Search This Blog

Showing posts with label COLLEGE ADMISSION. Show all posts
Showing posts with label COLLEGE ADMISSION. Show all posts

Wednesday, 6 May 2026

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர, நாளை (07.05.2026) முதல் விண்ணப்பிக்கலாம் என கல்லூரிக் கல்வி இயக்குநர் அறிவிப்பு


செய்தி வெளியீடு 


தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2026-2027 ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன 



விண்ணப்பம் தொடங்கும் நாள் 07.05.2026



தாமாக விண்ணப்பிக்க உதவும் இணையதளம் முகவரி 

👇

CLICK HERE



தாமாக இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது 




2026-27 ஆம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 159 பாடப்பிரிவுகளில் 126959 (shift 1-101022 and shift 2-25937) சேர்க்கை இடங்கள் உள்ளன மாணாக்கர்கள் தங்கள் விருப்பப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விருப்பப்பட்ட பாடப்பிரிவுகளுக்கு இணையவெளியில் விண்ணப்பிக்கலாம் 



விண்ணப்பக்கட்டணம் 

ஒரு மாணவருக்கு ரூபாய் 48

பதிவுக்கட்டணம் ரூ 2 



SC/ST பிரிவு மாணவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ஏதுமில்லை ஆனால் பதிவுக்கட்டணம் ரூ 2 மட்டும் உண்டு 




பதிவு தொடங்கும் நாள் 07.05.2026

பதிவு செய்ய இறுதி நாள் 29.05.2026




Debit card/ Credit Card/ Net Banking/ UPI மூலம் விண்ணப்ப கட்டணம் மற்றும் பதிவுக்கட்டணம் செலுத்தலாம் 




மேற்கண்ட விவரங்கள் கல்லூரிக்கல்வி ஆணையர் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது