Search This Blog

Saturday, 4 June 2022

மாணவர் சேர்க்கை ஆசிரியர்கள் என்ன செய்யவேண்டும்? தொடக்க கல்வி இயக்குனர் செயல்முறைகள் வெளியீடு

 


















மாணவர்கள்/இயற்கை ஆர்வலர்களுக்கு குற்றாலம் செண்பகா தேவி அருவியை பார்க்க வாய்ப்பு


குற்றாலம் -
செண்பகாதேவி அருவி 




செண்பகாதேவி
அம்மன் கோவில் 





நாள்:

ஜூன் 5 

(உலக சுற்றுச்சூழல் தின விழா)


நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:

தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

வனத்துறை 

மற்றும் 

தேசிய பசுமைப்படை, 

தென்காசி மாவட்டம் 


நிகழ்வு 

மஞ்சள் பை விழிப்புணர்வு பேரணி 

மற்றும் 

பசுமை சூழல் நடைபயணம்  

செண்பகாதேவி அருவி வரை நடைபெற இருக்கிறது. 


விருப்பம் உள்ளவர்கள்

பதிவு செய்யும் முறை 

திரு.சுரேஷ்குமார் 

9486585490

என்ற எண்ணில் தொடர்பு 

கொண்டு தங்கள் வருகையை 

பதிவு செய்யவும் 


பதிவு செய்ய 

கடைசி நாள் 

04.06.2022 மாலை 6.00 மணி. 


பேரணி தொடங்கும் இடம் 

மற்றும் நேரம் 

ஜுன் 5 ஞாயிறு 

காலை 9 மணி 

குற்றாலம் பேருந்து நிலையம் 

அருகில் உள்ள சிறுவர் பூங்கா 


குறிப்பு 

டிரெக்கிங் ஆர்வம் உள்ள இளைஞர்கள்/மாணவர்கள், குற்றாலம் சென்பகாஅருவியை இதுவரை பார்க்காதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள் 

எண்ணும் எழுத்தும் பயிற்சி தமிழ் PPT (PDF )


MODEL 1 PDF

👇👇

CLICK HERE TO DOWNLOAD



MODEL 2 PDF

👇👇

CLICK HERE TO DOWNLOAD



எண்ணும் எழுத்தும் 

Mobile App -Demo

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




எண்ணும் எழுத்தும் 

TLM 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

எண்ணும் எழுத்தும் பயிற்சி நோக்கம் மற்றும் ஆண்டுத்திட்டம் POWER POINT PDF


👇👇

Thursday, 2 June 2022

ஆசிரியர் சங்கங்கள் தொடக்க கல்வி இயக்குனர் சந்திப்பு அடுத்த கல்வி ஆண்டில் வரவுள்ள புதிய மாற்றங்கள்

      

எண்ணும் எழுத்தும் என்ற புது முறை கற்பித்தலை  பள்ளி துவங்கும் முதல் நாளான 13 ஆம் தேதியே  முதல்வர் இந்த புது வழி முறைகளை துவக்கிவைத்து நாம் கையாள வேண்டியது இருப்பதால் பயிற்சியை ரத்து செய்ய இயலாத நிலை உள்ளது. 



இப்பயிற்சி நாட்களுக்கான ஈடு செய்யும் விடுப்பை வழங்க தான் ஆவன செய்ததாகவும் இனி வரும் காலங்களில் இது போல் விடுமுறை நாட்களில்  பயிற்சி நடத்தப்படாது எனவும் இயக்குனர் கூறினார்கள்



குறுவள மைய பயிற்சிக்கு செல்லும் 7 நாட்களும், மொத்த பள்ளி வேலை நாட்களில் (210) சேர்த்துக்கொள்ளப்படும் என்று கூறினார்கள்



பள்ளிகளில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபடாமல் ஒரே மாதிரியான குறைந்த எண்ணிக்கை இருக்குமாறு உரிய சுற்றறிக்கை விரைவில் அனுப்பப்படும் 



ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்வேறு வகையான பதிவேடுகள் பராமரிக்க அதிகாரிகளால் நிர்பந்தப்படுத்தப்படுகிறோம் . இதனால் கற்பித்தல் பணி பாதிக்கிறது என்ற வருத்தத்தை சங்கங்கள் பதிவு செய்தன.



இனிமேல் மாநிலம் முழுவதுக்குமான ஒரே மாதிரியான பதிவேடுகள் பராமரிக்க இயக்குனரே ஒரு நெறிமுறை உத்தரவிடுவதாகவும், அதை தாண்டி வேறு எந்த பதிவேடுகளையும் ஆசிரியர்கள் பராமரிக்க தேவையில்லை எனவும் கூறினார்கள்.



EMIS பதிவேற்றம் பற்றி அனைவரும் ஆட்சேபித்த வகையில் எதிர்காலத்தில் முற்றிலும் தவிர்க்கப்பட்டு ஆசிரியர்களுக்கு எளிய நடைமுறைகளை அறிமுகப்படுத்துவதாக உறுதியளித்தார்கள்



ஆசிரியர்களை நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வுக்கு வற்புறுத்தாமல் கற்பித்தல் பணிக்கு மட்டுமே உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று வரும் காலங்களில் மாணவர்களுக்கான நலத்திட்டங்கள்  நேரடியாக பள்ளியிலேயே கிடைக்கச் செய்வதற்கு வழிவகை செய்வதாக உறுதியளித்தார்கள்

.


இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் குறித்த விரிவான விவர அறிக்கை அரசுக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது விரைவில் சரி செய்யப்படும்



சில மாவட்டங்களில் அடிப்படை ஊதியம் 65000த்தை கடந்த நிலையில் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு இரண்டு ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்படும் முறையை ரத்து செய்து ஒவ்வொரு ஆண்டும் ஊதிய உயர்வு கிடைக்க வழிவகை செய்வதாக கூறினார்கள் 



தமிழகத்தில் மொத்தம் 669 பள்ளிகளில் ஓரிலக்க எண்ணிக்கையில் மாணவர்கள் உள்ளதால் அதனை ஈரிலக்க எண்ணிக்கையில் தரம் உயர்த்தி ஆசிரியர்கள் நிரவலை தடுக்க விளையும்படியும்,  இந்த வருடம் மாணவர்கள் சேர்க்கையை அதிகபடுத்த எதிர்வரும் 14.06.22 மாநிலம் முழுவதும் smc, pta மற்றும் உள்ளூர் அமைப்புகளுடன் இணைந்து மாணவர் சேர்க்கைப் பேரணி நடத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்கள்.



ஆசிரியர் தேவை பணியிடத்திற்கு மாறுதல் செய்யப்பட்டு ஊதியம் வராத ஆசிரியர்களுக்கு பத்தே நாட்களில் ஊதியம் கிடைக்க விரைந்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள்.



உடனடியாக 7500 நடுநிலைப்பள்ளிகளுக்கு கணினி ஆய்வகம் வழங்கப்படும்.



இதனைத்தொடர்ந்து படிப்படியாக எதிர்காலத்தில் தொடக்க பள்ளிகளுக்கும் மடி கணினி வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறினார்கள்.



NEW POST

👇👇

NEET தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச ஆன்லைன் தேர்வு (45 தேர்வு) தமிழ் மடல் இணையதளம் அறிவிப்பு

👇👇

CLICK HERE TO VISIT



NMMS EXAM 

MODEL TEST-7 

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல்

'சமத்துவம் மற்றும் 

அரசியல் காட்சிகள்'

👇👇

CLICK HERE TO VISIT

10 வகுப்பு கணக்கு அறிவியல் பிழையான விடைகளைக்கொண்ட வினாக்களுக்கு மதிப்பெண் வழங்குதல் முறை குறித்து இணை இயக்குனர் விளக்கம்


கணக்கு தேர்வு 

அறிவியல் தேர்வு 



NEW POST

👇👇

NEET தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச ஆன்லைன் தேர்வு (45 தேர்வு) தமிழ் மடல் இணையதளம் அறிவிப்பு

👇👇

CLICK HERE TO VISIT



NMMS EXAM 

MODEL TEST-7 

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல்

'சமத்துவம் மற்றும் 

அரசியல் காட்சிகள்'

👇👇

CLICK HERE TO VISIT

பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் CPS பற்றி நிதியமைச்சர் திரு.பழனிவேல் தியாகராஜன் விளக்கம்

                                          



   



பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் வட்டித் தொகை அரசு பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.


சென்னை:


தமிழ்நாடு அரசு பணியாளர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்து சில ஊடகங்களில் வெளிவந்த செய்திகளுக்கு நிதி அமைச்சர்  பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ள பதில் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:


சமீபத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்து பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் தவறானது, உண்மைக்கு புறம்பானது.  


தமிழ்நாடு அரசுப் பணியாளர்களுக்கு 01.04.2003 முதல் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அன்றைய அ.இ.அ.தி.மு.க. அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் பின் தமிழ்நாடு அரசுப் பணியில் சேரும் அனைத்துப் பணியாளர்களும் இத்திட்டத்தில் உறுப்பினராக உள்ளனர். 


இத்திட்டத்தின்படி, பணியாளர்களின் ஊதியத்தில் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் 10 சதவீதத் தொகை பணியாளரின் பங்குத் தொகையாக பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. 


இத்தொகைக்கு நிகரானத் தொகை அரசின் பங்களிப்பாக பணியாளர் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இத்தொகைக்குஉரிய வட்டியை அரசு தொடர்ந்து செலுத்தி வருகிறது.


இத்தொகையை 2003-ஆம் ஆண்டிலிருந்து மாநில அரசால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. தேசிய ஓய்வூதிய திட்டத்தில் (NPS) சேர்வதா, இல்லையா என்பது அரசின் கொள்கை முடிவாகும். 


அரசு பணியாளர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் வைப்புத்தொகை 31-03-2022 தேதியில் ரூ.53,555.75 கோடியாக உள்ளது. 


இத்தொகையில் ரூ.41,264.63 கோடி, இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (LIC) பணத்திரட்சியுடன் கூடிய புதிய குழு ஓய்வூதிய திட்டத்திலும், ரூ.12,000 கோடி பாரத ரிசர்வ் வங்கியின் மூலம் ஒன்றிய அரசின் கருவூல பட்டியல்களிலும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. 


2003ஆம் ஆண்டு முதல் இந்த முறை தான் செயல்பாட்டில் உள்ளது. அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் இருந்த காலங்களிலும் இதைதான் பின்பற்றினார்கள்.


இத்தொகையை தமிழ்நாடு அரசு முற்றிலும் அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்திற்காக மட்டுமே ஒதுக்கியுள்ளது. 


ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் அவர்களின் கணக்கில் அவர்களின் பங்களிப்பு, அரசு பங்களிப்பு, வட்டித் தொகை அனைத்தும் தொடர்ந்து செலுத்தப்பட்டு வருகிறது. 


எனவே, இதை வேறு எந்த பணிக்கோ, நோக்கத்திற்கோ இதுவரை பயன்படுத்தவில்லை. இனிவரும் காலங்களிலும் இந்நிதி ஓய்வூதியத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.


எதையும் மறைக்காமல், ஒளிவுமறைவுமின்றி இத்தொகை நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த தகவல்கள் அனைத்தும் ஏற்கனவே கொள்கை விளக்கக் குறிப்பின்மூலம் மாநில சட்டமன்றத்திலும், பொது வெளியிலும் வைக்கப்பட்டுள்ளது.




பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் உள்ள மாதாந்திர கூட்டுத்தொகைக்கு, பொது வருங்கால வைப்பு நிதிக்கு வழங்கப்படும் வட்டி வீதத்தில் வட்டித் தொகை கணக்கிடப்படுகிறது. 


தற்போது ஆண்டு வட்டி வீதம் 7.1 சதவீதமாகும். இவ்வட்டி தொகை இத்திட்டத்திலுள்ள அனைத்து அரசு பணியாளர்களுக்கும் ஒவ்வொரு காலாண்டு இடைவெளியிலும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.


உண்மைநிலை இவ்வாறு இருக்க, இத்தகைய செய்திகள், அரசு ஊழியர்கள் மத்தியில் பொய் செய்திகளைப் பரப்பி, குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் வெளியிடப்படுகின்றன.


இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்


NEW POST

👇👇

NEET தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச ஆன்லைன் தேர்வு (45 தேர்வு) தமிழ் மடல் இணையதளம் அறிவிப்பு

👇👇

CLICK HERE TO VISIT



NMMS EXAM 

MODEL TEST-7 

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல்

'சமத்துவம் மற்றும் 

அரசியல் காட்சிகள்'

👇👇

CLICK HERE TO VISIT


Wednesday, 1 June 2022

NEET தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச ஆன்லைன் தேர்வு (45 தேர்வு) தமிழ் மடல் இணையதளம் அறிவிப்பு



மாணவர்களின், நீட் தேர்வில் வெற்றிபெறும் கனவினை நிறைவேற்றும் பொருட்டு, நமது தமிழ் மடல் இணையதளம் 45 இலவச ஆன்லைன் தேர்வுகளை ஜூன் 1 முதல் ஜூலை 14-ஆம் தேதி வரை வழங்க இருக்கிறது. 


தேர்வுக்கான கால அட்டவணை கீழே வழங்கப்படுகிறது. 


தினமும் மாலை 5 மணிக்கு தேர்விற்கான லிங்க் நமது தமிழ் மடல் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் பகிரப்படும். 


தேர்விற்கான பகுதியினை பார்த்து நன்கு தயாராகி நமது தேர்வில் பங்கு பெற்று நீட் தேர்வில் வெற்றி பெறுவதற்கான சாத்தியத்தை அதிகரித்துக் கொள்ளுங்கள். 


தமிழ் மடல் வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் குழுக்களுக்கான லிங்க் கீழே வழங்கப்பட்டுள்ளது லிங்கை கிளிக் செய்து நமது குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 


மேலும் விவரம் அறியவும் வாட்ஸஅப் குழுவில் இணையவும் கீழே உள்ள லிங்க் மூலம் FILE பதிவிறக்கம் செய்து அறிந்து கொள்ளுங்கள் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்


ஆசிரியர்கள் வருவாய் மாவட்டத்திற்குள் தங்கள் வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு சென்று நாளை முதல் விடைத்தாள் திருத்தும் பணியை மேற்கொள்ள வேண்டுகிறேன் கு.தியாகராஜன் மாநில தலைவர் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்


கடந்த ஆண்டுகளில் வருவாய் மாவட்டத்தில் எந்த கல்வி மாவட்டத்தில் பணிபுரிந்தாலும் அவர்கள் வசிப்பிடத்திற்கு அருகாமையிலுள்ள விடைத்தாள் திருத்தும் மையத்தில் விடைத்தாள்களை திருத்தி கொள்ளலாம் என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் பெற்றுத்தந்த சலுகையை ஒரு சில அதிகாரிகள் இவ்வாண்டு மறுப்பதாக எனக்கு தகவல் கிடைக்கப் பெற்றது.


காலை 10:30 மணிக்கு அலைபேசி வாயிலாக மதிப்புமிகு தேர்வுத்துறை இயக்குனர் திரு சேதுராமவர்மன் அவர்களையும் மதிப்புமிகு தேர்வுத்துறை இணை இயக்குனர் திரு செல்லக்குமார் அவர்களையும் தொடர்பு கொண்டு வருவாய் மாவட்டத்திற்குள் எந்த கல்வி மாவட்டத்தில் பணிபுரிந்தாலும் வசிப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள விடைத்தாள் திருத்தும் மையங்களில் விடைத்தாள் திருத்துவதற்கு சில அதிகாரிகள் மறுப்பது குறித்தும் இதனால் இந்த அரசிற்கும், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு கலங்கம் ஏற்படுத்துவது போல் ஆசிரியர்கள் கருதுகின்றனர் என்றும் கடந்த காலங்களில் வழங்கிய சலுகையைத் தொடர்ந்து வழங்கிட வேண்டும் என்று கூறினேன். 


அதற்கு தேர்வுத்துறை இயக்குனர், இணை இயக்குநர் ஆகிய இருவரும் முதன்மை கல்வி அலுவலர்களிடம் ஏற்கனவே இதுகுறித்து தகவல் அளிக்கப்பட்டுள்ளது என்றும், மீண்டும் தகவல் தெரிவிப்பதாகவும் உறுதி அளித்துள்ளார்கள்.


ஆகையால் ஆசிரியர்கள் வருவாய் மாவட்டத்திற்குள் தங்கள் வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு சென்று நாளை முதல் விடைத்தாள் திருத்தும் பணியை மேற்கொள்ள வேண்டுகிறேன். இதில் ஏதேனும் இடர்பாடு ஏற்பட்டால் சார்ந்த மாவட்ட பொறுப்பாளர்களைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவும். 


மாவட்ட பொறுப்பாளர்கள் சார்ந்த  முகாம் அலுவலர்களிடம் பேசவும் அதில் ஏதேனும் இடர்பாடோ சங்கடமோ ஏற்பட்டால் என்னைத் தொடர்பு கொள்ளவும்.


முகாம் அலுவலர்கள் ஏதேனும் விளக்கம் கேட்டால் அதை எதிர் கொண்டு சரி செய்துத் தர நான் உள்ளேன் என்று நம்பிக்கையில் உங்கள் பணியைச் செய்யுங்கள்.


விடைத்தாள் திருத்தும் பணி நமது கடமை ஆகையால் தேர்வுப் பணி பாதிக்காத வகையில் வயது முதிர்ந்தவர்கள், இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், முதுகுத் தண்டு வலி போன்ற தொடர் நோய் உள்ளவர்கள், வசிப்பிடத்தில் இருந்து வெகு தொலைவில் முகாம் உள்ளவர்கள் அருகில் உள்ள விடைத்தாள் திருத்தும் முகாமிற்கு சென்று விடைத்தாள் திருத்தும் பணியை மேற்கொள்ள வேண்டுகிறேன்.



கு.தியாகராஜன் 

மாநில தலைவர் 

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்

தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு கோடைவிடுமுறையில் "எண்ணும் எழுத்தும் பயிற்சி" தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கடும் எதிர்ப்பு

 



👇👇

click here to download full news pdf




NEW POST 

NEET தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச ஆன்லைன் தேர்வு (45 தேர்வு) தமிழ் மடல் இணையதளம் அறிவிப்பு

👇👇

CLICK HERE TO VISIT


FORWARD YOUR STUDENTS

ஜூன் மாத கல்வி நாட்காட்டி (June Dairy - 2022)


🌼10, 12-ம் வகுப்பு மாணவர்கள் விடைத்தாள் திருத்தும் பணி 2.6.22 முதல் தொடக்கம். வரும் 23-ம் தேதி +2 முடிவுகளும், 17-ம் தேதி 10-ம் வகுப்பு முடிவுகளும் வெளியாக உள்ளது



🌼 BEO அலுவலக குறைதீர் நாள் - 04.06.2022




🌼 1 முதல் 10 ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு - 13.06.2022 




🌼 1 முதல் 3 ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்கட்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி - 06.06.2022 முதல் 10.06.2022 வரை - 5 நாட்கள். 




🌼 4 மற்றும் 5 ம் வகுப்பு ஆசிரியர்கட்கு SPOKEN ENGLISH பயிற்சி - 23.06.2022 & 24.06.2022 - 2 நாட்கள் 




 🌼 STEM TRAINING DIST LEVEL - 17.06.2022 ( 6-8 ம் அறிவியல் மற்றும் கணித ஆசிரியர்கட்கு)




🌼 6 முதல் 8 ம் வகுப்பு ஆங்கில ஆசிரியர்கட்கு SPOKEN ENGLISH TRAINING - 24.06.2022 




🌼 CRC MEETING - 18.06.2022 




🌼 20.06.2022 - 12ம் வகுப்பு பள்ளிகள் திறப்பு 




🌼 27.06.2022 - 11 ம் வகுப்பு பள்ளிகள் திறப்பு




🌼 R.L -இம்மாதம் வரையறுக்கப்பட்ட விடுப்பு ஏதும் இல்லை



NEW POST 

NEET தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச ஆன்லைன் தேர்வு (45 தேர்வு) தமிழ் மடல் இணையதளம் அறிவிப்பு

👇👇

CLICK HERE TO VISIT


FORWARD YOUR STUDENTS

தகவல் உரிமைச் சட்டம் கையேடு - பள்ளிக் கல்வி ஆணையரகம் சார்ந்து அனைத்து தகவல்கள், 1854ஆம் ஆண்டு முதல் பதவி வகித்த பள்ளிக் கல்வி இயக்குநர்கள் விவரம், அனைத்து மாவட்ட CEO, DEO அலுவலக முகவரி, தொடர்பு எண்கள் மற்றும் CoSE Organization Set-Up உள்ளிட்ட பல்வேறு தகவல்களும் ஒரே கோப்பில் வெளியீடு


👇👇






NEW POST


6.6.2022 முதல் எண்ணும் எழுத்தும் வட்டார அளவிலான பயிற்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு SCERT இயக்குநர் செயல்முறைகள்

👇👇

CLICK TO VISIT



NMMS EXAM MODEL TEST-7 

7 ஆம் வகுப்பு 

சமூக அறிவியல்

'சமத்துவம் மற்றும் 

அரசியல் கட்சிகள்' வினாத்தாள்

👇👇

CLICK HERE TO VISIT


TNPSC

GROUP IV/VAO 

MODEL EXAM QUESTION PAPER 

TAMIL AND ENGLISH MEDIUM

👇👇

CLICK HERE TO VISIT

Tuesday, 31 May 2022

6.6.2022 முதல் எண்ணும் எழுத்தும் வட்டார அளவிலான பயிற்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு SCERT இயக்குநர் செயல்முறைகள்



👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF 



எண்ணும் எழுத்தும் 

வட்டார அளவிலான 

பயிற்சி 

கால அட்டவணை 

நாள் 1


9.00-9.30 

    வருகைப்பதிவு 

9.30-10.00

    தொடக்க நிகழ்வு 

10.00-11.15

    எண்ணும் எழுத்தும் 

    திட்டம் அறிமுகம் 

11.15-11.30

    தேநீர் இடைவேளை 

11.30-01.00

    எண்ணும் எழுத்தும் -

    தமிழ் சிறப்பு உத்திகள் 

    (பாடல், கலந்துரையாடல்,

    படித்தல், எழுதுதல்)

01.00-02.00 

    உணவு இடைவேளை 

2.00-3.15

    தமிழ் மாதிரி வகுப்பு 

    கற்றல் களங்கள் 

    துணைக்கருவி பயன்பாடு 

3.15-3.30

    தேநீர் இடைவேளை 

3.30-5.00

    எண்ணும் எழுத்தும் 

    தமிழ் 

    ஆசிரியர் கையேடு 

    மாணவர் பயிற்சி நூல் 

    கற்றல் விளைவுகள் 

    அறிமுகம் 



நாள்:2


9.30-11.15

    எண்ணும் எழுத்தும் 

    ஆங்கிலம்  

    ஆசிரியர் கையேடு 

    மாணவர் பயிற்சி நூல் 

    கற்றல் விளைவுகள் 

    அறிமுகம் 

11.15-11.30

    தேநீர் இடைவேளை 

11.30-1.00

    கதை மற்றும் பாடல் நேரம் 

1.00-2.00

    உணவு இடைவேளை 

2.00-3.15

    செயல்பாடு 

    துணைக்கருவிகள் நேரம் 

3.15-3.30

    தேநீர் இடைவேளை 

3.30-5.00

    பங்கேற்பாளர்கள் 

    மாதிரி வகுப்பு 

    திட்டமிடுதல் (ஆங்கிலம்)



நாள்:3


9.30-11.15

     எண்ணும் எழுத்தும் 

    கணக்கு  

    ஆசிரியர் கையேடு 

    மாணவர் பயிற்சி நூல் 

    கற்றல் விளைவுகள் 

    அறிமுகம் 

11.15-11.30 

    தேநீர் இடைவேளை 

11.30-1.00

    விளையாட்டு நடிப்பு 

    வாயிலாக கணக்கு 

1.00-2.00 

    உணவு இடைவேளை 

2.00-3.15

    நிகழ்த்துக்கலைகள் 

    கலை 

    கைவினைச் 

    செயல்பாடுகள் 

    வழியாக கணக்கு 

3.15-3.30

    தேநீர் இடைவேளை 

3.30-5.00

    பங்கேற்பாளர்கள் 

    மாதிரி வகுப்பு 

    திட்டமிடுதல் (கணக்கு)



நாள்:4


9.30-10.15

    மதிப்பீட்டு செயலி 

    அடிக்கடி 

    வினவப்படும் 

    வினாக்கள் 

10.15-11.30

    பங்கேற்பாளர்கள் 

    மாதிரி வகுப்பு 

    திட்டமிடுதல் (தமிழ்)

11.30-11.45

    தேநீர் இடைவேளை 

11.45-1.00

    பங்கேற்பாளர்கள் 

    மாதிரி வகுப்பு (தமிழ்)

1.00-200

    உணவு இடைவேளை 

2.00-3.15

    பங்கேற்பாளர்களின் 

    மாதிரி வகுப்பு (ஆங்கிலம்)

3.15-3.30

    தேநீர் இடைவேளை 

3.30-5.00

     பங்கேற்பாளர்களின் 

    மாதிரி வகுப்பு (கணக்கு)



நாள்:5


9.30-500

    முதல் இரண்டு 

    மாதங்களுக்கான 

    கற்றல் துணைக்கருவிகள் 

    தயாரிப்பு 

    மதிப்பீடு 

    (உயர் தொழில் 

    நுட்ப ஆய்வகம்)



TODAY NEW POST

NMMS EXAM MODEL TEST-7 

7 ஆம் வகுப்பு 

சமூக அறிவியல்

'சமத்துவம் மற்றும் 

அரசியல் கட்சிகள்' வினாத்தாள்

👇👇

CLICK HERE TO VISIT


TNPSC

GROUP IV/VAO 

MODEL EXAM QUESTION PAPER 

TAMIL AND ENGLISH MEDIUM

👇👇

CLICK HERE TO VISIT

TNPSC GROUP IV/VAO MODEL EXAM QUESTION (TAMIL AND ENGLISH MEDIUM)


👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

NMMS EXAM MODEL TEST-7 (7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 'சமத்துவம் மற்றும் அரசியல் கட்சிகள்' வினாத்தாள்


NMMS EXAM 

MODEL TEST-7 

வினாத்தாள் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




NMMS EXAM 

MODEL TEST-7 

விடை 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



நாளைய தேர்வுக்கான 

01.06.2022

வீடியோ 

7 ஆம் வகுப்பு 

சமூக அறிவியல் 

'மக்கள் தொகை மற்றும் 

குடியிருப்புகளும்'

👇👇

CLICK HERE TO WATCH



NMMS தேர்வு வாட்ஸ் அப் குழு 
(ஏதேனும் ஒரு குழுவில் 
இணைந்தால் போதும்)

👇👇


NMMS GROUP 2




குறிப்பு:
அனைத்து குழுவிலும் ஒரே மாதிரியான 
செய்திகளே அனுப்பப்படும் 
எனவே மாணவர்கள் ஏதேனும் ஒரு 

குழுவில் இணைந்தால் போதும்