Search This Blog

Saturday 31 August 2024

கல்விச்சீர் எடுத்து வந்த மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்








பள்ளிக் கல்வித்துறை தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகம் நடத்திய "பெற்றோர்களை கொண்டாடுவோம்" 6 வது மண்டல அளவிலான மாநாடு இன்று (31.08.2024) திருநெல்வேலியில் நடைபெற்றது . 





மாநாட்டில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்கள், பெற்றோர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், நன்கொடையாளர்கள் கலந்து கொண்டனர் 





விழா பள்ளி மாணவ ,  மாணவியர்களின் கலை நிகழ்ச்சியுடன் தொடங்கியது 





மாண்புமிகு.தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் திருமிகு.மு.அப்பாவு அவர்கள் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மத்தியில் சிறப்புரை ஆற்றினார்கள்   




மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தலைமையுரை ஆற்றினார்கள்






விழாத் தொடக்கத்தில் மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தனது கரங்களில் "கல்விச் சீர்" ஆசிரியர்கள், பெற்றோர்களின் பலத்த கரயோசையுடன்   எடுத்து வந்தார் அவரை தொடர்ந்து பெற்றோர்கள் கல்விச் சீர் எடுத்துவந்தனர்






தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மாநிலத் துணைத்தலைவர் திருமிகு . V.முத்துக்குமார்  (மேனாள் சட்டமன்ற உறுப்பினர்) அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்கள் 





மாண்புமிகு இளைஞர்கள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமிகு . உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மாநாட்டை காணொலி மூலம் தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்கள் 





பள்ளிக் கல்வித்துறை  செயலாளர் திருமதி .  சோ . மதுமதி இ . ஆ . ப அவர்கள் மாநாட்டின் நோக்கவுரை குறித்து மக்கள் மத்தியில் எடுத்துக் கூறினார்கள் 






திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் திரு .K.P.கார்த்திகேயன் அவர்கள், திருநெல்வேலி மாநகர மேயர் திரு. ராமகிருஷ்ணன் (எ) கிட்டு அவர்கள், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் திரு.ச. கண்ணப்பன் அவர்கள், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் இயக்குனர் திரு.மு.பழனிச்சாமி அவர்கள், தொடக்கக் கல்வி இயக்குனர் திரு.ஆ.நரேஷ் அவர்கள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் 






சிறப்பு பேச்சாளராக நீயா நானா புகழ் திரு.ச.கோபிநாத் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள் 





தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் துணைத்தலைவர் திருமிகு. N.K.R.சூரியகுமார் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்கள் 






விழாவில் மூன்று மாவட்டப் பள்ளிகளுக்கு நன்கொடை வழங்கிய கொடையாளர்களுக்கு பாராட்டு நினைவு பரிசு வழங்கப்பட்டு  கெளரவிக்கப்பட்டார்கள்  




மாநாட்டில் கல்விச்சீர் எடுத்து வந்த மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் 






மாநாட்டில் திரளாக கலந்துகொண்ட தென்காசி ஒன்றிய ஆசிரியர்கள் 



















No comments:

Post a Comment