"தமிழ்நாடு முதலமைச்சரின் திறமைத் தேடல் தேர்வு" தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை செய்திகள்
"தமிழ்நாடு முதலமைச்சரின் திறமைத் தேடல் தேர்வு" விண்ணப்பிக்க அரசுப் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்கள் www.dge.tn.gov.in இணையதளம் வழியாக விண்ணப்பபடிவங்களை 18.12.2025 முதல் 26.12.2025 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்தல் தொடர்பான பதிவு
மேற்குறிப்பிட்ட தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் 2025-2026 ஆம் கல்வியாண்டில் அரசுப்பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் விவரங்களை சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக 26.12.2025 முதல் 03.01.2026 வரை பதிவேற்றம் செய்யலாம்
மேலும் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் இந்த விவரங்களை அவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்து செயல்படுத்த சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்கள்
மேலும் விவரம் அறிய தேர்வுத்துறை இயக்குனரின் சுற்றறிக்கை pdf பதிவிறக்கம் செய்யவும்
👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
No comments:
Post a Comment