ஆசிரியர்களுக்கு 3டி பிரிண்டிங் மற்றும் ரோபோடிக்ஸ் பயிற்சி
உடுமலை கலிலியோ அறிவியல் கழகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு நிகழ்வுகளை தொடர்ச்சியாக நடத்தி வருகிறது.
அறிவியல் மட்டும் இன்றி தொழில்நுட்பமும் வளர்ந்து வருகின்ற இவ்வேளையிலே பள்ளி கல்வித்துறையில் இது போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கற்றல் கற்பித்தலில் ஈடுபடும்போது மாணவர்களின் திறனை மேலும் வளர்ப்பதற்கு உறுதுணையாக இருக்கும் என்பதற்காக ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சி பட்டறைகள் நடத்தப்பட்டு வருகிறது
அதன் அடிப்படையில் ரோபோடிக்ஸ் மற்றும் 3டி பிரிண்டிங் பற்றிய ஒரு நாள் செயல்முறை பயிற்சி பட்டறையானது கோவை ஜான்சன் தொழில்நுட்பக் கல்லூரி, மற்றும் வில்லேஜ் டெக்னாலஜி ஸ்கூலுடன் இணைந்து வரும் 14.10.2023 (சனிக்கிழமை) அன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பங்கு பெறும் அனைவருக்கும் மதிய உணவு,சான்றிதழ்கள் வழங்கப்படும்.
பயிற்சி பட்டறையில் கலந்து கொள்ள விருப்பமுள்ள ஆசிரியர்கள் கீழ்காணும் இணைப்பின் வழியாக தங்களது பெயர்களை பதிவு செய்யலாம்.
👇👇
மேலும் தகவல்களுக்கு
கண்ணபிரான்
ஒருங்கிணைப்பாளர்
கலிலியோ அறிவியல் கழகம்
9942467764
சுரேஷ்குமார்
ஜான்சன்ஸ் தொழில்நுட்ப கல்லூரி
9940992627
No comments:
Post a Comment