தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் ஒன்றியத்தில் "தேசிய திறனாய்வு தேர்வு" (NMMS) வெற்றி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் வட்டாரத்தில் தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய ஜவகர் நடுநிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்றது.
தேசிய திறனாய்வுத் தேர்வில் ஒவ்வொரு ஆண்டும் வாசகநல்லூர் வட்டாரம் சார்பில் அதிக அளவிலான மாணவ மாணவிகள் வெற்றி பெற்று வருகின்றனர்.
இந்த ஆண்டும் 40 மாணவர் மாணவிகள் வாசுதேவநல்லூர் வட்டாரத்திலிருந்து தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் பயிலும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா நேற்று வாசுதேவநல்லூர் வட்டார கல்வி அலுவலர் மாரியப்பன் தலைமையில் நடைபெற்றது.
வட்டார கல்வி அலுவலர்கள் ராமச்சந்திரன், சுபாஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பரமானந்தா நடுநிலைப்பள்ளி தாளாளர் ஞானபிரகாசம், வாசகவநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் ஜெயபால், ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் ஜேம்ஸ் ஆரோக்கிய ராஜ், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுக்குழு உறுப்பினர் மாடசாமி, தெற்கு சத்திரம் பள்ளி தாளாளர் வாழ்த்துரை வழங்கினர்.
தொடர்ந்து தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழும், பரிசுகளும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சி முடிவில் ஆசிரியர் ஜெய்கணேஷ் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment