8 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவர்களுக்கு NMMS (தேசிய திறனாய்வு தேர்வு) ஒவ்வொரு வருடமும் நடத்தப்படுகிறது
இந்த தேர்வில் வெற்றி பெரும் மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் வீதம் 4 ஆண்டுகளுக்கு 48000 ரூபாய் உதவித்தொகை கிடைக்கும்
7 ஆம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்பு பாடப்பகுதியில் இருந்து வினாக்கள் கேட்கப்படும் மேலும் மாணவர்களின் புத்திக்கூர்மையை சோதிக்கும் மனத்திறன் தேர்வும் நடத்தப்படும்
வினாக்கள் பாடப்பகுதியில் இருந்து 90 மதிப்பெண்களுக்கும், மனத்திறன் பகுதியில் இருந்து 90 மதிப்பெண்களுக்கும் கேட்கப்படும்
தமிழகம் முழுவதும் மாணவர்களுக்கு இந்த தேர்வுக்கான பயிற்சி ஆசிரியர்களால் வழங்கப்பட்டு மாணவர்கள் தேர்வுக்கு தயார் செய்யப்பட்டனர்
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் ஒன்றியத்தில் இந்த தேர்வுக்கான பயிற்சி வட்டாரக்கல்வி அலுவலர் திரு.இரா.மாரியப்பன், மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர் திரு.வே.ராமச்சந்திரன் அவர்களால் ஆசிரியர்களை கொண்டு குழு அமைக்கப்பட்டு ஒவ்வொரு வாரமும் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது
மாநில அளவில் NMMS மோகன் அவர்களால் தயாரிக்கப்பட்ட பாடவாரியான வினாத்தாள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு தொடர்ந்து தேர்வுகள் வாசுதேவநல்லூர் ஒன்றியத்தில் நடத்தப்பட்டன. இந்த பயிற்சியில் தொடர்ந்து 300க்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
வாசுதேவநல்லூர் ஒன்றிய வட்டாரக்கல்வி அலுவலர்கள் மேற்பார்வையில் ஆசிரியர்கள் குழு சிறப்பான பயிற்சி அளித்தனர்
தற்போது இந்த தேர்வில் வாசுதேவநல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் அரசு உதவி பெரும் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 33 பேர் தேர்ச்சி பெற்று மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை பெற தகுதி பெற்றுள்ளனர்
வாசுதேவநல்லூர் ஒன்றியத்தில் உள்ள நடுநிலைப் பள்ளிகளில் பள்ளி வாரியாக NMMS தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை விவரம்.
PUJMS Nagaram. - 3
Paramananda MS. -3
TDTA MS Plg. -3
RCMS Chainthamani -8
Packiathai MS. -4
RCMS Draisamypm. -3
Raja Singh MS. -2
Senaitha.. MS Vasu. -4
SRP MS. Sivagiri -1
Ramaswamy Ni..Vasu. -2
TOTAL. = 33
இந்த வெற்றிக்காக அயராது படித்த மாணவர்கள், பயிற்சி அளித்த ஆசிரியர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆகியோர்களை பாராட்டும் விதமாக இன்று வட்டாரக்கல்வி அலுவலர்கள் சார்பாக விழா நடந்தது
விழாவை வாசுதேவநல்லூர் ஒன்றிய வட்டாரக்கல்வி அலுவலர்
திரு. வே.ராமச்சந்திரன்
அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார்
வாசுதேவநல்லூர் ஒன்றிய வட்டாரக்கல்வி அலுவலர்
திரு. இரா.மாரியப்பன்
அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்
ஆசிரியர்கள்
திரு.இப்ராஹிம் மூஸா
திரு.மாரிமுத்து
திரு.ராமர்
திரு.மாடசாமி
திரு. மருது பாண்டியன்
ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தி பேசினார்கள்
புளியங்குடி ரோட்டரி சங்கம் நிர்வாகிகள், புளியங்குடி லயன்ஸ் கிளப் திரு முரளிதரன், தென்காசி TAF ஆகாஷ் IAS அகடமி சார்பில் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது
விழாவில் பயிற்சி வழங்கிய ஆசிரியர்கள், வழிகாட்டிய தலைமை ஆசிரியர்கள் ஆகியோர்களுக்கு பாராட்டும் நினைவு பரிசும் வழங்கப்பட்டது
மாதிரி தேர்வுகள் நடத்தி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் உறுதுணையாக நின்ற புளியங்குடி நகராட்சி நடுநிலைப்பள்ளி கணித பட்டதாரி ஆசிரியர் திரு. செல்வ சிதம்பரகுமார் அவர்களுக்கு பாராட்டுகளும் நன்றியும் தெரிவிக்கப்பட்டது
மாணவர்களுக்கான STUDY MATERIALS வழங்கிய புளியங்குடி ரோட்டரி கிளப், சிந்தாமணி ஸ்ரீ திருப்பதி வெங்கடாசலபதி சிட்பண்ட்ஸ், வாசுதேவநல்லூர் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆகியோர்களுக்கு தொடக்கக்கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது
ஆசிரியர் திரு.மாரியப்பன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்
விழா ஏற்பாடுகளை ஆசிரியர்கள்
திரு. நவீன்
திரு.ரவி
திரு.முனீஸ்வரன்
ஆகியோர் செய்திருந்தனர்
No comments:
Post a Comment