Search This Blog

Tuesday 24 October 2023

படித்தவர்களே போலி செய்திகளை அதிகம் பார்வேர்டு செய்கிறார்கள்

 


கடந்த சில நாட்களாக சென்னையில் உள்ள பிரபல உணவு மற்றும் இனிப்பு கடை மற்றும் பிரபல ஜவுளி வீட்டு உபயோகப்பொருட்கள் விற்கும் கடைகளின் பெயரில் தீபாவளி பரிசுக்கூப்பன் வழங்குவது போல் ஒரு லிங்க் அனைத்து வாட்ஸ் அப் குழுவிலும் வலம் வருகிறது


இதை பார்வேர்டு செய்பவர்கள் அனைவருமே அதிகம் படித்து பட்டம் பெற்ற மேதாவிகள்


எவ்வளவு படித்திருந்தாலும் இது போல் வரும் செய்திகள் போலித்தனமானாது என தெரியவில்லை


பண்டிகை காலங்களில் இது போல் உங்களுக்கு பல லிங்குகள் வரும் அவை அனைத்துமே போலியானவை மற்றும் ஆபத்தானவை


இப்படிப்பட்ட Link பிறருக்கு அனுப்பும் போது நீங்களும் பாதிக்கப்பட்டு உங்களைச் சார்ந்தவர்களையும் பாதிப்புக்கு உள்ளாக்கி விடுகிறீர்கள்


காவல்துறை எத்தனை முறை கூறினாலும் படித்த மேதாவிகள் கூட இதன் விபரீதம் பற்றி இன்னும் உணரவில்லை.


பெரிய பெரிய கடைகள் பரிசுக்கூப்பனை இப்படி வாட்ஸ் அப்பில் கூவி கூவி கொடுக்கமாட்டார்கள். 


ஒரு நாளைக்கு லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை நேர்மையாக சந்திக்கும் கடைகள் இது போல் வாட்ஸ் அப் செய்தி அனுப்ப மாட்டார்கள்


கடைகளின் பெயரை கெடுப்பதற்கோ அல்லது அந்த கடைகளின் பெயரில் ஏமாற்றவோ ஹேக்கர்கள் செய்யும் வேலை இது.


இதை முதலில் படித்தவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


லட்சம் ரூபாய் வருமானம் பெரும் ஊழியர்கள் கூட பத்து ரூபாய் கிப்ட்டுக்கு ஆசைப்பட்டு பலருக்கு பார்வேர்டு செய்து தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என அனைவரையும் ஹேக்கர்களிடம் சிக்கவைக்கிறார்கள்.


ஹேக்கர்கள் செய்வது தவறு என்றால் அவர்கள் செய்தியை பலருக்கு அனுப்பி அவர்களின் பிடியில் பலரை சிக்க வைக்கும் நீங்களும் குற்றவாளி என்பதை மறந்து விடவேண்டாம்


கோடிக்கணக்கில் வியாபாரம் செய்யும் நிறுவனங்கள் Gift கொடுப்பதாக இருந்தால் பெரிய நாளிதழ்களிலோ, தொலைக்காட்சியிலோ நேரடியாக விளம்பரம் செய்துவிடுவார்கள் அதை படித்தவர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்


இனி இது போல் செய்திகளை முட்டாள்கள் போல் பிறருக்கு பார்வேர்டு செய்யாதீர்கள்.


உங்களுக்கு இது போல் செய்தி வந்தால் அதை Delete செய்துவிட்டு அதை அனுப்பியவரை எச்சரிக்கை செய்யுங்கள்


அதுதான் நாம் படித்ததற்கான அடையாளம்


No comments:

Post a Comment