6-10 தமிழ் இலக்கணம்
வகுப்பு/பருவம் வாரியாக
👇👇
6,7,8 அறிவியல் Notes of Lesson 3 ஆம் பருவம்
👇👇
TAMIL NOTES OF LESSON CLASS 6,7,8 III TERM
👇
SOCIAL SCIENCE LESSON PLAN 6,7,8 THIRD TERM
👇
10 அறிவியல் இரண்டாம் திருப்புதல் தேர்வு ஒரு மதிப்பெண் வினா விடை
வெப்ப இயற்பியல்
1. மூலக்கூறுகளின் சராசரி இயக்க ஆற்றல் எவ்வாறு அழைக்கப்படும்?
வெப்பநிலை
2. வெப்பநிலை என்பது ஒரு --------- அளவு ஆகும்
ஸ்கேலார்
3. வெப்பநிலையின் SI அலகு எது?
கெல்வின்
4. வெப்பநிலையை அளக்க பயன்படும் அலகுகள் யாவை?
கெல்வின், செல்சியஸ், பாரன்ஹீட்
5. செல்சியசில் இருந்து கெல்வின் அளவுக்கு மாற்ற உதவும் வாய்ப்பாடு எது?
k=c+273
6. பாரன்ஹீட்டில் இருந்து கெல்வின் அளவுக்கு மாற்ற உதவும் வாய்ப்பாடு எது?
K=(F+460) X 5/9
7. வெப்ப பரவுதல் வழிகளில் வழிகளில் நடைபெறுகிறது?
வெப்பக்கடத்தல், வெப்பச்சலனம், வெப்ப கதிர்வீசல்
8. வெப்பம் என்பது ஒரு ------- அளவு ஆகும் ?
ஸ்கேலார்
9. வெப்ப ஆற்றல் உட்கவர்தல், அல்லது வெளியிடுதலின் SI அலகு?
ஜூல் (J)
10. வெப்பம் எப்போதும் ------ அதிகமாக உள்ள பொருளில் இருந்து ---- குறைவாக உள்ள பொருளுக்கு பரவும்
வெப்பநிலை, வெப்பநிலை
11. ஒரு பொருளை வெப்பப்படுத்தும் போதோ குளிர்விக்கும் போதோ -----ல் மாற்றம் இருக்காது
நிறை
12. ஒரு கிராம் நிறை உள்ள நீரின் வெப்பநிலையை 1 டிகிரி செல்சியஸ் உயர்த்த தேவைப்படும் வெப்ப ஆற்றலின் அளவு ------ ஆகும்
ஒரு கலோரி
13. ஒரு கிலோ கிராம் நிறை உள்ள நீரின் வெப்பநிலையை 1 டிகிரி செல்சியஸ் உயர்த்த தேவைப்படும் வெப்ப ஆற்றலின் அளவு ------ ஆகும்
ஒரு கிலோ கலோரி
14. மாறா வெப்பநிலையில் ஒரு குறிப்பிட்ட நிறையுடைய வாயுவின் அழுத்தம் அவ்வாயுவின் பருமனுக்கு எதிர்த்தகவில் அமையும் இது எந்த விதி?
பாயில் விதி
15. மாறா அழுத்தத்தில் வாயுவின் பருமன் அவ்வாயுவின் வெப்பநிலைக்கு நேர்த்தகவில் இருக்கும் இது எந்த விதி?
சார்லஸ் விதி
16. PV = மாறிலி என்பது யாருடைய விதி ?
பாயில் விதி
17. V α T என்பது யாருடைய விதி?
சார்லஸ் விதி
18. V α n என்பது யாருடைய விதி?
அவகேட்ரோ விதி
19. ஒரு மோல் பொருளில் உள்ள மொத அணுக்களின் எண்ணிக்கை -----எனப்படும்?
அவகேட்ரோ எண்
20. அவகேட்ரோ எண்ணின் மதிப்பு யாது?
6.023 x 1023 /mol
21. வாயுக்கள் -------- மற்றும் --------- என இரு வகைப்படும்
இயல்பு வாயுக்கள், நல்லியல்பு வாயுக்கள்
22. குறிப்பிட்ட கவர்ச்சி விசையினால் ஒன்றோடு ஓன்று இடைவினை புரிந்துக் கொண்டிருக்கும் அணுக்கள் அல்லது மூலக்கூறுகள் அடங்கிய வாயுக்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
இயல்பு வாயுக்கள்
23. ஒன்றுக்கு ஓன்று இடைவினை புரியாமல் இருக்கும் அணுக்கள் அல்லது மூலக்கூறுகள் அடங்கிய வாயுக்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
நல்லியல்பு வாயுக்கள்
24. எந்த வாயுக்களில் அணுக்கள் அல்லது மூலக்கூறுகளுக்கிடையே கவர்ச்சி விசையின் வலிமை குறைவு ?
நல்லியல்பு வாயுக்கள்
25. எந்த வாயு பாயில் விதி, சார்லஸ் விதிக்கு உட்படும்
நல்லியல்பு வாயு
26. பொது வாயு மாறிலியின் மதிப்பு யாது?
8.31 J mol-1K-1
மாணவர்கள் இதே லிங்கில் தொடர்ந்து பாருங்கள் ஒவ்வொரு பாடமாக update செய்யப்படும்
No comments:
Post a Comment