Search This Blog

Tuesday, 9 June 2026

தமிழ்நாடு ஆசிரியர்கள் பொது மாறுதல் & பணிநிரவல் கலந்தாய்வு 2026-27: முக்கிய விவரங்கள்




தமிழ்நாடு ஆசிரியர்கள் பொது மாறுதல் & பணிநிரவல் கலந்தாய்வு 2026-27: முக்கிய விவரங்கள்



விண்ணப்பிக்கும் முறை & தேதிகள்



15.06.2026 முதல் 22.06.2026 மாலை 6.00 மணி வரை


EMIS இணையதளம் (Individual Login ID) வழியாக விண்ணப்பிக்கலாம்.




சுயவிவரங்களில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால், முதலில் பள்ளி Login-இல் உள்ள 'Teacher Profile'-க்கு சென்று சரிசெய்த பின்பே சமர்ப்பிக்க வேண்டும்



தற்போதைய பள்ளியில் ஓராண்டு பணிநிறைவு செய்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இந்த முறை இல்லை



ஒப்புதல் அளித்தல்

 

DSE (உயர்/மேல்நிலை):

பள்ளித் தலைமை ஆசிரியர் முதற்கட்ட ஒப்புதலும் (1st Approval), முதன்மைக் கல்வி அலுவலர் (CEO) இரண்டாம் கட்ட இறுதி ஒப்புதலும் (2nd Approval) வழங்குவர்.



DEE (தொடக்க/நடுநிலை): வட்டாரக் கல்வி அலுவலர் (BEO) முதற்கட்ட ஒப்புதலும், மாவட்டக் கல்வி அலுவலர் (DEO - தொடக்கக் கல்வி) இறுதி ஒப்புதலும் வழங்குவர்.



முன்னுரிமைப் பிரிவுகள்


 1. 100% கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள்.




 2. 40% மற்றும் அதற்கு மேல் ஊனம் உள்ளவர்கள்.





 3. மனவளர்ச்சி குன்றிய / மாற்றுத்திறனாளி குழந்தைகளைப் பெற்றுள்ள பெற்றோர்.





 4. கடுமையான உடல்நல பாதிப்பு (சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, டையாலிசிஸ், இதய அறுவை சிகிச்சை, புற்றுநோய், மூளைக்கட்டி போன்றவற்றிற்கு சிகிச்சை பெற்றவர்கள்).





 5. இராணுவத்தில் பணிபுரிபவர்களின் கணவன் / மனைவி.





 6. விதவை, மனைவியை இழந்தவர், 40 வயது கடந்த முதிர்கன்னியர், சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்ற பெண் ஆசிரியர்கள்.





 7. தற்போதைய பள்ளியில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிபவர்கள்.






 8. கணவன்-மனைவி முன்னுரிமை (தொலைவு 30 கி.மீ-க்கு மேல் இருக்க வேண்டும்).






சிறப்பு விதி:


01.06.2025 முதல் 31.05.2026க்குள் கணவர் அல்லது மனைவியை விபத்து/திடீர் மரணத்தால் இழந்த ஆசிரியர்களுக்கு, எவ்வித முன்னுரிமை விதிகளையும் பார்க்காமல் கலந்தாய்விற்கு முன்னரே அவர்கள் கோரும் காலிப்பணியிடத்தில் மாறுதல் வழங்கப்படும்.



முக்கிய தேதிகள் (DSE - உயர்/மேல்நிலைப் பள்ளிகள்):


 23.06.2026 - 24.06.2026:

விண்ணப்பங்களுக்கு CEO ஒப்புதல் அளித்தல்.



25.06.2026 - 27.06.2026:

தற்காலிக முன்னுரிமைப் பட்டியல் (Seniority) & காலிப்பணியிட விவரங்கள் வெளியீடு மற்றும் திருத்தங்கள்.



 30.06.2026:

இறுதி முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு.

 


01.07.2026 & 02.07.2026:


மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாறுதல்.



 04.07.2026 & 06.07.2026:


உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாறுதல்.



 07.07.2026:


உபரி முதுகலை ஆசிரியர்கள் (PG Deployment) பணிநிரவல்.



 09.07.2026 முதல் 15.07.2026 வரை:

முதுகலை/கணினி/தொழிற்கல்வி ஆசிரியர்கள் மாறுதல்.



 16.07.2026:

உபரி பட்டதாரி ஆசிரியர்கள் (BT Deployment) பணிநிரவல்.



 18.07.2026 & 20.07.2026:

உடற்கல்வி, கலை, இசை, தையல் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல்.



 21.07.2026 & 22.07.2026:


ஆசிரியர் பயிற்றுநர்கள் (BRTE & DC) மாறுதல்.



 23.07.2026 முதல் 30.07.2026 வரை:

பட்டதாரி ஆசிரியர்கள் (BT) மாறுதல்.



முக்கிய தேதிகள் (DEE - தொடக்க/நடுநிலைப் பள்ளிகள்):



 25.06.2026: 


தற்காலிக முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு (காலை 10 மணி)

 


29.06.2026:


இறுதி முன்னுரிமைப் பட்டியல் மற்றும் காலிப்பணியிட விவரங்கள் வெளியீடு



 02.07.2026:

இடைநிலை ஆசிரியர்கள் பணிநிரவல் கலந்தாய்வு



 03.07.2026 முதல் 07.07.2026 வரை:

இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு



 08.07.2026 & 09.07.2026:

 

தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல்



10.07.2026 முதல் 14.07.2026 வரை:

பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு



15.07.2026 & 16.07.2026:

நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல்



முக்கிய விதிமுறைகள்:

 


விடுப்பு முறை:

கலந்தாய்வு நாளில் மாற்றுப்பணி (OD) கிடையாது. தற்செயல் விடுப்பு (CL) எடுத்துக்கொண்டே பங்கேற்க வேண்டும். தாமதமாகவோ அல்லது வராமலோ இருந்தால் கலந்தாய்வில் பங்கேற்க இயலாது.



இரு கலந்தாய்வு விதி: உள்மாவட்டக் கலந்தாய்வில் மாறுதல் ஆணை பெற்றவர்கள், மாவட்டம் விட்டு மாவட்டக் கலந்தாய்வில் கலந்துகொள்ள இயலாது.



 மனமொத்த மாறுதல் (Mutual Transfer):

இதற்கான அறிவிப்பு பொது மாறுதல் கலந்தாய்வு முடிந்த பின்னர் தனியாக வெளியிடப்படும்.










No comments:

Post a Comment