Search This Blog

Monday, 17 February 2025

தென்காசி மாவட்ட அளவிலான NMMS பயிற்சி தென்காசி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் தென்காசி மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் தலைமையில் நிறைவு விழா சென்னை வேளச்சேரி அரிமா அமைப்பு உதவியுடன் 8 ஆம் வகுப்பு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் NMMS வினா விடை வங்கி வெளியீடு


தேசிய வருவாய் வழி மற்றும் திறனறி இலவச பயிற்சி தென்காசி ஐ.சி.ஐ ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடர்ந்து 9 மாதங்களாக தென்காசி மாவட்டம் முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி.ரெஜினி அவர்கள் ஆலோசனைப்படி  வாசுதேவநல்லூர் ஒன்றியம் வட்டாரக்கல்வி அலுவலர் திரு.இரா.மாரியப்பன் தலைமையில் தென்காசி மாவட்ட ஆசிரியர்களைக் கொண்டு சிறப்பாக நடந்து வந்தது.








பயிற்சியின் போது அவ்வப்போது தென்காசி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி.ரெஜினி அவர்கள் மற்றும் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் திரு.ஜெயபிரகாஷ் ராஜன் அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கி வந்தனர்.








பயிற்சியானது 9 மாதங்களுக்கும் மேல் பட்டதாரி ஆசிரியர் திருமதி.சுலைகாள் பேகம், பட்டதாரி ஆசிரியர் திரு.நெல்சன், பட்டதாரி ஆசிரியர் திரு.முத்துக்குமார், பட்டதாரி ஆசிரியர் சுகாசினி, தலைமை ஆசிரியர் கங்கா ஆகியோர் மூலம் வழங்கப்பட்டது.








இந்த பயிற்சியின் நிறைவு விழா தென்காசி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி.ரெஜினி மற்றும் தென்காசி மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் திரு.ஜெயபிரகாஷ் ராஜன் ஆகியோர் தலைமையில் 15.02.2025 அன்று பயிற்சி மையத்தில் நடந்தது.







மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மாணவர்களிடம் இந்த தேர்வின் மூலம் மாணவர்களுக்கு கிடைக்கக்கூடிய சிறப்பான  எதிர்காலம் பற்றி எடுத்துக்கூறினார்.







மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் மாணவர்கள் தொடர்ந்து பயிற்சி எடுத்து இந்த தேர்வை வெற்றிகரமாக எழுதி அதிக மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெற ஆலோசனை வழங்கினார்கள்.







இந்த பயிற்சி நிறைவு விழாவில் சென்னை வேளச்சேரி அரிமா அமைப்பின் முன்னாள் தலைவர் திரு. வெங்கடராமன், "புதுமைப்படைப்பு" தலைவர் திரு.ஹரிகிருஷ்ணன், புதுமைப்படைப்பு துணைத்தலைவர் திரு.செல்வகுமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்கள் 








தென்காசி மாவட்டம் பட்டதாரி ஆசிரியர் திரு.பாபுவேலன் தயாரிப்பில் உருவான 8 ஆம் வகுப்பு NMMS வினா விடை கையேட்டை பயிற்சி மையத்தில் தென்காசி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் தென்காசி மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள் இணைந்து வெளியிட்டார்கள்.  







சென்னை வேளச்சேரி அரிமா சங்கம் திரு. வெங்கடராமன், திரு.ஹரிகிருஷ்ணன், திரு.செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்ட அனைத்தப் பள்ளிகளுக்கும் இலவசமாக பட்டதாரி ஆசியர் இள.பாபுவேலன் உருவாக்கிய NMMS தேர்வுக்கு தேவையான 8 ஆம் வகுப்பு அறிவியல் மற்றும் 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் கையேட்டை வழங்கினார்கள்.







தென்காசி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் தென்காசி தொடக்கக்கல்வி அலுவலர் ஆகியோர் இது நாள் வரை பயிற்சியை சிறந்த முறையில் வழிநடத்தி சென்ற வாசுதேவநல்லூர் வட்டாரக்கல்வி அலுவலர் திரு.மாரியப்பன் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் திருமதி.சுலைகாள் பேகம், திரு .நெல்சன், திரு. முத்துக்குமார்   ஆகியோரை பாராட்டி நினைவு பரிசு வழங்கினார்கள் 































































































NMMS தேர்வுக்காக பட்டதாரி ஆசிரியர் இள.பாபுவேலன் அவர்கள் உருவாக்கிய 8 ஆம் வகுப்பு அறிவியல், சமூக அறிவியல் கையேட்டை சென்னை வெளிச்சேரி அரிமா சங்கத்தின் பங்களிப்புடன் தென்காசி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் தென்காசி மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அவர்கள் இணைந்து வெளியிட்டார்கள் 





8 ஆம் வகுப்பு NMMS தேர்வுக்கு தேவையான (8 ஆம் வகுப்பு அறிவியல் & சமூக அறிவியல் வினா விடை வங்கி) கையேட்டின்  PDF பெற கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇


5 comments:

  1. மிக்க நன்றி சார். MAT தேர்வுக்கு இது போல் இருந்தால் அனுப்புங்கள் சார் ☝️👍

    ReplyDelete
  2. Excellent 👍👌

    ReplyDelete