Search This Blog

Sunday, 23 February 2025

இஸ்ரோவின் ‘இளம் விஞ்ஞானி’ பயிற்சி மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

இஸ்ரோவின் ‘இளம் விஞ்ஞானி’ பயிற்சி மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு



இஸ்​ரோ​வின் இளம் விஞ்​ஞானி பயிற்சி திட்​டத்​தில் பங்கேற்க விரும்​பும் பள்ளி மாணவர்கள் பிப்​ரவரி 24-ம் தேதி முதல் விண்​ணப்​பிக்​கலாம் என்று அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. 






பள்ளி மாணவர்​களிடம் விண்​வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்​தும் நோக்​கில், ‘யுவிகா’ (இளம் விஞ்​ஞானி) என்ற திட்​டத்தை இந்திய விண்​வெளி ஆராய்ச்சி நிறு​வனம் (இஸ்ரோ) கடந்த 2019-ம் ஆண்டு அறிமுகம் செய்​தது.






இத்திட்​டத்​தின்​கீழ் அனைத்து மாநிலங்​களில் இருந்​தும் தலா 3 பேர் தேர்வு செய்​யப்​பட்டு, இஸ்ரோ மையங்​களில் விண்​வெளி அறிவியல், தொழில்​நுட்​பங்கள் தொடர்பாக பல்வேறு செய்​முறை விளக்க பயிற்சிகள் அளிக்​கப்​படும். 






விஞ்​ஞானிகளுடன் கலந்​துரை​யாடும் வாய்ப்பும் கிடைக்​கும்.







அதன்​படி, இந்த ஆண்டுக்கான ‘யுவிகா’ பயிற்சி மே மாதம் நடக்க உள்ளது. 







இதற்கான இணையதள விண்​ணப்பபதிவு வரும் 24-ம் தேதி தொடங்கி மார்ச் 23-ம் தேதி வரை நடைபெறும். 








பள்ளி​களில் 9-ம் வகுப்பு படிக்​கும் மாணவர்கள் மட்டுமே இதில் பங்கேற்க முடியும்.









விருப்பம் உள்ளவர்கள் 

கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும்


👇


CLICK HERE  




மேலே உள்ள இணையதளம் மூலம் விண்​ணப்​பிக்க வேண்​டும். 






பயிற்சிக்கு தேர்​வாகும் மாணவர்​களின் தற்காலிக பட்டியல் மார்ச் இறுதி​யில் வெளி​யாகும். 









அந்த மாணவர்கள் தங்கள் சான்​றிதழ்களை மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்​டும். 









சான்​றிதழ்கள் சரிபார்க்​கப்​பட்ட பிறகு, ஏப்ரல் முதல் வாரத்​தில் இறுதி பட்டியல் வெளி​யிடப்​படும். 










தேர்வு செய்​யப்​படும் மாணவர்​களுக்கு திரு​வனந்​த​புரம், ஸ்ரீஹரி​கோட்டா உட்பட இஸ்​ரோ​வின் 7 ஆய்வு மை​யங்​களில் ப​யிற்சி வழங்​கப்​படும் என்று இஸ்ரோ தெரி​வித்​துள்ளது.

No comments:

Post a Comment