக் கண்டுபிடித்தவர் யார்? ராபர்ட் ஹின்ரிக் ஹெர்மன் (நோபல் பரிசு 1905)
- பாக்டீரியம் என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் யார்? C.G. எஹ்ரன்பேர்க்
- பாக்டீரியங்களை வேறுபடுத்தும் கிராம் சாயமேற்றும் முறையை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் யார்? கிறிஷ்டியன் கிராம்
- பாக்டீரியத்தின் மரபணு மாற்றத்தைக் கண்டுபிடித்தவர் யார்? பிரட்ரிக் கிரிபித்
- பிளாஸ்மிட்டை கண்டறிந்தவர் யார்? ஜோஸ்வா லேடெர்பர்க்
- பாக்டீரியங்களை முதன் முதலில் நுண்ணோக்கி மூலம் கண்டறிந்தவர் யார்? ஆண்டன் வான் லீவன் ஹூக்
- ஆண்டன் வான் லீவன் ஹூக் முதலில் பாக்டீரியாதை எவ்வாறு அழைத்தார் ? அனிமல் கியூல்ஸ்
- பாக்டீரியங்களின் செல் சுவர் எவற்றால் ஆனது? பாலிசாக்ரைட்கள் மற்றும் புரதம்
- தற்சார்பு ஊட்ட முறை பாக்டீரியாவிற்கு உதாரணம் எது? குரோமேஷியம்
- பாக்டீரியங்களில் காணப்படும் உடல் இனப்பெருக்க முறைகள் எவை? இருபிளவுறுதல் மற்றும் அகவித்துக்கள் உருவாதல்
- பாக்டீரியங்களில் காணப்படும் பாலின இனப்பெருக்க முறைகள் எவை? இணைவு, மரபணுமாற்றம் , மரபணு ஊடு கடத்தல்
- பாக்டீரியங்களின் வெளியுறை எவ்வாறு அழைக்கப்படுகிறது ? கிளைக்கோ கேலிக்ஸ்
- குடல் மற்றும் இரைப்பை புண் எந்த பாக்டீரியாவால் ஏற்படுகிறது? ஹெலிகோபாக்டர் பைலோரி
- பேசில்லஸ் துரின்சியன்சிஸ் பாக்டீரியத்தில் இருந்து பெறப்படும் Bt நச்சின் பயன் யாது? பயிர்களில் பூச்சி எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்க
- பாக்டீரியங்களின் செல் சுவர் எவற்றால் ஆனது? பெப்டிடோ கிளைக்கான், மியூகோ பெப்டைட்கள்
- பாக்டீரியங்களின் பிளாஸ்மாச்சவ்வு எவற்றால் ஆனது? லிப்போ புரதம்
- பாக்டீரியங்களில் காணப்படும் ஈரிழை வட்ட வடிவ தானே பெருக்கமடையும் கொண்ட குரோமோசோம்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? பிளாஸ்மிட்கள்
- புரத சேர்க்கை நடைபெறும் மையம் என அழைக்கப்படுவது எது? ரிபோசோம்கள்
- பாக்டீரியாவில் காணப்படும் ரிபோசோம்கள் எந்த வகையைச் சார்ந்தது? 70s
- mRNA மீது பல ரிபோசோம்கள் சேர்ந்து காணப்படும் அமைப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது? பாலிரிபோசோம்கள் அல்லது பாலிசோம்கள்
- பாக்டீரியாவின் இடப்பயிற்சி உறுப்பு எது? கசையிழை (பிளாஜெல்லம்)
- பாக்டீரியாவின் கசையிழை எந்த அளவு உடையது? 20-30μm விட்டம்
- பாக்டீரியாவின் கசையிழையின் நீளம் என்ன? 15μm
- பாக்டீரியாவின் இணைவிற்கு உதவும் உறுப்பு எது? பிம்ரியே அல்லது பைலி (நுண் சிலும்புகள்)
- பாக்டீரியாவில் உள்ள பிம்ரியே அல்லது பைலியின் நீளம் என்ன? 0.2-20μm
- பாக்டீரியாவில் உள்ள பிம்ரியே அல்லது பைலியின் விட்டம் என்ன? 0.025 μm
- கிராம் சாயமேற்றும் முறையில் கிராம் நேர் பாக்டீரியங்கள் எந்த நிறத்தில் தோன்றுகின்றது? அடர் ஊதா நிறம்
- கிராம் சாயமேற்றும் முறையில் படிக ஊதா சாயத்தை எந்த வகைப் பாக்டீரியங்கள் ஏற்பதில்லை? கிராம் எதிர் வகைப் பாக்டீரியங்கள்
- சாப்ரான் சாயத்தை பயன்படுத்தும் பொது கிராம் எதிர் வகைப் பாக்டீரியங்களை நுண்ணோக்கியில் காணும்போது என்ன நிறத்தில் தோன்றும்? சிவப்பு நிறம்
- கிராம் நேர் பாக்டீரியங்களின் செல் சுவற்றில் காணப்படும் அமிலங்கள் எவை? டெக்காயிக் அமிலம் மற்றும் டேக்யூரானிக் அமிலம்
- மேக்னடோசோம்கள் வகைப் பாக்டீரியங்களுக்கு உதாரணம் தருக? அக்குவாஸ்பைரில்லம் மேக்னடோடேக்டிகம்
- மேக்னடோசோம்கள் வகைப் பாக்டீரியங்களில் காணப்படும் துகள்கள் எவை? மேக்னடைட் (Fe3O4)
- சுவாச நிகழ்ச்சிக்கு கட்டாயம் ஆக்சிஜன் பயன்படுத்தும் பாக்டீரியங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? நிலை மாறா காற்று சுவாசிகள்
- நிலை மாறா காற்று சுவாசிகள் வகைப் பாக்டீரியங்களுக்கு உதாரணம் எது? மைக்ரோகாக்கஸ்
- காற்றுணா சுவாசித்தலில் ஈடுபடும் பாக்டீரியங்களுக்கு உதாரணம் எது? கிளாஸ்ட்ரிடியம்
- எந்த வாயுவைப் பயன்படுத்தி வளரும் பாக்டீரியங்கள் கேப்னோபிலிக் பாக்டீரியங்கள் என அழைக்கப்படுகிறது? கார்பன் டை ஆக்ஸைடு
- கேப்னோபிலிக் பாக்டீரியங்களுக்கு உதாரணம் தருக? கேம்பைலோபாக்டர்
- பசும் கந்தக வகைப் பாக்டீரியங்களில் காணப்படும் நிறமியின் பெயர் என்ன? பாக்டீரிய விரிடின்
- பசும் கந்தக வகைப் பாக்டீரியாவுக்கு உதாரணம் தருக ? குளோரோபியம்
- இளம் சிவப்பு கந்தக பாக்டீரியங்களில் காணப்படும் நிறமியின் பெயர் என்ன? பாக்டீரிய குளோரோபில்
- இளம் சிவப்பு கந்தக பாக்டீரியங்களுக்கு உதாரணம் எது? குரோமேஷீயம்
- பசும் கந்தக வகைப் பாக்டீரியங்களில் ஹைடிரஜன் கொடுநர்களாக செயல்படும் வேதிப்பொருள் எது? ஹைடிரஜன் சல்பைடு
- இளம் சிவப்பு கந்தக வகைப் பாக்டீரியங்களில் ஹைடிரஜன் கொடுநர்களாக செயல்படும் வேதிப்பொருள் எது? தாயோசல்பேட்
- கரிம ஒளிச்சார்பு ஊட்ட பாக்டீரியங்களில் ஹைட்ரஜன் கொடுனர்களாக பயப்படுவது எது? கரிம அமிலம் அல்லது ஆல்கஹால்
- இளம் சிவப்பு கந்தகம் சாரா பாக்டீரியங்களுக்கு உதாரணம் எது? ரோடோஸ்பைரில்லம்
- கனிம வேதிச்சார்பு ஊட்ட பாக்டீரியங்களுக்கு உதாரணம் தருக? அ. தயோ பேசில்லஸ், தயோ ஆக்சிடன்ஸ் (கந்தக பாக்டீரியங்கள்) ஆ. பெர்ரோ பேசில்லஸ், பெர்ரோ ஆக்சிடன்ஸ் (இரும்பு பாக்டீரியங்கள்) இ. ஹைட் ரோ ஜீனோ மோனாஸ் (ஹைட்ரஜன் பாக்டீரியங்கள்) ஈ. நைட்ராசோ மோனாஸ், நைட்ரோபாக்டர் (நைட்ரஜனாக்க பாக்டீரியங்கள்)
- மீத்தேன் பாக்டீரியங்களுக்கு உதாரணம் தருக? மெத்தனோகாக்கஸ்
- அசிட்டிக் அமிலப் பாக்டீரியங்களுக்கு உதாரணம் தருக? அசிட்டோபாக்டர்
- லாக்ட்டிக் அமிலப் பாக்டீரியங்களுக்கு உதாரணம் தருக? லாக்டோ பாசில்லஸ்
- ஒட்டுண்ணியாக வாழும் பாக்டீரியா எது? மைக்கோ பாக்டீரியம்
- சாற்றுண்ணியாக வாழும் பாக்டீரியா எது? பேசில்லஸ் மைக்காய்டஸ்
- ஒருங்குயிர்களாக வாழும் பாக்டீரியா எது? ரைசோபியம்
- அகவித்துக்களை (Endospores) உருவாக்கும் பாக்டீரியாக்கள் எவை? பேசில்லஸ் மெகாதீரியம், பேசில்லஸ் ஸ்பெரிக்கஸ், கிளாஸ்ட் டிரிடியம்
- பாக்டீரியங்களில் நடைபெறும் இணைவு முறையின் செயல்பாட்டை முதலில் விளங்கியவர்கள் யார்? J. லேடர்பர்க் மற்றும் எட்வர்ட் L.டாட்டம்
- ஒரு பாக்டீரியத்தில் இருந்து மற்றொறு பாக்டீரியத்திற்கு dna இடமாற்றம் செய்யப்படுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது? மரபணு மாற்றம்
- பிரட்ரிக் கிரிஃ பித் என்பவர் எந்த பாக்ட்ரியாவைக் கொண்டு மரபணு மாற்றத்தை விளக்கினார்? டிப்ளோ காக்கஸ் நிமோனியே
- மரபணு ஊடு கடத்தல் முறையை முதன் முதலில் கண்டறிந்தவர்கள் யார்? ஜிண்டர் மற்றும் லேடர் பர்க்
- ஜிண்டர் மற்றும் லேடர் பர்க் எந்த பாக்டீரியாவின் மரபணு ஊடு கடத்தல் முறையை கண்டறிந்தார்கள்? சால்மோனெல்லா டைபிமியுரம்
- மரபணு ஊடு கடத்தல் முறையில் எதன் மூலமாக dna இடமாற்றம் செய்யப்படுகிறது? பாக்டீரியபேஜ்
- உயிரினங்கள் இறந்த பின்பு அவற்றின் உடலில் உள்ள புரதங்களை அம்மோனியாவாக மாற்றும் பாக்டீரியங்கள் எவை? பேசில்லஸ் ரமோஸஸ் மற்றும் பேசில்லஸ் மைக் காய்டஸ்
- அம்மோனியா உப்புக்களை நைட்ரைட் மற்றும் நைட்ரேட்டாக மாற்றும் பாக்டீரியாக்கள் எவை? நைட்ரோபாக்டர் மற்றும் நைட்ராசோமோனாஸ்
- வளி மண்டல நைட்ரஜனை கரிம நைட்ரஜனாக மற்றும் பாக்டீரியாக்கள் எவை? அசட்டோபாக்டர், கிளாஸ்ட்டிரிடியம், ரைசோபியம்
- ஸ்ட்ரெப்டோமைசின் (எலும்புருக்கி, மூளைச்சவ்வு பாதிப்பு, நிமோனியா காய்ச்சல் போன்ற நோய்களை குணப்படுத்தும்) என்ற உயிர் எதிர்ப்பொருள் எந்த பாக்ட்ரியா மூலம் தயாரிக்கப்படுகிறது? ஸ்ட்ரெப்டோமைசிஸ் கிரைசியஸ்
- ஆரியோ மைசின் (கக்குவான் இருமல் குணப்படுத்தும்) என்ற உயிர் எதிர்ப்பொருள் எந்த பாக்ட்ரியா மூலம் தயாரிக்கப்படுகிறது? ஸ்ட்ரெப்டோமைசிஸ் ஆரியோ பேசியன்ஸ்
- குளோரோ மைசிட்டின் (டைபாய்டு காய்ச்சல் குணப்படுத்தும்) என்ற உயிர் எதிர்ப்பொருள் எந்த பாக்ட்ரியா மூலம் தயாரிக்கப்படுகிறது? ஸ்ட்ரெப்டோமைசிஸ் வெனிசுலே
- பேசிட்ராசின் (மேகநோய் குணப்படுத்தும்) என்ற உயிர் எதிர்ப்பொருள் எந்த பாக்ட்ரியா மூலம் தயாரிக்கப்படுகிறது? பேசில்லஸ் லைக்கனி பார்மிஸ்
- பாலிமிக்சின் என்ற உயிர் எதிர்ப்பொருள் எந்த பாக்ட்ரியா மூலம் தயாரிக்கப்படுகிறது? பேசில்லஸ் பாலிமிக்ஸா
- பாலில் உள்ள லாக்டோஸ் சர்க்கரையை லாக்டிக் அமிலமாக மாற்றும் பாக்டீரியா எவை? லாக்டோ பேசிலஸ் லாக்டிஸ் மற்றும் லாக்டோ பேசில்லஸ் பல்கேரிக்கஸ்
- பாலை, வெண்ணையாக மாற்றும் பாக்டீரியா எவை? லாக்டோ பேசிலஸ் லாக்டிஸ், லியூக்கோனாஸ்டாக் சிட்ரோவோரம்
- பாலை, பாலாடைக்கட்டியாக மாற்றும் பாக்டீரியா எவை? லாக்டோ பேசிலஸ் அசிட்டோபில்லஸ் மற்றும் லாக்டோ பேசிலஸ் லாக்டிஸ்
- பாலை, தயிராக மாற்றும் பாக்டீரியா எவை? லாக்டோ பேசிலஸ் லாக்டிஸ்
- பாலை "யோகர்ட்" ஆக மாற்றும் பாக்டீரியா எது? லாக்டோபேசில்லஸ் பல்கெரிக்கஸ்
- அசிட்டிக் அமிலம் (வினிகர்) தயாரிக்க உதவும் பாக்டீரியா எது? அசிட்டோ பாக்டர் அசிட்டை
- ஆல்கஹால் (பியூட்டைல் மற்றும் மீத்தைல் ஆல்கஹால்) தயாரிக்க உதவும் பாக்டீரியா எது? கிளாஸ்ட்டிரிடியம் அசிட்டோ பியூட்டிலிக்கம்
- அசிட்டோன் தயாரிக்க உதவும் பாக்டீரியா எது? கிளாஸ்ட்டிரிடியம் அசிட்டோ பியூட்டிலிக்கம்
- நார்த் தாவரங்களில் இருந்து நார்களை பிரித்தெடுக்க உதவும் பாக்டீரியா எது? கிளாஸ்ட்டிரிடியம் டெர்ஷியம்
- மனிதனின் குடற்ப் பகுதியில் வாழ்ந்து வைட்டமின் கே மற்றும் வைட்டமின் பி உற்பத்தி செய்யும் பாக்டீரியா எது? ஈஸ்டிரிச்சியா கோலை
- சர்க்கரைப் பொருளில் இருந்து வைட்டமின் பி 2 தயாரிக்க உதவும் பாக்டீரியா எது? கிளாஸ்ட்டிரிடியம் அசிட்டோ பியூட்டிலிக்கம்
- புகையிலை மற்றும் தேயிலையை பதப்படுத்த உதவும் பாக்டீரியா எது? மைக்ரோகோக்கஸ் கேண்டி கன்ஸ் மற்றும் பேசில்லஸ் மேகாதீரியம்
- நெல்லில் ஏற்படும் வெப்பு நோய்க்கு காரணமான பாக்டீரியா எது? சாந்தொமோனாஸ் ஒரைசே
- ஆப்பிளில் ஏற்படும் தீ வெப்பு நோய்க்கு காரணமான பாக்டீரியா எது? எர்வினியா அமைலோவோரா
- கேரட்டில் ஏற்படும் மென் அழுகல் நோய்க்கு காரணமான பாக்டீரியா எது? எர்வினியா கேரட்டோவோரா
- எலுமிச்சையில் ஏற்படும் திட்டு நோய்க்கு (கேன்கர்) காரணமான பாக்டீரியா எது? சாந்தொமோனாஸ் சிட்ரி
- பருத்தியில் ஏற்படும் கோண இலைப்புள்ளி நோய்க்கு காரணமான பாக்டீரியா எது? சாந்தோமோனாஸ் மால்வாசியேரம்
- உருளைக்கிழங்கில் ஏற்படும் வளைய அழுகல் நோய்க்கு காரணமான பாக்டீரியா எது? செபிடோனிக்கஸ்
- உருளைக்கிழங்கில் ஏற்படும் படைப்புண் நோய்க்கு காரணமான பாக்டீரியா எது? ஸ்ட்ரெப்டோமைசிஸ் ஸ்கேபிஸ்
- செம்மறியாடுகளில் ஆந்த்ராக்ஸ் நோயை உருவாக்கும் பாக்டீரியா எது? பேசில்லஸ் ஆந்த்ராசிஸ்
- கால்நடைகளில் புரூசெல்லோசிஸ் என்ற நோயை உருவாக்கும் பாக்டீரியா எது? புரூசெல்லா அபோர்டஸ்
- கால்நடைகளின் எலும்புருக்கி நோய்க்கு காரணமான பாக்டீரியா எது? மைக்கோ பாக்டீரியம் பொவைஸ்
- கால்நடைகளில் ஏற்படும் கருங்கால் நோய்க்கு காரணமான பாக்டீரியா எது? கிளாஸ்ட்டிரிடியம் சான்வி
- காலரா நோயை உருவாக்கும் பாக்டீரியாவின் என்ன? விப்ரியோ காலரே
- டைபாய்டு காய்ச்சலை உருவாக்கும் பாக்டீரியாவின் பெயர் என்ன? சால்மோனெல்லா டைபி
- எலும்புருக்கி நோயை உருவாக்கும் பாக்டீரியாவின் பெயர் என்ன? மைக்கோ பாக்டீரியம் டியூபர் குளோசிஸ்
- தொழு நோயை உருவாக்கும் பாக்டீரியாவின் பெயர் என்ன? மைக்கோ பாக்டீரியம் லெப்ரே
- நிமோனியா காய்ச்சலை உருவாக்கும் பாக்டீரியாவின் பெயர் என்ன? டிப்ளோகாக்கஸ் நிமோனியே
- பிளேக் நோயை உருவாக்கும் பாக்டீரியாவின் பெயர் என்ன? ஏர்சினியா பெஸ்டிஸ்
- டிப்தீரியா என்ற தொண்டை அடைப்பான் நோயை உருவாக்கும் பாக்டீரியாவின் பெயர் என்ன? கார்னி பாக்டீரியம் டேட்டானி
- டெட்டனஸ் (இசிப்பு வலிப்பு நோய்) உருவாக்கும் பாக்டீரியாவின் பெயர் என்ன? கிளாஸ்ட்டிரிடியம் டேட்டானி
- உணவு நஞ்சாதலுக்கு காரணமான பாக்டீரியா எது? கிளாஸ்ட்டிரிடியம் பொட்டுலினம்
- மேக நோய்க்கு காரணமான பாக்டீரியா எது? டிரிப்போனிமா பேலிடம்
- புரோபயாட்டிக் தயிர் மற்றும் பற்பசை தயாரிக்க உதவும் எவை? லாக்டோபேசில்லஸ் மற்றும் பைபிடோ பாக்டீரியம்
- ஆர்க்கி பாக்டீரியங்களுக்கு (பழமையான தொல்லுட்கரு உயிரி) உதாரணம் தருக? மெத்தனோ பாக்டீரியம், ஹாலோ பாக்டீரியம், தெர்மோ பிளாஸ்மா
- நீலப்பசும்பாசிகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? சயனோ பாக்டீரியங்கள் அல்லது சயனோ பைசி
- நீலபசும்பாசிகள் கால்சியம் கார்பனேட்டுடன் இணைந்து தோன்றும் கூட்டமைப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது? ஸ்ட்ரொமாட்டோலைட்கள்
- கடலில் வாழும் நீலபசும்பாசிகள் எவை? ட்ரைக்கோ டெஸ்மியம், டெர்மாகார்ப்பா, ட்ரைக்கோ டெஸ்மியம் எரித்ரேயம்
- கடலின் சிவப்பு நிறத்திற்கு (செங்கடல்) காரணமான நீலப்பசும்பாசி எது? ட்ரைக்கோ டெஸ்மியம் எரித்ரேயம்
- சைகஸின் பவள வேரில் வாழும் நீலப்பசும்பாசிகள் எவை? நாஷ்டாக் மற்றும் அனபீனா
- நீர்வாழ் பெரணி என அழைக்கப்படுவது எது? அசோலா
- லைக்கன்களின் உடலத்தில் பாசி உறுப்பினர்களாக வாழும் நீலப்பசும்பாசிகள் எவை? கிளியோகாப்சா, நாஷ்டாக், சைட்டோனீமா
- நைட்ரஜனை நிலைப்படுத்தும் நீலப்பசும்பாசிகள் எவை? நாஷ்டாக் மற்றும் அனபீனா
- PHB (பாலி ஹைடிராக்சி ப்யூட்டிரேட்) என்ற நுண்ணுயிரிசார் நெகிழி எந்த பாக்டீரியத்தின் உதவியால் பெறப்படுகிறது? ராஸ்டோனியா
- ஹைட்ரோகார்பன்களை சிதையுறச்செய்யும் பாக்டீரியா எது? சூடோ மொனாஸ் பூடிடா (சூப்பர் பக்-superbug)
- புரூட்டின் என்பது என்ன? ஒரு செல் புரதம்
- புரூட்டின் எந்த பாக்டீரியா மூலம் பெறப்படுகிறது? மெத்திலோ டிராபிஸ் மற்றும் மெத்திலோபில்லஸ்
- தாவரங்களில் நுனிக்கழலை நோய் எந்த பாக்டீரியாவால் ஏற்படுகிறது? அக்ரோ பாக்டீரியம் டுமி பேசியன்ஸ்
- டாக் பாலிமெரேஸ் என்ற நொதி எந்த பாக்டீரியம் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது? தேர்மஸ் அக்குவாட்டிகஸ்
- டாக் பாலிமெரேஸ் என்ற நொதி எதில் பயன்படுகிறது? பலப்படியாக்க தொடர் வினை (PCR - Polymerase Chain Reaction)
- உயிரிவளி (biogas) உற்பத்தி செய்யப்பயன்படும் பாக்டீரியா எது? மெத்தனோபாக்டீரியம்
- கடுமையான சூழ்நிலையில் அதிக உப்புத் தன்மையில் வாழும் பாக்டீரியா எது? ஹாலோ பாக்டீரியம்
- β கரோட்டீன் உற்பத்தியில் பயன்படும் பாக்டீரியா எது? ஹாலோ பாக்டீரியம்
- ஒரு செல் உடல் அமைப்பில் காணப்படும் சயனோ பாக்டீரியம் எது? குருக்காக்கஸ்
- கூட்டமைப்பாக காணப்படும் சயனோ பாக்டீரியங்கள் எவை? கிளியோ காப்சா
- இழை வடிவில் காணப்படும் சயனோ பாக்டீரியம் எது? நாஷ்டாக்
- வழுக்கு நகர்வு இயக்கம் கொண்ட சயனோ பாக்டீரியம் எது? ஆஸில்லடோரியா
- சயனோ பாக்டீரியதில் சேமிப்பு உணவாகக் காணப்படுவது எது? சயனோ பைசிய தரசம்
- சயனோ பாக்டீரிய உடலத்தின் காணப்படும் நுனியில் நைட்ரஜனை நிலைப்படுத்த உதவும் பெரிய நிறமற்ற செல்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? ஹெட்டிரோசிஸ்ட்டுகள்
- மிக்ஸோபைசி என அழைக்கப்படும் உயிரினங்கள் எந்தப் பிரிவைச் சார்ந்தவை? சயனோ பாக்டீரியம்
- நீர் மலர்ச்சியினை ஏற்படுத்தும் சயனோபாக்டீரியங்கள் எவை? மைக்ரோசிஸ்டிஸ் ஏறுஜினோசா மற்றும் அனபீனா பிளாஸ் அக்குவே
- ஒற்றை செல் புரதமாக பயன்படுத்தப்படும் சயனோபாக்டீரியம் எது? ஸ்பைருலினா
- துருவக் கரடியின் உரோமங்கலின் மீது வளரும் நீலப்பசும்பாசி எது? அபனோகேப்சா மாண்டானா
- மொல்லிகியுட்கள் என அழைக்கப்படுவது எது? மைக்கோபிளாஸ்மா
- மைக்கோபிளாஸ்மா என்ற கிராம் எதிர் பாக்டீரியாவின் அளவு யாது? (0.1 – 0.5 μm)
- மைக்கோபிளாஸ்மா என்ற கிராம் எதிர் நுண்ணுயிரியை (பாக்டீரியாவை) முதன் முதலில் தனிமைப்படுத்தியவர் யார்? நக்கார்டு
- வளர் ஊடகத்தில் மைக்கோபிளாஸ்மா எவ்வாறு காணப்படுகிறது? பொறித்த முட்டை
- மைக்கோபிளாஸ்மா நுண்ணுயிரியால் கத்திரி தாவரத்தில் ஏற்படும் நோய் எது? சிறிய இலை நோய்
- மைக்கோபிளாஸ்மா நுண்ணுயிரியால் லேகூம் வகைத் தாவரத்தில் ஏற்படும் நோய் எது? துடைப்பம் நோய்
- மைக்கோபிளாஸ்மா நுண்ணுயிரியால் இலவங்கத் தாவரத்தில் ஏற்படும் நோய் எது? இலைக்கொத்து நோய்
- மைக்கோபிளாஸ்மா நுண்ணுயிரியால் சந்தனம் தாவரத்தில் ஏற்படும் நோய் எது? கூர் நுனி நோய்
- புளுரோ நிமோனியா நோயை ஏற்படுத்துவது எது? மைக்கோபிளாஸ்மா மைக்காய்டஸ்
- கதிர் பூஞ்சைகள் என அழைக்கப்படும் கிராம் நேர் பாக்டீரியா எது? ஆக்டினோமைசீட்ஸ் அல்லது ஆக்டினோபாக்டீரியங்கள்
- அல்னஸ் மற்றும் கேசுரைனா தாவரங்களில் நைட்ரஜனை நிலைப்படுத்தும் ஆக்டினோபாக்டீரியம் எது? பிராங்கியா
- கால்நடைகளில் கழலை தாடை நோயை (Lumpy Jaw) ஏற்படுத்தும் நுண்ணுயிரி எது? ஆக்டினோமைசீட்ஸ் போவிஸ்
- மழைக்குப் பின் மண் வாசனை ஏற்படக்காரணமான ஆக்டினோபாக்டீரியம் எது? ஸ்ட்ரெப்டோமைசிஸ்
- டெட்ராசைக்ளின் என்ற உயிர் எதிர்ப் பொருள் தயாரிக்கப்பயன்படும் ஆக்டினோபாக்டீரியம் எது? ஸ்ட்ரெப்டோமைசிஸ்
- ஸ்ட்ரெப்டோமைசின் என்ற உயிர் எதிர்ப் பொருள் தயாரிக்கப்பயன்படும் ஆக்டினோபாக்டீரியம் எது? ஸ்ட்ரெப்டோமைசிஸ் கிரிஸியஸ்
- குளோரம் பேனிகால் என்ற உயிர் எதிர்ப் பொருள் தயாரிக்கப்பயன்படும் ஆக்டினோபாக்டீரியம் எது? ஸ்ட்ரெப்டோமைசிஸ் வெனிசுலே (Streptomyces venezuelae)
No comments:
Post a Comment