Search This Blog

Tuesday, 27 October 2026

MANARKENI APP NMMS, OLYMPIAD, TRUST AWARENESS CAMP தேர்வுகள் குறித்த முகாம்

MANARKENI APP  NMMS, OLYMPIAD, TRUST  AWARENESS CAMP தேர்வுகள் குறித்த முகாம் நடைபெற உள்ளது இது குறித்து தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது அதில் கூறப்பட்டுள்ள தகவல்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது 



ந.க.எண்: 02171 / 2026

நாள்: 26.10.2026

பொருள்:

கல்வி – தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் – மணற்கேணி, வெற்றிப் பள்ளிகளில் வட்டார அளவில் முகாம் நடைபெறுதல் – 8ஆம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்பது தொடர்பாக.



பார்வை:

தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் கழகம் உறுப்பினர் செயலாளர் கடிதம் மற்றும் அறிவுரைகள்.



பார்வையில் காணும் கடிதத்தில், தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் கழகம் உறுப்பினர் செயலாளர், NMMS, Olympiad, TRUST போன்ற போட்டித் தேர்வுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு "மணற்கேணி" கற்றல் தளம் மற்றும் வெற்றிப் பள்ளிகள் வாயிலாக ஒரு நாள் முகாம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.



இம்முகாம், ஒவ்வொரு வட்டாரத்திலுமுள்ள வெற்றிப் பள்ளியில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை, ஒரு நாள் முகாமாக நடத்தப்படும். அவ்வட்டாரத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் 8ஆம் வகுப்பு பயிலும் விருப்பமுள்ள மாணவர்கள் இம்முகாமில் பங்கேற்கலாம்.



முகாமில் பின்வரும் கூறுகள் இடம்பெறும்:


அ) "மணற்கேணி" கற்றல் தளம் குறித்த அறிமுகம் மற்றும் அதனைப் பயன்படுத்தும் முறை

ஆ) போட்டித் தேர்வுகள் குறித்த அறிமுகம்

இ) தேர்வுக்கான தயாரிப்பு

ஈ) செயல்பாட்டு அடிப்படையிலான பயிற்சிகள்



முகாம் நடைபெறும் நாளன்று, மாணவர்கள் தங்கள் பள்ளியிலிருந்து அந்தந்த வட்டாரத்திலுள்ள வெற்றிப் பள்ளிக்குப் பாதுகாப்பாக வந்து திரும்புவதை சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உறுதிசெய்ய வேண்டும். 



இது சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்கள் (CEOs) மற்றும் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் (DEEOs) இச்செய்திகளைத் தங்கள் மாவட்டத்திலுள்ள அரசு நடுநிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் வழியாகத் தேவையான அறிவுரைகளாக வழங்கிட அறிவுறுத்தப்படுகிறார்கள்.




எனவே, இவ்வாய்ப்பினைத் தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய/அரசு/நகராட்சி/மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகளில் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளத் தெரிவிப்பதோடு, அம்மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் ஆசிரியர்கள்/தலைமை ஆசிரியர்களுக்கு இவ்விவரம் உரிய முறையில் சென்றடைய வட்டாரக் கல்வி அலுவலர்கள் வழியாகத் தேவையான அறிவுரைகள் வழங்கிட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் (தொடக்கக் கல்வி) கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்



மேற்கண்ட விவரங்கள் தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது 

No comments:

Post a Comment