Search This Blog

Thursday, 25 June 2026

மாணவர்களுக்கு வாழ்வில் திறன் மற்றும் விழுமியக் கல்வி கற்பித்திட பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு

 



வாழ்வியல் திறன் மற்றும் விழுமியக்கல்வி  நடத்துதல் சார்ந்து தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்கள் 




கடிதத்தில் கூறப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் 




பள்ளி மாணவர்களிடம் ஒழுக்கம், பண்பாடு, ஒட்டுமொத்த ஆளுமை வளர்ச்சி, தன்னம்பிக்கை மற்றும் அறம் சார்ந்த வாழ்வியல் சிந்தனைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், வாழ்வியல் திறன்கள் மற்றும் விழுமியக் கல்விக்கான பாடநூல்களை வழங்குவது என்னும் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையானது முன்னெடுத்துள்ளது





1 முதல் 12ஆம் வகுப்பிற்கான "வாழ்வியல் திறன்கள் மற்றும் விழுமியங்கள்" புத்தகங்கள் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் உருவாக்கப்பட்டு, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தால் புத்தகம் அச்சிடப்பட்டு, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தின் மூலம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.





இதனை மாணவர்களிடம் திறம்படக் கொண்டு செல்வதற்கென கீழ்க்காண் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கலாகிறது.





வழிகாட்டு நெறிமுறைகள்:

1. பாடவேளை மற்றும் பொறுப்பு ஆசிரியர்:

  • பள்ளிக்கல்வி கல்வியாண்டு நாட்காட்டியில் குறிப்பிட்டுள்ள நன்னெறிக் கல்வி பாடவேளையினை முழுமையாகப் பயன்படுத்தி "வாழ்வியல் திறன்கள் மற்றும் விழுமியங்கள்" புத்தகத்தில் உள்ள பாடங்களின் கருத்துக்களை நடப்பு நிகழ்வுகளுடன் சேர்த்து மாணவர்களுக்குக் கற்பித்திட வேண்டும்.





  • 10 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நன்னெறிக் கல்வி பாடவேளைகளில் பிற பாடங்கள் நடத்துதல் கூடாது.





  • நன்னெறிக் கல்வி பாடத்தினை "வாழ்வியல் திறன்கள் மற்றும் விழுமியங்கள்" புத்தகத்தினைப் பயன்படுத்தி விருப்பமுள்ள ஆசிரியர்கள் அனைவரும் மாணவர்களுக்குக் கற்பித்திட தலைமையாசிரியர் அறிவுறுத்திட வேண்டும்.






2. "வாழ்வியல் திறன்கள் மற்றும் விழுமியங்களை" முன்னிறுத்தி போட்டிகள், வினாடி வினா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்தல்:



  • இலக்கிய மன்றம், வினாடி வினா போன்ற பள்ளி அளவிலான மன்றப் போட்டிகளில் வாழ்வியல் திறன்கள் மற்றும் விழுமியங்கள் புத்தகத்தினைப் பயன்படுத்தி கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டி போன்ற செயல்பாடுகள் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.





3. "வாழ்வியல் திறன்கள் மற்றும் விழுமியங்கள்" அடிப்படையில் போதை எதிர்ப்பு மன்றம், சாலை பாதுகாப்பு மன்றம், இணையப்பாதுகாப்பு நிகழ்ச்சிகளை மேற்கொள்ளுதல்:



  • பள்ளிகளில் செயல்படுத்தப்படும் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு, சாலைப் பாதுகாப்பு, இணையப்பாதுகாப்பு சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் வாழ்வியல் திறன்கள் மற்றும் விழுமியங்கள் புத்தகத்தில் உள்ள பாடங்களைக் கற்றுத்தருதல் வேண்டும்.




போதை எதிர்ப்பு மன்ற நிகழ்ச்சிகள் (புத்தகத் தலைப்புகள்):

  • வேண்டவே வேண்டாம்

  • பாதை மாறிய பேதை





சாலை பாதுகாப்பு மன்ற நிகழ்ச்சிகள் (புத்தகத் தலைப்புகள்):

  • சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு

  • விதிகளை மதித்தல்





இணையப்பாதுகாப்பு நிகழ்ச்சிகள் (புத்தகத் தலைப்புகள்):

  • நிதானமே விவேகம்

  • விழிப்புணர்வு வென்றது

  • இணையக் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு

  • விழித்திரு

  • குழந்தை பாதுகாப்பு

  • உண்மையின் உரைகல்





குழந்தை பாதுகாப்பு நிகழ்ச்சிகள் (புத்தகத் தலைப்புகள்):

  • விழிப்புடன் இரு விபரீதத்தைத் தடு

  • பாதுகாப்பான, பாதுகாப்பற்ற தொடுதல்






சுற்றுச்சூழல் மன்ற நிகழ்ச்சிகள் (புத்தகத் தலைப்புகள்):

  • இயற்கை வளமே நமது ஆற்றல் வளம்

  • சூழல் காப்போம்





4. வாழ்வியல் திறன்கள் மற்றும் விழுமியங்கள் வழி மாணவர்கள் மனநல மேம்பாட்டினை ஏற்படுத்துதல்:

  • மாணவர்களுக்கு ஏற்படும் உளவியல் சார்ந்த பிரச்சனைகளை நீக்கி அவர்களை வாழ்வில் மேன்மை அடையச் செய்வது ஒவ்வொரு ஆசிரியரின் முதன்மையான பணியாகும்.

  • குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாகும்; வாழ்வியல் திறன்கள் மற்றும் விழுமியக் கல்வி வாயிலாக இதனை வழங்க வேண்டும்.

  • மனநல மேம்பாட்டிற்கான பாடத்தலைப்புகள்: மனவெழுச்சிகளைக் கையாளுதல்; மனத்தடை உடை! வெற்றியை அடை.





5. வாழ்வியல் திறன்கள் மற்றும் விழுமியங்கள் சார்ந்து நல்லொழுக்க சிந்தனைகள் வளர்த்தல் (புத்தகத் தலைப்புகள்):

  • நல்வழி நட

  • காலம் தவறாமை

  • தெளிவான சிந்தனை வித்திடும் சாதனை





மேற்காண் தலைப்புகள் அல்லாமல் பள்ளியின் கல்விசார் / கல்வி சாரா செயல்பாடுகளில் வாழ்வியல் திறன்கள் மற்றும் விழுமியங்கள் புத்தகத்தினைப் பயன்படுத்தி பிற தலைப்புகளில் உள்ள நன்னெறி சார்ந்த கருத்துக்களை மாணவர்களுக்குக் கற்பித்திடத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் தெரிவிக்கலாகிறது.





இதனைத் திறம்படச் செயல்படுத்திட மாவட்ட அளவில் திட்டத்தினை வகுத்து அனைத்து அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர் / தாளாளர் / முதல்வர்களுக்கு உரிய சுற்றறிக்கையினை அனுப்பிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கலாகிறது என அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது 

Wednesday, 24 June 2026

2026-27 ஆம் ஆண்டு அரசு பள்ளிகளில் மகிழ் முற்றம் செயல்பாடுகள் சார்ந்து தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள்




2026-27  ஆம் ஆண்டு அரசு பள்ளிகளில் மகிழ் முற்றம் செயல்பாடுகள் சார்ந்து தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் 





மாணவர்களிடையே தலைமைத்துவம், குழுப்பணி, ஒழுக்கம், சமூகப் மனப்பான்மை, ஒற்றுமை, குழுச்செயல்பாடு மற்றும் முழுமையான ஆளுமை வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்" திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது.




2026-27 ஆம் கல்வியாண்டில், அனைத்து அரசு பள்ளிகளிலும் "மகிழ் முற்றம்" மாணவர் குழு செயல்பாடுகளை முறையாகவும், சிறப்பாகவும் செயல்படுத்திடும் நோக்கில், "மகிழ் முற்றம்" செயல்பாடுகளை மாணவர் பாராளுமன்ற செயல்பாடுகளுடன் ஒருங்கிணைத்து செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.





இந்த செயல்பாடானது மாணவர்களை பள்ளி நிகழ்வுகளில் ஆர்வமுடன் ஈடுபடுத்தி, அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தி, ஒவ்வொரு மாணவருக்கும் சம வாய்ப்புகளை வழங்கி, அவர்களை திறமையான தலைவர்களாகவும், பொறுப்புள்ள குடிமக்களாகவும் உருவாக்க அடித்தளமாக அமையும்.




2026-2027 ஆம் ஆண்டிற்கான மகிழ் முற்றம் செயல்பாடுகளை பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நடைபெறுவதை உறுதி செய்யுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.





மாணவர் குழு ஒதுக்கீடு (House Allocation) 

EMIS-இல் வடிவமைக்கப்பட்டுள்ள 'மகிழ் முற்றம்' (House System) பகுதியிலுள்ள Set House பொத்தானை கிளிக் செய்தவுடன் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து குழுக்களாக மாணவர்களுக்கு வகுப்பு மற்றும் பிரிவு வாரியாக குழு ஒதுக்கீடு செய்யப்படும். பின்னர், அங்கு கொடுக்கப்பட்டுள்ள House Allocation Excel-யினை கிளிக் செய்து ஆசிரியர்கள் பட்டியலை பதிவிறக்கம் செய்து, மாணவர்களுக்கான குழு ஒதுக்கீட்டினை தெரிவித்தல் வேண்டும். இதனை 30-06-2026-ற்குள் அனைத்து பள்ளிகளும் செய்திடல் வேண்டும்.




மாணவர் குழு அமைப்பின் வகுப்புத் தலைவர் : 

(House Class Leader): ஒவ்வொரு வகுப்பிலும் மற்றும் வகுப்பிற்கான பிரிவிலும், ஒவ்வொரு குழுவிற்கான வகுப்புத் தலைவர் (House Class Leader) நியமிக்கப்படுதல் வேண்டும். இத்தேர்வானது, குழுவின் வகுப்புத் தலைவராக இருக்க விருப்பம் தெரிவிக்கும் மாணவ/மாணவியர்களின் பெயர்களை துண்டுச் சீட்டுகளாக எழுதி அம்மாணவர்களின் முன்னிலையில் குலுக்கல் முறையிலோ அல்லது கைதூக்கும் முறையிலோ 01-07-2026-ற்குள் தேர்ந்தெடுத்தல் வேண்டும்.(குறிப்பு: இரு பாலினர் பயிலும் பள்ளிகளில், ஒவ்வொரு வகுப்பிலும், மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில், குறைந்தது மூன்று குழுக்களுக்கான வகுப்பு தலைவர்கள் மாணவிகளாக இருப்பதை உறுதி செய்தல் வேண்டும்).





மேலும், ஒவ்வொரு மாதமும் ஐந்து குழுக்களுக்கான வகுப்புத் தலைவர்கள் மாற்றி அமைக்கப்படுதல் வேண்டும். ஒவ்வொரு மாதத்தின் இரண்டாவது வேலைநாள் அன்று வகுப்புக்குழுத் தலைவர்கள் மாற்றி அமைக்கப்படுதல் வேண்டும்.





இதன்மூலம் வகுப்பறை அளவில் பெருமளவிலான மாணவர்கள் தலைமைத்துவ பண்பினை வளர்த்துக்கொள்ள நல்வாய்ப்பாக அமையும்.




மகிழ் முற்றம் ஆசிரியர் கூட்டமைப்பு 


தலைமை ஆசிரியர் 

மகிழ் முற்றம் மாணவர் குழு அமைப்பினை திட்டமிட்டு வழி நடத்துதல் வேண்டும் 



5-ற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கொண்ட பள்ளிகள் 


ஒரு ஆசிரியர் மகிழ் முற்றம் ஆசிரியர் ஒருங்கிணைப்பாளராக இருத்தல் வேண்டும் (HSTC-HOUSE SYSTEM TEACHER COORDINATOR)


மற்ற ஆசிரியர்களுக்கான குழு குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்படுதல் வேண்டும் 


ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு பொறுப்பு ஆசிரியர் நியமிக்கப்படுத்தல் வேண்டும் (HOUSE HEAD TEACHER)





5-ற்கும் குறைவான ஆசிரியர்கள் கொண்ட பள்ளிகள் 


ஒரு ஆசிரியர் மகிழ் முற்றம் ஆசிரியர் ஒருங்கிணைப்பாளராக இருக்க வேண்டும் 


மற்ற ஆசிரியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட குழுக்களுக்கு பொறுப்பு ஆசிரியராக குலுக்கல் முறையில் நியமிக்கப்படுத்தல் வேண்டும் 



தலைமை ஆசிரியர் மட்டும் உள்ள பள்ளிகள் 


மகிழ் முற்றம் மாணவர் குழு அமைப்பின் அனைத்து செயல்பாடுகளையும் தலைமை ஆசிரியர் மேற்கொள்ளுதல் வேண்டும் 




01.07.2026-ற்குள் மகிழ் முற்றம் ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் மற்றும் குழு பொறுப்பாசிரியர் தேர்ந்தெடுக்கப்படுதல் வேண்டும் 




மாணவர் குழுத்தலைவர்கள் மற்றும் மாணவ அமைச்சர்கள் தேர்வு 

மேல்நிலைப்பள்ளி 

11 ஆம் வகுப்பு மாணவர்களை தேர்வு செய்தல் வேண்டும் 


உயர்நிலைப்பள்ளி 

9 ஆம் வகுப்பு மாணவர்களை தேர்வு செய்தல் வேண்டும் 


நடுநிலைப்பள்ளி 

8 ஆம் வகுப்பு மாணவர்களை தேர்வு செய்தல் வேண்டும் 


தொடக்கப்பள்ளி 

5 ஆம் வகுப்பு மாணவர்களை தேர்வு செய்தல் வேண்டும் 



மேலே குறிப்பிட்ட படி ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு மாணவர் குழுத்தலைவர் மற்றும் ஒரு மாணவ அமைச்சர் நியமிக்கப்படுதல் வேண்டும் 



மேலும் இந்த ஆணை பற்றிய தகவல் அறிய கீழே உள்ள லிங்க் மூலம் பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறை PDF பதிவிறக்கம் செய்யவும் 

👇

CLICK HERE TO DOWNLOAD PDF









அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்" - ஓராண்டிற்கு சுமார் ₹756 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்" - ஓராண்டிற்கு சுமார் ₹756 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு




தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கு "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்" - நிர்வாக மற்றும் நிதி ஒப்பளிப்பு - வழங்கப்பட்டது - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன




அரசு சுகாதார சேவைகள் மீதான நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கு தாயின் பயணத்தை கௌரவிக்கும் வகையில் "ஒரு கிராம் தங்க மோதிரம்" வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.



இத்திட்டம் "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்" என அழைக்கப்படும்.



தமிழ் மரபில் உள்ள 'தாய்மாமன் சீர்' என்ற கலாச்சாரத்தின் அடிப்படையில், அரசு நிறுவனங்களில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் அரசே தாய்மாமனாக இருந்து இந்த தங்க மோதிரத்தை வரவேற்புப் பரிசாக வழங்கும்.



திட்டத்தின் வழிமுறைகள் மற்றும் தகுதிகள்:


  • தகுதிகள்: பயனாளிகள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.


  • அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் அனைத்து தாய்மார்களுக்கும் இது பொருந்தும்.


  • தாய்மார்கள் PICME-ல் பதிவு செய்து RCH ID பெற்றிருக்க வேண்டும்.


  • குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, இருப்பிடச் சான்றிதழ் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை முகவரிச் சான்றாக சமர்ப்பிக்க வேண்டும்.


  • குழந்தையின் பாலினம் மற்றும் எத்தனையாவது குழந்தை என்ற பாகுபாடின்றி அனைத்து பச்சிளம் குழந்தைகளுக்கும் இத்திட்டம் பொருந்தும்.





மேலும் விவரம் அறிய கீழே உள்ள லிங்க் மூலம் அரசு ஆணையை பதிவிறக்கம் செய்யவும் 

👇