Search This Blog

Sunday 9 January 2022

தொடக்கப்பள்ளி கற்றல் அடைவுத்திறன் மேம்பாட்டுப்பயிற்சி ரத்தாகுமா? நெல்லை மாவட்ட ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

 

👉கொரானா பெருந்தொற்று வேகமாக பரவி வரும் சூழலில் பல்வேறு வகையான கட்டுப்பாடுகள் தமிழக அரசால் விதிக்கப்பட்டுள்ளது 


👉அனைத்து தினங்களிலும் இரவு லாக்டவுன் போடப்பட்டுள்ளது 


👉 வெள்ளி முதல் ஞாயிறு வரை வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டுள்ளன 


 👉திருமண நிகழ்வு, இறப்பு நிகழ்வு போன்றவற்றில் கூடும் கூட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன 


👉 ஆசிரியர்களுக்கு தொடங்க இருக்கும் கற்றல் அடைவுத்திறன் மேம்பாட்டுப்பயிற்சி  மூலம் ஒரே இடத்தில 50 முதல் 100 ஆசிரியர்கள்  காலை முதல் மாலை வரை பயிற்சி எடுக்க உள்ளனர் .


👉 ஒரே இடத்தில பல ஆசிரியர்கள் கூட உள்ளனர் 


👉 பயிற்சியில் கலந்து கொள்ளும் ஏதேனும் ஒரு ஆசிரியர் பாதிப்படைந்தவராக இருந்து அவருக்கு அது தெரியாமல் பயிற்சியில் கலந்துக்கொண்டால் மற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் பரவி, அவர்களின் குடும்பம், அவர்கள் வசிக்கும் பகுதி என வெகு வேகமாக நோய்த்தொற்று பரவ வாய்ப்பு அதிகம் உள்ளது 


👉 ஆசிரியர்கள் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் ஆனாலும் அவர்களிடம் இருந்து குழந்தைகளுக்கோ தடுப்பூசி போடாதவர்களுக்கோ பரவினால் விளைவு மோசமாக அமைந்து விடும் 


👉 இது போன்ற நோய்த்தொற்று காலங்களில் கூட்டம் கூடுவதை தடை செய்வது மூலமே நோய்த்தொற்றை குறைக்கமுடியும் 


👉 இந்த ஒரு சமூக பாதுகாப்பை கருத்தில்கொண்டு திருநெல்வேலி மாவட்டம் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி இது போன்ற பயிற்சிகள் இப்போதைய நேரத்தில் ஏற்புடையது அல்ல என்பதை வலியுறுத்தி பயிற்சியை ரத்து  செய்ய  பள்ளிக்கல்வி ஆணையர், தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளனர் 


👉 ஆசிரியர்கள் பொதுமக்கள் நலன் கருதி பயிற்சி ரத்து செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது 



👇👇

CLICK HERE TO DOWNLOAD LETTER COPY


YOU MAY VISIT


6-8 LEARNING OUTCOME TRAINING MODULE

TAMIL

👇





ENGLISH

👇





MATHS

👇





SCIENCE

👇





SOCIAL SCIENCE

👇











No comments:

Post a Comment