Search This Blog

Friday 25 February 2022

மாநில அளவிலான NMMS ONLINE தேர்வு நாளை 26.02.2022 முதல்

அன்புக்குரிய ஆசிரியர் பெருமக்களே மாணவச் செல்வங்களே பெற்றோர்களே அனைவருக்கும் வணக்கம் 



இவ்வாண்டுக்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்க கூடிய மாணவச் செல்வங்கள் தங்களின் கற்றல் அடைவை சோதித்து கொள்ள ஏதுவாகவும், ஒவ்வொரு ஆண்டும் நமது திறனறி (ப.இராஜ்குமார்) மற்றும் என் எம் எம் எஸ் (மோகன்) வாட்ஸப் குழுக்கள் வாயிலாக ஆன்லைன் மாதிரி தேர்வுகளைநடத்தி வந்திருக்கிறோம். 



அதேபோல இவ்வாண்டுக்கான மாதிரித்தேர்வு நாளை காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. மாணவச் செல்வங்கள் தங்களின் பயிற்று மொழியின் வாயிலாக ( தமிழ் மற்றும் ஆங்கில வழி) இத்தேர்வினை சிறப்பாக செய்திட தேவையான முன் ஏற்பாட்டுடன் தயாராக இருக்கவும்.



தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர் பெருமக்கள் தங்களது பள்ளியில் உள்ள உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகத்தின் வாயிலாகவும் மடிக்கணினிகள் மற்றும் செல்பேசிகள் வாயிலாகவும் இத்தேர்வினை மாணவர்கள் எழுத ஆவன செய்யவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 



தேர்வு எழுத தேவையான Link ஆனது நாளை காலை அனுப்பி வைக்கப்படும். அந்த link ஆனது காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை மட்டுமே செயல்பாட்டில் இருக்கும்.



No comments:

Post a Comment