தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு மாதிரி ஆன்லைன் தேர்வு 5
தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு
தமிழ்நாட்டில் அரசுப்பள்ளி மாணவ, மாணவியர்களின் திறனைக் கண்டறியவும், அவர்களை ஊக்குவிக்கவும் தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு ஆண்டு தோறும் தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டு வருகிறது
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாநிலப் பாடத்திட்டத்தில் 10 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவர்கள் இந்த தேர்வில் கலந்து கொள்ளலாம்
இந்த தேர்வில் வெற்றி பெரும் மாணவர்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீடு அடிப்படையில் 1000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் உதவித்தொகை வழங்கப்படும் (500 மாணவர்கள் மற்றும் 500 மாணவிகள்)
உதவித்தொகை ஒரு கல்வி ஆண்டுக்கு ரூபாய் 10000 வழங்கப்படும். இந்த தொகையானது மாதம் ரூபாய் 1000 வீதம் 10 மாதங்களுக்கு வழங்கப்படும். மாணவர்களுக்கு இந்த தொகை அவர்களின் இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படும்
இந்த தேர்வுக்கான பாடத்திட்டம் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளின் கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் உள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில் கொள்குறி வகையில் வினாக்கள் கேட்கப்பட்டு தேர்வு நடத்தப்படும்.
இந்த தேர்வானது இரு தாள்களை கொண்டது முதல் தாளில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு கணக்கு பாடங்களில் இருந்து 60 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்படும். தாள் இரண்டு தேர்வுக்கு 9 மற்றும் 10 ஆம் வகுப்பு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத்திட்டங்களில் இருந்து 60 வினாக்கள் கேட்கப்படும்
இந்த தேர்வுக்கு உதவிடும் வகையில் தென்காசி ஒன்றியம் ஆசிரியர் திரு.இள.பாபு வேலன் அவர்களின் ஒருங்கிணைப்பில் 58 ஆசிரியர்கள் இணைந்து முதன் முதலாக கையேடு தயாரித்தனர். அந்த கையேடு 5 புத்தகங்களாக வெளிவந்தது(அறிவியல் 2 VOLUME, சமூக அறிவியல் 2 VOLUME மற்றும் கணக்கு 1 VOLUME).
தன்னார்வம் மிக்க ஆசிரியர்களால் உருவாக்கப்பட்ட இந்த கையேடுகள் சென்னை வேளச்சேரி அரிமா சங்கத்தின் புதுமைத்திட்டம் தலைவர் திரு.ஹரிகிருஷ்ணன், செயலாளர் திரு.செல்வகுமார் மற்றும் முதன்மை ஆலோசகர் திரு.வெங்கட்ராமன் அவர்களின் சீரிய முயற்சியால் இவை இலவச புத்தகமாக மாண்புமிகு முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் கரங்களால் வெளியிடப்பட்டது
வேளச்சேரி அரிமா சங்கத்தின் மூலம் புத்தகமாக வெளியிடப்பட்ட இந்த கையேடு 15 மாவட்டங்களை சார்ந்த பல பள்ளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது
மேலும் இந்த 5 கையேடுகளும் தற்போது பள்ளிக்கல்வித்துறையின் "மணற்கேணி" ஆப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது (மாணவர்கள் இந்த ஆப்பில் இருந்து இந்த 5 கையேடுகளையும் PDF ஆக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் அந்த பாடங்கள் தொடர்பான வீடியோக்களும் மணற்கேணி ஆப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது)
அதிகமான மாணவர்கள் இந்த தேர்வில் வெற்றி பெற்று உதவித்தொகை பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த புத்தகங்கள் வெளியிடப்பட்டன. இதன் தொடர்ச்சியாக மாணவர்களை தேர்வுக்கு தயார்ப்படுத்தும் நோக்கில் நமது வலைதளம் மூலம் ஆன்லைன் தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த ஆன்லைன் தேர்வானது 9 மற்றும் 10 ஆம் வகுப்பு பாடங்கள் கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் போன்ற பாடங்களில் இருந்து தொடர்ச்சியாக வெளியிடப்படும்
இந்த ஆன்லைன் தேர்வை மாணவர்கள் தொடர்ந்து எழுதி பயிற்சி பெற கீழ்கண்ட லிங்க் மூலம் அதற்கான வாட்ஸ் அப் சானலில் இணைந்து கொள்ளவும்.
தேர்வுக்கான லிங்க் அந்த வாட்ஸ் அப் சானலில் மட்டுமே அனுப்பப்படும்
வாட்ஸ் அப் சானல் லிங்க்
👇
மேலும் இந்த ஆன்லைன் தேர்வினை TNPSC தேர்வு எழுதும் மாணவர்கள் TET தேர்வு எழுதும் ஆசிரியர்கள் அனைவரும் எழுதலாம்
ஆன்லைன் தேர்வானது தினமும் மாலை 7 மணிக்கு நடத்தப்படும். தேர்வுக்கான பாடங்கள் முதல் நாள் தேர்வு லிங்குடன் அனுப்பப்படும்
இன்றைய தேர்வுக்கான வகுப்பு மற்றும் பாடங்கள்
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல்
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல்
1. புரட்சிகளின் காலம்
இன்றைய தேர்வுக்கான லிங்க்
👇
CLICK HERE TO WRITE ONLINE EXAM
நாளைய தேர்வுக்கான பாடத்திட்டம்
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல்
1. தொழில் புரட்சி

No comments:
Post a Comment